இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 24, 2012

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசெயற்குழு கூட்டம்

நாமக்கல்லில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில பொருளாளர் மோசஸ் வரவு, செலவு கணக்குளை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வராசன் பேசினார்.

கூட்டததில், ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைந்து, மூன்று நபர் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, நவம்பர், 7ம் தேதி, மாநிலம் முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில துணைத் தலைவர் மலர்விழி, சந்திரமோகன், மாநிலச் செயலாளர்கள் மணிமேகலை, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நவ.,4ல் மீண்டும் குரூப் 2 தேர்வ

   தமிழகத்தில், காலியாகவுள்ள நகராட்சி கமிஷனர், உதவி பிரிவு அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3, 631 பணியிடங்களுக்கு, குரூப் 2 தேர்வு, கடந்த ஆக., 12ல் நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். இத்தேர்விற்கான வினாத்தாள் ஈரோட்டில் ஒரு தேர்வு மையத்தில் வெளியானது. வினாத்தாள் வெளியானதால், இத்தேர்வினை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது.மீண்டும் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., இத்தேர்விற்கென, புதிதாக வினாத்தாள் தயாரித்துள்ளது.

இந்த வினாத்தாளின் படி, மீண்டும், நவ.,4ல் தேர்வு நடக்கும் என அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, செய்யுமாறு, கலெக்டர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வினாத்தாள் "அவுட்' ஆனதால், மீண்டும் அதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 6.40 லட்சம் பேருக்கு மட்டும், தேர்வு நவ., 4ல் நடக்கிறது. இதில், புதிதாக விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதகூடாது. ஆக., 12ல் நடந்த தேர்விற்கு இணையதளத்தில் "டவுன்லோடு' செய்த, ஹால்டிக்கெட்டை பயன்படுத்தி, அதே தேர்வு மையங்களில், மீண்டும் தேர்வினை எழுதலாம், என்றார்

ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ள 2.1 லட்சம் பணியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் இன்னும் நிரப்பப்படாமல் 2.1 லட்சம் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. ஓட்டுநர், ரயில்வே நிலைய அதிகாரி, கார்ட், தொழில்நுட்ப கண்காணிப்பாளர், சமிக்ஞை ஆய்வாளர், பராமரிப்பு பணியாளர் உட்பட 90,0000 ரயில்வே பாதுகாப்பு பணியிடங்கள் உட்பட 2 லட்சத்து 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 2 லட்சத்து 60 ஆயிரமாக இருந்த காலிப் பணியிடம் தற்போது 2 லட்சத்து 10 ஆயிரமாக குறைந்துள்ளது என்று கூறியுள்ள மூத்த ரயில்வே அதிகாரி, இது அடுத்த ஆறு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் பாதுகாப்பான முறையில் பணியாளர்கள் நியமனம் நடைபெறுவதால், நியமன நடவடிக்கை சற்று தாமதமாகிறது என்றும் அவர் கூறுகிறார்.

தமிழநாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நவம்பர் 7 வட்டார-மாவட்ட ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்

விஜயதசமி மாணவர் சேர்க்கை அரசாணை

28-ம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றம்

மத்திய அமைச்சரவை வரும் 28-ம் தேதி மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் துவங்க உள்ளது. தற்போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திரிணாமுல் காங். வெளியேறியுள்ளதால், காலியாக உள்ள மத்திய அமைச்சர் பதவியை நிரப்ப மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதையடுத்து மத்திய அமைச்சரவை மாற்றம் தசரா பண்டிகைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 28-ம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, October 23, 2012

் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது-ஆசிரியர் தேர்வு வாரியம்

் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மே மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. இதன் முடிவு ஜுலை 27-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.   இந்த பட்டியலை trb.tn.nic.in இணைய தளத்தில் காணலாம். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும், 30,31-ந்தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

TRB-PG Asst Certificate Verification Tentative List

பள்ளிக் கல்விக்கு ரூ.14,552 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

"இடைநிற்றல் போன்றவற்றை தடுத்து, பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி ரூபாய் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார்" என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் மறவர் மகாசபை விழாவில் அவர்

பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி, உயர்கல்விக்கு 2800 கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கி உள்ளார். தமிழகத்தின் தொழில், திட்டம், தொலைநோக்கு பார்வையை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. சபை சார்பில் கல்லூரி நிலம் வாங்கியதாக கூறினார்கள், கல்லூரி பணிகளில் உங்களில் ஒரு ஒஉவனாக இருந்து செயல்படுவேன்" என பேசினார். பின்னர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கினார்.

DEE-Trs profile Instructions Forms

Monday, October 22, 2012

எஸ்.எஸ்.ஏ., தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்ப dinamalar newsு

"அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000 தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என, இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில், எஸ்.எஸ்.ஏ., திட்டம், 2002ல் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், மாவட்ட, ஒன்றிய அளவில், 5,000 பேர், கட்டட பொறியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கம்ப்யூட்டர் புரோகிராமர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், பணி புரிகின்றனர். இவர்களுக்கு, 6,000 முதல், 13 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப் படுகிறது. 10 ஆண்டுகளாக தொகுப்பூதிய நிலையில் பணிபுரிந்து வரும் இவர்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழக அரசை, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பணி வரன்முறை குறித்த அறிவிப்பை, ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் மற்றும் சட்டசபை கூட்டத்தொடரில், ஊழியர் எதிர்பார்க்கின்றனர்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., இயக்கக வட்டாரம் கூறுகையில், ""ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, தொகுப்பூதிய அடிப்படையில், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே, அவர்களை, பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனினும், மத்திய அரசின் வேறு திட்டங்கள் தொடர்ந்து வரும் என்பதால், அவர்களுடைய வேலைவாய்ப்பு பாதிக்காது,'' என, தெரிவித்தன.-

ஆசிரியராக விரும்பினேன்: ஜனாதிபதி

அரசியலில் ஈடுபாடு இருந்த போதி்லும், ஆசிரியராக பணிபுரியவே விரும்பினேன் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இது குறித்து அவர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறுகையில், எனது தந்தை கமடா கிங்கர் முகர்ஜி, சுதந்திர போராட்ட வீரராகவம், நேரடி அரசியலிலும் ஈடுபட்டிருந்தார்.

இதனால் எனக்கு சிறு வயது முதல்அரசியலில் ஆர்வம் இருந்தது. இருந்த போதிலும் நேரடி அரசியலில் ஈடுபடுவதை காட்டிலும், ஆசிரியராக பணிபுரியவே விரும்பினேன் என கூறினார்.

TRB Results-TET Minority subjects key answer

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணைய செயலாளர் உதயச்சந்திரன் மாற்றம்

, தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அமைப்பின் (இண்ட்கோசர்வ்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு இன்று பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே தேயிலை உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்பின் தலைவராக இருந்த ஜாப்ரியின் அடுத்த பொறுப்பு குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

GO 376 Pay Grievance Cell Tenure Extend to 31.10.12

GO 376 Pay Grievance Cell Tenure Extend to 31.10.12

Saturday, October 20, 2012

இன்னும் 7 ஆண்டில் அனைத்து மாணவருக்கும் ஆகாஷ் டேப்லட்-

ி இன்னும், ஏழு ஆண்டுகளில், அனைத்து மாணவர்களுக்கும், ஆகாஷ் டேப்லட் கம்ப்யூட்டர் வழங்கப்படும்" என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், கபில் சிபல் கூறினார். டில்லியில் நேற்று, இந்தியா - நியூசிலாந்து, கல்வி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்துள்ள, நியூசிலாந்து, கல்வி, திறமை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர், ஸ்டீவன் ஜாய்ஸ் தலைமையிலான, உயர்மட்டக் குழுவுடன், மத்திய அரசு, பல உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

இந்த நிகழ்ச்சியில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், கபில் சிபல் பேசியதாவது:

நாட்டின் உயர் கல்வியை மேம்படுத்த, மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பல மசோதாக்களை வரைந்துள்ளது. அவற்றை நிறைவேற்ற, எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால், நாட்டின் கல்வித் துறை மேம்படும். குறைந்த விலை, டேப்லட் கம்ப்யூட்டர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில், அரசு முனைப்பாக உள்ளது. இன்னும், ஐந்து முதல், ஏழு ஆண்டுகளுக்குள், அனைத்து மாணவர்களுக்கும், இது வழங்கப்படும்.இவ்வாறு, கபில் சிபல் பேசினார்.

டி.இ.டி., மறுதேர்வு"கீ-ஆன்சர்' வெளியீடு

டி.இ.டி., மறுதேர்வுக்கான, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.கடந்த 14ம் தேதி நடந்த டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5 லட்சம் பேர் எழுதினர்.

இரு தேர்வுகளுக்குமான விடைகளை, டி.ஆர்.பி., நேற்று இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) வெளியிட்டது.கேள்வித்தாள், ஏ,பி,சி,டி என, நான்கு வரிசைகளில் வழங்கப்பட்டன. அதேபோல், நான்கு கேள்வித்தாள் வரிசைகளுக்கும், தனித்தனியே, விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழிகளுக்கான கீ-ஆன்சர் மட்டும், வெளியிடப்படவில்லை. இவை, நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

விடைகளில், ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அது குறித்து, தேர்வர்கள், ஒரு வாரத்திற்குள், டி.ஆர்.பி.,க்கு, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். ஆட்சேபணைகள் இருந்தால், அது குறித்து, பாட வல்லுனர்களிடம் ஆலோசித்து, இறுதி விடைகள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Teachers profile Form

Tamil Nadu Teachers Eligiblity Test - Supplementary Exam Key Answer for Paper I and Paper II

Friday, October 19, 2012

2012 - 13ஆம் நிதி ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.6% ஆக உயர்கிறது. வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-12  நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.25 சதவீதத்தை விட அதிகமாக தற்பொழுது 2012-13 நிதி ஆண்டிற்கான காலத்தில் பி.எப் சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டிற்கு 8.6% முதல் 8.8% வரை பெறப்பட கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலத்தில் 2011-12 நிதி ஆண்டில் சதவீதம் 8.25 சதவீதமாகவும், அதற்கு முன், 2010-11 ஆண்டில் 9.5 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இதே வட்டிவிகிதம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சந்தாதாரர்களுக்கும் பொருந்தும் எனவும் இந்த வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன

இம்மாதம் 27ல் பக்ரீத்:தலைமை ஹாஜி அறிவிப்பு -Dinamalar news

இம்மாதம், 27ம் தேதி, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்' என, அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.இது குறித்து, அரசு தலைமை ஹாஜி, முப்தி ஹாஜி சலாஹூதீன் முஹம்மது அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டுக்கான பக்ரீத் தியாகத் திருநாள், வரும், 27ம் தேதி, கொண்டாடப்படும்' என தெரிவித்துள்ளார்.

குரூப்-2 கலந்தாய்வில் 2,446 பேருக்கு உத்தரவு

குரூப்-2 கலந்தாய்வில், நேற்று வரை, 2,446 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்பட்டன.குரூப்-2 தேர்வில் தேர்வு பெற்ற, 3,475 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்குவதற்கான கலந்தாய்வு, 15ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் துவங்கியது. நேற்று வரை முடிந்த ஐந்து நாளில், 2,446 பணிகளை நிரப்பி, அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.கடைசி நாளான இன்றும் கலந்தாய்வு நடக்கிறது.

இன்று, 1,000த்திற்கும் மேற்பட்டோர், பணி ஒதுக்கீடு ஆணை பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு நாள் கலந்தாய்விலும் பங்கேற்காத தேர்வர்களுக்கு, வேறொரு நாளில் தனியாக, கலந்தாய்வு நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்:கரும்பலகை, சாக்பீஸ் முறைக்கு "குட்பை'

  மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திட்டத்தின் முதல் கட்டமாக மணியகாரன்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்'(ஏ.ஐ.எப்) எனும் அமைப்பின் நிதியுதவியுடன், "டிஜிட்டல் ஈக்குவலைசர்' எனும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகளை துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏ.சி., வசதியுள்ள இந்த வகுப்பறைகளில் "டெல்' மற்றும் ஏ.ஐ.எப். அமைப்பின் சார்பில் 25 கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், டிஜிட்டல் பிளாக்போர்டு, இன்டெர்நெட் இணைப்பு, புரொஜக்டர் உள்ளிட்ட வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் கோவை ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் கூறியதாவது:

வருங்காலங்களில் கம்ப்யூட்டர் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட நவீன உலகில், மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து வெளியேறும் மாணவர்களும் நிலைத்து நிற்க, அவர்களுக்கும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப அறிவு முக்கியம். ஆறாம் வகுப்பு முதலே கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாடங்களை கற்பிப்பதுதான் ஸ்மார்ட் கிளாஸ் எனும் "கம்ப்யூட்டர் கிளப்' துவங்குவதன் நோக்கம்.

கிளப்பில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் அதிவேக இன்டர்நெட் இணைப்பு வசதியுடன்,"ஒயர்ப்ரீ' முறையில் ஆசிரியரின் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் தனது பாடத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒரு மணி நேரத்தை கம்ப்யூட்டர் மூலம் கற்பிக்க வேண்டும்.பாடத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட "டிவிடி', ஏற்கனவே கம்ப்யூட்டர்களில் "லோடு' செய்யப்பட்டிருக்கும். பாடங்களை ஆசிரியர்கள் "தொடுதிரை டிஜிட்டல் ஒயிட் போர்டின்' உதவியுடன் விளக்குவர்.

அதே பாடங்கள் மாணவர்களின் கம்ப்யூட்டர்களிலும் இடம் பிடித்திருக்கும். மாணவர்களின் கம்ப்யூட்டர்கள், ஆசிரியர் வசமுள்ள கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்டர்நெட் இணைப்பை மாணவர்களால் தவறாக பயன்படுத்த முடியாது. இன்டெர்நெட் இணைப்பு உள்ளதால், பாடம் தொடர்பான தகவல்கள் மற்றும் படங்களை உடனுக்குடன் "டவுன்லோடு' செய்து படிக்கலாம். இதே வசதியுள்ள பிற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன், "வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் பாடம் தொடர்பாக கலந்துரையாடலாம். வண்ணப் படங்கள் சகிதம் "விஷூவல்' ஆக பாடங்களை படிக்க முடிவதால், பாடத் தின் மையக்கருத்து எளிதில் மறக்காது.ஆசிரியர்களுக்கு 56 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கென ஒவ்வொரு கிளப்புக்கும் தனி ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவர்.

"சாக் அண்டு டாக்' எனும் பழைய கற்பித்தல் முறைக்கும், மனப்பாட கல்வி முறைக்கும் இனி "குட்பை' சொல்லி விடலாம். இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், மீதமுள்ள பள்ளிகளிலும் துவங்கப்படும். 2014 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டம், அதன் பின் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.60 சதவீதம் வட்டி?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள் பயன்அடையும் வகையில், 2011 - 2013ம் நிதி ஆண்டில், 8.60 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில், இருப்பில் உள்ள தொகைக்கு, ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகம், ஒவ்வொரு ஆண்டும் வட்டி வீதத்தை அறிவிக்கும். அதிகபட்சமாக, 2010 - 2011ம் ஆண்டு, 9.5 வட்டி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த, 2011 - 2012ம் நிதியாண்டில், 8.25 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2012 - 2013ம் ஆண்டிற்கு, 8.60 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இதனால், இத்திட்டத்தில் சேர்ந்துள்ள, ஐந்து கோடி சந்தாதாரர்கள் பயன் அடைவார்கள்.இத்திட்டத்தில் சேர்ந்து, பாதியில் கைவிட்ட சந்தாதாரர்களின் கணக்குகள் செயல்படாமல் உள்ளது.

இந்த வகையில் மட்டும், 22 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு, சந்தாதாரர்களுக்கு, ஒன்பது சதவீத வட்டி அளிக்க முடியும். ஆனால், அதற்கு குறைவாக அளிக்கப்படுகிறது. இதனால், கழகத்திற்கு எவ்வித பற்றாக்குறையும் வராது என, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழக வட்டாரங்கள் தெரிவித்தன.