#பூலுவபட்டி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா துளிகள்
பறை இசை முழக்கத்துடன் ஆண்டுவிழா இனிதே ஆரம்பித்தது
*பள்ளி ஆண்டுவிழா பெ.ஆ.தலைவர் திரு.பட்டுலிங்கம் தலைமை வகித்தார்.தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா வரவேற்றார். திரு திருக்குமரன் முன்னிலை வகிக்க, வட்டார கல்வி அலுவலர் திரு விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
*இந்த ஆண்டு முதன்முயற்சியாக காலை 10மணிக்கு ஆரம்பித்து 4 மணிக்கு முடித்தோம்
*500 நாற்காலிகள் வாங்கியும் அரங்கம் பெற்றோர்களால் நிரம்பி வழிந்தது.
பலர் நின்று கொண்டே பார்த்தனர்.
*பள்ளியின் சார்பில் கடந்த ஆண்டே 100 அடி நீளத்துக்கு mat வாங்கப்பட்டது.இது நடனத்தில் இல்லாத 320 பேர் அமர உதவியாய் இருந்தது.
*இந்த ஆண்டு 17 கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் அமைந்திருந்ததால் சலிப்பு ஏற்படுத்தவில்லை
*1000 (ஆண்டு விழா) வண்ண நோட்டீஸ்களை பள்ளியின் இரவுக்காவலர் திரு செல்வராஜ் அவர்கள் பங்களிப்பில் வழங்கினார்
*வகுப்பிற்கு தர அடிப்படையில் மூன்று பரிசுகள் என பரிசுகள்
(RS.8000) எஸ்.டி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.
*Star of the year வகுப்பிற்கு ஒன்று வீதம் 16 சீல்டுகள் (Rs4000) திரு.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
*பெற்றோர்க்கான கயிறு இழுத்தல் போட்டியில் வென்ற 12 பெண்கள் மற்றும் 8 ஆண்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
*பிரமாண்ட மேடையாக ரூ17,000 செலவில் அமைக்கப்பட்டது.
*கலைநிகழ்ச்சியில் 300 மாணவ மாணவியர் பங்கெடுத்தனர். அனைவருக்கும் உண்டியல் பள்ளியின் சார்பில் பரிசாய் வழங்கப்பட்டது.இதன் மதிப்பு (300*50=15000)பாரதி சிமென்ட் நிறுவனத்தார் 50 உண்டியல் அன்பளிப்பாய் வழங்கினர்.
மீதமுள்ள 250 பள்ளியின் சார்பில் வழங்கினோம்.
*நடனங்கள் அனைத்தும் பள்ளி ஆசிரியைகளாலேயே கற்பிக்கப்பட்டது.
*ஒன்றாம் வகுப்பு மழலைகளின் வரவேற்பு நடனமும், இரண்டாம் வகுப்பினரின் விவசாயம் காப்போம் நடனங்கள் அனைவரையும் கவர்ந்தன.
*மூன்றாம் வகுப்பினரின் ஐவகை நிலங்கள் பாடலில் குறிஞ்சி. முல்லை என ஐந்துவகை மக்களின் நடனம் ஆடப்பட்டது.
*ஐந்தாம் வகுப்பு மாணவிகள் சிங்கப்பெண்ணில் கர்ஜிக்க அரங்கிலிருந்த அனைவருமே முணுமுணுத்தனர்.
*அதிக பட்சமாக ஒரு ஆசிரியை 94 மாணவ மாணவியருக்கு நடனம் கற்பித்தார். அடுத்த ஆண்டு சதமடிக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்.
*கும்மி,தேவராட்டம்,கோலாட்டம், கரகாட்டம் மற்றும்
சலங்கையாட்டம், சக்கை குச்சி ஆட்டம், உருமி என நாட்டுப்புற நடனங்கள் நடத்தப்பட்டன.
*ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் நகைச்சுவை நடனம் அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
*பிறமொழிப் பாடல்களாக குஜராத்தி பாடலும், மலையாள மிட்டாய் பாடலும் அதிக வரவேற்பு பெற்றன.
*பசுமைப்படை சீருடையுடன் மாணவியர் ஆடிய மரம் வளர்ப்போம் விழிப்புணர்வு பாடல் அனைவரையும் கவர்ந்தது.
*காலை 7மணிமுதல் மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு பரதநாட்டியத்தை
12 மாணவ மாணவியர்கள் அருமையாக ஆடினர்
*பெற்றோர் உதவியுடன் நடன ஆடைகள் மட்டும் 1,20,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.பேன்சி ஐட்டங்கள் தனி.
ஐந்தாம் வகுப்பு நடனத்துக்கு கோவை சென்று ஆசிரியை வாங்கிவந்தார்.
*அருகாமைப் பள்ளியிலிருந்து வந்த தலைமையாசிரியர்களுக்கு சால்வையும் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கு புத்தகமும் வழங்கப்பட்டது.
*TNPTF சார்பில் பொருளாளர் மரிய செல்வராஜன் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ1000 வழங்கினார்.
*சிலம்பம்,பறை இசை, கராத்தே முதலிய பாரம்பரிய தற்காப்பு கலைகள் மிகவும் சிறப்புற செய்தனர்
*கலப்பை, முளைப்பாரி, விதை நெல், போன்றவற்றை பெற்றோர்களே தத்ரூபமாக செய்து கொடுத்திருந்தனர்
#குறிப்பு:இது ஏதோ இந்த பள்ளிக்கு தன்னார்வலர் அனைவரும் ஒரு போன் காலிலோ, விழா என கேள்விப்பட்டோ பண உதவி செய்யவில்லை.வேகாத வெயில்ல கடந்த மூன்று மாதங்களாக திட்டமிட்டு அலைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை சந்தித்து உதவி பெற்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
*கனவு பெரிதாய் இருக்கும்போது உழைப்பு அதைவிட பெரிதாய் இருக்க வேண்டும். கூட்டுமுயற்சிக்கும் குழு உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
#மாநகராட்சி துவக்கப்பள்ளி
No comments:
Post a Comment