சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மசேஷாத்திரி மேல்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ரஞ்சன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானான். இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகி யோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு ஆஜரான மூத்த வக்கீல் விஜயநாராயணன், வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் இருவரும் மாணவன் ரஞ்சன் பலியானது குறித்து முறையீடு செய்தனர். உடனே தலைமை நீதிபதி இக்பால், உங்கள் முறையீட்டை மனுவாக கொடுங்கள். உடனே விசாரிக்கிறோம் என்றார். இதையடுத்து வக்கீல் கார்த்திக்ராஜா, மாணவன் ரஞ்சன் பலியானது குறித்து பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:- பள்ளி மாணவ-மாணவிகள் விபத்துக்களில் பலியாவது தினமும் நடந்தபடி உள்ளது. இது பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது. கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியில் மாணவன் ரஞ்சன் பலியான சம்பவத்தின் பின்னணியில் பல தகவல்கள் உள்ளன. அந்த பள்ளியில் மாணவர்கள் நீச்சல் பயிற்சி பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கு சம்மதிக்க பெற்றோர்களும் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிப்பதற்காக இப்படி பல பயிற்சிகள் அளிப்பதாக போலி வேடம் போடுகிறார்கள். மாணவன் ரஞ்சன் மரண சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நீச்சல் குளம் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகத்தினர் கவனக்குறைவாக இருந்துள்ளனர். அவர்கள் மாணவர்கள் பாதுகாப்புக்காக எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இப்படி அசட்டையாக இருந்தவர்கள் மீது தமிழக கல்வித்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தனியார் பள்ளி நிர்வாகிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க செய்வது காப்பாற்றவே முயற்சிகள் நடந்து வருகிறது. சேலையூரில் பஸ் ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி ஸ்ருதி பலியானபோது, அந்த பள்ளி நிர்வாகிகள் மீது 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்விளையாட்டரங்கம் இடிந்து 10 பேர் பலியானபோது, அந்த கல்லூரி நிறுவனர் ஜேப்பியார் மீது 304(2) மற்றும் 338 ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டப் பிரிவுகள் ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகள் ஆகும். ஆனால் மாணவன் ரஞ்சன் பலியான விஷயத்தில் மட்டும் அந்த பள்ளி நிர்வாகிகள் மீது எளிதில் ஜாமீனில் வெளியில் வரும் வகையில் 304(ஏ) என்ற பிரிவில் போலீசார் சாதாரண வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். உயிரிழப்பை ஏற்படுத்திய பத்மசேஷாத்திரி பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும், கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுபற்றி உயர்மட்டக் குழு ஒன்றை ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும். கவன குறைவாக இருந்ததற்காக பத்மசேஷாத்திரி பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிடவேண்டும். மேலும் பள்ளிகளில் நீச்சல் குளம் அமைக்க தடை விதித்து உத்தரவிடவேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவம் நடைபெறாமல் இருக்க உயர்மட்டக் குழு ஒன்றை உருவாக்கி பாதுகாப்பு விதிகளை வகுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்கு என்று கண்காணிப்பு குழு உருவாக்க வேண்டும். அந்த குழுக்களை செயல்பட வைக்க ஒரு உயர்மட்ட கமிட்டி மாநில அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Friday, August 17, 2012
Central Govt Banned Group sms
அசாம் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதன் காரணமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். இத்தாக்குதல் திட்டமிட்டு அந்நிய சக்திகளால் நடத்தப்படுவதாக பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் வடகிழக்கு மாநில மக்கள், தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கருதி, அங்கிருந்து வெளியேறுகின்றனர். இது வதந்திகளால் ஏற்பட்ட அச்ச உணர்வு ஆகும். இவ்வாறு பரப்பப்பட்ட வதந்தி கடும் கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேசுகையில், வடகிழக்கு மாநில மக்கள் நாடு முழுவதும் வசிக்கின்றனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே வடகிழக்கு மக்கள் அவர்கள் வசித்த இடங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள். மொத்த நாடும் உங்களுடையதுதான். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றார். இதையடுத்து, செல்போன்கள் மூலம் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். செய்திகளை மொத்தமாக அனுப்புவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் 15 நாட்கள் அமலில் இருக்கும். ஒரு மொபைல் இணைப்பில் இருந்து அதிகபட்சம் 5 எஸ்.எம்.எஸ். மற்றும் 3 எம்.எம்.எஸ். வரை அனுப்பலாம். எம்.எம்.எஸ். பைல்கள் 25 கே அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நாடு முழுவதும் இந்த தடை அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் நகைகள் அணிய தடை
பள்ளிகளில் கடுக்கன், கண்களை உறுத்தும் நகைகள் அணிய தடை
பள்ளிகளில் ஸ்டைலுக்காக காதில் கடுக்கன், கையில் வித்தியாசமான பிரேஸ்லெட், மாணவிகள் தங்க நகைகள் அணிய பள்ளி கல்வித்துறை தடைவிதித்தது. மாணவர்கள் தலைமுடியை ஸ்டைலாக பங்க், போலீஸ் கட்டிங், ஸ்டெப் கட்டிங் போன்ற வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களுக்கு அனுமதி இல்லை. தலைமுடியை நேர்த்தியாக சீவி விட்டு தான், இனி பள்ளிக்கு வரவேண்டும். காதுகளில் "ஸ்டைலாக" கடுக்கன், கையில் பிளாஸ்டிக் அல்லது உலோகத்திலான "பிரேஸ்லெட்டுகள்" அணியக்கூடாது. மாணவிகள் கண்களை "உறுத்தும்" வகையில் தங்க நகைகளை அணியக்கூடாது. மேலும், அனைத்து பாட நோட்டுக்களின் முதல் பக்கத்தில், "தான் என்னவாக விரும்பம் உள்ளது என்ற லட்சியம்" குறித்தும், பெற்றோரை மதிப்பது, ஆசிரியர் சொல் படி நடப்பது போன்ற வாசங்களை கட்டாயம் எழுதி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வளாக மரங்களை வேருடன் வெட்டக்கூடாது
பள்ளி வளாக மரங்களை வேருடன் வெட்டக்கூடாது: கல்வி அலுவலர்-
"பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை எக்காரணம் கொண்டும் வேருடன் வெட்டக்கூடாது. மேலும், வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது; மொபைல் போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி எச்சரித்து உள்ளார். அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்குவது தொடர்பாக, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளியின் பெயர், மாணவர் எண்ணிக்கை, இலவச காலணி, சைக்கிள், கல்வி உதவித்தொகை, புத்தகப்பை எவ்வளவு தேவை என்பது போன்ற அனைத்து தகவல்களுடன் கூடிய விண்ணப்பத்தை, தலைமை ஆசிரியர்கள் பூர்த்தி செய்து வழங்கினர். முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பேசியதாவது: நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகள் பட்டியல் தயாரிப்பதில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க, மாவட்டம்தோறும் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் முழு விவரங்களை சேகரிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில், வகுப்பு வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவு, பல்வேறு நலத்திட்டங்கள் பெற தகுதியான மாணவர் எண்ணிக்கை, ஜாதி வாரியாக மாணவர் விவரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதனடிப்படையில், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும். இலவச சைக்கிள்கள் தயாராகி வருகின்றன. இலவச காலணி, "அட்லஸ்", புத்தகப்பை போன்றவற்றுக்கான டெண்டர் நிறை வடைந்துள்ளது. வரும் செப்., மாதத்துக்குள் அனைத்து கல்வி உபகரணங்களும் வந்துவிடும்; அதன்பின், மாணவர்களுக்கு வழங்கப்படும். அனைத்து பள்ளி ஆசிரியர்களும் காலையில் பிரார்த்தனை கூட்டம் துவங்குவதற்கு, 10 நிமிடம் முன்பாக வகுப்புகளுக்கு வர வேண்டும்; மாணவர்களை ஒழுங்குபடுத்தி வகுப்பறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு எந்த வாகனத்தில் வருகின்றனர் என்பது குறித்து, பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும்; ஆபத்து விளைவிக்கும் வகையில் மாணவர்கள் வருவதை தடுக்க வேண்டும். மழைக்காலம் நெருங்குவதால், பள்ளி சுற்றுப்பகுதிகளில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்; மின் கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகளை வெட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் மரங்களை வேருடன் வெட்டக்கூடாது; மீறி வெட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். பயன்பாடு இல்லாத பழைய கட்டடங்களை அனுமதி பெற்று, இடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். பள்ளியில் வகுப்பு நேரங் களில் ஆசிரியர்கள் மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது; மொபைல் போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் பிரச்னைகளை கண்டறிய, அவ்வப்போது, "கவுன்சிலிங்" நடத்த வேண்டும். நல்லொழுக்க புத்தகங்கள் வழங்கி, மாணவர்களை படிக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்வதுடன், சிந்திக்கும் திறன் மேம்படும், என்றார். « முதல் பக்கம்
புதிய உணவு வகைகள்
பள்ளி சத்துணவு திட்டத்தில் பலவகை உணவுகள்
செர்ப்பு
சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குவதற்காக, சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், 1984ம் ஆண்டு முதல், 10 முதல், 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தற்போது இரண்டு முதல், ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும், 365 நாட்களும் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், அதாவது, 220 நாட்களும் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14 லட்சம் மாணவர்கள்; அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த, 11.30 லட்சம் குழந்தைகள்; முதியோர் மற்றும் ஓய்வூதியப் பயனாளிகள், 18 ஆயிரம் பேர் என, மொத்தம், 61.62 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தினசரி, சாதம், சாம்பார் வகை உணவுகள் அளிப்பதால், மாணவர்கள் சலிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், தினமும் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து வழங்கும் விதமாக, சத்துணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "செப்" தாமுவுடன் இணைந்து, புதிய, "மெனு" தயாரிக்கும் முயற்சியில், சத்துணவுத் திட்ட அதிகாரிகள் இறங்கினர். மேலும், இது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சிப் பட்டறை, சென்னை சைதாபேட்டை மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் நடந்தது. இதைத் துவங்கி வைத்த அமைச்சர், எம்.சி.சம்பத், "தற்போது சோதனை ரீதியாக துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் செயல்பாட்டிற்கு வரும்" என அறிவித்திருந்தார். தொடர்ந்து, திருச்சியில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டபோது, மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. புதிய திட்டப்படி, ஒரு நாள் வழக்கம் போல் சாதம், சாம்பார், முட்டை இருக்கும். மற்ற நாட்களில் பல்வேறு வகை சாதங்கள் வழங்கலாம் என்றும், தினசரி வழங்கப்படும் அவித்த முட்டையை மாற்றி, பெப்பர் முட்டை உட்பட பல்வேறு விதமாக வழங்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி வடிவம் பெறப்பட்டு, அரசிடம் முறையான அனுமதியை, சத்துணவுத் திட்டத் துறையை உள்ளடக்கிய, சமூக நலத்துறை கோரி இருந்தது. இதுகுறித்த விளக்கத்தை சத்துணவுத் திட்டத் துறை, "செப்" தாமுவின் ஆலோசனை பெற்று அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செலவினங்கள் குறித்து நிதித் துறையும் திருப்தியடைந்து விட்டதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த மாதம், 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது வழங்கும் உணவு தினம் - சாதம், சாம்பார், அவித்த முட்டை செவ்வாய் - பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல் வெள்ளி - உருளைக்கிழங்கு கூட்டு புதிய மதிய உணவு முறை * வழக்கம் போல் சாதம், சாம்பார் ஒரு நாள். * மற்ற நாட்களில், பிரைடு ரைஸ், லெமன் சாதம், கருவேப்பில்லை அல்லது கீரை சாதம், தக்காளி சாதம் என, 13 விதமான உணவுகளில், தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது. * அவித்த முட்டை ஒரு நாளும், மற்ற நாட்களில், பெப்பர் முட்டை, மசாலா முட்டை, பருப்பு முட்டை, முட்டைப் பொரியல் என, உணவு வகைக்கு ஏற்ப மாற்றித் தரப்பட உள்ளது. * உருளை மசாலா, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் என, இரண்டு நாட்கள் தர உள்ளனர்.
SGTr PAY problem
மூன்று ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து வழக்குப் பதிவு செய்த விபரம். ஆறாவது ஊதியக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை ஏற்ப்படுத்தினர்.ஊதியத்தை உயர்த்தி தருகிறோம் என்று கூறி பெற்று வந்த ஊதியத்தை பறித்துக்கொண்டனர். ஐந்தாவது ஊதியக்குழு தொடந்து இருந்தாலே தற்போது பெரும் ஊதியத்தை விட அதிகம் பெற்று இருப்போம்.ஐந்தாவது ஊதிக்குழுவில் அடிப்படை ஊதியம் Rs3050 பெற்று வந்த நம்மைவிட கல்வித்தகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிதவர்களுக்குகூடRs. 9300 -34800+4200 முதல் 4600 வரை தர ஊதியம் வழங்கி உள்ளனர். மேலும்,அரசாணை எண் 23 ல் Rs. 750 தனி ஊதியமாக ஒதுக்கப்பட்டது. அதில் அமைச்சு பணியாளர்களுக்கும் இவர்களுக்கும் ஊதிய முரண்பாடு ஏற்படும் என்று ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறியுள்ளனர்.நம்மைவிட அவர்களுடைய கல்வித்தகுதி குறைவு.மேலும் சுமார் 1,16,000 க்கும் மேற்ப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்தால், பொருள் செலவு அதிகமாகும் என்று தவறான தகவல்களை கூறியுள்ளனர். மருத்துவ துறையில் புதிதாக நியமனம் பெரும் மருத்துவர் கிராமப்புறங்களில் கண்டிப்பாக சிறிது காலமாவது பணியாற்ற வேண்டும் என்றும் அதற்கு ஊக்க ஊதியமும் வழங்கி வருகின்றனர்.ஆனால்,இடைநிலை ஆசிரியர்கள் கரடு முரடான, பாதைகளே இல்லாத இடங்களிலும் ,மலைப்பகுதிகளிலும் தன்னலம் பாராமல் வருங்கால பாரதம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக கிராமங்களில் பணிபுரிகின்றனர். ஆதலால், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் தருகின்றோம் என்று, ஒரு நபர் குழுவில் கூறியுள்ளனர்.கிராமப்புறங்களில் பணிபுரிவதற்கு மேலும் ஒரு ஊக்க ஊதியம் அரசு தான் தரவேண்டும்.இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத்தான் நமது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து உயர் நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நமது இயக்கமும் மூன்று நபர் ஊதியக்குழுவிடம் நமது ஊதிய முரண்பாட்டை நேரில் வலியுறுத்தி உள்ளோம். இதற்கு தற்போது செலவினத்தின் செயலாளர் உயர்திரு.S .கிருஷ்ணன் I.A.S அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற வழக்கு எண்MP.(MD) No2 of 2012 in W.P.(MD)9218 of 2012. ற்கு உயர் நீதிமன்றத்திற்கு பதில் அளித்துள்ளார்.அவற்றில் நமது ஊதியம் 5200 - 20200 + 2800 இருந்து 9300 -34800 +4200 வழங்குமாறு வழக்கு பதிவு செய்துள்ளீர்கள். அதற்கு அரசு பரிசீலித்து உரிய அரசாணை பிறப்பிக்கும் என்று சாதகமான பதில் அளித்துள்ளார்.விரைவில், நமக்கு நல்ல ஒரு முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் .
SGT pAY problem
மூன்று ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . வழக்கு எண்:MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012.Date:11.07.2012 இவ்வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ . 9300 - 34800 + 4200(GP) என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிந்துரை செய்வோம் என பதில்.
Thursday, August 16, 2012
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு
பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு முடிவுகள் இன்று (17.08.2012) மாலை வெளியிடப்படுகிறது கடந்த ஜூன், ஜூலையில் 2012 நடந்த எஸ்எஸ்எல்சி, ஓஎஸ்எல்சி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 29 மற்றும் 30&ம் தேதிகளில், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு எப்போது?
தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு தகுதித்தேர்வும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளை ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால், அனைவரும் தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த தகுதித்தேர்வு மூலமாக சுமார் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 5 ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது, 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும். பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், முழுக்க முழுக்க தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரிய நியமனம், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இருந்து பதிவுமூப்பு மூலமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியிடம் கேட்டபோது, ‘தகுதித்தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியாகும்’ என்றார். தகுதித்தேர்வு மிகவும் கடினமான இருந்ததாகவும் விடை அளிக்க நேரம் போதாது என்றும் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுமே புகார் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில், தகுதித்தேர்வில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், 10 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றும் வெவ்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏறத்தாழ 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், தகுதித்தேர்வில் தேவையான அளவுக்கு தேர்ச்சி வரவில்லை என்றால் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா? டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள தகுதித்தேர்வு மூலம் எஞ்சிய காலி இடங்கள் நிரப்பப்படுமா? என்று தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) உத்தரவின்படி, தகுதித்தேர்வில், எஸ்.சி., எஸ்.டி. பி.சி., எம்.பி.சி. போன்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண் குறைக்கலாம். எனவே, போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படலாம். அதற்கு மேல் குறைத்தால் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கருதுகிறது.
Annamalai University PG result
Welcome to Annamalai University http://www.annamalaiuniversity.ac.in/results/index.php (UC Browser)
வி.ஏ.ஓ பணிக்கு செப்டம்பர் 30ல் போட்டித் தேர்வு
: வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல் போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், இந்த தேர்வுக்குத் தான், அதிகபட்ச தேர்வர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு, 534 பேர் என்ற அளவில், கடும் போட்டி எழுந்துள்ளது. "தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடைசி நாளான, 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாதவர்கள், 14ம் தேதிக்குள் செலுத்தலாம்" என, தேர்வாணையம் தெரிவித்திருந்தது. கடைசி நாளில் விண்ணப்பித்தவர்கள் அனைவரும், கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கும் வகையில், 18ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, தேர்வாணையம் அறிவித்துள்ளது.