இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 23, 2013

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் கணித வினா எப்படி இருக்கும்?

   மாணவர்கள் குழப்பத்தை போக்குவதற்காக 10ம் வகுப்பு புதிய கணித வினா அமைப்பு குறித்து மாணவர்களிடம் விளக்கமாக தெரிவிக்கும்படி பள்ளிகளுக்கு கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.10ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 27ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு கணித வினாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வராமல் இருந்ததால் வினாத்தாள் எப்படி இருக்கும் என்ற குழப்பமும், அச்சமும் மாணவர்கள் மத்தியில் இருந்தது. இதை தவிர்ப்பதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் புதிய மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதிய வினாத் திட்டப்படி ஏ பிரிவில் கேட்கப்படும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் 15 வினாக்கள் புத்தகத்தில் எடுத்துக்காட்டு வினா மற்றும் புத்தக வினாவில் இருந்தே கேட்கப்படும். இதுபோல் பி பிரிவில் 2 மதிப்பெண் வினாவில் கிரியேட்டிவ் வினாவாகவும், கட்டாய வினாவாக இருந்த 30வது வினா இப்போது புத்தகத்தில் உள்ள வினாவாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பதில் வினா எண் 16 முதல் 29 வரை உள்ள இரு மதிப்பெண் வினாக்களில் 2 வினாக்கள் கிரியேட்டிவ் வினாவாக கேட்கப்படும். சி பிரிவில் கட்டாய கிரியேட்டிவ் வினாவாக இருந்த கேள்வி எண் 45 இனி புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். அதற்குப் பதில் 31 முதல் 44 வரை உள்ள வினாக்களில் 2 வினாக்கள் கிரியேட்டிவ் வினாவாக கேட்கப்படும்.

கடந்த ஆண்டு மெய்யெண்கள், இயற்கணிதம், ஆயத்தொலைவுகள், அளவியல் பாடங்களில் இருந்து மட்டுமே கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இப்போது அனைத்துப் பாடங்களில் இருந்தும் கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த விளக்கங்கள் கல்வித்துறையால் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வினா வடிவமைப்பு முறையால் கணிதத்தில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதுபோல் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கையில் இம்முறை அதிகரிக்கும் என கல்வித் துறையால் எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, March 22, 2013

25-ல் அண்ணாமலை பல்கலைத் தேர்வு முடிவுகள் வெளியீ

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச் 25-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார். இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in,  www.schools9.com  ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359. மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.லிட்., பி.ஏ. தமிழ்., பி.காம், பிஎல்ஐஎஸ்.,பி.எம்.எம். பி.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.எஸ்சி. யோகா, எம்.எல்.ஐ.எஸ்., மற்றும் பிஜி டிப்ளமோ, டிப்ளமோ வகுப்புகள்.

தொலைநிலைக் கல்வி:எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். தேர்வு முடிவுகள் 25-ல் வெலியீட

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மார்ச் 25) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகளை திங்கள்கிழமை இரவு 8 மணி முதல் ஜ்ஜ்ஜ்.ன்ய்ர்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம்.  தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டுக்கான கட்டணம் ரூ.750 ஆகும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 4 ஆகும்.

1,496 குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்த

  தொழில் ரீதியாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் வசிக்கும் 5 வயதுக்குள்பட்ட ஆயிரத்து 496 குழந்தைகளுக்கு சனிக்கிழமை (மார்ச் 23) போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி: செங்கல் சூளையில் பணிபுரிவோர், கட்டுமானத் தொழில் புரிவோர், அகதிகள், குடிசை வாழ் மக்கள், நரிக்குறவர்கள் மற்றும் கலைக் கூத்தாடிகள் உள்பட தொழில் ரீதியாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் வசிக்கும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு முறையாக தடுப்பூசிகள் போடப்படுவதில்லை. இந்த ஆண்டில் இடம்பெயர்ந்தோர் வசிக்கும் 844 இடங்கள் கண்டறியப்பட்டு, 5 வயதுக்குள்பட்ட 1,496 குழந்தைகளுக்கு சனிக்கிழமையன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

தமிழக பட்ஜெட் குறித்து,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் அறிக்கை


தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

தொடக்கக்கல்வித்துறையில் 20.03.2013 அன்று உள்ளபடி ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் 26.03.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மேலும் இதேபோல் பள்ளிக்கல்விதுறையிலும் தகவல் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, March 21, 2013

புதிய அரசாணை மற்றும் இயக்கநர் செயல்முறைகள்

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி

ஜெனீவா: ஐ.நா., வில் மனித உரிமைகள் கழகத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும், தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டன. 8 நாடுகள் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டுப்போட்டது. 

Budget for the year 2013- 2014 (Tamil Version)

Wednesday, March 20, 2013

மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு அரசால், 15 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், தாமதமாக துவங்கியதால், இந்த கல்வியாண்டு முடியும் நிலையிலும் கூட, இன்னும் பல பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, வரும் கல்வியாண்டில், பள்ளி திறக்கும் போதே அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும், என்பதற்காக, அந்தந்த மாவட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, விலையில்லா பொருட்கள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து பட்டியல் அனுப்பும்படி, பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பட்டியல்படி, பள்ளி திறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு, அனைத்து பொருட்களும், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அவை பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, என்றார், கல்வித்துறை அதிகாரி ஒருவர்.

எம்.பில் பகுதி நேர படிப்ப

் எம்.பில் பகுதி நேர படிப்பாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்பு கல்லூரிகளில் வழங்குகின்றன. திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் எம்.பில் பகுதி நேர படிப்பாக வழங்கப்படுகிறது. வழங்கப்படும் கல்லூரிகளை காண http://www.bdu.ac.in/admission/mphil2012/MPhil_Prospectus_2012_v6.pdf என்ற வலைதளத்தில் பார்க்கலாம்.  பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் எம்.பில்., பகுதி நேர மற்றும் முழுநேர படிப்பாக வழங்கப்படுகிறது. வழங்கப்படும் கல்லூரிகளின் விவரங்களை காண http://www.periyaruniversity.ac.in/files/course_structure_mphil.pdf என்ற இணையதளத்தை அணுகலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Tuesday, March 19, 2013

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏப்ரல் 10ல் சென்னையில் கோரிக்கை மாநாடு


10ம் வகுப்பு கணித பாடத்தில் மாற்றம் :பள்ளிகளுக்கு சுற்றறிக்கையில் விளக்கம-dinamalar

்    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, கணித வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்த சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதில், அறிவியல் பாடத் தேர்வில் செய்முறை அமல்படுத்தியதோடு, வினாத் தாள்களிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தது. பாடப் புத்தகத்தில் இருப்பதை, அப்படியே கேட்காமல், "கிரியேட்டிவிடி'யை அதிகரிக்கும் வகையில், பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதிலும், கணிதப் பாடத்தில், 12 மதிப்பெண்களுக்கு, இந்த வகையிலான கேள்விகளுக்கு, கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டிய நிலை இருந்தது.

இதனால், கடந்த ஆண்டு, 100 சதவிகித மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்தது. இந்நிலையில், நடப்பாண்டில் கணித விடைத்தாளில் மாற்றம் வரும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கு, அதிகாரபூர்வ சுற்றறிக்கை வராத காரணத்தால், அவை உண்மையா அல்லது, கடந்த ஆண்டு போலவே, வினாத்தாள் வந்து விடுமோ என்ற பயம், மாணவர்களிடையே எழுந்தது. தற்போது, அனைத்து பள்ளிகளுக்கும், இம்மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் கணிதப்பாடம், "ஏ' பிரிவில் கேட்கப்படும், ஒரு மதிப்பெண் வினாக்கள் 15ம், புத்தகத்தில் எடுத்துக்காட்டு வினா மற்றும் புத்தக வினாவில் இருந்தே, கேட்கப்படும். "பி' பகுதியான இரு மதிப்பெண் வினாவில், "கிரியேட்டிவ்' வினாவாகவும், கட்டாய வினாவாகவும் இருந்த, 30வது வினா, நடப்பாண்டில் புத்தகத்தில் உள்ள வினாவாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதில் வினா எண் 16 முதல், 29 வரை உள்ள, இரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு வினாக்கள், "கிரியேட்டிவ்' வினாவாக கேட்கப்படும். இதே போல், பிரிவு, "சி' யில் கட்டாய வினாவாகவும், கிரியேட்டிவ் வினாவாகவும் இருந்த, 45 வது வினா, தற்போது புத்தகத்தில் உள்ள வினாவாக கேட்கப்படும். இதற்கு பதில் வினா எண், 31 முதல், 44 வரை உள்ள வினாக்களில் இரண்டு வினாக்கள், "கிரியேட்டிவ்' வினாவாக கேட்கப்படும். அதே போல், கடந்த ஆண்டில், மெய்யெண்கள், இயற்கணிதம், ஆயத்தொலைவுகள், அளவியல் பாடங்களில் இருந்து மட்டுமே, "கிரியேட்டிவ்' வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தற்போது அனைத்து பாடங்களில் இருந்தும், "கிரியேட்டிவ்' வினாக்கள் கேட்கப்படும் என்பது உள்ளிட்ட ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டாய வினாக்களில், "கிரியேட்டிவ்' வினாக்கள் இல்லாததால், புத்தகத்தில் உள்ள வினாக்களை கொண்டே, 100 சதவிகித மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளதால், நடப்பு கல்வியாண்டில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கை, அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை

: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு, அரசால்,15 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு முதல், செயல்படுத்தப்பட்ட, இந்த திட்டம், தாமதமாக துவங்கியதால், இந்த கல்வியாண்டு முடியும் நிலையிலும், பல பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளன.

எனவே, வரும் கல்வியாண்டில், பள்ளி திறக்கும் போதே, அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த மாவட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, விலையில்லா பொருட்கள் பெறும் மாணவர்கள் குறித்து, பட்டியல் அனுப்பும்படி, பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பட்டியல்படி, பள்ளி திறப்பதற்கு, 10 நாட்களுக்கு முன், அனைத்து பொருட்களும், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அவை பள்ளி திறக்கும் நாளில், மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்வித்துறையில் 500 இளநிலை உதவியாளர் நியமனம

் : பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-4 தேர்வில் இருந்து, இளநிலை உதவியாளர்கள், 500 பேர், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, அரசின் அனுமதியை பெற்று, மிக விரைவில், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், 500 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஓய்வூதியதாரர்கள் ஆண்டு நேர்காணல்: ஏப்ரல் 1-ல் தொடக்கம

  தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஆண்டு நேர்காணல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மேலே குறிப்பிட்ட காலவரையறைக்குள் தங்களது உயிர்வாழ் சான்றினை ("லைஃப் சர்ட்டிபிகேட்') அந்தந்த ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.

அதாவது ஓய்வூதியம்- குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்களுக்கு உரிய கருவூல அலுவலகத்தில் ஓய்வூதிய புத்தகம் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஓய்வூதிய ஆணை மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்துடன் வரும் ஜூன் 28ஆம் தேதிக்குள் சென்னை, கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிக்குள் நேரில் வர வேண்டும். நேரில் வர இயலாத ஓய்வூதியதாரர்கள், தங்களின் உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கல்லூரி சாலை, சென்னை - 6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார

click here to download the DSE proceeding -


http://www.teachertn.com/2013/03/blog-post_4325.html?m=1

2012 - 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு ›


click here to download the DEE proceeding for 2012-13 Panel Preparation Guidelines Regarding

http://www.teachertn.com/2013/03/2013-14.html?m=1

நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு ›

Monday, March 18, 2013

ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு மாற்ற கோரிக்கை

  "நடப்பு கல்வி ஆண்டில், 3,000 ஆசிரியர் பயிற்றுநர்களை, பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும்' என, அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் அறிக்கை: ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளிக்கு இடம் மாறுதல் செய்யும்போது, 1:2 என்ற முறையில், கலந்தாய்வு நடத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு முன், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில், நிரப்பப்படாமல் உள்ள, "டேட்டா ஆபரேட்டர்' மற்றும் கணக்காளர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் தற்போதைய புகைப்படத்தினை காட்சிப்படுத்துமாறு இயக்குநரின் உத்தரவு

TNPSC – Departmental Exam May 2013 – Online Registration

Sunday, March 17, 2013

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில கோரிக்கை விளக்க மாநாடு ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்ப

ு. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்ரல் 7ந்தேதி நடைபெற இருந்த மாநில மாநாடு தவிர்க்க இயலாத காரணத்தால் வருகிற 10ந் தேதி சென்னையில் நடைபெறும் என பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்கள். அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் 22ம் தேதி முதல் துவக்கம

்  தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும், 22ம் தேதி துவங்குகிறது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த, 21ம் தேதி துவங்கியது. வரும், 27ம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவடைகிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தேர்வுகள் அனைத்தும், 27ம் தேதி முடிவடையும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி வரும், 22ம் தேதி முதல் துவங்கவிருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக, 15 மையங்களில், விடைத்தாள்களுக்கு மாற்று எண் (டம்மி) வழங்கும் பணி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 20 மையங்களில், 28ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

சத்துணவு மையங்களுக்கு ரூ. 12 கோடியில் 99 ஆயிரம் மிக்சி : ஜெ. அறிவிப்பு

ரூ.12 கோடி செலவில் 99,329 சத்துணவு மையங்களுக்கு மிக்சி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் ஒரே மாதிரியான உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப 13 வகை கலவை சாதங்கள் மற்றும் 4 வகையான முட்டை மசாலாக்கள் என்ற புதிய உணவு வகைகளை சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தை நல மையங்களில் வழங்கப்படவுள்ளது. புதிய வகை உணவுகள் தரமாகவும், உரிய நேரத்தில் வழங்கவும் ஒவ்வொரு மையத்திற்கும் மிக்சி தேவைப்படுவதால் அனைத்து சத்துணவு மையங்களுக்கும், குழந்தை நல மையங்களுக்கும் பிற உபகரணங்கள் உள்பட மிக்சி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, முதல்கட்டமாக 43,787  சத்துணவு மையங்கள் மற்றும் 9,094 குழந்தைநல மையங்களில் ரூ. 6 கோடியே 56 லட்சத்து 26 ஆயிரம் செலவிலும், இரண்டாம் கட்டமாக 46,448 குழந்தை நலமையங்களில் ரூ.5 கோடியே 76 லட்சத்து 42 ஆயிரம் செலவிலும் என மொத்தம் 99,329 மையங்களுக்கு, தலா ஒரு மிக்சி வீதம் 99,329 மிக்சிகளை மொத்தம் ரூ.12 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் செலவில் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.