இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, August 26, 2012

முதன் முதலில் சந்திரனில் இறங்கிய வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது இவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.

உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரர் ஆம்ஸ்ட் ராங் “நாசா” குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நாசா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதைத் தொடர்ந்து குணம் அடைந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். அப்போது அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங்கின் முழு பெயர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 1930-ம் ஆண்டில் ஆகஸ்டு 5-ந்தேதி ஒகயோவில் உள்ள வபாகொனெட்டாவில் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆடிட்டராக பணிபுரிந்தார். எனவே அவர் பல இடங்களுக்கு சென்று பணிபுரிந்தார். ஆகவே இவர் வபாகொனெட்டாவில் உள்ள தனது தாத்தா - பாட்டியுடன் தங்கியிருந்தார். அவர்களுடன் குழந்தை பருவத்தை கழித்தார். சிறு வயதில் இவருக்கு விமானம் என்றால் கொள்ளை பிரியம். எனவே, அது குறித்த படிப்பை படித்தார். பின்னர் அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். இவருடன் விமானி எட்வின்புஷ் அல்டிரின், மற்றொரு விண்வெளி வீரர் மைக்கேல் கொலினல் ஆகியோரும் சந்திரனுக்கு சென்று இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய 20 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் சந்திரனில் இறங்கினார்.

மைக்கேல் கொலினஸ் அப்பல்லோ-11 விண்கலத்தில் இருந்து அதை இயக்கி கொண்டிருந்தார். சந்திரனில் இறங்கிய நீல்ஆம்ஸ்ட்ராங்குடன் அல் டிரினும் சேர்ந்து சோதனை யில் ஈடுபட்டார். அங்குள்ள பாறைகளை இருவரும் சேகரித்தனர். அமெரிக்க தேசிய கொடியையும் சந்திரனில் பறக்க விட்டு சாதனை படைத்தனர். சந்திரனில் காலடி எடுத்து வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை செய்த விவகாரம் 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. சந்திரனில் இருந்து பூமி திரும்பிய நீல்ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார். நீல்ஆம்ஸ்ட்ராங் “நாசா” விண்வெளி மையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Saturday, August 25, 2012

அரசு பள்ளிகளில் ஜாதி வாரிப் பட்டியல் தயாரிக்க உத்தரவு


அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோருக்கு இனச்சுழற்சியில் ஜாதி வாரி கல்வி உதவித்தொகை, அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆட்சியிலும் புதிய சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், நடப்பாண்டில் கல்வி உதவித்தொகை உட்பட வகுப்பு வாரியாக 16 சலுகைகள் அறிவித்து, ஒவ்வொன்றாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா, ஜாதி வாரியாக எத்தனை சதவீதம் பேர் இச் சலுகைகளை பெறுகின்றனர். ஒவ்வொரு ஜாதியிலும் உயர், மேல்நிலை கல்வி பயில்வோரின் சராசரியை உறுதிப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
.

முதன்மை கல்வி , மாவட்ட கல்வி, தொடக்கக்கல்வி அலுவலக ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், முறைகேடுகளை தடுக்க, இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு எத்தனை பேர் அரசு சலுகைகள் பெறுகின்றனர். சலுகை அளித்தும் ஏன் இடை நிற்றல் ஏற்படுகிறது போன்ற பல்வேறு காரணங்களை தெரிந்து கொண்டு, மாற்றங்களை உருவாக்க இந்த கணக்கெடுப்பு நடக்கிறது என்றார்.

Tamilnadu Post office Recruitment 2012-2013 for 621 Vacancies

Tamilnadu Postal Circle invites applications for recruitment of Postal Assistant and Sorting Assistant. Tamilnadu Postal Circle is going to fill up 621 posts through this job notification.
Total Vacancies : 621 posts Post

Name : Tamilnadu Post officer Recruitment 2012-Application form
1. Postal Assistant : 415 vacancies 2. Sorting Assistant : 88 vacancies 3. Postal Assistant (Returned Letter Office) :
1 vacancy 4. Postal Assistant (Mail Motor Service) : 3 vacancies 5. Postal Assistant (Foreign Post Organization) : 5 vacancies 6. Postal Assistant: (SBCO) : 109 vacancies

Age Limit: Candidate age must be between 18 to 27 years as on 01-10-2012. (Age relaxations will be extended as per rules).

Education Qualifications : 1.Candidates must have Intermediate/10+2/12th class pass with first class marks or with 60 percent 2.Should be studied Hindi as a subject in Metriculation 2.Must have English subject in Matriculation and 12th class.

Application Fee: 1.General and OBC Candidates need to pay 200 Rupees for Examination fee and 50 rupees for Application fee 2.SC/ST Candidates no need to pay Examination fee.They have to pay only Application fee of 50 rupees for Application form and it is available at all All Head Post offices and identified Post offices in the Circles from 11-08-2012 to 25-09-2012.

Selection procedure: Selection Process is based on the performance in Written exam(Aptitude test) and computer typing test. Tamilnadu Post office Syllabus has General knowledge, Reasoning ability, English and Maths for 100 marks. Each section having 25 marks for 25 questions. How to Apply: Eligible Candidates may apply through prescribed application format available at all Head Post offices and identified Post offices in the Circles. Dully filled application form along with Copies of relevant certificates and original receipt of ACG-67/UCR issued by the identified Post Office of this Circle towards payment of Examination fee have to be sent to “
Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi-1100010″ on or before 01-10-2012 through Speed Post/Registered Post of India Post only.

Important Dates: Last Date for Sale of Application Closes: 25-09-2012 Last Date for Receipt of Application: 01-10-2012 Last Date for Receipt of Application (far flung areas): 11-10-2012

For more details like vacancy distribution, pay scale, reservations, other requirements and other instructions, click on the link given below… Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi-1100010 Download the Tamilnadu Post office Recruitment 2012-2013 tamilnadupost.nic.in-TN Post Office Recruitment 621 Vacancies mponline.gov.in-MP High Court Recruitment 2012 for 347 Care Taker

6.76 லட்சம் பேரில் 2448 பேர் மட்டுமே பாஸ் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும்  தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது .தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.  ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம், அவசர அவசரமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை இணையதளத்தில்   (ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ)   அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.  மொத்தம் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகி உள்ளனர். இது தேர்வு எழுதிய ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி கட்டணம் எதுவும் இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி அறிவித்தார். ஆசிரியர் தகுதி தேர்வின்அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.2,448 பேருக்கு உடனே வேலை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாளில் வினாத்தாளின் வரிசை எண்ணை குறிப்பிடாதவர்களுக்கு 5 மார்க், விடைத்தாளில் பாடப்பிரிவை குறிப்பிடாதவர்களுக்கு 3 மார்க், விருப்ப மொழியை எழுதாதவர்களுக்கு 2 மார்க் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதி விட்டு ஒரிஜினல் விடைத்தாளை (ஓஎம்ஆர் சீட்) கொடுக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுதாமல் போலி எண் எழுதியவர்கள் பேப்பரும் திருத்தப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2 பேரின் விடைத்தாளில் உள்ள கையெழுத்தும், விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் 5 ஆண்டு பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியருக்காக நடத்தப்பட்ட தகுதி தேர்வை (தாள்,1) மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.61 சதவீத தேர்ச்சி ஆகும். பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை (தாள்,2) மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேர் எழுதினர். இதில் 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.19 தேர்ச்சி ஆகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரண்டு தேர்வையும் (தாள்,1, தாள்,2) எழுதிய 83 பேர் தேர்வாகி உள்ளனர்.

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு குறித்து, மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர், 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளத

ஜூன், ஜூலையில், எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக்., - ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி.,க்கு, உடனடித் தேர்வு நடந்தது. தேர்வில், மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர், www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக, 27ம் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரு தாள் கொண்ட பாடங்களுக்கு, 305 ரூபாய் வீதம்; ஒரு தாள் கொண்ட பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் வீதம், கட்டணம் செலுத்த வேண்டும். பிளஸ் 2 உடனடித் தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற்று, மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டல் கோரி, 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டிற்கு, மொழிப் பாடத்திற்கு, 1,010 ரூபாய்; இதர பாடம் ஒவ்வொன்றிற்கும், 505 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு, மொழிப்பாடம், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு, தலா 305 ரூபாய்; இதர பாடங்களுக்கு, தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்துச் சீட்டை பதிவிறக்கம் செய்து, சம்பந்தபட்ட வங்கியில், கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு ஒரு லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்


சென்னையில் உள்ள பணியாளர் தேர்வாணைய கூட்ட அரங்கில், ஆங்கில பாடத்திற்கான வினாத்தாள் தயாரிப்பது பற்றிய கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில், மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி வி.நாராயணசாமி கலந்து கொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மூலம் இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய பணியாளர் நலத் துறை மந்திரி வி.நாராயணசாமி தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல் மூன்று இடங்களைப் பிடித்தோர் விவரம்


தமிழகத்தில் கடந்த மாதம் 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியாயின. ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரத்தையும் வெளியிட்டுள்ளது. அதன்படி,  முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் புங்கமுத்தூர் பகுதியைச் சேர்ந்த எம். திவ்யா பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை நாமக்கல் மாவட்டம் அயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்த பி. சித்ராவும், மூன்றாம் இடத்தை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்வாணியும் பிடித்துள்ளனர்.  

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை


ஜுலை 12ம் தேதி நடைபெற்ற டெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 1%க்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஜுலை 12ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 2 தாள்களாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த 2 தாள்களையும் மொத்தமாக 6,76,773 பேர் எழுதினர். முதல் தாளை மட்டும் எழுதியவர்கள் எண்ணிக்கை 2,88,588 பேர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 1,735 பேர். இரண்டாம் தாளை மட்டும் எழுதியவர்கள் எண்ணிக்கை 3,88,185 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 713 பேர். அந்த வகையில் 2 தாள்களிலும் சேர்ந்து 2,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2 தாள்களிலும் சேர்த்து தேர்ச்சி பெற்றவர்கள் 83 பேர் மட்டுமே. இதனடிப்படையில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1%ஐ கூட தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிகம் பகுப்பாய்வு அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளை எழுதுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, தேர்வர்கள் மத்தியில் பரவலாக எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி விகிதம் இந்தளவிற்கு குறைவாக இருப்பதால், தற்போதைய காலியிடங்களுக்கான ஆசிரியர்களை பணியமர்த்துவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்குக்கூட அழைக்க ஆளில்லாத நெருக்கடி நிலவுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மறுதேர்வுக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வில், 30 நிமிட நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 24, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியானது

தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளைக் காண http://trb.tn.nic.in/TET2012/24082012/status.asp இணைய தளத்தைப் பார்க்கவும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை 2,88,588 பேரும், இரண்டாம் தாளை 3,88,175 பேரும் எழுதினர். இத்தேர்வில் தலா 150 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது. மொத்தமுள்ள மதிப்பெண்ணில் 60% மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மன்டேரின் கற்றுத்தர ஒப்பந்தம்


இந்தியாவில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சீன மொழியான மண்டேரின் கற்றுத்தர இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் எதிரொலியாக சி.பி.எஸ்.இ பள்ளிகளில் விரைவில் மண்டேரின் ஒரு பாடமாக சேர்க்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியத் தூதர் ஜெய்ஷங்கர் மற்றும் சீன உயரதிகாரி சூ-லின் இடையே பீஜிங்கில் நேற்று கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, மண்டேரின் மொழியைக் கற்றுத் தருவதற்காக இந்திய ஆசிரியர்களுக்குத் தேவையான உதவிகளையும், பாடத் திட்டத்தையும் சீனா அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணவு ஒப்பந்தத்தின் படி, இந்தியாவைச் சேர்ந்த 300 ஆசிரியர்களுக்கு சீன அரசு மண்டேரின் மொழியை சொல்லித் தரும். இதற்கான செலவையும் அந்நாட்டு அரசே ஏற்றுக் கொள்கிறது. இந்தியாவில் இருந்து சீனா செல்லும் ஆசிரியர்களுக்கு, உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து செலவு உள்ளிட்டைவையும் இவற்றில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வை அதிகரிக்கவும், வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என இந்தியத் தூதர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

TET Tentative List Paper II

TET Tentative list Paper I

TET Exam Tentative result Release

TamilNadu Teachers Eligiblity Test 2012- Tentative Provisional List of Candidates and Individual Query http://www.trb.tn.nic.in/TET2012/24082012/msg.htm

திருப்பூர் மாவட்ட தேர்வு அட்டவணை

முதல் பருவத்தேர்வு
20.9.2012முதல்25.9.2012
2ம் பருவத்தேர்வு
18-12-2012முதல்22-12-2012
இறுதிப்பருவத் தேர்வு
23-4-2013முதல்29-4-2013

            தேர்வு விடுமுறை
26-9-2012    முதல் 2-10-2012
23-12-2012    முதல் 1-1-2013
1-5-2013    முதல் 2-6-2013

               சனிகிழமை வேலை நாள்
21-7-12,
22-9-12,
24-11-12
22-12-2012

திருப்பூர் மாவட்ட விடுமுறை பட்டியல்

செப்டம்பர்-19-விநாயகர் சதுர்த்தி
                  26முதல்28முடிய                    முதல் பருபத்தேர்வு விடுமுறை

அக்டோபர்-1  முதல் பருவததேர்வு                            விடுமுறை
                 2-காந்திஜெயந்தி
                 23-ஆயுதபூஜை
                 26-பக்ரீத்

நவம்பர் 12,13-தீபாவளி
டிசம்பர்-24முதல்31வரை 2ம்பருவ விடுமுறை
ஜனவரி-1-ஆங்கில புத்தாண்டு
            14,15,16-பொங்கல்
மார்சு-29-புனித வெள்ளி
ஏப்ரல்-5-மகாவீர் ஜெயந்தி
          11-தெலுங்கு வருட பிறப்பு்

மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க ஒன்றியத்திற்கு 5பள்ளிகள் வீதம் 2065 பள்ளிகளில் ஆய்வு செய்ய மாநில திட்ட அலுவலரின் செயல்முறைகள்

Check out this file on Box: https://www.box.com/shared/c697cdd5c84031113807
Courtesy:tnkalvi

பிறந்தவுடன் பேசிய குழந்தை:திருப்பூரில் வதந்தி

திருப்பூர் அரசு மருத்துவமனையில், பற்களோடு குழந்தை பிறந்ததாகவும், பிறந்தவுடன் பேசியது, அப்போது இன்றைய தினத்திற்குள் 1,500 குழந்தைகள் இறந்துவிடுவர் என்று கூறிய அக்குழந்தை, இதற்கு பரிகாரமாக, 3 ரோடு சந்திப்பில் உள்ள கோயிலில் தேங்காயை உடைத்து வழிபாடு செய்ய வேண்டுமென கூறியதாக திருப்பூரில் வதந்தி பரவியது. திருப்பூர் மருத்துவமனையில் அப்படியொரு குழந்தையே பிறக்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 23, 2012

ஆன்-லைனில் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் அறிமுகம


பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கல்வித் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவித் தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூ், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.12.58 கோடி மதிப்பீ்ட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக நெல்லையில் உயர் நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதா, பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியாது. பள்ளிகளிலும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக 19 இலக்க எண் வழங்கபட உள்ளது. இந்த 19 இலக்க எண்ணை பதிவு செய்து மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் மாற்றமா "டோல் ப்ரீ எண் 1950' அழைக்கலாம் : *தேர்தல் கமிஷன

் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்க,திருத்தம் செய்ய, இலவச போன் எண்-"1950'ல் தொடர்பு கொள்ளலாம்,'' என,தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 2013 ஜனவரியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க,தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மாவட்டங்களில் ஓட்டுச்சாவடி வாரியாக செயல்படும், "ஓட்டுச்சாவடி அலுவலர்கள்' வீடு வீடாக சென்று வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பார்கள். "டோல் ப்ரீ எண்': ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக வர உள்ள நிலையில்,தேர்தல் கமிஷன் இலவச போன் எண்-1950 ஐ வழங்கியுள்ளது. இதில், அழைத்தால், தகவல் தருவோரின் மாவட்டம், தொகுதி, ஓட்டுச்சாவடி போன்ற விபரங்களை தேர்தல் கமிஷன் சேகரிக்கும். அத்தகவலை, அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பும். அதற்கு பின், போன் செய்தவர்களின் வீட்டிற்கே சென்று, சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும், என,தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு தயாராக உள்ள போதும், "வருமா, வராதா?'

டி.இ.டி., தேர்வு முடிவு தயாராக உள்ள போதும், "வருமா, வராதா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.ஜூலை, 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5.50 லட்சம் பேர் எழுதினர். தமிழக அரசு, முதல் முறையாக நடத்திய இத்தேர்வு கேள்வித்தாள் அமைந்த விதம், கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, 3 மணி நேரம்; 150 மதிப்பெண்கள், டி.இ.டி., தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம்; 150 மதிப்பெண்கள் என, இரு தேர்வுக்கும் மிகப்பெரிய முரண்பாடு; யாருமே சிந்தித்துப் பார்க்காத வகையில் அமைந்த கேள்விகள் என, அடுக்கடுக்காக பல்வேறு குமுறல்களை, தேர்வர் வெளிப்படுத்தினர்.தேர்வர் மத்தியில் இருந்து, இதுவரை எதிர்பார்த்திராத அளவுக்கு, கடும் விமர்சனங்களை, டி.ஆர்.பி., எதிர்கொண்டது. 10 சதவீத தேர்ச்சியை எதிர்பார்த்த நிலையில், 2 சதவீதமாக தேர்ச்சி முடிவு சரிந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இருபத்தி ஐந்தாயிரம் பேரை தேர்வு செய்ய, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி., உள்ளது. ஆனால், பணியிடத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் பார்த்தால் கூட, 10 ஆயிரம் பேர் மட்டுமே தேறுவர் என, கூறப்படுகிறது.தேர்வு முடிவைப் பற்றி, வெளிப்படையாக கருத்துக் கூற, டி.ஆர்.பி., மறுத்து வருகிறது. "தேர்வு முடிவு தயாராகி விட்டது; எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவோம்' என்று மட்டும், திரும்பத்திரும்ப கூறி வருகிறது. உண்மையான தேர்ச்சி என்னவோ, அதை வெளியிட வேண்டும் என்பது தான், தேர்வரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கூடுதலாக தேவைப்படும் ஆசிரியரை, அடுத்த டி.இ.டி., தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும் எனவும், தேர்வர் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், தேர்வு முடிவை வெளியிட்டால், அது அரசியல் ரீதியாகவும், பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திவிடுமோ என, டி.ஆர்.பி., பயப்படுவது தான், முடிவு வெளியாமல் இருப்பதற்கு காரணம் என, கூறப்படுகிறது

நாள் ஒன்றிற்கு 5 எஸ்.எம்.எஸ்.,கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பை 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

பல்க் எஸ்.எம்.எஸ்.,களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு 5 எஸ்.எம்.எஸ்.,கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பை 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

எஸ்.எம்.எஸ் உச்ச வரம்பு 20ஆக உயர்வு

அசாம் கலவரத்தை தொடர்ந்து தென் மாவட்டங்களில் வாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என வதந்தி கிளப்பிய எஸ்.எம்.எஸ்.கள் காரணமாக, எஸ்.எம்.எஸ் அனுப்புவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி அடுத்த 15 நாட்களுக்கு ஒரு எண்ணிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்ப முடியும் எனக் கூறப்பட்டது.   இந்தக் கட்டுப்பாடு அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது வதந்திகள் பரப்புவது முழுமையாக தடுக்கப்பட்டு விட்டதால் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே ஒரு எண்ணிலிருந்து நாள் ஒன்றுக்கு 20 எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பலாம் எனவும், இந்த விதி உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.   அசாம் கலவரம் காரணமாக வேறு மாநிலங்களில் வாழும் வடகிழக்கு மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டதால் ஏற்பட்ட பீதியால், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்து பெரும்பாலான வடகிழக்கு மாநில மக்கள் சொந்த ஊர் திரும்பினர். வடகிழக்கு மாநில மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அந்த எஸ்.எம்.எஸ்.கள் காரணமாகவே, எஸ்.எம்.எஸ்.களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய திறனாய்வு தேர்வு 2012 படிவம்

CLICK download

Check out this file on Box: https://www.box.com/shared/6324e557eb7d3cdceb7e