இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, December 23, 2012

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்: ஜெயலலிதா உத்தரவ

பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக சிறப்புக் கட்டணம், கற்பிப்புக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகியவற்றை கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் 1980ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணமாகும். அதன் பிறகு கல்வி நிறுவனங்கள், கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவைகளை உயர்த்தியுள்ள போதிலும், கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் எந்தவித மான மாற்றமும் செய்யப்படாமல், 1980ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தற்போது கல்லூரிகளில் அதிகரித்துள்ள கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் ஆகியவற்றினால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களின் கல்வி மற்றும் மாணவ, மாணவியர் சேர்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, தேர்வுக் கட்டணம் முழுமையாக வழங்குவது போல், அவர்கள் செலுத்தும் கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் ஆகியவற்றை, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ் முழுமையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தொழிற்முறை கல்விகளான பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு ஒற்றைசாளர முறையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு, அரசு கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் கட்டணத்தை முழுமையாக பள்ளி மேற்படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இனி வருங்காலங்களில், அரசில் உள்ள பல்வேறு துறைகள், தங்கள் துறைகளைச் சார்ந்த படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை உயர்த்தும் சமயங்களில் எல்லாம், தனியாக எந்தவிதமான அரசு உத்தரவினையும் எதிர்நோக்காமல், கல்வித் தொகை அறிவிக்கையில் மாற்றம் செய்து, அரசுத் துறைகளால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களை உடனடியாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு 16.54 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதனால் 74,181 மாணவ, மாணவியர்கள் பயன் அடைவர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளிலும், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய 8 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்கள் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கும் விலையில்லா சிறப்பு வழிகாட்டிகள் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக 2.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த மாவட்டங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் 2,21,400 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பயன் அடைவர்.

ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சச்சின் அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்  சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய பி.சி.சி.ஐ., உறுதி செய்துள்ளது. உலகிலேயே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் பல சாதனைகளை புரிந்திருந்தாலும் சமீப காலமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தன.

இந்தச் சூழலில், சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பி.சி.ச.ஐ.,க்கு கடிதம் எழுதியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான அணித் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சச்சின் தெண்டுல்கர் ஓய்வு அறிவித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18, 426 ரன்களைக் குவித்துள்ளார்.  இவற்றில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த பெருமை அவரையே சேரும். 62 முறை ஆட்டநாயகன் விருதும், 15 முறை தொடர் நாயகன் விருதும் பெற்றிருக்கிறார்.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப் பு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)  நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க டிச.,31ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கி அல்லது தபால் வழியாக கட்டணம் செலுத்துபவர்கள் ஜனவரி 3ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது. இதற்கு முன் இணையதளத்தில் விண்ணப்பிக்க 24, கட்டணம் செலுத்த 27ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் ஏராளமாக வந்து குவிந்த வண்ணம் உள்ளதால் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை பார்க்கலாம்.

Saturday, December 22, 2012

10 ஆம் வகுப்பு தேர்வு: இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு!

  10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவ, மாணவியர் தங்களைப்பற்றிய  விவரங்களை இணைய தளத்தின் வழியே பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை  உத்தரவிட்டுள்ளது.

தேர்வுத்துறை இணையதளத்தில், ஒவ்வொரு மாணவர்களும் அவர்களுக்கென  ஒதுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டை செலுத்தி, தங்களைப்பற்றிய விவரங்களை,  புகைப்படத்துடன், வருகிற ஜனவரி 4 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் பதிவு செய்த தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை பள்ளி தலைமை  ஆசிரியர் சரிபார்க்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு  அனுப்பப்பட உள்ளது.

பின் தேர்வெழுதும் மாணவ மாணவியர் குறித்து விவர பட்டியல்  தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய திட்டத்தால் தேர்வுப் பணிகள்  பெரும் அளவிற்கு குறைக்கப்படுள்ளதாக தேர்வுத்துறை வட்டாங்கள் தெரிவித்தன.

Friday, December 21, 2012

கட்டாயக்கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது : தேர்வுத்துறை அறிவிப்பு

   "இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, எந்த மாணவரையும் தோல்வி அடைய செய்யக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. 8ம் வகுப்பு தேர்வு, நேரடியாக, தனி தேர்வாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஓட்டுனர் உரிமம் வேண்டுபவர்கள், ரயில்வே துறையில், "கலாசி' வேலையை எதிர்பார்ப்பவர்கள் மற்றும் அலுவலகங்களில், உதவியாளர் வேலைக்குச் செல்பவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களுக்காக, ஆண்டுதோறும், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் பேர், எட்டாம் வகுப்பு, தனி தேர்வை எழுதுகின்றனர். இதற்கு, வயது வரம்பு இல்லை என்பதால், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள், அதிகளவில் எழுதுகின்றனர்.

இந்த தேர்வை எழுதுபவர்கள் அனைவரையும், தேர்ச்சி அடையச் செய்வதா அல்லது வழக்கமான முறையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, தேர்வு முடிவை வெளியிட வேண்டுமா என, தெரியாமல், தேர்வுத்துறை தவித்தது. பின், சட்ட வல்லுனர்களிடம், தேர்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனை பெற்று, அதனடிப்படையில், "இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், நேரடி தனி தேர்வர்கள் குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மட்டுமே, 8ம் வகுப்பு வரை, தோல்வி அடைய செய்யக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி தனி தேர்வை, நிர்ணயிக்கப்பட்ட வயதை விட, அதிகமாக உள்ளவர்கள் தான் எழுதுகின்றனர். எனவே, அவர்களுக்கு, இந்த சட்டம் பொருந்தாது என, சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி, இந்த முடிவை எடுத்தோம். இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய முடிவை, கடந்த ஏப்ரலில் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வில், தேர்வுத்துறை அமல்படுத்தியுள்ளது. 8,918 பேர், தேர்வை எழுதியதில், 2,018 பேர் (22.62 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்வர்களில், 194 பேர், 14 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், மற்ற அனைவரும், கூடுதல் வயதை கொண்டவர்கள் என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 194 பேரில், 99 பேர், தேர்ச்சி பெற்றனர் என்றும், தேர்வுத்துறை தெரிவித்தது. இவர்கள் அனைவருக்கும், ஜனவரி முதல் வாரத்திற்குள், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வ

திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் எழுதிய தோல் என்ற நாவலுக்கு, இன்று உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழில் பிரதானத் தொழிலாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் தொழிலில் வேலை பார்த்து வரும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும், 1930 முதல் 1958 வரை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையில் நடந்த போராட்டத்தையும் மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த செல்வராஜ், இந்த வெற்றி கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்றும், இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

அக்டோபர் மாத எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 24&ந் தேதி வெளியிடப்படுகிறது

   எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் ஆகிய பாடத்திட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் 24&ந்தேதி அரசு தேர்வுகள் இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண் சான்றுகள் ஜனவரி 2- ந்தேதி , 3-ந்தேதி 4- ந்தேதிகளில் அவரவர் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவேண்டியது மற்றும் மார்ச் மாத பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பின்னர் தகவல் தெரிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Dir.school of education 3rd Term Book Publishers List

Thursday, December 20, 2012

தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மருத்துவமனைகள் மற்றும் தொலைபேசி எண்கள்

1,000 இளநிலை உதவியாளர்கள் கல்வி துறையில் விரைவில் நியமனம்

பள்ளி கல்வித் துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1,000 மற்றும் தட்டச்சர் பணியிடங்கள், 120 ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில், சுருக்கெழுத்தர்கள், சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பெயர் பட்டியலை, ஓரிரு நாளில், பள்ளி கல்வித் துறைக்கு, தேர்வாணையம் வழங்க உள்ளது. பட்டியல் வந்ததும், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களை நியமனம் செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில், நிரப்பப்பட உள்ளன.

சி.சி.இ.,முறையில் பாடமெடுக்க புதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை

  "தொடர், முழு மதிப்பீட்டு(சி.சி.இ.,) முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்' என, புதியதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். தமிழகத்தில் டி.இ.டி., தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை, பி.எட்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சென்னையில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையை வழங்கினார்.

கிடைத்த பணியிடங்களில் பொறுப்பேற்கும் முன், முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், மீண்டும் ஒரு முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, புதிய ஆசிரியர்களுக்கு பாடமெடுப்பது, மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி முறையான தொடர் மற்றும் முழுமதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் செயல்முறை விளக்க படங்களுடன் பாடம் நடத்த, புதிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ.,திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

புதிய ஓய்வூதியத்தில் முன்பணம் : கடனாக வழங்க யோசனை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை முன்பணம் கடனாக வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 2004 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பணிக்காலத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத ஓய்வூதிய தொகையுடன், அதே அளவு பணத்தை அரசும் செலுத்தும்.

அத்தொகை, ஓய்வு பெறும்போது ஒரு பகுதியை கையில் வழங்கும். மற்றொரு பகுதி பங்கு வர்த்தகத்தில் நீண்டகால, குறுகிய கால முதலீடு செய்யப்படும். அதில் கிடைக்கும் லாப தொகை ஊழியருக்கு பின்னாளில் வழங்கப்படும் இத்திட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. எனவே மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் மட்டும் இன்னும் அமல்படுத்தவில்லை. இந்நிலையில் இத்திட்டத்தை ரத்து செய்யும் வரை, இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு முன்பணம் கடனாக வழங்கலாம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏனெனில் ஒவ்வொரு ஊழியரும் ஓய்வு பெறும்போது முழுத் தொகையும் கையில் கிடைக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பர். பங்கு வர்த்தகத்தில் பின்னாளில் கிடைக்கும் தொகை, எந்தளவு நிச்சயம் என தெரியாததால் எதிர்க்கின்றனர். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன் கூறியதாவது:

புதிய ஓய்வூதிய திட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதனை எதிர்க்கும் முதல்வர், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது ரத்து செய்யும் வரை, அத்தொகையில் முன்பணம் கடனாக வழங்கலாம். போஸ்ட் ஆபீஸ், வங்கிகளில் தொடர் வைப்பு கணக்கு மீது கடன் வழங்குகின்றனர். அதுபோல இந்த யோசனையை பரிசீலிக்கலாம், என்றார்.

மாணவர்களுக்கு தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க தேர்வுத்துறை உத்தரவ

அரசு பொதுத்தேர்வுகள் இந்தாண்டு மார்ச் மாதம் துவங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கு தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே சரிபார்க்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. எனவே இந்தாண்டு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் பட்டியல் தவறில்லாமல் இருக்க அந்தந்த தலைமையசிரியரே திருத்தம் செய்து கொள்ள தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுதுவோரின் பெயர், பிறந்த தேதி, இனம், தேர்வு எழுதும் மொழி, பதிவு எண், பாட வரிசை, புகைப்படம் என அனைத்தும் விவரங்களும் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். இதில் தவறு இருப்பின் ஆன்லைனில் வெளியிடும் பட்டியலில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். இதனால் மாணவர்களுக்கு சரியான பட்டியல் வெளியிட முடியும் என தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

SSA-Schooling access Requirement 2012-13, New primary school,Up grade middle school

Wednesday, December 19, 2012

பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு

   பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

.அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்; அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர்.

பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம், உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:

* பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்... * பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்... * பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்... * பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்... மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும்.

மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது.

20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி

புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 18 ஆயிரம் பேர், முதுகலை தேர்வில், 2,308 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு, கடந்த, 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பணியில் சேர்ந்து விட்டதாக, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், இன்னும், பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை. ஓரிரு நாளில், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, தேர்வு பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், ஜனவரியில், ஐந்து நாள் பயிற்சியை வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. கல்லூரி ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த பள்ளி ஆசிரியர்களால், பாட சம்பந்தமாக, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், முப்பருவ கல்விமுறை, தொடர் மதிப்பீட்டு முறை, மாணவர்களுக்கான, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து, இரு நாட்களுக்கும், பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கும், ஐந்து நாள், பயிற்சி அளிக்கப்படும்.

GO 242 பத்தாம் வகுப்பு முடித்த மற்றும் அதற்குபின் முடித்த படிப்பிற்கு வேலைவாய்ப்பு மற்றும் பதவிஉயர்வு வழங்க அரசாணை வெளியீடு