இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 10, 2013

குரூப் 2 தேர்வு முறை மாற்றம

் இந்த முறை அதிரடியாக தேர்வு முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது,முன்பெல்லாம் குரூப் 2 தேர்வில் எழுத்து தேர்வில் மட்டுமே தேர்வானால் போதும் அடுத்ததாக நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கு பெறலாம்.ஆனால் இப்போது அப்படி இல்லை.இரண்டு கட்ட எழுத்துத் தேர்வில் தேர்வானால் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியும்.இது ஆரோக்கியமான போக்கு. முதற்கட்டமாக சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுதல், இதில் தேர்வானால் அடுத்தது விரிவான விடையளிக்கும் தேர்வு, இதிலும் தேர்வானால் மட்டுமே நேர்முகத் தேர்வு, இதில் தேர்வானால் பணி நியமனம்.

இனி நடக்கும் குரூப் 2 தேர்வுகளில் சாதாரணமாக தேர்வாக முடியாது. அ,ஆ என விடைகளை பெட்டியில் நிரப்பினால் மட்டும் போதாது. இரண்டாம் கட்ட தேர்வில் விரிவான விடையளித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். தேர்வுக்கு தயாராகும் இத்தனை லட்சம் பேரில் எத்தனை பேருக்கு விரிவான விடைகள் தெரியும்?.அப்படித் தெரிந்தாலும் எத்தனை பேரால் என்ணியதை எழுத முடியும்?.அப்படி எழுதினாலும் எத்தனை பேரால் கொடுத்திருக்கும் நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும்.?யோசிக்க வேண்டிய விஷயம். இன்று குரூப் 2 தேர்வுக்கு தயாராகும் பல பேர் பேனா பிடித்து எழுதும் பழக்கத்தையே மறந்தவர்களாக இருப்பீர்கள்.இந்த நிலை தேர்வுக்கு உபயோகப்படாது.

எனவே படிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ அதைப் போல எழுதி பயிற்சி எடுப்பது முக்கியம். அனைத்தையும் படித்து கரைத்து குடித்திருந்தாலும் எழுத முடியவில்லையென்றால் சிரமம் தான். முன்பு ஒரே தேர்வில் நேர்முகத்தேர்வில் வென்றவர்கள் போக ஏனையோரை நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு தேர்வு செய்வர்.ஆனால் புதிய தேர்வின் படி அதற்கு தனித் தேர்வே நடத்தப்படுகிறது. இந்த பாடத்திட்ட மாற்றமும் தேர்வு முறை மாற்றமும் சில பேருக்கு கடினமாக இருந்தாலும் இதை பல பேர் வரவேற்கிறார்கள்.இனி நன்றாகப் படித்து தேர்வு எழுதினால் மட்டுமே பணி என்ற நிலை இருக்கிறது.எனவே திட்டமிட்டு படியுங்கள்.. தேர்வில் வெற்றி பெறுங்கள்..வாழ்த்துகள்.

Private Schools Fee Determination Committee Fee Fixed for the year 2013-2016 (Phase II)

Tuesday, July 09, 2013

3 ஆண்டு பி.எல். படிப்பில் சேர 30–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 3 ஆண்டு பி.எல். (ஆனர்ஸ்) பட்டப்படிப்பு, சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் முதுகலை சட்ட கல்வித்துறை மூலம் பயிற்றுவிக்கப்படும். எம்.எல். படிப்பு தொலை தூரக்கல்வி வாயிலாக பயிற்றுவிக்கப்படும் முதுநிலை பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு, அரசு சட்ட கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு பி.எல். படிப்பு ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சமர்ப்பிப்பதற்கும் 30–ந் தேதி கடைசி நாள். மேற்கண்டவாறு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு அவசியம் இல்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தகுதி தேர்வு மத்திய அரசு கொண்டு வந்த குழந்தைகள் இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 1–4–2010 அன்று அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இதனடிப்படையில், தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி வழங்கப்படும் என்று 15–11–2011 அன்று அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டி.எஸ்.அன்பரசு, என்.பரந்தாமன் உட்பட 94 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:–

32 ஆயிரம் பேர் தேர்வு சுப்ரீம் கோர்ட்டு 20–8–2008 அன்று பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் பணிக்கு மாநில பதிவு மூப்பு பட்டியலின் அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதனடிப்படையில், உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி தேர்வு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 32 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டோம். இந்த தேர்வு நடவடிக்கைகள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி 2010–ம் ஆண்டு மே மாதம் நடந்து முடிந்துவிட்டது. அப்பீல் தள்ளுபடி இந்த நிலையில், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், தேர்வு நடவடிக்கையை ரத்து செய்தும், எங்களுக்கு பணி வழங்க மறுத்தும் தமிழக அரசு உத்தரவிட்டது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உதவி பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மறுபரிசீலனை மனு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து, 1–3–2012 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தாக்கல் செய்த அப்பீல் வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்ச் 13–7–2012 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மனுதாரர்கள் அன்பரசு, பரந்தாமன் உட்பட பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:– குழந்தைகள் இலவசம் மற்றும் கட்டாயம் கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23–8–2010 அன்று ஒரு அறிவிக்கை வெளியிட்டது. வேலை வழங்க வேண்டும் அந்த அறிவிக்கையில், பிரிவு 5–ல், ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு, சான்றிதழ் சரி பார்க்கும் பணி முடிவடைந்து விட்டால், அதில் தேர்வானவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாய தகுதியாக கொள்ளத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவை தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சும் கவனிக்க தவறிவிட்டது.

எனவே இந்த மறுபரிசீலனை மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, தற்போது உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை என்று கூறினார். எனவே மனுதாரர்களை ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வற்புறுத்தாமல், எதிர்காலத்தில் ஏற்படும் காலியிடங்களை இவர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.

92 பேருக்கு ஆசிரியர் பணி ஆணை வழங்க நீதிமன்றம் உத்தரவு

2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் 92 பேருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர்களுக்கு  உடனடியாக பணி ஆணை வழங்க உத்தரவிட்டார்.

Monday, July 08, 2013

ஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது  

ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது. மாநிலத்தில், 550 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 17 ஆயிரம் இடங்கள் உள்ளன. எனினும், 4,300 மாணவர் மட்டுமே, இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். "ஆன்-லைன்' வழியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது. மாவட்ட தலைநகரங்களில், குறிப்பிட்ட மையங்களில் நடந்த கலந்தாய்வில், சிறப்பு பிரிவினர் பங்கேற்றனர். சென்னையில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில், கலந்தாய்வு நடந்தது.

51 பேர் அழைக்கப்பட்டதில், 28 மாணவர் பங்கேற்று, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர். உத்தரவுகளை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அய்யப்பன் வழங்கினார். மாநில அளவில், சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்த, 201 பேர் அழைக்கப்பட்டதில், 116 பேர் கலந்து கொண்டு, சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர். 85 பேர், "ஆப்சென்ட்'. தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வரும்,15ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 6.85 லட்சம் பேர் விண்ணப்பம

்விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்படுகின்றன

ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹால் டிக்கெட்

ஆகஸ்ட் 17,18-ல் தேர்வு

செப்டம்பரில் தேர்வு முடிவு

817 இடைநிலை ஆசிரியர் நியமனம்

ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு

டிசம்பரில் பணி நியமனம்

2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

ஹால் டிக்கெட் பதிவேற்றம்

ஜூலை 21-ல் தேர்வு

ஆகஸ்ட்டில் தேர்வு முடிவு

செப்டம்பர் அல்லது அக்டோபரில் பணி நியமனம்

12,295 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு

டிசம்பரில் பணி நியமனம்

782 சிறப்பாசிரியர்கள் நியமனம்

பதிவு மூப்புப் பட்டியல் பெறப்பட்டுள்ளது

ஆகஸ்ட்டில் பணி நியமனம்

1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன

நேர்முகத் தேர்வு செப்டம்பரில் பணி நியமனம்

இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதைத் தவிர 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களும், 782 சிறப்பாசிரியர்களும், 232 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள் 32 பேரும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 30 பேரும், விவசாயத்துறை பயிற்றுநர்கள் 25 பேரும், அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு முதல் நியமனமாக இசை, ஓவியம், தையற்கலை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகத்திலிருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வந்துள்ளது. முன்னாள் படைவீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்குரிய பட்டியல் கிடைத்ததும் இந்த நியமனப் பணிகள் தொடங்கிவிடும். அடுத்த 45 நாள்களுக்குள் இந்த பணி நியமனத்தை முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அடுத்ததாக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.67 லட்சம் பேருக்கும் ஹால் டிக்கெட் இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 422 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்குப் பிறகு ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடவும், அதற்கடுத்த 2 மாதங்களில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு: இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் தாள் தேர்வு எழுத 2 லட்சத்து 65 ஆயிரத்து 568 பேரும், இரண்டாம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 466 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

செப்டம்பரில் தேர்வு முடிவு: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை ஸ்கேன் செய்யும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். அதன்பிறகு, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் பட்டதாரி ஆசிரியர்களும், மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 12,295 பட்டதாரி ஆசிரியர்கள், 817 இடைநிலை ஆசிரியர்கள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

DEE - 1 TO 5 STD PURCHASE OF CCE CO-ACTIVITIES TEACHERS HANDBOOK, FUND TO BE UTILISED FROM SSA SCHOOL GRANT REG PROC -by tnkalvi

TRB - Post Graduate Assistant ,Hall ticket released

Saturday, July 06, 2013

100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு

மாநிலம் முழுவதும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் அறிவிப்பு: கடந்த மே, 15ம் தேதி, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, கல்வித் துறை சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டார். "50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்படும்' என, முதல்வர் அறிவித்தார். ஆனால், பள்ளிகள் திறந்து, ஒரு மாதம் கடந்த நிலையிலும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல், வெளியாகாத நிலை இருந்தது. இதனால், மேல்நிலை வகுப்புகளில், மாணவர் சேர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டது. தற்போது, மாணவர் சேர்க்கைக்கு வசதியாக, 100 உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இரண்டு முதல் நான்கு வரை... சென்னை மாவட்டம் தவிர்த்து, இதர மாவட்டங்களில், 100 பள்ளிகளும், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. மாவட்டத்திற்கு, இரண்டு முதல், நான்கு பள்ளிகள் வரை, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில், கொடும்பாலூர், தூரியூர், மலக்குடிபட்டி, கல்லாகுட்டை என, நான்கு இடங்களில் உள்ள பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில், ஐந்து பள்ளிகள், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில், தலா, நான்கு பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலை, கல்வித் துறை வெளியிடவில்லை. அமைச்சர்கள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் என, பலரும், தங்களது தொகுதியில் உள்ள பள்ளியை, தரம் உயர்த்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அனைவரது கோரிக்கையையும், கல்வித் துறையால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், பட்டியலை வெளியிட்டால், பிரச்னை வரும் என, நினைத்து, துறை, அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், அனைவரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை நச்சரித்து, பட்டியலை கேட்டு வருகின்றனர்.

உயர்நிலை எப்போது: "ஐம்பது நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்'
என்றும், முதல்வர் அறிவித்திருந்தார். இந்த பட்டியலும், இன்னும் வெளியாகவில்லை.

"பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்ற

ர். பள்ளிக் கல்வி துறையில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாட வேளைகள் மாற்றியமைக்கப்பட்டன. பகல் 12:35 முதல் 1:05 மணி வரை, 15 நிமிடங்கள் யோகா வகுப்பும், மீதம் 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கல்வியும் அளிக்க வேண்டும். மாலை பள்ளி முடிந்த பின், ஒரு மணி நேரம் பொழுது போக்கு நிகழ்வுகளில், மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும், என, மாற்றப்பட்டது.

யோகா என்பது மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தும் உன்னத திட்டம். அவர்களின் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம், அந்த குறிப்பிட்ட நேரத்தில் யோகா வகுப்புகளை நடத்த முடியாத நிலை உள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது: நூற்றுக்கணக்கில் மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களை, யோகா வகுப்பிற்கு தயார்படுத்துவதற்கே நேரம் சரியாக உள்ளது. இதனால், பல பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடப்பதில்லை. யோகா கற்க, திறந்தவெளி சிறந்தது. பகல் 12:30 மணிக்கு வெயிலில், மைதானத்தில் மாணவர்களை வைத்து ஆசனங்களை கற்றுத்தர முடியவில்லை.

மாலையில் யோகா நடத்தும் வகையில், நேரத்தை மாற்றலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். யோகா பயிற்சி ஆசிரியர் சுவாமி பிரேம்மித்ரா, ""பகல், இரவு சந்திக்கும் நேரம் தான் யோகா, தியானத்திற்கு ஏற்ற நேரம். பகல் 12:30 மணி என்பதை விட மாலை நேரம் சிறந்தது. அந்நேரம் தான் மனிதனின் நாடி, நரம்புகளை சாந்தப்படுத்தும்,'' என்றார்.

Friday, July 05, 2013

12 லட்சம் மாணவர்களுக்கு உடல் திறன் கண்டறிய போட்டி  

   அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 12 லட்சம் மாணவ, மாணவியரின், தனிப்பட்ட விளையாட்டுத் திறனை அறிவதற்காக, அவர்களுக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்காக, 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த வேண்டும். குழு விளையாட்டு அல்லது தனிநபர் போட்டிகளில், மாணவர்களின் திறனை அறிந்து, அதை மேம்படுத்தும் வகையில், போட்டிகளை நடத்த வேண்டும். வேகமாக ஓடும் ஆற்றலை கண்டறிய, 50 மீட்டர் ஓட்டமும், அதிகமாக தாக்குப் பிடிக்கும் திறனை கண்டறிய, 600, 800 மீட்டர் ஓட்ட போட்டியும் நடத்த வேண்டும். ஜூலை இறுதிக்குள், இந்த போட்டிகளை நடத்தி முடிக்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போட்டியில், 10 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அல்லது ஏதேனும் இரு தேர்வுகளில், முறையே, எட்டு அல்லது ஒன்பது மதிப்பெண் பெற்ற மாணவர்களின் ஆற்றல் தரத்தை, இதற்கென தரப்பட்ட படிவத்தில் பதிவு செய்து, அதை, மாவட்ட விளையாட்டு அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். மாணவர் திறன் அறியும் அட்டையில், பெற்றோரின் கையொப்பத்தை பெற வேண்டும். போட்டிகள் முடிந்ததும், அது தொடர்பான முழுமையான அறிக்கையை, இயக்குனருக்கு, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும், 7,307 அரசு நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 12.72 லட்சம் மாணவர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.