இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 16, 2013

ஒரு கோடி மாணவர்களின் விவரங்கள் ஜனவரி இறுதிக்குள் இணையதளத்தில் வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் துறையின் இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்கள் தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் 55,667 பள்ளிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் 34,871 தொடக்கப்பள்ளிகளும் (63%), 9,969 இடைநிலைப் பள்ளிகளும் (18%), 5,167 உயர்நிலைப் பள்ளிகளும் (9%), 5,660 மேல்நிலைப் பள்ளிகளும் (10%) உள்ளதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீட்ர்ர்ப்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது

. இந்த இணையதளத்தில் வெளியிடுவதற்காகவும், கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காகவும் (உஙஐந - உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஐய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த இணையதளம் மற்றும் இதற்கான சாப்ட்வேரை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதற்கான சர்வர் உள்ளிட்டவை எல்காட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன. பள்ளிகள், மாணவர்களின் தகவல் திரட்டும் பணி கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கியது. டிசம்பர் இறுதியில் இந்தப் பணிகள் நிறைவடைந்தன. முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்களின் விவரங்களைப் பதிவுசெய்யும் பணி முடிந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் மேலும் கூறியது: அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்போது மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளின் விவரங்கள் மட்டும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் பிறகு, அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் பரிசோதனை முயற்சியாக பதிவு செய்யப்பட்டன. ஒன்றியத்தில் உள்ள 100 முதல் 140 பள்ளிகள், மாணவர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் எந்தப் பிரச்னையும் எழவில்லை. இதைத்தொடர்ந்து, இப்போது மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் தகவல்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற 5 முதல் 10 ஆசிரியர்களைக் கொண்டு இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விவரங்களைப் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது

. இரண்டு வாரங்களுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிகள் தொடர்பான விவரங்களில் பள்ளி திறக்கப்பட்ட தேதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாணவர் தொடர்பான விவரங்களில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தேதி, அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை ஆகிய துறைகள் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலமாகவும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு

் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. பணி நியமனம் பெற்றுள்ள 2,300 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல், அவர்களின் ரேங்க் பட்டியல், தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம், கட்-ஆஃப் மதிப்பெண் போன்ற விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

உயிரியல் தவிர மீதமுள்ள பாட ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரியல் பாடத்தில் தேர்வுப் பெற்றவர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, January 15, 2013

பெட்ரோல் விலை35 பைசா உயர்வு

ி:பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு, 35 பைசா உயர்த்தப்பட்டது.இதன்படி, டில்லியில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, ரூ.67.56 பைசா என, உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சென்னையில், லிட்டர் ஒன்றுக்கு, ரூ.70.58 பைசாவாக இருந்தது, ரூ.70.93 பைசாவாக அதிகரித்து உள்ளது.பெட்ரோல் விலை கடந்த வருடம், அக்., மற்றும் நவம்பரில் முறையே, 56 மற்றும் 95 பைசா வீதம், இரண்டு முறை குறைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல், 35 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது.

Pay cell final report-RTI Letter

ஊதிய குழு இறுதி அறிக்கை இன்னும் அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.அரசு சார்பு செயலர் RTI கடிதம்



Monday, January 14, 2013

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் விநியோகம-dinamani

் ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  

தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.  ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

 இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.  2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.  தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.  அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.  தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு  அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.  ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.  ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?  ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:

 இடைநிலை ஆசிரியர்கள் - 2,210  பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  உதவிப் பேராசிரியர்கள் - 1,063  சிறப்பாசிரியர்கள் - 841

Saturday, January 12, 2013

ஆசிரியர்கள் மனசாட்சிடன் பணியாற்ற வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஆவேசம

் ்: ""ஊதியம் வாங்கும் அனைவரும், மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது,'' என, ஆய்வுக்கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில், துவக்க, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்த ஆய்வுக் கூட்டம், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் லதா தலைமை வகித்து, மாணவர்களின் தரம் குறித்து கேட்டறிந்தர். ஆய்வுக் கூட்டத்தில், 150 பள்ளிகள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையில் தொகுக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் நடந்த, இந்த ஆய்வு கூட்டத்தில், அனைத்து, ஏ.இ.இ.ஓ.,க்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஐந்தாம் வகுப்பு படித்து ஆறாம் வகுப்புக்கும், எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லும் மாணவ, மாணவியர், தமிழ், ஆங்கிலத்தை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். கணக்கு பாடத்தின் அடிப்படைகளை புரிந்து வைத்திருக்க வேணடும். அதை குறைத்து, கல்வி அறிவில், நாமக்கல் மாவட்டம் முன்னேற்றம் அடைய அனைத்து தலைமையாசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்கள், ஆசிரியர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் கொண்டுள்ள பள்ளிகளில், அம்மாணவர்களின் தனித்திறன் மற்றும் வாசிப்புத்திறன் மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்தது. கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசியதாவது:

மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் அடைவு திறன் குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது, ஏ.இ.இ.ஓ.,க்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. குறிப்பாக, கொல்லிமலை, எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், கபிலர்மலை, நாமகிரிப்பேட்டை போன்ற ஒன்றியத்தில் மாணவர்கள் தரம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஊதியம் வாங்கும் அனைவரும், மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது ஏற்படும் பிரச்னையை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

ஆங்கில தேர்வுக்கு இடையே விடுமுறை தேவை : ஆசிரியர், மாணவர் வலியுறுத்தல

்  பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலத் தேர்வுகள் விடுமுறையின்றி வருகின்றன. "ஆங்கிலம் இரண்டாம் தாளை, ஒரு நாள் இடைவெளி விட்டு நடத்த வேண்டும்' என, ஆசிரியர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிளஸ் 2 தேர்வில், தமிழ் முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளது. ஆனால், ஆங்கிலம் இரண்டு தாள்களும், மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில், அடுத்தடுத்து நடக்கிறது. அதேபோல், 10ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டு தாள்களும், ஏப்ரல் 1 மற்றும், 2ம் தேதிகளில், தொடர்ச்சியாக நடக்கிறது. இது குறித்து, ஆங்கில ஆசிரியர்கள் கூறியதாவது

: மின்வெட்டு பிரச்னையால், மாணவர்களுக்கு, பகலில் படிப்பது மட்டுமே, ஒரே வழியாக உள்ளது. பகல் நேரத்தில் பள்ளிக்குச் செல்வது, டியூஷன் செல்வது, அன்றாட வேலைகள் என, நேரம் போய் விடுகிறது. அடுத்தடுத்த நாட்களில் தேர்வு இருந்தால், முந்தைய இரவில் படிப்பதோ, பாடங்களை திருப்புவதோ சாத்தியமில்லை. குறிப்பாக, கிராமப்புறங்களில் தமிழ்வழி கற்கும் மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதே பெரும் பிரயத்தனமாகவே உள்ளது. அத்துடன், பெரும்பாலான கிராமப்புறப் பள்ளிகளில் தேர்வு மையங்கள் இல்லை. அருகில் உள்ள பெரிய ஊர் அல்லது நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதி, திரும்ப வேண்டும். தேர்வு மையத்திலிருந்து, பஸ் பிடித்து, வீடு திரும்ப மாலை நேரமாகி விடும். அதன் பின், தொடர் மின் வெட்டு இருப்பதால், படிப்பதில் சிக்கல் ஏற்படும்.

இதனால், ஆங்கிலம் இரண்டாம் தாள்களில் மதிப்பெண் குறைய வாய்ப்பு அதிகம். எனவே, கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆங்கில தேர்வுகளை, ஒரு நாள் இடைவெளி விட்டு நடத்த வேண்டும். இவ்வாறு, ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதே கருத்தை, மாணவர்களும் வலியுறுத்துகின்றனர். ஆனால், அட்டவணையில் திருத்தம் செய்ய வாய்ப்புகள் இல்லை என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, January 11, 2013

தலைமை ஆசிரியர்களுக்கு "கிடுக்கிப்பிடி' -dinamalar

"பிற பணி' என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்ற பெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார் சென்றது.

இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும். பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும். இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும். சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும். சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளத

20.1.2013 மாநில செயற்குழு கூட்டம்

JA counselling TNPSC

Thursday, January 10, 2013

ஆசிரியர்கள் பதவி உயர்வு விண்ணப்பங்கள் : பிப்., 8 க்குள் வழங்க கல்வித்துறை உத்தரவு

  தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப். 8 க்குள் வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் பாடத்திற்கு 2000-01 வரை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் ஒரே பாடம், வெவ்வேறு பாடங்கள் எடுத்து படித்த 2003-04 வரை உள்ள ஆசிரியர்கள், கணிதம் 2003-04, இயற்பியல் 2005-06 வரை உள்ளவர்கள், வேதியியல், தாவரவியல், விலங்கியல் 2005-06 வரை உள்ளவர்கள், வரலாறு ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 1997-98 வரை உள்ளவர்கள், வெவ்வேறு பட்டம் பெற்ற 2004-05 வரை உள்ளவர்கள், பொருளியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் 2008- 09, வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2005-06 வரை உள்ளவர்கள்,வணிகவியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 31.12.1992 வரை உள்ளவர்கள்,வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2009-10 வரை உள்ளவர்கள்,புவியியல் 2002-03 வரை உள்ளவர்கள், அரசியல் விஞ்ஞானம் 2002-03 வரை உள்ளவர்கள். உடற்கல்வி இயக்குனர் நிலை 1 - 2002-03 வரை உள்ளவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் மொழிப்பாடம் 31.12.1998 வரை உள்ளவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 31.12.12 வரை உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் . முதுகலை ஆசிரியரிலிருந்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு, 31.12.12 ல் பத்து ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள், பதவி உயர்வு பட்டியலை 22.01.2013 க்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக ,முதுகலை ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2000 -2001 வரை உள்ளவர்கள். முதுகலையாசிரியரிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2009 வரை உள்ளவர்கள், 31.01.13க்குள் சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும்.

பட்டதாரியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, இடைநிலையாசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்கள் ,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய தேதிகள், மாவட்டம் வாரியகாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்: பிப்., 4 : நாகர்கோவில், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம். பிப்.,5 : மதுரை, திண்டுக்கல், தேனி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை. பிப்., 6 : கரூர், அரியலூர், பெரம்பலூர்,திருச்சி, நீலகிரி, சேலம், திருப்பூர். பிப்., 7 : நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி. பிப்., 8 : திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை. இதற்கு முன்னதாக, முதன்மை கல்வி அதிகாரிகள் விண்ணப்பம் பெற்று ,குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

குரூப்-1 தேர்வு முடிவு வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு முடிவினை வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர் பதவி உட்பட 162 காலி பணியிடத்திற்கான இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் 1 முதல் 5 -ம் தேதி வரை நேர் காணல் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற ‌இணையதளத்தில் பார்க்கலாம்.

தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் 14 ஆண்டுகள் தளர்த்தி அரசு உத்தரவு

தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 1998ம் ஆண்டுக்கு முன்பாக அறிவித்து உத்தரவிட்ட நிலையில், 14 ஆண்டுகள் தளர்த்தி 2012 வரை தயாரிக்க அரசு புதிய உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது.

பிற பாடங்களுக¢கான பதவி உயர்வு பட்டியல் மட்டும் 2012 வரை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் 1998 வரை என்பதால் பிஏ (தமிழ்), பிலிட் பட்டம் பெற்று தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு தயாராக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பிற ஆசிரியர்களை போல் 31.12.2012 வரை முன¢னுரிமை பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் இமெயில் அனுப்பியுள்ளார். இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் ஆசிரியர்கள் மக¤ழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வித்துறை உத்தரவு மாலை சிறப்பு வகுப்புகளை 5 மணிக்குள் முடிக்க வேண்டும

பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை 5 மணிக்குள் முடித்து மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்துக்கு பின், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட பெண்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, பள்ளிகளில் நடைபெற்று வரும் மாலை நேர சிறப்பு வகுப்புகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகளை தயார் செய்ய காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் நடத்துகின்றன. சில பள்ளிகளில் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி கருதி மாலைநேர சிறப்பு வகுப்புகளை மாலை 5 மணிக்குள் முடித்து அவர்களின் இருப்பிடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் வாயிலாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.