இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 18, 2013

குரூப்–2, குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி -

புதிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், மேற்கண்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கடந்த மார்ச் மாதம் 12–ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கருத்துகள் எழுந்தன. சட்டசபையிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்து தரமும் குறையாமல் அதே நேரத்தில் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் குறைந்துவிடாமல் மாற்றம் செய்துள்ளோம். தாய்மொழியான தமிழுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து இருக்கிறோம். சிறந்த ஊழியர்களை, அதிகாரிகளை தேர்வுசெய்யும் வண்ணம் ஆப்டிடியூட் எனப்படும் திறனறித்தேர்வு பகுதியையும் சேர்த்துள்ளோம். அரசு பணியில் ஏற்படும் காலி இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். எனவே, காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் நிரப்பப்படும். தகுதியான பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

மீண்டும் 100 கேள்விகள் குரூப்–1 தேர்வைப் பொருத்தமட்டில் தேர்வுமுறை மற்றும் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. நகராட்சி கமிஷனர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்–பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர் போன்ற பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்–2 நேர்காணல் தேர்விலும், அதேபோல், பல்வேறு துறைகளுக்கான உதவியாளர் பதவிகளை உள்ளடக்கிய குரூப்–2 நேர்காணல் அல்லாத பணி தேர்விலும், குரூப்–3 தேர்விலும் அதேபோல் குரூப்–4 தேர்விலும் மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தரத்தில் 100 கேள்விகள் கொண்ட பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கில தேர்வு சேர்க்கப்பட்டு உள்ளது. வி.ஏ.ஓ. தேர்வில் மாற்றம் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) தேர்வில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 30 கேள்விகளுக்குப் பதிலாக 80 வினாக்களும், பொதுஅறிவு தாளில் 100 கேள்விகளில் 25 வினாக்கள் கிராம நிர்வாகம் தொடர்பாக கேட்கப்படும். திறனறிவுத்தேர்விற்கான 20 வினாக்களில் மாற்றம் இல்லை. தேர்வு எழுதுவோர் தமிழை ஆழ்ந்து தெரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் ஏற்கனவே உள்ள இலக்கணத்துடன் தமிழ் இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தொண்டும் என்ற பகுதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல் பொது ஆங்கிலத்தில் ஆங்கில இலக்கணத்துடன் கூடுதலாக ஆங்கில இலக்கியம், ஆங்கில அறிஞர்களும் தொண்டும் என்ற பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இணையதளத்தில் பார்க்கலாம் குரூப்–2 மெயின் தேர்வில் தேர்வர்களின் பொது விழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரைவு எழுதல் ஆகிய திறமைகளை சோதிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் மூலம் திறமை வாய்ந்த அரசு பணியாளர்களை தேர்வு செய்ய இயலும். புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். எஸ்.எஸ்.எல்.சி. தரம் கொண்ட குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தமிழிலும் வெளியிடப்படும். இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் உடனிருந்தார்.

அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லியில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.ம

தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் 1-6-2013 காலிப்பணியிடம் விபரம் தொடக்ககல்வி இயக்குநர் கோருதல் சார்பு

அனைத்து உதவி-கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் ஆய்வுக் கூட் டம்

அரசுப்பணியாளர் - வங்கி கணக்கு கணக்கிடு முறை

Wednesday, April 17, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

- மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் அக விலைப்படி உயர்வு நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 72 சதவீத அக விலைப்படி பெற்று வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வு காரணமாக 2013ம் ஆண்டின் முதல் 6 மாதத்துக்கு அகவிலைப்படி 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீத மாக, அதாவது 8 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்தது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பே இது பற்றி மத்திய மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அது ஒத்திப் போடப்பட்டது. இந்த நிலையில் மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் 8 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியில் இருந்து 8 சதவீத அகவிலைப்படி பெறும் வகையில் முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். எனவே மத்திய அரசு ஊழியர்கள் பெறும் சம்பளம் உயரும். இதனால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், சுமார் 30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.

டி.என்.பி.எஸ்.சி., பாடத்திட்டங்கள் மீண்டும் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், மீண்டும் மொழிப்பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, முன்பு இருந்த படியே, 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 30ல் இருந்து, 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்ட அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக, இன்று வெளியாகிறது.அரசுப் பணியில் சேருபவர்கள், திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில், மாற்றத்தை ஏற்படுத்தினார். இதில், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

இது தொடர்பாக, நடப்பு சட்டசபையில், சில எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, "மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என, பள்ளிக்கல்வி அமைச்சர், வைகை செல்வன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, புதிய பாடத் திட்டங்களில், மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளில், தேர்வாணையம் ஈடுபட்டது. குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, பழையபடி, 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 30ல் இருந்து, 80 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குரூப்-2 தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான, 100 கேள்விகள், முற்றிலும் நீக்கப்பட்டு, பொது அறிவில், 150 கேள்விகளும், திறன் அறிதல் பகுதியில், 50 கேள்விகள் என, உருவாக்கப்பட்டுஇருந்தது. இவை மாற்றப்பட்டு, மொழிப்பாட பிரிவில், மீண்டும், 100 கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகும் என, கூறப்படுகிறது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 1591 பேர்: பணி நியமனத்துக்கு அரசு அனுமத

ிதமிழகத்தில் புதியதாக 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப, கூடுதலாக முதுகலையாசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் 470, ஆங்கிலம் 154, கணிதம் 71,இயற்பியல் 118, வேதியியல் 115, உயிரியல் 40, தாவரவியல் 92,விலங்கியல் 76, வரலாறு 73,புவியியல் 17, பொருளியல் 166, வணிகவியல் 199 என,பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை 10, காஞ்சிபுரம் 84,திருவள்ளூர் 125, விழுப்புரம் 67,கடலூர் 24, வேலூர் 124, திருவண்ணாமலை 165,தர்மபுரி 79,கிருஷ்ணகிரி 89,சேலம் 73,நாமக்கல் 30,ஈரோடு 61,கோவை 32, திருப்பூர் 45,நீலகிரி 14,திருச்சி 54,பெரம்பலூர் 19,அரியலூர் 31, கரூர் 36,புதுக்கோட்டை 47,தஞ்சாவூர் 34,நாகப்பட்டினம் 29,திருவாரூர் 29,மதுரை 49,திண்டுக்கல் 48,தேனி 25,சிவகங்கை 22,ராமநாதபுரம் 30,விருதுநகர் 38, தூத்துக்குடி 24,திருநெல்வேலி 45,கன்னியாகுமரி 6 என, மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்ட செயலாளர் கணேசன்,"" மாணவர்கள் தரத்தை உயர்த்துவதற்கு,பணி நியமனம் மிகவு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

  தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு வருகிற ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வுக்கான விண்ணப்பங்களை tn.govt.indge என்ற இணைய தளத்தில் 18.04.2013 வியாழக்கிழமை முதல் 29.04.2013 திங்கட்கிழமை வரை பக்கம் 1 முதல் 6 வரை நகல் எடுóத்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை (பக்கம் 1 முதல் 4 வரை) அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 29.04.2013 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியற்ற தேர்வர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்படுமெனில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும். தபால் மூலமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை உதவி பிரிவு அதிகாரி தேர்வு முடிவு வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான (பொறுப்பு) மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ் வளர்ச்சி, இந்து அறநிலைய மற்றும் செய்தி தொடர்புத்துறையில் 16 உதவி பிரிவு அதிகாரி (மொழிபெயர்ப்பு) பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 3–ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு, காலி பணி இடங்களின் எண்ணிக்கை மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 48 விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 26–ந் தேதி அன்று சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் தேர்வர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.

பெண் குழந்தை பாதுகாப்பு வைப்புத்தொகை ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு: சத்துணவு–அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உயர்த்தப்படும் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

ு.பெண் சிசுக்கொலையை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், எனது ஆட்சி காலத்தில் 1992–ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவான பெண் குழந்தைகள் பெயரில் ரூ.1,500 ரூபாய்க்கான வைப்புத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் 2001–ம் ஆண்டு இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிதி உயர்வு இதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.22,200 வைப்புத்தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா 15,200 ரூபாயும் வைப்பீடு செய்யப்பட்டது. இந்த தொகை 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும்.

தற்போது இந்த தொகை முறையே ரூ.50 ஆயிரம் என்றும், ரூ.25 ஆயிரம் என்றும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் கீழ் 1992–ம் ஆண்டு முதல் 1995–ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தைகள் பெறும் முதிர்வுத்தொகை குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டும்; இவர்களுக்கு தற்போது திருமண உதவி திட்டத்தின் பயன் அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு மற்ற திருமண உதவி திட்டங்களுக்கு வழங்கப்படும். இதன்படி, இவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் கல்வி தகுதிக்கேற்ப திருமண உதவித்தொகையும் வழங்கப்படும். 18 வயதில் முதிர்வுத்தொகை இது மட்டுமல்லாமல், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பயனாளிகளின் வைப்புத்தொகைக்கான முதிர்வுத்தொகை அவர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவுடன் வழங்கப்பட்டு வந்தது.

இக்குழந்தைகளின் உயர் கல்விக்கு பயனளிக்கும் வகையில், இந்த முதிர்வுத்தொகை இனிமேல் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வழங்கப்படும். இதனால், நடப்பு நிதி ஆண்டில் 30 ஆயிரம் பெண்கள் பயனடைவார்கள்.

அங்கன்வாடிகளுக்கு ஞாயிறு விடுமுறை தாய் சேய் நலத்திற்கு வழிகாட்டும் திட்டமான ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு சனிக்கிழமை அன்றும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பணிகள் முற்றிலும் மாறுபட்டு ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதாலும், ஒருவருடைய வேலையை மற்றொருவர் முழுமையாக செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதாலும், இவர்களுக்கு வெவ்வேறு நாட்களில் விடுமுறை அளிப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கிறது.இதை கருத்தில் கொண்டும், ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் பொது விடுமுறை என்பதாலும், அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வார இறுதி நாளை மகிழ்வுடன் செலவிடும் வகையில், அவர்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். மேலும், அங்கன்வாடிகளில் சத்துணவு பெறும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட வேண்டிய சத்துணவு, வீட்டிற்கு எடுத்துச்செல்லும் வகையில் சமைக்கப்படாத உணவுப்பொருளாக குழந்தைகளின் பெற்றோர்களிடம் அங்கன்வாடி ஊழியர்களால் சனிக்கிழமை அன்றே வழங்கப்படும்.்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

2013-14ஆம் நிதியாண்டுக்கான அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ல் இருந்து 8.7% ஆக குறைப்ப

ு 2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் வெளியிடப்படப்பட்ட  மத்திய நிதி அமைச்சக உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த வைப்பு நிதிக்கு  2013-14ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7 சதவீதமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

 கடந்த நிதியாண்டில்(2012-13) பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விதமானது 01.04.2013ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரவானது கீழ்காணும் நிதி அமைப்புகளுக்கு பொருந்தும்:

1. பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்). 2. பங்களிப்பு சேம நல நிதியம் (இந்தியா). 3. அனைத்து இந்திய சேவைகள் சேம நல நிதியம். 4. மாநிலம் ரயில்வே சேம நல நிதியம். 5. பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்). 6. இந்திய ராணுவ தளவாட துறை சேம நல நிதியம். 7. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி. 8. இந்திய கடற்படை கப்பல் பட்டறை workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி. 9. பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் சேம நல நிதியம். 10. ஆயுதப்படைகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி.

Tuesday, April 16, 2013

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. தற்செயல் விடுப்பு ( Casual Leave) ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.

4. ஈட்டிய விடுப்பு (Earned Leave) ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்கு இதில் பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.

5. மருத்துவ விடுப்பு (Medical Leave) மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்ப விடுப்பு எடுக்க தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர் 90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540 நாட்கள் வரை எடுக்க தகுதி உண்டு

. 6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs) சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.

7. மகப்பேறு விடுப்பு (Meternity Leave) திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.

8. சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave) குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய / சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.

9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு (Turn Duty, Compensate Leave) அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.்

பாரதி தாசன் பல்கலை படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு

: எம்.எஸ்சி., "அப்ளைடு' கணிதம் உள்ளிட்ட, பல பட்டப் படிப்புகள், அரசு வேலைக்கு தகுதியானதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர் கல்வித்துறை வெளியிட்ட அரசாணை: பாரதிதாசன் பல்கலை வழங்கும், எம்.எஸ்சி., "அப்ளைடு கணிதம்', எம்.எஸ்சி., "அப்ளிகபிள் கணிதம்', எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகள், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது. இதே பல்கலை வழங்கும், பி.எஸ்சி., சுற்றுச்சூழல் விலங்கியல், எம்.எஸ்சி., விலங்கியல் பட்டப் படிப்பிற்கு நிகரானது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பயிலும் 1 கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடை

   வரும் ஜூன் 3ம் தேதி, பள்ளிகள் திறந்ததும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்' சீருடை ஆகியவற்றை வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. வரும், 2013-14ம் கல்வி ஆண்டு, ஜூன் 3ம் தேதி துவங்குகிறது. பள்ளிகள் திறந்த முதல் நாளே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்' சீருடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 32 மாவட்டங்களுக்கும், இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் அனுப்பும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து, பள்ளிக் கல்வி வட்டாரங்கள், நேற்று கூறியதாவது

: பள்ளி திறந்த முதல் நாளே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவர்களுக்கு, புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்படும். மாணவர்களுக்கு, ஆண்டுக்கு நான்கு ஜோடி, இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதில், முதல்கட்டமாக, ஒரு ஜோடி சீருடை மட்டும், பள்ளி திறந்த நாளன்றே வழங்கப்படும். மீதியுள்ள மூன்று செட் சீருடைகள், படிப்படியாக, விரைந்து வழங்கப்படும். இவ்வாறு, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பணிகளை, சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள் ஆகியோருக்கு, பாடநூல் கழகம் சார்பில், பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று நடந்தது.

புதிய திட்டங்கள்: இலவச சைக்கிள், பஸ் பாஸ் உள்ளிட்ட சில திட்டங்கள், ஏற்கனவே அமலில் இருந்து வருகின்றன. கடந்த கல்வி ஆண்டில், இலவச கலர் பென்சில், "க்ரேயான்' பென்சில்கள், ஜியாமெட்ரி பாக்ஸ், அட்லஸ், காலணி, புத்தகப் பை ஆகிய திட்டங்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், கூடுதலாக, இரண்டு, செட் சீருடைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த திட்டங்களை, கடந்த கல்வி ஆண்டில் நிறைவேற்றுவதில், சிரமம் இருந்தது. "டெண்டர்' உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருந்ததால், பொருட்களை வழங்குவதில், கால தாமதம் ஏற்பட்டது. ஆனால், வரும் கல்வி ஆண்டில், இது போன்ற தாமதங்கள் ஏற்படாது என்றும், அனைத்து இலவச பொருட்களும், ஒருசில மாதங்களில், முழுவதுமாக வழங்கி முடிக்கப்படும் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணிமுடிவு

்:தமிழகம் முழுவதும், இந்தாண்டுபிளஸ் 2 தேர்வை 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இவர்களது விடைத்தாள் திருத்தம் பணி, மார்ச் 28 முதல் 55 மையங்களில் துவங்கியது. அறிவியல், கணிதம், கம்ப்யூட்டர் விடைத்தாள்களுக்கு, டம்மி நம்பர் வழங்கப்பட்டு, தனி மையங்களில் திருத்தப்பட்டன. இந்த மையங்களில் முன் கூட்டியே பணிகள் முடிந்தன. மொழித்தாள்களான தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்கள் இறுதியாக திருத்தப்பட்டன. தேர்வுத் துறை உத்தரவுபடி, ஏப்.,14 க்குள் நிறைவடைய வேண்டிய விடைத்தாள் திருத்தும் பணிகள், இன்றுடன் முடிகிறது. இதன் பின், டேட்டா சென்டரில் பாட வாரியாக மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

திறந்த புத்தக தேர்வு முறை: சிபிஎஸ்இ அறிமுகம்

் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறையை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த உள்ளது. மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ இந்த புதிய முறையை திட்டமிட்டுள்ளது. திறந்த புத்தக தேர்வு முறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஆண்டு முதல் +2 மாணவர்களுக்கு இந்த முறையை சிபிஎஸ்இ கொண்டு வர உள்ளது.

மாணவர்கள் தேர்வு நேரத்தில் அனைத்து பாடங்களையும் படித்து குழம்புவதை விட, தேர்வுக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்று 4 மாதங்களுக்கு முன்பே மாணவ, மாணவியருக்கு தெரிவிக்கப்படும். தேர்வுக்கு அதனை மட்டும் படித்தால் போதும், இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறைவதோடு, பயமின்றி தேர்வு எழுதவும் முடியும். இதனால் சிறந்த புத்தக தேர்வு முறை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.