இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, February 02, 2013

3687 காலியிடங்களுக்கு 3.75 லட்சம் பேர்: குரூப் 2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2 தேர்வை ஆகஸ்டு 12-ந் தேதி நடத்தியது.   நகராட்சி ஆணையர் சார்பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், முது நிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவியில் காலியாக இருந்த 3,687 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடந்தது.   தேர்வின் போது வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 4-ந் தேதி மறுதேர்வு நடந்தது.   தேர்வு எழுத மொத்தம் 6,49,209 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தேர்வை 3,74,338 பேர் மட்டுமே எழுதினர்.   தேர்வு முடிவு நேற்று வெளியிடப்படும் என்று ஆவலோடு பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முடிவு வெளியாகவில்லை.   இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், குரூப்-1 தேர்வுக்கான கவுன்சிலிங் தற்போது நடைபெற்று வருவதால் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   எனவே அடுத்த வாரம் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Friday, February 01, 2013

ஆசிரியர்கள் நியமனத்திற்கு அடுத்த பட்டியலில் 15,000 பேர

்  இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது. கட்டாய கல்விச் சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை, 12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.

முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது. ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில், இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், ஜூன் மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது. புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க சிறப்பு பயிற்சி

  தொடக்கக்கல்வியில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு 14 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அதிகரிப்பால், அரசு தொடக்கக் கல்வித்துறையில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாக,புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நடப்புக் கல்வியாண்டில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நிர்வாக ரீதியில் செயல்படும், தொடக்கக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு தரமான கல்வி, சேர்க்கையை அதிகரிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட 5 இடங்களில், இப்பயிற்சி, பிப்.,4 முதல்18 வரை நடக்கிறது. சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அரசின் புதிய உத்தரவு பற்றிய பயிற்சியை அளிக்க உள்ளதாக, அனைவருக்கும் கல்வி இயக்க, சி.இ.ஓ.,(சிவகங்கை) ஜெயலட்சுமி தெரிவித்தார்.

பிளஸ் 2 பொது தேர்வில் பிட் அடித்தால் 2 ஆண்டு தேர்வு எழுத முடியாது கருத்துகள

பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் 2 ஆண்டுக்கு தேர்வு எழுத முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் தேர்வு மையங்களுக்கு செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்று தேர்வு துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி  முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் இந்த தேர்வு சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலர்களின் கூட்டம்  சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

சென்னையில் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 10 பறக்கும் படையும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 4 பறக்கும் படைகள் அமைக்கப்படும். மேலும் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட் டுள்ள பறக்கும் படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  பிளஸ் 2 தேர்வுக்காக, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 2800 தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள

். பிளஸ் 2 தேர்வில் ஒழுங்கீன செயலில் ஈடுபடுவோரை தடுக்க தமிழ் நாடு அரசு தேர்வுத்துறை பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதன் படி, தேர்வு அறைக்குள் துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ, அச்சிடப்பட்ட புத்தகத்தை வைத்திருந்தாலோ ஓராண்டு அவர்கள் தேர்வு எழுத தடை விதித்தும், துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல் மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை பார்த்து எழுதுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்களை இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தேர்வு நேரத்திலோ அல்லது தேர்வு முடிந்து வெளியில் செல்லும்போதோ முறைகேடான செயல்களில் நடந்துகொள்ளும் மாணவர்கள், மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை வாங்கி எழுதுவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நிரந்தரமாக தேர்வு எழுத தடைவிதித்தும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில், தவறான முறையில் தேர்வு நடைபெறுவதாக திடீர் ஆய்வின் போது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளிகளாக இருந்தால் தேர்வு மையம் மற்றும் அங்கீகாரம் ரத்து செய்வதுடன் அப்பள்ளி மாணவர்களை வேறொரு பள்ளியுடன் சேர்த்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும்

. தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர்,  தேர்வெழுதும் மாணவ, மாணவியர் கண்டிப்பாக  செல்போன், பேஜர் வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வைத்திருந்தால் துறை அலுவலர் கள் அல்லது போலீசார்  அவற்றை பறிமுதல் செய்து  மேல்தொடர் நடவடிக்கை எடுப்பார்கள்.

பிப்.-21ல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

  பிப்ரவரி 21-ல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுகிறது.  இந்த கூட்டத் தொடரானது மே மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.பிப்.26-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யபடுகிறது.பி.27-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யபடுகிறது. பி.28-ம் தேதி 2013-14-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பா.சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்கிறது ? -Thanthi

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு குறித்து அடுத்த மாதம் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. ஜனவரி மாதம் முதல் தேதியை கணக்கிட்டு இந்த 8 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

Thursday, January 31, 2013

Special instructor Computer Teacher

120 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

  ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில் இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., வெளியிட்டது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, 2009ல், சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது.

1,000த்திற்கும் மேற்பட்டோர், தேர்வில் பங்கேற்றும், மிக குறைந்த அளவே தேர்ச்சி இருந்தது. இதைத் தொடர்ந்து, 2010, ஜன., 24ல், மீண்டும், சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளில், பல கேள்விகள் தவறாக இருந்ததாக கூறி, தேர்வர்கள், தொடர்ந்த வழக்கில், கடந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 20 கேள்விகளை (தலா 1 மதிப்பெண்) நீக்கம் செய்து, மீதம் உள்ள, 130 மதிப்பெண்களில், 50 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் தேர்வுப் பட்டியலை, இணையதளத்தில், (www.trb.tn.nic.in) நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு, பள்ளி கல்வித் துறையில், இம்மாத இறுதிக்குள், பணி நியமனம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, January 30, 2013

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணி இடங்கள், தேர்வு மூலம் நிரப்பப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் பேட்டி

– இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 10 ஆயிரத்து 105 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 27 துறைகளில் 37 விதமான பதவிகள் அடங்கும். அதிகபட்ச காலி இடங்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் குரூப்–2 தேர்வு மூலமாக 2,714 இடங்களும், குரூப்–2 தேர்வு மூலம் 1,300 பணி இடங்களும், 1,500 வி.ஏ.ஓ. இடங்களும், தொழில்நுட்ப பணியைப் பொருத்தவரையில், அதேபோல், 2,790 டாக்டர் பணி இடங்களும் 1,800 கால்நடை மருத்துவர்கள் இடங்களும் நிரப்பப்படும், இந்த காலி இடங்களின் எண்ணிக்கை தோராயமானதுதான். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தேர்வுமுறை

–பாடத்திட்டம் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக உறுப்பினர் எம்.ஷோபினி தலைமையில் ஒரு கமிட்டியும், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து உறுப்பினர் கே.லட்சுமணன் தலைமையில் தனியாக ஒரு கமிட்டியும் போடப்பட்டது. இந்த இரு கமிட்டிகளின் பரிந்துரைஅடிப்படையில், தேர்வுமுறையிலும், பாடத்திட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, இதுவரை குரூப்–2 தேர்வில் இடம்பெற்றிருந்த நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுகின்றன. முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்–1 தேர்வில் விண்ணப்பதாரர் எடுக்கிற மதிப்பெண் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும். தனித்தனி தேர்வுகள் குரூப்–1 தேர்வில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை மெயின் தேர்வுக்கு தேர்வுசெய்யப்படுவோரின் எண்ணிக்கை ஒரு காலி இடத்திற்கு 20 பேர் என்ற விகிதாச்சாரத்தில் இருந்து வந்தது. இனிமேல் ஒரு காலி இடத்திற்கு 50 பேர் என்ற வீதத்தில் மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இதுவரை நேர்முகத்தேர்வு கொண்ட சார்நிலை பதவிகளும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளும் குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இனிமேல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள் தனியாக நடத்தப்படும். அதில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தற்போது இருப்பது போல் ஒரேதேர்வுதான். மெயின் தேர்வு கிடையாது.

வி.ஏ.ஓ. தேர்வில் அதிரடி மாற்றம் மேலும், வி.ஏ.ஓ. தேர்வில், பணிக்கு தேவையாக கருதப்படும் கிராம நிர்வாகம், வி.ஏ.ஓ. பணிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும். இதுவரை, மருத்துவம், கால்நடை மருத்துவம், என்ஜினீயர், வேளாண் அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன. இனிமேல், கூடுதலாக பொதுஅறிவு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ்ப்பண்பாடு தொடர்பான வினாக்களும், பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூடு) கேள்விகளும் கூடுதலாக இடம்பெறும். நடப்புகால நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் பொதுவாகவே, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடப்புகால நிகழ்ச்சிகள் குறித்த கேள்விகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இனிமேல், பொதுஅறிவு தாளில் நடப்பு கால நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக தனியாக வினா வங்கி தயாரிக்கப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்–2 தேர்வின் முடிவு பிப்ரவரி மாதம் 1–ந் தேதி வெளியிடப்பட்டு அதற்கான கவுன்சிலிங் 18–ந் தேதி தொடங்கும். இவ்வாறு நட்ராஜ் கூறினார்.

TNPSC Annual Planner 2013-14

Tuesday, January 29, 2013

Pay roll 9.0 version

TETல் தேர்ச்சி பெற்றாலும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் .

இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார். TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது .

கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு

  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் மையங்களுக்கு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நடப்பாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பள்ளிகள் வீதம் 32 மாவட்டங்களில் 3,200 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஒரு மன்றத்துக்கு ரூ.2,500 வீதம் ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நீர், மண், காற்று ஆகியவற்றினை பாதிக்கக் கூடிய சூழல் விவரங்களை அறிந்து கொள்வதற்காக, தமிழகத்திலுள்ள ஆயிரம் பள்ளிகளுக்கு நீர், மண் ஆய்வக பரிசோதனை உபகரணங்களுடன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு காற்று ஆய்வு உபகரணமும் வழங்க ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்கா: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் வன உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இயற்கைச் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு மையம், வன உயிரின தடய அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், தாவரங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான கள ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆராய்ச்சி நிறுவனம் ரூ.27.13 கோடி மதிப்பில் அமைக்கப்படும். இந்த நிறுவனத்தில் பணியாற்ற 8 பணியிடங்களை உருவாக்கவும், இந்தத் திட்டத்தால் அரசுக்கு ரூ.26.99 லட்சம் தொடர் செலவினம் ஏற்படும்.

பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிப்பு

  பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்தேர்வுகள் வரும் மார்ச் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். மார்ச் 5ம் தேதி மொழித்தாள் ஒன்று, 8ம் தேதி மொழித்தாள் இரண்டு, 12ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 13ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள் ஆகிய தேர்வுகள் நடக்கும். 19ம் தேதி இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகளும், 20ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வும், 22ம் தேதி வேதியியல் மற்றும் கணக்கு பதிவியலும், 26ம் தேதி கணிதம் மற்றும் வணிக கணிதமும், 28ம் தேதி உயிரியல் மற்றும் வணிகவியல் ஆகிய தேர்வுகளும் நடக்கும் என தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் காலாண்டு அளவிலான வட்டி விகிதத்தை மறு ஆய்வு செய்யும் கூட்டம் மும்பையில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து பின்னர் அவர் தெரிவித்தார்.

வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது. மேலும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு 0.25 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் வசமுள்ள ரூ. 18 ஆயிரம் கோடி மதிப்பிலான ரொக்கத்தை வெளியிட இயலும். வீட்டு வசதி, வாகனம் மற்றும் நிறுவனங்களுக்கான கடன் இதன் மூலம் சற்றுக் குறைய வாய்ப்பிருக்கிறது.இந்த அறிவிப்பு, முதலீடுகளை ஊக்குவித்து வளர்ச்சிக்கு உதவும் என்றும் பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கவும் இது உதவும் என்றும் அவர் கூறினார்.

Monday, January 28, 2013

"வெப்சைட்' மையங்களில் குவியும் தலைமையாசிரியர்கள் "ஆன்- லைன்' பதிவுக்கு வசூல் dinamalar

"ஸ்மார்ட் கார்டு' பணிகளுக்காக, மாணவர்களின் விவரங்களை, "ஆன்-லைனில்' பதிவு செய்ய, தனியார், "வெப்சைட்' மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். ஆன்-லைன் பதிவிற்கு மாணவர்களிடம் தலா, 10 ரூபாய் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் அனைத்து விவரங்கள் கொண்ட, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. ஒன்று முதல், பிளஸ் 2 வரை, 80 லட்சம் மாணவர்களுக்கு கார்டுகள் தயாராகின்றன. மாணவர்களின் விவரங்களை சேகரிக்க, தலைமையாசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களின் விவரங்களை சேகரித்து, கல்வித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாணவர் விவரங்கள் கொண்ட விண்ணப்பங்களுடன், போட்டோக்களையும், "ஸ்கேன்' செய்து, கல்வி துறை ஆன்-லைனில், "அப்டேட்' செய்ய, தலைமையாசிரியர்களுக்கு, தற்போது உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இப்பணியை, ஜன., 31க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு, அனைத்து மாவட்டங்களிலும், தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு வாரங்களுக்கு நீட்டித்து, கல்வி துறை உத்தரவிட்டது. ஆன்-லைன் பதிவு குறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது

: மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு முறை வரவேற்கத்தக்கது. அவரச கோலத்தில் இப்பணியை முடிக்க, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். மாநில அளவில், 25 சதவீத பள்ளிகளில் தான், முழுமையான கணினி வசதி உள்ளது. 75 சதவீத, தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளில், இந்த வசதி இல்லை. இதனால், தனியார் வெப்சைட் மையங்களுக்கு சென்று தான், மாணவர்களின் போட்டோக்களை ஸ்கேன் செய்து, ஆன்-லைனில் பதிய, ஒரு மாணவருக்கு, ஏழு நிமிடங்கள் ஆகின்றன. மின் வெட்டு, பிராட்பேண்ட் பிரச்னைகளும் உள்ளன. ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம், 7 ரூபாய் செலவாகிறது. இதை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. மற்ற பணிகளும் பாதிக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். ஆன்-லைன் பதிவுகளை மேற்கொள்ள, தலைமையாசிரியர்களை வற்புறுத்த கூடாது என்பது உள்பட, 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, உயர்நிலை, மேல் நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன், இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.