இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, December 11, 2012

21 ஆயிரம் பேருக்கு பணி நியமனம்: முதல்வர் தலைமையில் நாளை பிரமாண்ட விழா

ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவுக்காக அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பந்தல். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் பிரமாண்ட விழாவில் சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

இதற்காக, அனைத்து ஆசிரியர்களும் அந்தந்த மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். முதல்வர் ஜெயலலிதா 36 ஆசிரியர்களுக்கும், மீதமுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளில் கல்வித் துறை, காவல்துறை அதிகாரிகள் இரவும், பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு வருகிறது.

தாற்காலிக உணவு விடுதிகள், கழிவறைகள் என பல்வேறு வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 18,382 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் நடைபெற்றன. மொத்தம் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தனர். அதேபோல், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 2,308 பேர் அடங்கிய இறுதிப்பட்டியலை ஆசிரியர் தேர்வு தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டது. தேர்வு பெற்றுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் அதன் நகல், 2 புகைப்பட நகலுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை புதன்கிழமை காலை 10 மணிக்கு அணுக வேண்டும்.

அவ்வாறு வரும்போதே அவர்கள் சென்னைக்குப் புறப்படும் வகையில் தயாராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதல்வர் தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 500 பஸ்கள்: ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் இருந்து 500-க்கும் அதிகமான பஸ்களில் ஆசிரியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை பல்வேறு நேரங்களில் இந்த பஸ்கள் புறப்படும் எனத் தெரிகிறது. புதன்கிழமை இரவு சென்னைக்கு வரும் இந்த ஆசிரியர்களுக்காக 38 பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் குழு மேற்பார்வையில் செய்யப்பட்டு வருகிறது. அதோடு, காலை, மதியம், இரவு என ஆசிரியர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 250 தாற்காலிக கழிவறை வசதிகள்: விழாவில் பங்கேற்க வரும் ஆசிரியர்கள் அதிகாலை முதல் மாலை வரை விழா அரங்கில் தங்கியிருக்க வேண்டும் என்பதால் 250 தாற்காலிக கழிவறைகளை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் அரங்கை செவ்வாய்க்கிழமை மாலை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். போலீஸ் கெடுபிடி: சென்னை அண்ணாசாலையில் 500 பஸ்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அதிகாலை 3 மணிக்குள் விழா அரங்குக்குள் ஆசிரியர்களைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்றும், அதன்பிறகு இரவு 8 மணிக்குத்தான் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. தாற்காலிக கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டாலும், ஒரே இடத்தில் 21 ஆயிரம் ஆசிரியர்களை 18 மணி நேரத்துக்கும் அதிகமாக காக்க வைக்கும் காவல்துறையின் முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

. இந்த விதிகளை சற்றுத் தளர்த்தி காலை 8 மணி வரை அவர்கள் விழா அரங்கிற்கு வர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் பிற்பகலில் அதாவது 2 மணி முதல் 5 மணி வரை அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Direct Recruitment of PostGraduate Assistants for the year 2011 - 12  - After Certificate Verification Individual Query

தொழிலாளர்களின் சம்பளத்துடன், அவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளுக்கான ஊதியத்தையும் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து பி.எப். தொகையில் பிடித்தம் செய்வதற்கான புதிய சுற்றறிக்கையை தொழிலாளர்கள் வைப்பு நிதி நிறுவனம் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் சம்பளத் தொகை ( Take Home Salary) குறைந்து,பி.எப். கணக்கில் சேர்க்கப்படும் தொகை அதிகமாகும்.
தற்போது அரசு ஊழியர்கள்,வங்கிப் பணியாளர்கள்,பல்வேறு தனியார் நிறுவனங்கள்-குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தின் அடிப்படை சம்பளம் மற்றும் கருணை தொகையில் ( Basic salary & Dearness allowance ) 12 சதவீதத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(Employees Provident Fund )யாக பிடித்தம் செய்து,அத்தொழிலாளர்கள் வேலையை விட்டு செல்லும்போதோ அல்லது ஓய்வு பெறும்போதோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்தும் அதே பங்களிப்பு தொகையையும் சேர்த்து, வட்டியுடன் வழங்கப்படும். இந்நிலையில்  கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தொழிலாளர்கள் வைப்பு நிதி நிறுவனம், நாடு முழுவதுமுள்ள தங்களது கிளை அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொழிலாளர்கள் தங்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பள தொகையில் பி.எப். பிடித்தம் அதிகமாக போகாத அளவுக்கு, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் மொத்த தொகையில், ஏறக்குறைய சரிபாதியை வீட்டு வாடகை, குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், போக்குவரத்து படிகள் போன்ற இதர சலுகைகளாக காண்பித்து நிறுவனங்கள் வழங்குவதாகவும், இதனால் பி.எப்.-க்காக பிடித்தம் செய்யப்படும் சதவீதம் குறைவதாக குறிப்பிட்டுள்ளது. 

எனவே இனிமேல் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் வழங்கப்படும் இதர சலுகைகளுக்கான தொகையையும் சேர்த்து பி.எப். பிடித்தத்தில் சேர்க்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக பி.எப். அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால்,இதர சலுகைகளுடன் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு குறையும்.அதாவது தற்போது பிடித்தம் செய்யப்படும் பி.எப். தொகையின் அளவு,ஏறக்குறைய இன்னொரு மடங்கு அதிகரிக்கும். நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிற விலைவாசியில்,இன்றைய பிரச்னைக்கு தீர்வு இல்லாமல்,என்றோ வரும் சேமிப்புக்காக பி.எப். என்ற போர்வையில் சம்பளத்தில் மேலும் பிடுங்கிக்கொள்வது,வாங்குகிற சம்பளமே போதாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க தொழிலாளர்களிடம் நிச்சயம் கொந்தளிப்பைத்தான் ஏற்படுத்தும்.

இதை சரிக்கட்ட சில நிறுவனங்கள் வேண்டுமானால் இழப்பு ஏற்படும் தொகையை, ஊதிய உயர்வாக வழங்கலாம்.ஆனால் எல்லா நிறுவனங்களும் அப்படி வழங்க முன்வருமா என்பது கேள்விக்குறிதான்...!   அதே சமயம்வாங்கும் எல்லா சம்பளத்தையும் செலவழித்துவிடும் தொழிலாளர்களுக்கு, இது ஒரு கட்டாய சேமிப்பாக இருப்பதால், அவர்களது வருங்காலத்திற்கு நிச்சயம் உதவுவதாகத்தான் இருக்கும் என்று தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சக  அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் பி.எப்,. தொகைக்கு சமமாக நிறுவனங்களும் செலுத்த வேண்டும் என்பதால், தொழிலாளர்களின் பி.எப். சேமிப்பு கணக்கு தொகை மேலும் அதிகரிக்கும் என்பதால் நிச்சயம் இது தொழிலாளர்களுக்கு தொலைநோக்கு அடிப்படையில் நன்மை பயக்கக்கூடியதுதான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.  

Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2012-2015 - Court Cases - Part II

Monday, December 10, 2012

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் தயார்நிலையில் இருப்பதாகவும், முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்து முடிந்து உயர்நீதிமன்ற வழக்கால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி முடிவுகள் தயார் செய்யப்பட்டு வெளியிடும் நிலையில் இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் கலந்தாய்வில் பணியிடங்கள் தேர்வில் மந்தம்

இரண்டாவது நாளாக, நேற்று நடந்த கலந்தாய்வில், 2,035 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்று, வெளி மாவட்டங்களில் உள்ள, காலி பணியிடங்களை தேர்வு செய்தனர். டி.இ.டி., தேர்வில் தேர்வான, 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் நடந்தது.

அதில், 6,592 பேர், சொந்த மாவட்டத்திற்குள் பணியிடங்களை தேர்வு செய்தனர். நேற்று நடந்த, வெளி மாவட்டங்களுக்கான, பணி நியமன கலந்தாய்வில், 2,035 பேர் பங்கேற்றனர். வெளி மாவட்டத்தில் பணி என்பதால், பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி, தொலைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அதன்பிறகே, பள்ளியை தேர்வு செய்தனர். இதனால், கலந்தாய்வு விறுவிறுப்பில்லாமல், சற்று மந்தமாக நடந்தது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 165 பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர்.

மாலை வரை நடந்த கலந்தாய்வில், 2,035 பேரும், பணியிடங்களை தேர்வு செய்தனர். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான, 91 பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும் வெளியிடவில்லை. இதனால், தேர்வு பெற்ற ஆசிரியர்கள், தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்த பட்டியலை, டி.ஆர்.பி., வழங்கினால், அவர்களுக்கும் பணி நியமன கலந்தாய்வை நடத்த தயாராக இருக்கிறோம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஊதியம், ஊதிய விகிதம் மற்றும் படிகள் இடைநிலை ஆசிரியர்:

ஊதியம் மற்றும் ஊதிய விகிதம்:

Pay Band 1:

5200--20200+2800+750 Pay(அடிப்படை ஊதியம்)-

5200-20200=5200 Grade Pay (தர ஊதியம்) -
2800 Personnel Pay (தனி ஊதியம்) -750

01.12.2012 ன் படி மாத ஊதியம் :அடிப்படை ஊதியம் (Basic Pay) + Grade Pay (தர ஊதியம்) + Personnel Pay (தனி ஊதியம்)- 5200+2800+750 = 8750 

Dearness Allowance: DA (அகவிலைப்படி) 72% : 8750 x 72 = 6300 மருத்துவப்படி

(Medical Allowance: MA) = 100

Total: ரூ.15150 PAY -          5200 GR.PAY -          2800    P.PAY    -            750   DA(72%) -         6300 HRA        - MA        -           100        ---------------------- TOTAL                15150        ----------------------

குறிப்பு: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance: HRA) : Rs.180/300/440/600/800(வீட்டு வாடகைப்படி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி ஏற்ப HRA மாறுபடும். மேலும் பெரு நகரங்களில்(மாநகராட்சி) பணி நியமனம் பெற்றவர்களுக்கு கூடுதலாக CCA கிடைக்கும்.

பட்டதாரி ஆசிரியர் : ஊதியம் மற்றும் ஊதிய விகிதம்: Pay Band 2:
9300--34800+4600 Pay(அடிப்படை ஊதியம்)

9300—34800-9300 Grade Pay (தர ஊதியம்)
- 4600 Personnel Pay (தனி ஊதியம்)-(இடை நிலை ஆசிரியர்களுக்கு மட்டும் பொருந்தும்)

01.12.2012 ன் படி மாத ஊதியம் :அடிப்படை ஊதியம் (Basic Pay) + Grade Pay (தர ஊதியம்) + Personnel Pay (தனி ஊதியம்)- 9300+4600 =13900

அகவிலைப்படி (Dearness Allowance:DA)72% : 13900 x 72 =10008 மருத்துவப்படி

(Medical Allowance:MA) = 100 PAY                            -                         9300 GR.PAY                    -                          4600 DA(72%)                    -                      10008 HRA                           - MA                             -                          100        ---------------------- TOTAL                                              24008        ----------------------  Total: ரூ.24008

குறிப்பு : வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance:HRA) : 260/660/880/1100/1600(வீட்டு வாடகைப்படி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி ஏற்ப HRA மாறுபடும். மேலும் பெரு நகரங்களில்(மாநகராட்சி) பணி நியமனம் பெற்றவர்களுக்கு கூடுதலாக CCA கிடைக்கும்.

Saturday, December 08, 2012

8,627 புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்: இன்றும், நாளையும் ஆன்-லைன் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு (டிசம்பர் 9), திங்கள்கிழமைகளில் (டிசம்பர் 10) ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார்.

15 ஆயிரம் காலியிடங்கள்: அரசு மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரலாம். காலியிட விவரங்களில் அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் ஒட்டப்பட்டிருக்கும். பணியிடங்களைத் தேர்வு செய்த பிறகு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்களுக்கு... ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.   கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்   1. சென்னை - எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை. 2. கடலூர் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர். 3. காஞ்சிபுரம் - டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம். 4. திருவள்ளூர் - ஸ்ரீலட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர். 5. விழுப்புரம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், விழுப்புரம்.

வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்கு அழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம-Dinamalar

் டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று, பணி நியமன கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராமல், தேர்வு பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர். டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முடிவு, 4ம் தேதி வெளியிட்ட நிலையில், ஒரே வாரத்தில், 13ம் தேதி, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. எப்போதும் இல்லாத வகையில், ஒரே நேரத்தில், அதிக பணியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல் முறை.

கலந்தாய்வு விவரம் : குறுகிய காலத்தில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்டதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, "ஆன்-லைன்' மூலம், பணி நியமன கலந்தாய்வை நடத்த, ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்றுள்ள, 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று, மாவட்டத்திற்குள், பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது. 32 மாவட்டங்களிலும், தேர்வு செய்யப்பட்ட மையங்களில் கலந்தாய்வு நடக்கிறது. நாளை, மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு நடக்கும் இடங்கள் இறுதி செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இடைநிலை ஆசிரியர் : இதேபோல், தொடக்க கல்வித் துறையில், 9,000 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 11ம் தேதி நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில் நடக்கும் கலந்தாய்வு இடங்களிலேயே, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வேறு மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. "டோர் டெலிவரி' : கலந்தாய்வு நடக்கும் விவரங்களை, ஆசிரியர் வேலைக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு தெரிவிப்பதற்கு, பல்வேறு முறைகளை கல்வித் துறை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். நாளிதழ்கள், "டிவி' சேனல்கள் மூலம், கலந்தாய்வு விவரங்களை தெரிவித்ததுடன், தேர்வர்களின் அலைபேசி எண்களை பயன்படுத்தி, நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பணிபுரியும் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி, கலந்தாய்வு கடிதங்களை நேரடியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, நேற்று, ஆசிரியர்கள் பல பகுதிகளுக்குச் சென்று, தேர்வு பெற்றவர்களின் வீட்டு கதவை தட்டி, "வாழ்த்துக்கள் மேடம்; வாழ்த்துக்கள் சார்' என, தெரிவித்து, கலந்தாய்வு கடிதங்களை வழங்கினர். திடீரென ஆசிரியர்கள், வீடுகளுக்கு வந்து கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கியது, தேர்வு பெற்றவர்களை, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. விழா

நேரம் மாற்றம் : சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் விழா நடத்தினால், அனைவரும், வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னை ஏற்படும் என, அதிகாரிகள் கருதினர். இதனால், பகல், 12:00 மணிக்கு, விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

தமிழ்நாடு முழுவதும் நாளை பட்டதாரி ஆசிரியர்கள் நியமன கலந்தாய்வு

  பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-   பள்ளிக் கல்வி இயக்கத்திற்கென ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 8627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு இணைய தளம் வாயிலாக நடத்தப்பட உள்ளது.  

பணிநாடுநர்களின் வீட்டு முகவரியின் அடிப்படையில் அந்தந்த மாவட்டத்திற்குள் நியமனம் பெற வேண்டியவர்கள் நாளை 9-ந்தேதி பகல் 12 மணிக்கும், அந்தந்த மாவட்டத்திற்குள் காலிப் பணியிடம் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுபவர்கள் 10-ந்தேதி காலை 8 மணிக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.   கீழ்காணும் இடங்களில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பணிநாடுநர்கள் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

சென்னை- எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு.  

கோவை- பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ். புரம், தடாகம் ரோடு, கோவை.

  கடலூர்- முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சக் குப்பம்.  

தருமபுரி- முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகம்.  

திண்டுக்கல்-அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு.  

ஈரோடு- வெள்ளாளர் கலைக்கல்லூரி, திண்டல்.  

காஞ்சீபுரம்- டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி.  

கன்னியாகுமரி- எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.  

கரூர்- பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல் நிலைப்பள்ளி.   கிருஷ்ணகிரி- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.  

மதுரை- இளங்கோ மாநக ராட்சி மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி மருத்துவமனை அருகில், செனாய்நகர்.

  நாகப்பட்டினம்- கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகூர்.  

நாமக்கல்- நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி.  

பெரம்பலூர்-தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி.  

புதுக்கோட்டை- பிரக தாம்பாள் தேர்வு கூடம், முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்.  

ராமநாதபுரம்-சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி.   சேலம்- சிறுமலர் மேல் நிலைப்பள்ளி, நான்கு ரோடு.

  சிவகங்கை- முதன்மைக் கல்வி அலுவலகம்.  

தஞ்சாவூர்- அனைவருக்கும் கல்வி திட்டம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம்.  

நீலகிரி- முதன்மைக் கல்வி அலுவலகம்.

  தேனி- முதன்மைக் கல்வி அலுவலகம்.

  திருவண்ணாமலை- முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல் நிலைப்பள்ளி வளாகம்.  

திருவாரூர்- கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி.  

திருவள்ளூர் - ஸ்ரீலட்சுமி மேல்நிலைப்பள்ளி.  

திருப்பூர்- ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரெயில் நிலையம் அருகில்.  

திருச்சி- அரசு சையத் முதுசா மேல்நிலைப்பள்ளி வளாகம்.  

நெல்லை-சேப்டர் மேல் நிலைப்பள்ளி, நெல்லை டவுன்.  

தூத்துக்குடி- முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா.அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்.  

வேலூர்- முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கம், சத்துவாச்சாரி.  
விழுப்புரம்-முதன்மைக் கல்வி அலுவலகம்.  

விருதுநகர்-கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.  

அரியலூர்- அரசு மேல் நிலைப்பள்ளி.

Friday, December 07, 2012

பிளஸ் 2 தனித்தேர்வு 32.10 சதவீதம் பேர், "பாஸ்'

  பிளஸ் 2 தனித்தேர்வில், 32.10 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். அக்டோபரில் நடந்த தனித்தேர்வை, 47 ஆயிரத்து, 387 பேர் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இணைய தளத்தில், நேற்று வெளியானது.

துறை வட்டாரத்தினர் கூறுகையில், "32.10 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். அதாவது, 15 ஆயிரத்து, 212 பேர், தேர்ச்சி பெற்றனர்' என, தெரிவித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 17, 18 மற்றும்19ம் தேதிகளில், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெறலாம். "தத்கல்' திட்டத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் செய்ய, தீதீதீ.ஞீஞ்ஞு.tண.ணடிஞி.டிண என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.