இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 05, 2013

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் 26 மாதிரி பள்ளிகள், ஜூனில் துவக்கம்

  மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக, கல்வியில் பின்தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள், வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளன. கட்டடப் பணிகள் இன்னும் துவங்காததால், தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மத்திய அரசு, நாடு முழுவதும், கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒரு மாதிரிப் பள்ளியை நிறுவி, இலவசமாக, தரமான ஆங்கில வழி கல்வியை அளித்து வருகிறது.இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 44 ஒன்றியங்கள், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில், 18 ஒன்றியங்களில், மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள், முடியும் தருவாயில் உள்ளன. தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.மாதிரிப் பள்ளிகளில் சேர, கிராமப்புற மாணவ, மாணவியர், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 18 பள்ளிகளிலும், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டாவது கட்டமாக, மீதியுள்ள, 26 ஒன்றியங்களில், தலா ஒரு மாதிரிப் பள்ளி வீதம், 26 மாதிரிப் பள்ளிகளை, வரும் கல்வி ஆண்டு முதல் துவக்க, மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம் திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது

:ஒவ்வொரு பள்ளியும், 3 கோடி ரூபாய் செலவில், கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, கூடுதலாக, 25 முதல், 50 லட்சம் ரூபாய் வரை தேவை. கூடுதல் தொகையை, தமிழக அரசிடம் இருந்து பெற்று, கட்டுமானப் பணியை துவக்க உள்ளோம்.வரும் ஜூன் மாதம் முதல், கட்டுமானப் பணிகள் துவங்கும். தற்காலிகமாக, 26 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டில் இருந்து, பள்ளியை துவக்கவும், முடிவு செய்துள்ளோம். ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாணவர் சேர்க்கை நடக்கும். ஒவ்வொரு வகுப்பிலும், தலா, 40 மாணவர் வரை சேர்க்கப்படுவர். 2014-15ம் கல்வி ஆண்டில் இருந்து, கூடுதலாக, மேலும் ஒரு வகுப்பு துவங்கப்படும்.கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள உள் கட்டமைப்பு வசதிகளைப் போல், அனைத்து வசதிகளையும், இந்த பள்ளிகள் உள்ளடக்கி இருக்கும். ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என, 30 பேர் வரை, நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் பணி நியமனம

்அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 700 முதுகலை ஆசிரியர்கள், நேற்று பணி நியமனம் செய்யப்பட்டனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்கனவே நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் காலி இடங்களுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்து, பள்ளி கல்வித்துறையிடம், பெயர் பட்டியலை வழங்கியது. இதைத் தொடர்ந்து, "ஆன்-லைன்' வழியாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், நேற்று பணி நியமன கலந்தாய்வு நடந்தது.

தேர்வு செய்யப்பட்ட, 700 பேரும், பணி நியமனம் செய்யப்பட்டதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த, 700 பேரின் பெயர் பட்டியலையும், வெளிப்படையாக, இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிடவில்லை. தனித்தனியாக, தேர்வை அறிந்து கொள்ளும் வகையில் தான், முடிவு வெளியிடப்பட்டது.ஒவ்வொரு தேர்வின் போதும், இதேபோன்ற நடைமுறையை, டி.ஆர்.பி., கடைபிடிக்கிறது. தேர்வு பெற்றவர்களின் முழு பட்டியலையும், "கட்-ஆப்' மதிப்பெண் படி, இன சுழற்சி வாரியாக, ஒரே பட்டியலாக வெளியிட வேண்டும் என்றும், இதுபோன்று வெளியிட்டால் தான், தேர்வு வாரியத்தின் வெளிப்படைத் தன்மையை அறிய முடியும் என்றும், தேர்வர்கள் கூறுகின்றனர்.டி.ஆர்.பி.,யிடம், இதுகுறித்து கேட்டால், "நடவடிக்கை எடுக்கிறோம்' என, ஒற்றை வரியில் முடித்துக் கொள்கின்றனர்.

பொதுத் தேர்வுகளை புகாருக்கு இடமின்றி நடத்த வேண்டும்

   பள்ளிக் கல்வித் துறையின் புதிய அமைச்சராக வைகைச் செல்வன் பொறுப்பேற்றவுடன் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள திட்டங்களை விரைவாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டும் என்றும் அவர் ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் த.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் முகமது அஸ்லம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத் தலைவர் சண்முகவேல்ராஜ், பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் கே.தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட சம்பளம் உயர்வு: மத்திய அரசு

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட சம்பளம் ரூ.136லிருந்து ரூ.148 ஆக அதிகரித்துள்ளது. இது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Go.30 M.com (bank management,computer application) by bharathidhasan University.Equal to M.com

Monday, March 04, 2013

10ம் வகுப்பு தனி தேர்வு "தத்கால்' திட்டம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வை, தனி தேர்வாக எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், "தத்கால்' திட்டத்தில், 6,7ம் தேதிகளில், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுத்துறை அறிவிப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட தேர்வர் மட்டுமே, எழுத்து தேர்வில் பங்கேற்க முடியும். பழைய பாடத்திட்டத்தில், அறிவியல் பாடத்தை தவிர, இதர பாடங்களில் தோல்வியுற்று இருந்தால், அந்த பாடங்களை மட்டும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுதலாம்.

தேர்வுக் கட்டணம், 125 ரூபாய், சிறப்புக் கட்டணம், 500 ரூபாய் சேர்த்து, 625 ரூபாய் செலுத்த வேண்டும். www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், 5, 6ம் தேதிகளில், மாணவர் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை, 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்த பின், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய படிவத்தில் வழங்கப்படும், 10 இலக்க எண்களை, மாணவர், தவறாமல் குறித்து கொள்ள வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தியே, தேர்வு தொடர்பான எந்த ஒரு சந்தேகங்களுக்கும், முறையீடு செய்ய முடியும். பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தில், மாணவ, மாணவியர், தங்களின் புகைப்படத்தை ஒட்டி, அருகில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம், சான்றொப்பம் பெற வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை, வரும் 18, 19ம் தேதிகளில், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் ஒப்படைத்து, "ஹால் டிக்கெட்' பெறலாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

ஆசிரியர் பட்டய தேர்வில் 36.57 சதவீதம் பேர், "பாஸ்'

தொடக்க கல்வி, இரண்டாம் ஆண்டு பட்டயத் தேர்வில், 36.57 சதவீத தனி தேர்வர்கள், "பாஸ்' செய்துள்ளனர். தொடக்கக் கல்வி, இரண்டாம் ஆண்டு தனித்தேர்வு மாணவர்களுக்கான பட்டயத் தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடந்தது. தேர்வுத்துறை நடத்திய இத்தேர்வில், 35,640 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, 2ம் தேதி வெளியானது. இதில், 13,037 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 36.57. தோல்வியுற்ற மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

7வது சம்பள கமிஷன் அமைக்க திட்டமா?

  7வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயன் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்ல 6வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் ஜனவரி 2006 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது, 7வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது என கூறினார்.

Friday, March 01, 2013

பெட்ரோல் விலை ரூ.1.78 உயர்வு: 15 நாட்களில் மீண்டும் விலை அதிகரிப்பு: நள்ளிரவு முதல் அமல

ி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. பெட்ரோல் விலை இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 50 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 45 காசும் உயர்த்தின.

உள்ளூர் விற்பனை வரியையும் சேர்த்து சென்னையில் அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 91 காசும், டீசல் விலை லிட்டருக்கு 55 காசும் அதிகரித்தது. லிட்டருக்கு ரூ.1.78 உயர்வு எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களில் நேற்று மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 40 காசு உயர்த்தின. இந்த விலை உயர்வு உள்ளூர் விற்பனை வரி அல்லது ‘வாட்’ வரி நீங்கலானது ஆகும். வரியையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 78 காசு உயர்ந்தது.

இந்த விலை உயர்வினால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 72 ரூபாய் 17 காசில் இருந்து 73 ரூபாய் 95 காசாக அதிகரித்தது. நள்ளிரவு முதல் அமல் வரியையும் சேர்த்து டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 68 காசு அதிகரித்து, 70 ரூபாய் 74 காசு ஆனது. இதேபோல் வரியையும் சேர்த்து மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 77 காசு அதிகரித்து, 77 ரூபாய் 66 காசு ஆனது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 75 காசு அதிகரித்து, 78 ரூபாய் 34 காசு ஆனது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலை உயர்வு ஏன்? கடந்த 15 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 128.57 டாலரில் இருந்து 131 டாலராக உயர்ந்து இருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 53 ரூபாய் 43 காசில் இருந்து 54 ரூபாய் 15 காசாக குறைந்து இருப்பதாலும் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கழகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து இருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரமும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப எதிர்காலத்தில் விலையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Thursday, February 28, 2013

மத்திய பட்ஜெட் - மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு

இந்த 2013-14ம் நிதியாண்டிற்காக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், கல்விக்காக, கடந்தாண்டைவிட கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது அரசின் உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தைப் பெற்ற துறையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 2013-14ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட், நாட்டு இளைஞர்கள், கல்வியையும், திறன்களையும் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, அவர்கள் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற்று, அதன்மூலம் போதுமான வருமானத்தையும், ஒரு பாதுகாப்பான நல்ல வாழ்க்கையை பெறும் நோக்கத்தையும் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்

* மத்திய மனிதவளத் துறைக்கு, ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட, 17% அதிகம்.

* சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மேலும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்(RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 26.6% கூடுதலாகும

். * மதிய உணவு திட்டத்திற்கு ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * மருத்துவக் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக, ரூ.4,727 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * மேலும், பொது வரிகளிலிருந்து, கல்விக்கு ஒதுக்கும் தொகை, 3% என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளு.

* நாளந்தா பல்கலைக்கழகத்தை புனர் நிர்மாணம் செய்யும் முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. * இதைத்தவிர, SC/ST, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான உதவித்தொகை திட்டங்கள் பற்றி மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 5ம் தேதி கவுன்சிலிங்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம்மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில், கடந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் சேராமல் இருந்தவர்களையும், கூடுதல் காலி பணியிடங்களையும் கணக்கிட்டு, இரண்டாவது தேர்வு பட்டியல், கடந்த ஜனவரி 18ல் வெளியிடப்பட்டது. இதில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு, பிப்.,20 ல் கவுன்சிலிங் நடந்தது. பள்ளிக் கல்வித் துறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில், மார்ச் 5 ல் கலந்தாய்வு நடக்கிறது. அன்று காலையில், அந்தந்த மாவட்டத்திற்குள்ளும், மதியம் பிற மாவட்டங்களுக்குள்ளும் கலந்தாய்வு நடக்கிறது. தேர்வு செய்யப்பட்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின

   தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்கியது. இந்த தேர்வு , மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கேள்வித்தாள் படித்து பார்ப்பதற்கு வசதியாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்வு மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வை தொடர்ந்து, தேர்வு மையங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி; வருமான வரிவிதிப்பில் மாற்றம் இல்லை - ப.சிதம்பரம் -

, 2013–2014–ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பட்ஜெட்டில், நேரடி வரி விதிப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வருமானவரி விலக்கு உச்சவரம்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெருவோர்களுக்கு 10 சதவீதம் வரி அதிகரிக்கப்படும். சிறு மற்றும் குடிசை தொழில்களுக்கு முதல் மூன்று ஆண்டுகள் வரிசலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 5 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்களுக்கு ரூ. 2000 தள்ளுபடி செய்யப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, February 26, 2013

பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை மறுநாள் ஆரம்பம்:ஏற்பாடுகள் தயார்

   தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை மறுநாள், துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதுகின்றனர். தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும், தேர்வுத்துறை முழுவீச்சில் முடித்து, தயார் நிலையில் உள்ளது.கடந்த ஆண்டு பொதுத்தேர்வை, 7.56 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இந்த ஆண்டு, 49 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர்.

இவர்களுடன், தனித்தேர்வு மாணவர், 45 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர். பள்ளி மற்றும் தனித்தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து, 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாளை மறுநாள் ஆரம்பம்:மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 2,044 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன.கடந்த, 20ம் தேதி, தாலுகா தலைமையிடம் வாரியாக, கேள்வித்தாள் கட்டுகள், பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட மையங்களில், 24 மணிநேர போலீஸ் பாதுகாப்புடன், கேள்வித்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ளன

. 960 பறக்கும் படை:மாவட்டத்திற்கு, 30 பறக்கும் படை குழுக்கள் வீதம், 32 மாவட்டங்களிலும், 960 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பெரிய மாவட்டங்களில், குழுக்களின் எண்ணிக்கை, சற்று கூடுதலாக இருக்கும் எனவும், அவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட கலெக்டர், எஸ்.பி., - ஆர்.டி.ஓ., - சி.இ.ஓ., - டி.இ.ஓ., - தாசில்தார் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தலைமையில், பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவியல், கணிதம் தேர்வுகளின் போது, இந்த குழுக்களுடன், கூடுதலாக அண்ணா பல்கலை பேராசிரியர் குழுவும், தேர்வை பார்வையிட உள்ளது. கல்வித்துறை இணை இயக்குனர்கள், மாவட்டங்களில் பார்வையிடவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இணை இயக்குனருக்கும், ஒன்று அல்லது இரு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதேபோல், அனைத்து மாவட்டங்களும், அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. தேர்வு முடியும் வரை, சம்பந்தபட்ட மாவட்டங்களில் இருந்து, தேர்வை சுமூகமாக நடத்த வேண்டும் எனவும், முறைகேடுகள் எதுவும் நடக்காதபடி கண்காணிக்க வேண்டும் எனவும், தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.‌-

மத்திய ரெயில்வே பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு 14 புதிய ரெயில்கள்

  ரெயில்வே பட்ஜெட்டில்¢ மொத்தம் 94 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 14 புதிய ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
1. சென்னை - காரைக்குடி வாராந்திர ரெயில்

2. சென்னை - பழனி தினசரி ரெயில்

3. சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் தினசரி ரயில

் 4. சென்னை - நாகர்சோல் ரெயில் (மகாராஷ்டிரா)

5. சென்னை - வேளாங்கண்ணி இணைப்பு ரெயில்

6. கோவை - மன்னார்குடி தினசரி ரெயில்

7. கோவை - ராமேஸ்வரம் வாரந்திர ரெயில்

8. சென்னை - பிகானீர் வாராந்திர எக்ஸ்பிரஸ்

9. நாகர்கோவில் - பெங்களூர் தினசரி ரெயில்

10. புதுச்சேரி - கன்னியாகுமரி வாரந்திர ரெயில்

11. திருப்பதி - புதுச்சேரி வாராந்திர ரெயில்

12. சென்னை - ஹௌரா வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ்

13. பழனி - திருச்செந்தூர் பயணிகள் ரெயில்

14. சென்னை - திருப்பதி பயணிகள் ரெயில்

செப்., 30 தேதி அரசு விடுமுறை இல்லை

வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும், பண்டிகைகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இதில், ஆண்டு தோறும், செப்., 30ம் தேதி, வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிவதால், வர்த்தக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த விடுமுறையை, அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டாம் என, மத்திய அரசின் நிதித்துறை, மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று, வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பிற்காக, அறிவிக்கப்பட்ட, செப்., 30ம் தேதியை, அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி, விடுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, வெளியிடப்பட்டுள்ளது.

Monday, February 25, 2013

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் அறிவியல் கற்பிப்பு

அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.ஆசிரியர் குழுவினர், பாடங்கள் சம்பந்தபட்ட பொருட்களுடன், பள்ளி வாரியாக நேரில் ஆஜராகி மாணவ, மாணவியருக்கு கண்காட்சி மற்றும் செய்முறை விளக்கங்களுடன், அறிவியலை கற்பிக்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கல்வியின் தரத்தை மேம்படுத்த, பல்வேறு வகையான யுக்திகளை கல்வித் துறை கையாண்டு வருகிறது.சிறப்பு வகுப்புகள், பாடங்களில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு பாடம் கற்பித்தல், பல்வேறு வகையான கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு பாடங்களை கற்பித்தல் என, பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இந்த வரிசையில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், புதுமையான கற்பித்தல் திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.சென்னையைச் சேர்ந்த, "ஈவன்ட் எஜூ சிஸ்டம்' என்ற நிறுவனத்துடன் இணைந்து,

இத்திட்டத்தை முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40 பள்ளிகளில் செயல்படுத்தியது. பயிற்சி பெற்ற ஆசிரியர் குழு, 40 அறிவியல் உபகரணங்களைக் கொண்டு, பள்ளி வாரியாக சென்று மாணவ, மாணவியருக்கு, அறிவியலைப் பற்றி விளக்கியது.பயிற்சி குழுவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அன்பழகன் கூறுகையில், ""காந்தத்தின் பண்புகள் என்றால், காந்தங்களின் வகைகளை காட்டி, அவற்றின் செயல்பாடுகளை விளக்குகிறோம். மலரின் பாகங்கள் எனில், மிகப்பெரிய மலரை, மாணவர்கள் முன் வைத்து, அதன் ஒவ்வொரு பாகங்களையும், தனித்தனியாக காட்டி விளக்குகிறோம். இதேபோல், பல கண்காட்சிகளை நடத்தும் திட்டங்கள் உள்ளன,'' என்றார்.இத்திட்டம் மாணவ, மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்ததாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்த, தொடக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Tuesday, February 19, 2013

TNPSC Group I prelims Tentative Answer Keys

குரூப் 1 தேர்வு கேள்வித்தாளின் உத்தேச விடைகள்

tnpsc.gov.in/anskeys/16_02_…

Tamil Nadu Public Service Commision- Group 2 Call Letters Download

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச் செல்வி, டிசம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

விரைவில், பள்ளி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.