எஸ்.சி குரூப்-2: கோவையில் 52.4% பேர் ஆப்சென்ட்-05-08-2012 எழுத்தின் அளவு : Print Email கோவை: கோவையில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட 4 ஆயிரத்து 820 பேரில் 2 ஆயிரத்து 296 பேர் மட்டுமே தேர்வுக்கு வந்தனர். நிலைய தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 138 பதவிக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு நிலை௨), எழுத்து தேர்வு, கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 19 மையங்களில் தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில் 47.6% பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதமுள்ள (2,524 பேர்) 52.4% பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி., சேர்மன் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 138 பதவிகளுக்காக நடக்கும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு, 66 ஆயிரம் பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோரின் அடையாள அட்டை, ஹால் டிக்கெட் ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் அமைதியாக தேர்வு நடந்தது. தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளும், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பணி நியமனம் உண்மையான தகுதி அடிப்படையில் நடக்கும் என்றார்.
Saturday, August 04, 2012
Pg teachers
கலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது. முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, சில மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வு நடந்தது. மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், 3,100 பேர், நேற்று மாவட்ட தலை நகரங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
Twelth exam
"மறுமதிப்பீட்டில் மதிப்பெண் அதிகரித்தால் ரேங்க் கிடைக்காது" |
Tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப்,4 தேர்வுக்கான முடிவுகள் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு. › ஈரோட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (டிஎன்பிஎஸ்சி. ,) ஆர்.நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சனிக்கிழமை ... http://www.kalvisolai.com/2012/08/4-10.html?m=1 (UC Browser)