பி.எட்.,- எம்.எட்., தேர்வு முடிவுகள் வெளியீபி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மாணவ, மாணவிகள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகுமார் வெளியிட்ட அறிவிப்பு: பல்கலையின் இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), பல்கலை இணையதளத்தில் (http://www.tnteu.in) வெளியிடப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகத் தேர்ச்சிச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில், இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும்.மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், அதற்குரிய தனித்தனி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணங்களை செலுத்தி, 24ம் தேதிக்குள், "தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை௫&' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
Saturday, August 11, 2012
+2 Ezam Xerox
பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற இணையதளத்தில் விண்ணப்பம் பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார். பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியோர், விரும்பும் பாடத்தில் மறுகூட்டல் செய்யவோ, விடைத்தாள் நகல் பெறவோ விரும்பினால், இனி எந்த கல்வித் துறை அலுவலகத்திற்கும் செல்ல வேண்டாம்; இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல், விடைத்தாள் நகல் என, இரண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் கேட்கும் மாணவர், அதே பாடத்திற்கு, மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். 13ம் தேதி முதல், 16ம் தேதி வரை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலைப் பொறுத்தவரை, மொழிப் பாடங்களுக்கு, 550 ரூபாய்; இதர பாடங்களுக்கு, 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலைப் பொறுத்தவரை, மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்திற்கு தலா, 305 ரூபாய்; இதர பாடங்களுக்கு, 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு வசுந்தரா தெரிவித்துள்ளார். தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின், விண்ணப்ப எண்களுடன் கூடிய ஒப்புகைச்சீட்டு மற்றும் வங்கி செலுத்துச் சீட்டு ஆகியவற்றை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த, "செலானை&' கொண்டு, ஐ.ஓ.பி.,யின் ஏதாவது ஒருகிளையில், கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
Quaterly Exam
தேர்வுத்துறை மதிப்பீடு: காலாண்டு விடைத்தாளை ஆய்வு செய்ய திட்டம்-11-08-2012 சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள், தேர்வுத் துறை அனுப்பும் கேள்வித்தாள் அடிப்படையில் நடக்க இருப்பதால், விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, பொதுத் தேர்வை மட்டுமல்லாமல், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளையும், தேர்வுத் துறையே நடத்துகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து, காலாண்டுத் தேர்வுகள் நடக்கின்றன. 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் துவங்குகின்றன.தேர்வுக்காக, பாட வாரியாக கேள்விகள் தயாரிக்கும் பணி, தேர்வுத் துறையில் நடந்து வருகிறது. கேள்விகளை, "சிடி&' யில் பதிவு செய்து, மாவட்ட வாரியாக, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை விரைவில் அனுப்ப உள்ளது. "சிடி&' யில் இருந்து, தேவையான கேள்வித்தாள்களை, "பிரின்ட்&' எடுத்து, மாணவ, மாணவியருக்கு வினியோகம் செய்ய, பள்ளி தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. விடைத்தாள்களை, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே மதிப்பீடு செய்வர். எனினும், தேர்வுத்துறை வழங்கும் கேள்வித்தாள் அடிப்படையில், மாணவ, மாணவியர் எப்படி தேர்வு எழுதியிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள, விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தேர்வுத்துறை வட்டாரங்கள் இதுகுறித்து கூறியதாவது:பொதுத்தேர்வு எப்படி நடக்குமோ, அதே நடைமுறையில், காலாண்டுத் தேர்வும், அரையாண்டுத் தேர்வும் நடக்கும். வகுப்புகளில், ஆசிரியர் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும், பொதுத்தேர்வில், சிவப்பு மற்றும் பச்சை நிற, "ஸ்கெட்ச்&' எழுது கருவிகளை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள், காலாண்டுத் தேர்வில் இருந்தே எடுக்கப்படும்.இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவி
Friday, August 10, 2012
SSLC Result
10ம் வகுப்பு உடனடித்தேர்வு: அடுத்த வாரம் ரிசல்ட்-11-08-2012 சென்னை: பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள், அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உடனடித் தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். பிளஸ் 1 சேர்க்கை, முடியும் நிலையை எட்டி இருப்பதால், 10ம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், பிளஸ் 1 வகுப்புகளில் சேர வசதியாக, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ண்டு பொறியியல் சேர்க்கை: 49,000 இடங்கள் காலி-10-08-
2ம் ஆண்டு பொறியியல் சேர்க்கை: 49,000 இடங்கள் காலி-10-08-2012 காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்த பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. இதில், 49 ஆயிரத்து 664 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக், பி.எஸ்.சி., முடித்தவர்களுக்கான இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கலந்தாய்வு, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஜூலை 18ம் தேதி துவங்கியது. 27 நாட்கள் நடந்த கவுன்சிலிங் நேற்று முடிவடைந்தது. இந்தக் கலந்தாய்விற்கு மொத்தம் 28,350 விண்ணப்பங்கள் வந்தன. 28,102 விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 21,123 ஆண்கள், 3290 பெண்கள் என 24,413 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டன. சிவில் 4,456, மெக்கானிக்கல் 6,907, எலக்ட்ரிக்கல், 12,567, கெமிக்கல் 191, டெக்ஸ்டைல் 207, பி.எஸ்.சி., 77, லெதர் 4, பிரிண்டிங் 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மொத்த கல்லூரிகள் மூலம் 74,077 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. கவுன்சிலிங் முடிந்த நிலையில் இடஒதுக்கீடு போக, 49,664 இடங்கள் காலியாக உள்ளன. இத்தகவலை இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளரும், அழகப்பா இன்ஜி., கல்லூரி முதல்வருமான மாலா தெரிவித்தா
Free Bicycle for ITI students
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதன் தொடர்ச்சியாக, தற்போது அரசு ஐடிஐ -களில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசால் நடத்தப்படும் ஐடிஐ கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே பயின்று வருகின்றனர். அவர்கள் தங்களின் இல்லங்களில் இருந்து கல்வி நிறுவனத்திற்கு சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனை கருத்தில்கொண்டு, கல்வி நிறுவனத்திற்கான அவர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வண்ணம், இலவச சைக்கிள்கள் வழங்கப்படும். இதற்கென, அரசின் சார்பில் சுமார் ரூ.6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு ஐடிஐ -களில் படித்துவரும் 21925 மாணவ-மாணவிகள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, August 09, 2012
VAO Exam today Laat date
: வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நேற்று வரை, 9.2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல் போட்டித் தேர்வை டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இதற்கு, கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. இதற்கான கடைசி நாளான இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடியும் நிலையில், நேற்று மாலை நிலவரப்படி, 9.20 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. காலியாக உள்ள பணியிடங்கள் 1,045.இன்று, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பர்; இதனால், மொத்த விண்ணப்பதாரர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டும் என, தேர்வாணையம் எதிர்பார்க்கிறது. இணையதளத்தில் விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தை செலுத்தாதவர்கள் மட்டும், 14ம் தேதி வரை தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.நகராட்சி ஆணையர், சார் - பதிவாளர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப்௨ தேர்வு, 12ம் தேதி காலை, 10 மணி முதல், பிற்பகல், 1 மணி வரை, 114 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வை, 6.4 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். தேர்வர்களுக்கான, "ஹால் டிக்கெட்&' ஏற்கனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இன்றைக்குள், "ஹால் டிக்கெட்&' எடுக்க முடியாத தேர்வர், தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான உரிய ஆதாரங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காட்டி, "ஹால் டிக்கெட்&' பெற்றுக் கொள்ளலாம். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்களாக இருந்தால், தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என, தேர்வாணையம் நேற்று அறிவித்த
TET Exam
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வரும் வார இறுதிக்குள் வெளியிடப்பட வாய்ப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முக்கிய விடைகள் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து ஏராளமானோர் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் அந்தந்த பாட நிபுணர்களை வைத்து ஆராயப்பட்டது.மொத்தம் 150 முக்கிய விடைகளில் 4 விடைகளில் மட்டும் மாற்றம் இருக்கும். . ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான முக்கிய விடைகள் தொடர்பாக பெறப்பட்ட ஆட்சேப மனுக்கள் திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட உள்ளன. இரண்டு தாள்களுக்கும் முக்கிய விடைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு, அரசுடன் ஆலோசித்து வரும் வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தகுதி மதிப்பெண் குறைப்பு? ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெறாத சூழல் எழுந்தால், சில பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டு தாள்களையும் எழுதினர்.
TN Govt scholarship
தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 470 நாள். 09.08.2012 பதிவிறக்கம் செய்ய... http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr09Aug12/pr090812_470.pdf (UC Browser)
Retirement Age Increase
மருத்துவ பல்கலை துணைவேந்தர் ஓய்வு வயது 70 ஆக உயர்வு-09-08-2012l சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை மற்றும் உடற்கல்வி, விளையாட்டு பல்கலை துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 70 ஆக உயர்த்தி, கவர்னர் ரோசையா உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர் பதவியில் நியமிக்கப்படுவோர், பதவி ஏற்கும் நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயதில், அவரது பதவி முடியும் வகையில் சட்டம் இருந்தது. இந்நிலையில், உயர்கல்வித் துறையின் சார்பில் இயங்கும், பாரதியார், பாரதிதாசன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி பல்கலை உள்ளிட்ட ஒன்பது பல்கலை துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 65ல் இருந்து, 70 ஆக உயர்த்தி, கவர்னர் ரோசையா, கடந்த மாதம், அவசரச் சட்டம் பிறப்பித்தார். தற்போது, சுகாதாரத் துறை சார்பில் இயங்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் செயல்படும், உடற்கல்வி, விளையாட்டு பல்கலை ஆகியவற்றின் துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயதையும், 65ல் இருந்து 70 ஆக உயர்த்தி, கவர்னர் ரோசையா நேற்று உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசிதழில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, August 08, 2012
TN Govt Holiday
தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை-09-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி மாதம், அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தை கணக்கிட்டு, அடுத்த மாதம், 8ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையொட்டி, அரசு விடுமுறையும் அடுத்த மாதம், 8ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, கிருஷ்ண ஜெயந்தி இம்மாதம், 9ம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், அரசு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, "தினமலர்&' நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை மாற்றி, செப்டம்பர், 8ம் தேதிக்கு பதில், இன்று, 9ம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என, தனது வாழ்த்துச் செய்தியில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்
P.ET Teachers
உடற்கல்வி ஆசிரியர் தேர்வு: முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் குளறுபடி?-09-08-2012 எழுத்தின் அளவு : Print Email தேனி: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நடந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வில், முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், பதவி மூப்பு அடிப்படையில் 1,023 உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிட்டது. 1:5 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் முன்னாள் ராணுவத்தினருக்கு, ஐந்து சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆறு நாட்களுக்கு முன், இணைய தளத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியானது. இந்த பட்டியலை பார்த்த, முன்னாள் ராணுவத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் கோட்டாவில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டியல் வெளியானது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒரே மாவட்டத்தில் 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதும், இவர்களின் பிறந்த தேதியை வைத்து பார்க்கும் போதும், தேர்வு செய்யப்பட்டவர்கள் முன்னாள் ராணுவத்தினராக இருக்க வாய்பில்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விசாரித்த போது, தங்கள் மாவட்டத்தில் 4 பேர் பேர் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் கோட்டாவில் உள்ளதாக தெரிவித்தனர். உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் முன்னாள் ராணுவத்தினர், இடஒதுக்கீட்டில், நடந்த குளறுபடி குறித்து ஆசிரியர் தேர்வு வாரியமும், வேலைவாய்ப்பு அலுவலகமும் தெளிவுபடுத்த வேண்டும், என பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ நல சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்து
Vice President
துணை ஜனாதிபதி அன்சாரி வருகிற 11 ந்தேதி பதவிஏற்று கொள்கிறார் புதுடெல்லி ஆக, 8- துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஹமீத் அன்சாரி வருகிற 11-ந்தேதி சனிக்கிழமை பதவி ஏற்றுக் கொள்கிறார். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரிக்கு, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்
AGNI
அக்னி-2 அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணை நாளை பரிசோதனை புதுடெல்லி, ஆக.8- ஒடிசா மாநிலம் கடற்கரையோரம் உள்ள வீலர் தீவில் அக்னி-2 அணு ஆயுதங்களை ர்தாங்கி செல்லும் ஏவுகணை நாளை காலை நடைபெறுகிறது. வான்வெளியில் 2,500 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்குவதற்கான பரிசோதனை நடத்தப்படுகிறது. அக்னி-2 ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணுஆயுதங்கள் தாங்கி செல்லும் வலிமை கொண்டது. 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 17 டன் எடை கொண்டது என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
London Olympic
வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் 8-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் லண்டன் ஆக 8- லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான வட்டு எறியும் இறுதிப்போட்டி நள்ளிரவு நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய வீரர் விகாஸ் கவுடாவால் 64.79 மீட்டர் தூரமே அதிகபட்சமாக வீச முடிந்தது. இதனால் அவரால் 8-வது இடத்தை பிடிக்க முடிந்தது. விகாஸ் கவுடாவால் இதற்கு முன்பு வீசிய தூரத்தை கூட வீச முடியாமல் போனது இதன் தகுதி சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கவுடா 65.20 மீட்டர் தூரம் வீசி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Nursing counsling
செவிலியர் பட்டயப்படிப்பு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு-08-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: செவிலியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 13ம் தேதி துவங்குகிறது. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் குறிப்பிட்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில், பெண்களுக்கான இரண்டாண்டு செவிலியர் பட்டயப் படிப்பிற்கு, 2,000 இடங்கள் வரை உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது, கட்-ஆப் மதிப்பெண், கலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறியலாம்.
Tuesday, August 07, 2012
வாகன கட்டணம்: அரசே நிர்ணயிக்க பெற்றோர் வலியுறுத்தல்-08-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக, மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, பள்ளி வாகனக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். சென்னை முடிச்சூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிச் சிறுமி சுருதி, பள்ளி வாகனத்தில் இருந்த துவாரம் வழியாக கீழே விழுந்து உயிரிழந்தது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனையடுத்து, பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்ற கண்காணிப்பை தீவிரமாக்கிய தமிழக அரசு, தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் அனுமதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையையும் பாதுகாப்பு கருதி குறைத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பள்ளி வாகனக் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயித்தால் தான் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சில பெற்றோர் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதங்கள்.... வாசுதேவன், முடிச்சூர்: பள்ளி வாகனங்களின் திடீர் வேலை நிறுத்தத்தால், பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். ஜோதி, கிழக்கு தாம்பரம் : விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்களுக்கு எதிராக, கடந்த பத்து நாட்களாக அரசு அதிகாரிகள் செய்யும் பணிகளை, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் எதிர்த்து வருகின்றனர். திடீரென நேற்று அறிவித்த வேலை நிறுத்தத்தால், பள்ளிக்கு உரிய நேரத்தில் மாணவர்கள் செல்ல முடியவில்லை. இப்பிரச்னையில் அரசு தலையீட்டு, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணன், சைதாப்பேட்டை: எனது பேத்தி, தி.நகரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருகிறார். இரண்டு நாட்கள், பள்ளி ஆட்டோ ஓட்டுனர்களின் வேலை நிறுத்ததால், பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டது. எனது பேத்தியை, இரண்டு நாட்களும் வேறு ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பினேன். இதற்கு ஒரு நாளைக்கு, 100 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். வசந்தா, நங்கநல்லூர்: என் மகள் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். தினமும் பள்ளி வாகனத்தில் தான் சென்று வருவார். நேற்று அறிவிப்பின்றி, வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். நானும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், மகளை பள்ளிக்கு கொண்டு விட்டு சென்றதால், பணிக்கு காலதாமதமாக சென்றேன்