காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கான, குரூப்- 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். இதற்காக தமிழகம் முழுவதும் 114 மையங்களும், 3,456 தேர்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும், 290 தேர்வுக் கூடங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது. நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தணிக்கை உதவி ஆய்வாளர் உட்பட, 3,631 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-2 தேர்வு, டி.என்.பி. எஸ்.சி.,யால் அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்த, 6.4 லட்சம் பேரும் எழுதுவதற்காக, 114 மையங்களும், 3,456 தேர்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டன. இதில், சென்னையில் மட்டும், 290 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன. காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வில், பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு அல்லது பொது ஆங்கிலம் மையப் படமாக இருந்தது. தேர்வில் முறைகேடு ஏதும் நிகழாமல் இருக்க, அனைத்து தேர்வுக்கூடங்களும் வீடியோ கேமரா மற்றும் வெப் கேமராவால் பதிவு செய்யப்பட்டன. மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்க, 400 பறக்கும் படைகள் பணியில் ஈடுபட்டன.
Sunday, August 12, 2012
Tamilnadu Postal Circle Recruitment 2012 – 621 Postal & Sorting Asst Vacancies Tamilnadu Postal Circle Recruitment 2012 – 621 Postal & Sorting Asst Vacancies:
Tamilnadu Postal Circle has issued notification for recruitment of 621 Postal Assistant and Sorting Assistant Vacancies. Eligible candidates may apply through prescribed application format on or before 01-10-2012. Other details like age limit, educational qualification, application fee details, selection process and how to apply are given below… Tamilnadu Postal Circle Vacancy Details: Total No of Vacancies: 621 Names of Posts: 1. Postal Assistant: 415 posts 2. Sorting Assistant: 88 posts 3. Postal Assistant (Returned Letter Office): 01 post 4. Postal Assistant (Mail Motor Service): 03 posts 5. Postal Assistant (Foreign Post Organization): 05 posts 6. Postal Assistant: (SBCO): 109 Age Limit: Candidate age must be between 18 to 27 years as on 01-10-2012. (Age relaxations will be extended as per rules). Educational Qualification: Candidate must possess 10+2 Standard or 12th Class pass with at least 60 % marks and above from any recognized University with English as a compulsory subject and should have studied local language of the State or Union Teritory of the Postal Circle concerned or Hindi as Subject at least in Matriculation or equivalent. Application Fee Details: Applicants need to pay Examination Fee of Rs. 200/- (No fee for SC/ST/PH and Women candidates) and it should be deposited in a Post Office of the circle and obtain ACG-67/UCR receipt, Rs. 50/- for Application form and it is available at all All Head Post offices and identified Post offices in the Circles from 11-08-2012 to 25-09-2012. Selection Procedure: Candidates will be selected on the basis of performance in Aptitude Test, Typing Test/Computer Test. How to Apply: Eligible Candidates may apply through prescribed application format available at all Head Post offices and identified Post offices in the Circles. Dully filled application form along with Copies of relevant certificates and original receipt of ACG-67/UCR issued by the identified Post Office of this Circle towards payment of Examination fee have to be sent to “Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi-1100010″ on or before 01-10-2012 through Speed Post/Registered Post of India Post only. Important Dates: Last Date for Sale of Application Closes: 25-09-2012 Last Date for Receipt of Application: 01-10-2012 Last Date for Receipt of Application (far flung areas): 11-10-2012 For more details like vacancy distributio
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புதிய வலைதளம
் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
கடலூரில் குரூப்,2 தேர்வுக்கான பதில்கள் கையால் எழுதப்பட்டு :
தேர்வு முடிந்த அரை மணி நேரத்திற்குள் கையால் எழுதப்பட்ட கேள்வி பதில்கள் ஜெராக்ஸ் தாள்கள் கடலூர் மைதானத்தில் கிடைத்ததால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்,2 கேள்வி பதில் ஜெராக்ஸ் தாள்களுடன் கடலூரில் நேற்று இரவு 7 மணியளவில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ரமேஷ்(26) என்பவர் ஆவேசமாக வந்தார். குரூப் 2 தேர்வு எழுதுவற்கு முன்னதாகவே பணத்திற்கு கேள்வி பதில்களை விற்றுவிட்டார்கள். டி.என்.பி.எஸ்.சி யை நம்பி கடுமையாக உழைத்து படித்து வந்த நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று கோபத்தோடு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, நான் எம்.காம் பட்டதாரி, குரூப் 2 தேர்வுக்காக இரண்டு ஆண்டுகளாக படித்துவந்தேன். கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் நேற்று தேர்வு எழுதினேன். அதன் பின்னர் பண்ருட்டியை சேர்ந்த நண்பர் முருகனுடன் மஞ்சக்குப்பம் மைதானத்தின் வழியாக பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றேன். அப்போது மைதானத்தின் நடுவில் லைட் கம்பத்தின் அருகில் கையால் எழுதப்பட்ட குரூப்,2 கேள்வி பதில் ஜெராக்ஸ் தாள்கள் கிடந்தன. அதில் குரூப் 2 வில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் அப்படியே இருந்தன, அதில் விடைகளும் அளிக்கப்பட்டிருந்தன. பணத்திற்காக குரூப்,2 கேள்வி தாள்கள் விற்கப்பட்டுள்ள மோசடித்தனம் நடந்துள்ளது. இதனால் உண்மையாக உழைத்து தேர்வு எழுதியவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. இந்த மோசடிக்கு தேர்வாணைய துறைத் தலைவர் பதில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார். இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒலிம்பிக் நிறைவு விழா: மேரி கோம் தேசிய கொடியை ஏந்தி வருகிறார்
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் தேசியக் கொடியினை, குத்துச்சண்டை வீராங்கணை மேரிகோம், ஏந்தி வலம் வர இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி கோலகலமாக தொடங்கிய லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு விழாவில் பிரபல பாப் பாடகி மெலானியின் இசை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அதனைத்தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் வீரர்கள் தேசியக்கொடியுடன் அணிவகுக்க இருக்கின்றனர். இதில் இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை மேரிகோம் தேசியக்கொடியினை ஏந்தி வலம் வருகிறார்
இந்தியாவுக்கு வெண்கலம
் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலம் வென்றார். ரெபஷேஜ் முறையில் மூன்று புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றார்.காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்ற போதிலும் வெண்கலம் வென்றார் யோகேஷ்வர். ரஷ்ய வீரர் குடுகோவ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால் யோகேஷ்வருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. லண்டன் ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 1 வெள்ளி , நான்கு வெண்கலம் வென்றுள்ளது குறுப்பிடத்தக்கது.
கல்லூரிகளிலும் உதவித்தொகை முறைகேடு: விசாரிக்க வலியுறுத்த ல
்
கல்லூரிகளிலும் நடந்துள்ள கல்வி உதவித்தொகை முறைகேடுகள் குறித்து, தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தமிழக செயலாளர் சண்முகராஜா கூறினார். ராமேஸ்வரத்தில் அவர் கூறிதாவது: தமிழக கல்லூரிகளில் "ராகிங்&' நடப்பதை தவிர்க்க மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சென்னை, கோவையில் மாணவர்கள், சினிமா நடிகர்களை அழைத்து வந்து அழகிப்போட்டி, விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற கலாசார சீரழிவுகளை தடுக்க வேண்டும். கல்லூரிகளுக்கு பொதுவான பாடத்திட்டம் கொண்டு வருவதுடன், கல்வி கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். கல்லூரிகளிலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளது.மேலும் விளையாட்டு, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., போன்றவற்றிலும் முறைகேடுகள் நடந்துள்ளதால், தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதைவிட, தரமான கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
2ம் கட்ட இன்ஜி. கவுன்சிலிங்: 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம
் பொறியியல் சேர்க்கை, இரண்டாவது கட்ட கலந்தாய்வுக்கு, 16ம் தேதி வரை மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலை நடத்தி வரும் பொறியியல் சேர்க்கையில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இதனால், இரண்டாவது கட்ட கலந்தாய்வை நடத்தி, மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டது. பல்கலையில், 16ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவினர் 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர் 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பத்தைப் பெறலாம். உரிய சான்றிதழ்களுடன், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 16ம் தேதி மாலை 5:30க்குள், அண்ணா பல்கலையில் சமர்ப்பிக்க வேண்டும். இவர்களுக்கான கலந்தாய்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.
ஆசிரியர் கவுன்சிலிங்
: வீடியோ கேமராவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் கவுன்சிலிங் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்தால், முறைகேடுகளை தவிர்க்க முடியும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பல லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இட மாறுதல் பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆண்டு தோறும் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. இதில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில் கவுன்சிலிங் நடப்பதில்லை. இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் இல்லாத நிலையில் பல மாவட்டங்களில் இருந்து, மாவட்ட மாறுதலுக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. சில கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் பெயரால் கவுன்சிலிங்களில் முறைகேடு செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். காலிப்பணியிடங்களை மறைத்து தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது. இதில் பல லட்சம் ரூபாய் வருமானம் இருப்பதால், ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம் தொடர்ந்து வருகிறது. இதனை தவிர்க்க ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு நடக்கும் கவுன்சிலிங் போல் ஆன் லைன் வசதி செய்ய வேண்டும். இடமாறுதல் உத்தரவுகளை கம்ப்யூட்டர் மூலமாக உடனடியாக வழங்க வேண்டும். இது போன்ற நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடைப்பிடித்தால் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படும். இதனை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
டி.இ.டி. தகுதி மதிப்பெண்: 40 சதவீதமாக குறைக்க திட்டம்
டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம், முதல் முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி., ), 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில், "கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்தது; நேரமும் போதவில்லை. இதனால், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை&' என, தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.இதை நிரூபிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் அமைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 10 சதவீத தேர்ச்சியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எதிர்பார்த்த நிலையில், வெறும், 2 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தேர்வு எழுதிய, 5.5 லட்சம் பேரில், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேறியுள்ளனர். டி.இ.டி., தேர்வு மூலம், 7,194 இடைநிலை ஆசிரியர்; 18 ஆயிரத்து, 987 பட்டதாரி ஆசிரியர் என, 26 ஆயிரத்து, 181 ஆசிரியரை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது, டி.ஆர்.பி.,க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு, குறைந்தபட்சம் ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேரை அழைக்க வேண்டும். அந்த வகையில், 78 ஆயிரம் பேர் அழைக்கப்பட வேண்டும். ஆனால், தேர்வு செய்ய உள்ள மொத்த எண்ணிக்கையில், பாதி அளவிற்குக் கூட ஆசிரியர் தேர்ச்சி பெறாததால், வேறு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே வெளியிட்ட விதிமுறைப்படி, 150 மதிப்பெண்களில், தகுதி மதிப்பெண்களாக, குறைந்தபட்சம், 60 சதவீதம் பெற வேண்டும். அதன்படி, 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், மிகக் குறைவானவர்கள் மட்டுமே இம்மதிப்பெண்களை பெற்றிருப்பதால், தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்; அதை மனதில் கொண்டு, உரிய முடிவை எடுப்போம். இந்தச் சலுகை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்புடன், உரிய முடிவு வெளியிடப்படும்.தேர்வு முடிவில், வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தேர்வு முடிவை வெளியிட முடியாது. இது குறித்து, ஓரிரு நாளில் முடிவெடுத்து, 20ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும். எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவினருக்கு, கூடுதல் சலுகை அளிப்பது குறித்தும், ஆலோசனை நடக்கிறது.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி குறைவாக உள்ளதை காரணம் காட்டி, தகுதி மதிப்பெண்களை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டும் குறைத்து முடிவெடுத்தால், அடுத்த தேர்வுக்கும், இதே தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். இதற்கு, டி.ஆர்.பி., சம்மதிக்காத பட்சத்தில், தேர்வர்கள், கோர்ட்டை நாட வேண்டிய நிலை உருவாகும். எனவே, நடந்து முடிந்த தேர்வு உட்பட, இனி நடத்தப்போகும் தேர்வுகளுக்கும், ஒரே தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், நடந்து முடிந்த தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஒரு தேர்வை நடத்த வேண்டும். இந்த இரண்டில், ஏதாவது ஒரு முடிவை எடுக்காவிட்டால், டி.ஆர்.பி.,க்கு சிக்கல் தான்.
சர்வதேச இளைஞர்கள் தினம
் இன்று- ஒரு நாட்டின் எதிர்காலமே, இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான், நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இத்தகைய வலிமைபடைத்த இளைஞர்களை, ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, ஆக., 12ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா., சபையால் 1999ல் இத்தினம் தொடங்கப்பட்டது. 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை, இளைஞர்கள் என ஐ.நா., வரையறுத்துள்ளது. உலக மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கு பேர் இளைஞர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை, ஒவ்வொரு அரசும் இளைஞர்களுக்கு சரியாக ஏற்படுத்தித் தரவேண்டும். இன்று ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் வளர்ச்சிக்கு, இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. ராணுவம், விளையாட்டு, தொழில்நுட்பம், வியாபாரம் என அனைத்து துறைகளிலும் இவர்கள் சாதித்து வருகின்றனர். இளைஞர்களில், சிலர் ஆல்கஹால், புகையிலை மற்றும் போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். சமீப காலமாக, பள்ளி மாணவர்களும் இப்பழக்கத்தில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இளைஞர்களே சிந்தித்து பாருங்கள், போதைப்பழக்கத்தால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் பாசமிகு குடும்பம், இந்த சமூகம் பாதிக்கப்படுகிறது. எனவே, இளைஞர்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து, வீடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ இந்நாளில் உறுதி
Saturday, August 11, 2012
ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி!
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். மொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக தமிழக அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்வின் அடிப்படையில் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1,072 மையங்களில் இந்தத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தாள்களையும் எழுதினர். ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் வடிவில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு விடையளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். இந்த இரண்டு விடைத்தாள்களும் மிகவும் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். கணிதப் பாட வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை என்றும் பரவலாகப் புகார் தெரிவித்தனர். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்த பெறப்பட்ட ஆட்சேபங்கள் இறுதிசெய்யப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. 5 சதவீதம் கூட தேர்ச்சியில்லை: விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பிறகு, இரண்டு தாள்களையும் சேர்த்து சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய சராசரியான 5 சதவீத அளவுக்குக் கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. தள்ளிப்போகும்?: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை, தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரிசெய்ய அவகாசம் தேவைப்படுவதாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
லணடன் ஒலிம்பிக் : மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம
லணடன் ஒலிம்பிக் : மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்
லணடன் ஒலிம்பிக் போட்டியின் இன்று நடந்த மல்யுத்தம் 60 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் யோகாஷ்வர் தத் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.ரெப்பசேஜ் மூன்றாவது சுற்றில் வடகொரிய வீரரை வீழ்த்தி அவர் வெற்றி பெற்றார். லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் 5 பதக்கம் இதுவாகும்.
என்சிஇஆர்டி வழங்கும் உதவித்தொகை- என்சி
NCERTி, நேஷனல் டேலன்ட் சர்ச் எக்ஸாமினேஷன் 2013 என்ற பெயரில் ஒரு உதவித் தொகையை வழங்குகிறது. பெற தகுதியானவர்கள் - அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் நடத்தப்படும் 10ம் வகுப்பு நிலை 1 தேர்வை எழுத தகுதியுடையவர்கள் இதைப் பெறலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய http://www.ncert.nic.in/programmes/talent_exam/pdf_files/application_form.pdf என்ற இணையதளம் செல்க. நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். தேர்வுமுறை 2 நிலைகளிலான தேர்வுமுறைகள் உள்ளன. நிலை 1 முறையில், எழுத்துத் தேர்வு அடிப்படையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் நடைபெறும். நிலை 1ல் தேர்ச்சி பெற்றவர்கள், என்சிஇஆர்டி, தேசிய அளவில் நடத்தும் நிலை 2 தேர்வை எழுத தகுதியுடையவர்கள். உதவித்தொகை தேர்வு நடத்தப்பட்ட அடிப்படையில், 10ம் வகுப்பு தேர்வை எழுதவுள்ள, ஒவ்வொரு குழுவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் 1000 உதவித்தொகைகள் வழங்கப்படும். இந்த உதவித்தொகையின் மதிப்பு மாதம் ரூ.500 என்ற அளவில் இருக்கும். விண்ணப்பிக்கும் இறுதிநாள் - 31 ஆகஸ்ட் நிலை 1 தேர்வு மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் அந்தமான்-நிகோபர் தீவுகளில் நவம்பர் 17, 2012 அன்றும், இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 18, 2012 அன்றும் நடைபெறும். நிலை 2 தேர்வு (தேசிய அளவில்) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 12 மே, 2013 அன்று நடைபெறும். இவை குறித்த விரிவான விபரங்களை அறிய www.ncert.nic. என்ற இணையதளம் செல்க
பெட்ரோல் விலை ரூ.3 உயர்கிறது: எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை
பெட்ரோல் விலை ரூ.3 உயர்கிறது: எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை நடப்பு நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிதி இழப்பை சரிகட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி பதவியேற்றார்
இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி பதவியேற்றார் புதுடெல்லி, ஆக.11- இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரிக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.11.08.2012 1.36 PM