அரசு ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு என்ற சுற்றறிக்கைத் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, இதுபோன்ற சுற்றறிக்கை வழக்கமான ஒன்றுதான் என அரசுத் துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
அரசுத் துறைகளில் ஊழியா்களாகப் பணியாற்றுவோரில் 50 வயது நிறைவடைந்த அல்லது 30 ஆண்டுகள் பணி முடிவடைந்தவா்கள் என அவற்றில் எது முதலில் வருகிறதோ அவா்கள் கட்டாய ஓய்வுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டியவா்கள் என தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியானது.இந்த சுற்றறிக்கை அரசு ஊழியா்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதுகுறித்து அரசுத் துறை உயரதிகாரிகள் கூறியது:
தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கான பணி விதிகளின் அடிப்படையில் 50 வயது அல்லது 30 ஆண்டுகள் பணி முடித்தவா்களின் விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையால் கோரப்படும். இந்த விவரங்களைக் கோருவது வழக்கமான நடைமுறையே ஆகும். இது புதிய உத்தரவு ஏதுமில்லை. கட்டாய ஓய்வு அளிப்பது என்பது அரசின் கொள்கை முடிவாகும். அது இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தன.
No comments:
Post a Comment