இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 30, 2012

இனி முறைகேடு நடக்காது: நட்ராஜ் உறுதி

  வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 1,807 பணியிடங்களை நிரப்புவதற்கான வி.ஏ.ஓ.தேர்வுகள் இன்றுதமிழகம் முழவதும் நடந்துவருகிறது. 9.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி,

இன்று நடக்கும் வி.ஏ.ஓ. தேர்வு வினாத்தாள் குறித்த விடைகள் இன்று மாலையே இணையதளத்தில் வெளியிடப்படும். முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். மேலும் குரூப்-2 தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இனி எதிர்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Saturday, September 29, 2012

டி.இ.டி., மறுதேர்வு : 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்

டி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்வில், தோல்வியடைந்தவர்கள் மட்டும், மறுதேர்வில் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., அறிவித்தது.

இதையடுத்து, "புதிய விண்ணப்பதாரர்களுக்கும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் விவரங்களை, நேற்று இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது.

அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793 பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

SSLC / Matric - Special Supplementary Examination June 2012 - Retotal-Result ( I Spell

Friday, September 28, 2012

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் உயர்வு

புதிய பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டு, வரும், 1ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது. தற்போது, சாதாரண முறை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், 1,000 ரூபாயும், தத்கால் முறை விண்ணப்பதாரர்கள், 2,500 ரூபாயும், விண்ணப்பக் கட்டணமாக செலுத்துகின்றனர்.

2002 முதல், அமலில் உள்ள இக்கட்டணங்கள் முறையே, 500, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, வரும் அக்., 1ம் தேதி முதல், சாதாரண முறை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், 1,500 ரூபாய்; தத்கால் முறை விண்ணப்பதாரர்கள், 3,500 ரூபாய், விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம், பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி, தனியாரிடம் தரப்பட்டு, ஓராண்டு முடிந்துள்ள நிலையில் உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

டி.என்.பி.எஸ்.சி., சி.ஓ.இ., நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக (சி.ஓ.இ.,), ÷ஷாபனா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சி.ஓ.இ., ஜெயகாந்தன், சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா, டி.என்.பி.எஸ்.சி., - சி.ஓ.இ.,வாக நியமிக்கப்பட்டார்.

இவரது நியமனம் குறித்து, ஓரிரு நாட்களில், தேர்வாணையம் அறிவிக்கை வெளியிடும். அதன்பிறகே, புதிய பதவியை ÷ஷாபனா ஏற்பார் என, துறை வட்டாரம் தெரிவித்தது.

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய"ஸ்பெஷல் செல் கமிட்டி' வருகிறது

  தமிழகத்தில், பள்ளி வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க, புதிய விதிமுறைகளை அரசு வகுத்து வருகிறது. இதில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய,"ஸ்பெஷல் செல் கமிட்டி' அமைக்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது.

பள்ளி வாகனங்களுக்கான, அரசின் புதிய விதிமுறைகளில், "ஸ்பெஷல் செல் கமிட்டி' அமைத்து, வாகனங்களை ஆய்வு செய்ய, அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. வாகனங்களின் டிரைவர் உட்பட, உதவியாளரும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்; குழந்தைகளை கையாளும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் பள்ளிகளில், பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகளை, பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் சங்க கூட்டம், மாதம் ஒரு முறை கூட்டப்பட்டு, பள்ளி வாகனங்கள் குறித்த பராமரிப்பு, டிரைவர், உதவியாளர் குறித்து, கருத்துகள் கேட்கப்பட்டு, செயல்படுத்த வேண்டும். பள்ளிகளில், போக்குவரத்து கமிட்டி அமைக்க வேண்டும். இதில், போலீஸ் எஸ்.ஐ., பள்ளி நிர்வாகம் சார்பில் ஒருவர், மோட்டார் வாகன ஆய்வாளர், பெற்றோர் - ஆசிரியர் சங்க உறுப்பினர் இடம் பெறுவர்.

பள்ளி வாகனங்கள் பராமரிப்பு குறித்து, இந்த கமிட்டி முடிவு எடுக்க வேண்டும். மாவட்ட அளவில், "ஸ்பெஷல் செல் கமிட்டி' அமைக்க வேண்டும். இதில், ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், பிற துறை அதிகாரிகள், குழுவில் இடம் பெறுவர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பள்ளி வாகனங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தி, இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற குழுக்கள் விரைவில் அமைக்கப்பட்டு, பள்ளி வாகனங்களை, விபத்தில்லாமல் இயக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Thursday, September 27, 2012

வி.ஏ.ஓ., தேர்வு 150 மையங்கள் பதற்றம்

""வி.ஏ.ஓ., @தர்வுநடக்கும் மையங்களில், 150 மையங்கள், பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள், "வெப்-கேமரா' மூலம் கண்காணிக்கப்படவுள்ளது,"" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்தார்.

தேர்வாணைய அலுவலகத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்துவிட்டு சென்றபின், தேர்வாணைய அலுவலர்கள், பணியாளர்கள் மத்தியில், தலைவர் நடராஜ் பேசியதாவது:நீங்கள் விரும்பியபடி, உங்களுக்கு தேவையான வசதிகளை அளிக்கும் வகையில், புதியகட்டடம் கட்டப்பட்டுள்ளது. பணியாளர்கள், மகிழ்ச்சியான சூழலில் வேலைபார்த்தால் தான், பணிகள் சிறப்பாக இருக்கும். அந்தவகையில், புதியஅலுவலகம், உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கும், வி.ஏ.ஓ., தேர்வு, நம் முன் உள்ள சவால்.

Oஇந்த தேர்வை, வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டும்; கண்டிப்பாக செய்வோம் என்ற நம்பிக்கைநம்மிடம் உள்ளது.இவ்வாறு நடராஜ் பேசினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வி.ஏ.ஓ., தேர்வு, 3,473 மையங்களில் நடக்கின்றன. 9.72 லட்சம் பேர், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். எவ்வளவு பேர் எழுது கின்றனர் என்பது, 30ம் தேதியன்று தெரியும். அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வுப் பணிகளை, வீடியோ எடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.150 மையங்கள்,பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்களில், "வெப்-கேமரா' மூலம், எனது அறையில் இருந்தபடியே, 150 மையங்களையும் கண்காணிக்க, ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

குரூப்-2 கலந்தாய்வு: ஏற்கனவே நடந்த குரூப்-2 தேர்வு தொடர்பாக, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதனால், கலந்தாய்வு நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. இவ்வழக்கில், தேர்வாணையத்திற்கு சாதகமாக, நேற்று தீர்ப்பு வந்துள்ளது.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள், கலந்தாய்வு நடத்தப்படும். இதன்மூலம், 3,500 பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.

டி.இ.டி., மறுதேர்வு:இன்று கடைசி நாள்

டி.இ.டி., மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். இதுவரை, 15 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.

அக்டோபர், 14ம் தேதி நடக்கும் டி.இ.டி., மறுதேர்வுக்கு, புதிய தேர்வர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, 24ம் தேதி முதல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.முதல் நாள், 6,200 விண்ணப்பங்கள், விற்பனை ஆகின. நேற்று வரை, 15 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.விண்ணப்பம் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவும், இன்று கடைசி நாள். இன்று மாலை, 5:30க்குள், விண்ணப்பங்களை, சமர்ப்பிக்க வேண்டும்.

Annamalai University PG Result Released

Welcome to Annamalai University
Click Below

http://www.annamalaiuniversity.ac.in/results/index.php

அக்டோபர் 3 உலக போராட்ட தினம்

Primary Co Scholastic - Draft

Upper Primary Co Scholastic - Draft

தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக பணியாற்றி வந்த பூஜா குல்கர்னி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்ரம் கபூர் தொழில்துறை முதன்மை செயலாளராகவும், பி. செந்தில் குமார் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சிறப்பு செயலாளராகவும், ஜே. ராதாகிருஷ்ணன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராகவும், ஜி. பிரகாஷ், வேலை வாய்ப்பு மற்றும் பயிட்றசித் துறை இயக்குநராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

என். மதிவாணன் தொழில்துறை கூடுதல் செயலாளராகவும், மகேசன் காசிராஜன் தமிழ்நாடு சர்க்கரை வாரியத்தின் இயக்குநராகவும், ஜோதி நிர்மலா தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செயலாளராகவும், வி.எம். சேவியர் கிறிஸோ நாயகம் சமூக நலத்துறையின் இயக்குநராகவும், வி. மோகன்ரர்ஜ், போக்குவரத்துத் துறை துணை செயலாளராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அனில் மேஷ்ராம் வேளாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண்மை வணிகத்தின் இயக்குநராகவும், ஜே. சந்திரகுமார் நில சிரமைப்புத் துறை இயக்குநராகவும், எம். பாலாஜி மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலாளராகவும், ஹன்ஸ் ராஜ் வர்மா சிறு, குறு, நடுத்தர தொழில்துறையின் முதன்மை செயலாளராகவும் பணிமாற்றம் பெறுகின்றனர்.

குமார் ஜெயந்த் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சமூகத்தின் திட்ட இயக்குநராகவும், ஏ. சட்டரஞ்சன் மோகன்தாஸ் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளராகவும் பணிமாற்றம் பெற்றுள்ளனர்.

Tamil Nadu Text Books Online - Second Term and CBSE Tamil Text Book for I to VIII Std

Wednesday, September 26, 2012

RTE Training Date Inter change


பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச "சிம்கார்டு'

  கோவை கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 240 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மொபைல்போன் "சிம்கார்டு' இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் தகவல்கள், தலைமை ஆசிரியர்களை சென்றடைவதில், பல்வேறு சிக்கல்கள் தற்போது உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், தலைமையாசிரியர்களுக்கு "சி.யு.ஜி' திட்ட வசதி கொண்ட, மொபைல்போன் "சிம்கார்டு' இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் பொள்ளாச்சியில், மொத்தம் 240 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அலுவலர்கள் கூறுகையில், "" பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடைய உதவும். பள்ளி கல்வித்துறை அல்லாத, மற்ற அழைப்புகளுக்கான விதிக்கப்படும் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் செலுத்த நேரிடும். மொபைல்போன்களை, "சுவிட்ச்- ஆப்' செய்யக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றனர்.

பாட புத்தகத்தில் "பென்னிகுயிக்' பள்ளிக்கல்வி துறை பரிசீலனை

பள்ளிப் பாடப் புத்தகத்தில், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர், "பென்னிகுயிக்' வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. முல்லைப் பெரியாறு அணையை, ஆங்கிலேய பொறியாளர் "பென்னிகுயிக்' கட்டினார்.

தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக, தன் சொத்துக்களை விற்று, அணையைக் கட்டினார். அவரின் உருவச் சிலையை, "லோயர் கேம்பில்' அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டு, பணிகள் நடந்து வருகின்றன. அவரின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, பள்ளிக்கல்வித் துறை, "பென்னிகுயிக்' வாழ்க்கை வரலாற்றை, பாடப் புத்தகங்களில் சேர்ப்பது தொடர்பாக, தீவிரமாகப் பரிசீலிக்கிறது.

வரும் கல்வியாண்டில், "பென்னிகுயிக்' வாழ்க்கை வரலாறு, பள்ளிப் பாடப் புத்தக்கத்தில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

அக். 14ல் ஆசிரியர் தகுதி தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல

  ஆசிரியர் தகுதி தேர்வும், பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வும் அக்., 14ல் நடப்பதால், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வு அக்.,3ல் நடப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

தற்போது பி.எட்., படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பளித்து, இந்த தேர்வு அக்., 14க்கு தள்ளி வைக்கப்பட்டது. அதே நாளில், பாரத ஸ்டேட் வங்கி தேர்வும் நடக்கிறது. வங்கி தேர்வு முன்பே அறிவிக்கப்பட்டு, அதற்காக பள்ளி, கல்லூரிகள் தேர்வு மையங்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதற்கிடையில் தான், டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இத்தேர்வுக்கு பள்ளி, கல்லூரிகளில் மையங்கள் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டபோது, வங்கி தேர்வுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டது தெரிந்து, கல்வி துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் இப்பிரச்னை உள்ளது. வங்கி தேர்வு மையங்கள், பெரும்பாலும் நகர் பகுதிகளில் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. டி.இ.டி., தேர்வுக்கு, கிராம பகுதி பள்ளி, கல்லூரிகளிலும் மையங்கள் ஒதுக்கப்படும்.மதுரையில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற பகுதிகளிலும் மையங்கள் ஒதுக்கப்படும்.

நகர்களில் மட்டும் மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆலோசித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.

அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

  காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின், அக்., 4ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலான வகுப்புகளுக்கு, 21ம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன.

ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நேற்று முன்தினத்துடன், தேர்வுகள் முடிந்தன. ஒரு வார விடுமுறைக்குப் பின், அக்., 3ம் தேதி, மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்திருந்தது.

ஆனால், அந்த தேதியில், டி.இ.டி., தேர்வு நடப்பதாக அறிவித்ததால், 4ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அக்., 14க்கு, டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், பள்ளிகள் ஒரு நாள் முன்னதாக, 3ம் தேதியே துவக்கப்படுமா என தெரியாமல், பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் தவித்து வந்தனர். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, "ஏற்கனவே அறிவித்த தேதியில், எவ்வித மாற்றமும் கிடையாது. திட்டமிட்ட படி, அக்., 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என, தெரிவித்தனர். தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளும், இதே தேதியில் துவங்குகின்றன.

1869 பள்ளிகளில் சுற்று சூழல் மன்றம்: பராமரிப்புக்காக ரூ. 46. 72 லட்சம்

தமிழகத்தில் 1869 பள்ளிகளின், சுற்றுச்சூழல் மன்றத்தை பராமரிக்க, தலா 2500 ரூபாய் வீதம், 46 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க, சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமைப்படை இல்லாத பள்ளிகளில் மட்டுமே சுற்றுச்சூழல் மன்றம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, பராமரிப்பிற்காக 1250 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், கூடுதலாக தலா 140 பள்ளிகளில், சுற்றுச் சூழல் மன்றம் அமைக்கவும், அதன் பராமரிப்பு செலவை 2500 ரூபாயாக உயர்த்தி, சுற்றுச் சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 59 பள்ளிகளின் பராமரிப்பிற்காக, ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களிடையே சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, உலக வெப்பமய மாக்கலை தடுக்க,மரக்கன்று, மூலிகை தோட்டங்களை உருவாக்கவும், இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

பி.எட்., நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில் நடத்தப்படும் பி.எட்.,படிப்பிற்கான நுழைவுத் தேர்வு தேதி மாற்றியமைக்கப் பட்டுள்ளது.வரும் அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 21-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பல்கலைகழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு

  ஆதிதிரவிடர் நலப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப டி.ஆர்.பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு ஆதி திரவிடர் நல அலுவலகம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரியில் கலந்தாய்வு நடைபெறும்.

Monday, September 24, 2012

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 15ல் துவங்குகிறது

   அடுத்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு பழைய மற்றும் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலான தனித்தேர்வு, அக்டோபர், 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.

ஓ.எஸ்.எல்.சி., பழைய பாடத்திட்ட தேர்வுகளும், மேற்கண்ட தேதிகளில் துவங்கி, முடிகின்றன. மெட்ரிக் தேர்வுகள், அக்டோபர், 15ல் துவங்கி, 29ம் தேதி வரையும், ஆங்கிலோ இந்தியத் தேர்வுகள், 15ல் துவங்கி, 26ம் தேதி வரையும் நடக்கின்றன. அதிக தேர்வர் பங்கேற்கும்,
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

15.10.12 மொழி முதல் தாள்

16.10.12 மொழி இரண்டாம் தாள்

18.10.12 ஆங்கிலம் முதல் தாள்

19.10.12 ஆங்கிலம் இரண்டாம் தாள்

22.10.12 கணிதம்

25.10.12 அறிவியல்

26.10.12 சமூக அறிவியல்