முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ல், சிறந்த ஆசிரியர், 359 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாநிலம் முழுவதும் இருந்து, 1,000 பேர் போட்டியில் உள்ளனர். இம்மாத இறுதியில், பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான குழு கூடி, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. ஆசிரியர் பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, ஜனாதிபதி ஆனவர் ராதாகிருஷ்ணன். அவரின் பிறந்த நாளான செப்.,5ம் தேதி, தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய அரசு விருது மிகச் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், தேசிய அளவிலும், அந்தந்த மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கின்றன. மத்திய அரசின் விருது, ஒவ்வொரு மாநிலத்திற்கு தகுந்தாற்போல் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கான ஆசிரியர் பட்டியலை, ஓரிரு நாளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட உள்ளது. மாநில அரசு விருது மாநில அரசு சார்பில், 359 ஆசிரியருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநிலத்தில், 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையைச் சேர்ந்த பேராசிரியர் என, பல்வேறு துறைகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும். அதன்படி, 2,000த்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், கல்வி மாவட்டங்களில் பெறப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் வீதம் தேர்வு செய்து, மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, மாநில குழுவிற்கு, 1,000 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழு, அடுத்த வாரத்தில் சென்னையில் கூடி, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. இக்குழுவில், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர். அரசியல்வாதிகளை மொய்க்கும் ஆசிரியர் சிறந்த நல்ஆசிரியர் விருதுக்கு, பரிந்துரை செய்யுமாறு, மாவட்ட அமைச்சர்கள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஆசிரியர்கள் மொய்த்து வருகின்றனர். இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, "சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு தகுதிகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவருக்கு மட்டுமே, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு, நேர்மையான முறையில் நடக்கும்,&'&' என்றார். தகுதிகள் என்னென்ன? பணிமூப்பு, கற்பித்தலில் உள்ள திறமை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி சதவீதம், பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம், தலைமை ஆசிரியராக இருந்தால், பள்ளி வளர்ச்சிக்காகவும், கல்வித்தர மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த அளவில், அவரின் செயல்பாடுகள் குறித்த விவரம் ஆய்வு செய்யப்படும். மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி பெறுவதற்காக சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார்களா என்பது உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்.
Saturday, August 18, 2012
359 சிறந்த ஆசிரியர் விருதுக்கு 1,000 பேர் போட்டி
ஓணம் பண்டிகை திருப்பூர் மாவட்ட உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகை வரும் 29 ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.
விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் வரும் 8ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும
்
திருப்பூர் மாவட்டத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெறும் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவோர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சுய உறுதிமொழி ஆவண படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுளளது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலை இல்லாதவர்கள் உதவித்தொகை பெற்று வரும் பதிவுதாரர்கள் சுய உறுதி மொழி ஆவணப்படிவத்தை வரும் 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் அளித்த பின், 2012 செப்டம்பர் மாத காலாண்டுக்கான உதவித்தொகை அளிக்கப்படும். சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க வரும்போது வேலை வாய்ப்பு பதிவு அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஒப்பளிப்பு சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும். உதவித்தொகை பெற்று மூன்று ஆண்டுகள் முடிவுற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தேவையில்லை.
வங்கி ஊழியர்கள் 22, 23–ந் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு
– வங்கி துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான அறிக்கையை கண்டெல்வால் கமிட்டி தாக்கல் செய்து உள்ளது. அதில் வங்கி பணிகளை வெளியாட்கள் மூலம் செய்வது உள்ளிட்ட சில பரிந்துரைகள் இடம்பெற்று உள்ளன. இந்த நிலையில் கண்டெல்வால் கமிட்டியின் சிபாரிசு செய்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வருகிற 22, 23–ந் தேதி ஆகிய இரு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். இந்த தகவலை வங்கி தொழிற்சங்கங்களில் ஒருங்கிணைந்த அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
National Talent Exam for 10th std
Click Download
Check out this file on Box: https://www.box.com/shared/a270d993fb8519938a67
ி: அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
.யுவராஜ் சிங் உட்பட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்குமார் மற்றும் யோகேஸ்வர் தத் ஆகியோரின் பெயர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விஜய் குமார் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கமும், யோகேஸ்வர் தத் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தனர் இதனால் இவர்களின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று மாலையுடன் முடிவடைந்தது.
மொத்தமுள்ள 1,75,000 இடங்களுக்கு 1,70,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இன்று மாலையுடன் முடிவடைந்த கவுன்சிலிங்கில் 1,20,000 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு கல்லூரிகளில் சேர்ந்தனர். சுமார் 55 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து துணை கவுன்சிலிங் வரும் 21ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. கவுன்சிலிங்கில் மெக்கானிக்கல் பிரிவில் சுமார் 26 ஆயிரம் மாணவர்களும், இ.சி.இ., பிரிவில் 24 ஆயிரம் மாணவர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 14 ஆயிரம் மாணவர்களும், சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 13 ஆயிரம் மாணவர்களும், இ.இ.இ., பிரிவில் 12 ஆயிரம் மாணவர்களும், ஐ.டி.,யில் 8 ஆயிரம் மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
கல்விக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: ப.சிதம்பரம் எச்சரிக்கை
பொருளாதார சரிவு மற்றும் அதிகரித்து வரும் மோசமான கடன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக புதுடெல்லியில் இன்று பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆய்வு நடத்தினார். பின்னர் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:- வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது மாணவர்களின் உரிமை. எனவே கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கடனை நிராகரிக்கும் பொறுப்பு வங்கியின் கிளை மேலாளருக்கு இல்லை. மேலும் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்று நகல் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குறுகிய கால கடன்கள் நீண்ட கால கடன்களாக மாற்றியமைக்கப்படும். விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் தங்கள் வட்டி விகிதம் மற்றும் தவணை தொகையை குறைக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி, தவணைத் தொகையை குறைத்திருப்பதால் கார் விற்பனை அதிகரிக்கும். ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்காக, அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 63 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் என்ற அளவில் அதிகரிக்கப்படும்.வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் வகையிலும் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று வங்கிகள் கேட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
End Of Engineering Counsling
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கடந்த மாதம் 13-ந்தேதி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தொடங்கி இன்று நிறைவு பெற்றது. இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டதால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் எனஜினீயரி்ங் கல்லூரிகளில் 30 ஆயிரம் இடங்கள் அதிகமாக இருந்தன. தமிழ்நாட்டில் 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள மொத்த இடங்கள் 1,24,868. இன்று தேர்வு செய்யப்படுவர்கள் தவிர்த்து 55 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. இதுவரை சேர்ந்தவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள். 40 சதவீதம் பேர் பெண்கள். 75 ஆயிரம் பேர் முதல் பட்டதாரிகள். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 15 ஆயிரம் மாணவ- மாணவிகள் தற்போது அதிகமாக என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்துள்ளனர். இந்த ஆண்டு மெக்கானிக்கல் பாடத்தையே அதிக அளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதை தேர்ந்தெடுத்தவர்கள் 25 ஆயிரம் பேர். எலக்ட்ரிக்கல்& எக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடத்தை 24 ஆயிரம் பேரும், கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 14 ஆயிரம் பேரும் தேர்வு செய்திருக்கிறார்கள். சிவில் பாடத்தில் 13 ஆயிரம் பேரும், 'டிரிபிள் இ' பாடத்தில் 12 ஆயிரம் பேரும் சேர்ந்துள்ளனர். நாளை மற்றும் நளை மறுநாள் தொழில் பிரிவு மாணவர்களுக்கும், 21-ந்தேதி பிளஸ் 2 மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. 25-ந்தேதி முதல் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Annamalai University PG result
Welcome to Annamalai University http://www.annamalaiuniversity.ac.in/results/index.php
ஆண்டுக்கு மானியத்துடன் 4 சிலிண்டர்கள் மட்டும்
பரிந்துரை தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டரின் விலை சுமார் 400 ரூபாயாகும். இதில் ஒரு சிலிண்டருக்கு அரசு ரூ.231 மானியமாக அளிக்கிறது. எனவே, ஒரு சிலிண்டரின் மொத்த விலை என்பது சுமார் ரூ.630 ஆகும். இந்த நிலையில், இந்தியாவில் 29% குடும்பத்தினர் ஒரு ஆண்டுக்கு 4 கியாஸ் சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனவே, இதனை அடிப்படையாக வைத்து அனைத்து குடும்பத்துக்கும், ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மட்டும் மானிய விலையை அரசு வழங்கலாம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் தேவைப்படின், முதல் 4 சிலிண்டர்கள் மட்டும் 400 ரூபாயக்கும், மீதம் 8 சிலிண்டர்களை 600 ரூபாய்க்கும் பெற வேண்டிய நிலை ஏற்படும். 4 சிலிண்டர்களுக்கு மட்டும் அரசு மானியம் வழங்கினால், சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு அரசு வழங்குகிற மானியத்தின் அளவு ரூ.18 ஆயிரம் கோடியாகக் குறையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஆராய்ந்து உரிய முடிவு எடுத்து விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Courtesy-Dailythanthi
சென்னையில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
சென்னையில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு சென்னை, ஆக.17– சென்னை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2012 (புதன்கிழமை) அன்று சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் அலுவலகத்தின் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும். மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக 15.09.2012 (சனிக் கிழமை) அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களூக்கு பணிநாளாக அறிவிக்கப் படுகின்றது. இவ்வாறு கலெக்டர் ச.ஜெயந்தி கூறியுள்ளார்.
உயர்கல்வியில் மொழிப்பாடங்களுக்கும் இனி செய்முறைத் தேர்வு!
கல்லூரி மற்றும் பல்கலையில், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில், 25 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மொழிப் பாடங்களில், மாணவ, மாணவியரின் தகவல் தொடர்பு திறமையை வளர்க்கும் நோக்கில், முதன்முறையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், அதிகமான மாணவ, மாணவியர் மொழிப் பாடங்களாக, தமிழ், ஆங்கிலத்தை படிக்கின்றனர். மற்ற பாடங்களைப் போல், மொழிப் பாடங்களுக்கும், தலா, 100 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகின்றன. 100 மதிப்பெண்களுமே, எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. அறிவியல் பாடங்களுக்கு மட்டுமே, செய்முறைத் தேர்வு அமலில் இருக்கிறது. இந்நிலையில், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கு, செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என, சமீபத்தில் நடந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் உத்தரவிட்டார். அதன்படி, எழுத்துத் தேர்வுக்கு, 75 மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுக்கு, 25 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கப்பட உள்ளது. இது குறித்து அமைச்சர் கூறியதாவது: மாணவர்கள், மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெறாமல், அவர்களின் தகவல்தொடர்பு திறன், பேச்சுத்திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், செய்முறைத் தேர்வு முறை வகுக்கப்படும். மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசும் திறன் மிகக் குறைவாக இருக்கிறது; ஆங்கிலத்தில் எழுதவும் தெரியவில்லை. எனவே, இலக்கண பிழையின்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுதல், பேசுதல், குழு விவாதம், கேள்வி-பதில் போன்றவற்றுக்கு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த முறையினால், மாணவரின் திறன் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறும்போது, "மொழிப் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு முறை அறிமுகப்படுத்தும் திட்டத்தை, பல்கலையின் பாடத் திட்டங்களுக்கான குழுவின் முன்பாக வைத்து, அனுமதி பெறப்படும். அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டே, மொழிப் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு திட்டம் அமலுக்கு வரும்,&'&' என்றார். « முதல் பக்கம்
List of Associations Pay grievance Cell
Check out this file on Box: https://www.box.com/shared/d79c5399e437099eabd9
கல்வி உதவித்தொகை விவரங்கள் கணக்கெடுக்கும் பணி
மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கும், சுகாதாரமற்ற பகுதிகளில் பணியாற்றும், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த 2011- 2012 ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விவரத்தை கணக்கெடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெயர், படிக்கும் வகுப்பு, அவர்களின் பெற்றோர், தொழில், வழங்கப்பட்ட உதவித்தொகை விவரம், உதவித்தொகை பெற்றதற்கான ஒப்புகை சீட்டு உட்பட அனைத்து விவரங்களும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ்
Friday, August 17, 2012
ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் மறுகூட்டல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல
்
பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, மதிப்பெண் மாற்றம் கண்ட மாணவ, மாணவியருக்கு, தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 17, 18), புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டல் கோரி மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் முடிவுகள், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு தபால் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. மறுகூட்டலில் மதிப்பெண் மாற்றம் கண்ட மாணவ, மாணவியரின் பழைய மதிப்பெண் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் சான்றிதழ், 17, 18 (இன்றும், நாளையும்) ஆகிய தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரக வளாகத்தில் உள்ள மாநாட்டுக் கூடடத்தில் வழங்கப்படும். "மதிப்பெண் மாற்றம் உள்ளது&' என்ற தகவலைப் பெற்ற மாணவ, மாணவியர், தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வுத்துறை இயக்குனரகத்தில் நேரில் ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. உடனடி தேர்வுமுடிவு வெளியீடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த, ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர், ஜூன், ஜூலையில் நடந்த உடனடித்தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், இன்று மாலை(ஆகஸ்ட் 17) 4 மணிக்கு, தேர்வுத்துறை இணைய தளத்தில் www.dge.tn.nic.in வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார். மாணவர்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழை, 29, 30 ஆகிய தேதிகளில், சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும், மறுகூட்டலுக்கான தேதி மற்றும் செப்டம்பர்-அக்டோபர் தனித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், இயக்குனர் தெரிவித்தார்.
உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ SMS வரவில்லையா?
உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ SMS வரவில்லையா? கிழே உள்ள வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து ON tnptfmani
SMS களை தொடர்ந்து பெற்றிடுங்கள்!... நம்முடைய இணையதளத்தில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் (SMS) பலருக்கு சில நாட்களாக வருவதில்லை என தொடர்ந்து தகவல்கள் வருகிறது. இதற்கு காரணம் GOOGLE Activation Rules ஆகும். உரிய காலத்தில் நீங்கள் ACTV என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. குறுந்தகவல்கள் (SMS) வராதவர்கள் உடனே ACTV என்று type செய்து என்ற 98 70 80 70 70 எண்ணிற்கு SMS செய்யுங்கள். இந்த SMS ஐ அனுப்பிய உடன் தங்களுக்கு "Your Account is Successfully Activated" என்று Reply SMS உங்கள் Mobile-க்கு வரும், தாமதமின்றி மீண்டும் தாங்கள் செய்ய வேண்டியது: ON tnptfmani என்று type செய்து 98 70 80 70 70 என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள். பிறகு, வழக்கம் போல் தங்களுக்கு நம் SMS வரத்தொடங்கும். அப்படியும் ஒருவேளை தங்களுக்கு SMS Reply வரவில்லை எனில் தங்களுடைய மாற்று புதிய எண்ணில் ( Alternate Number) நம் SMS format ஐ அந்த புதிய எண்ணில் Activate செய்துக்கொள்ளுங்கள். மேலும் GOOGLE SMS பெறுபவர்கள் கூட (AlreadyMembers) கூடுதலாக ஒரு Alternate SMS சேவையை Activate செய்யுங்கள
Thank you்
நாடு முழுவதும் மொத்தம் 3000 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளத
நாடு முழுவதும் மொத்தம் 3000 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 6154 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடங்களும், 3475 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடங்களும் உள்ளன. இதில் தற்போது 1777 ஐ.ஏ.எஸ். பணியிடங்களும், 1255 ஐ.பி.எல். பணியிடங்களும் காலியாக உள்ளன என்று பாராளுமன்றத்தில் இன்று கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் நாராயணசாமி எழுத்துப்பூர்வமான பதில் அளித்தார். மேலும் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 216 ஐ.ஏ.எஸ். இடங்களும், பீகாரில் 128, மத்திய பிரதேசத்தில் 118, அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம்-யூனியன் பிரதேசங்களில் 116, ராஜஸ்தானில் 112, ஜார்க்கண்டில் 100 இடங்களும் காலியாக உள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்
Interim Stay for Group IV
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 718 பணிகளுக்காக கடந்த மாதம் 7ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளை வெளியிடக்கூடாது என்று தர்மபுரியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எனக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் 200 கேள்விகளுக்குப் பதில் 195 கேள்விகளே இடம்பெற்றிருந்தன என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும் கேள்வித்தாளில் உள்ள குளறுபடி குறித்து டி.என்.பி.எஸ்.சி. பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
SSLC Sup Result Release
Results published- click here for sslc Supplementary Results 2012 http://dge.tn.nic.in/sslc/
SSLC Result
Results published- click here for sslc Supplementary Results 2012 http://dge.tn.nic.in/sslc/ (UC Browser)