அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வருகிறது.
அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, சேர்க்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கில வழி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பறையில் தமிழ்வழி மாணவர்களுடன் அமர வைத்து வகுப்புகள் கையாளப்படுகின்றன. ஆனால், பிளஸ் 2 வகுப்புகளில், இந்த முறையை பின்பற்றுவதில் சிக்கல் உள்ளது. இதனால், சில பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கற்பித்தல் தொடங்கப் படவில்லை. மாணவர் சேர்க்கை இருந்தும் வகுப்பறை இல்லாததால் ஆங்கில வழி பிரிவுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் நீடித்து வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் அண்மையில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி சேர்க்கை குறித்த விவரங்கள் மாவட்ட வாரியாக, சேகரிக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment