புதிய பாடத் திட்டத்தில் தயாரான, இரண்டாம் பருவ புத்தகங்களை, அக்., 3ல், மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. காலாண்டு தேர்வு வரை, முதல் பருவம்; அரையாண்டு தேர்வு வரை, இரண்டாம் பருவம்; ஆண்டு இறுதி தேர்வுக்கு, மூன்றாம் பருவம் என, மூன்று புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பருவ புத்தகமும், அந்தந்த பருவ தேர்வுடன் முடித்துக் கொள்ளப்படும்.காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், முதல் பருவ புத்தகங்களின் பாடங்கள் இனி நடத்தப் படாது. விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும், இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படும். இதற்காக, இந்த ஆண்டு, புதிதாக அமல்படுத்தப்படும் பாட திட்டத் தில், ஒன்று, ஆறு மற்றும், 9ம் வகுப்புகளுக்கு, புத்த கங்கள் அச்சிடும் பணி, இரு தினங்களுக்கு முன் முடிந்தது. மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள், ஏற்கனவே தயாராகியுள்ளன.
இந்த புத்தகங்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி துவங்கியுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 3ல் பள்ளி திறந்த அன்று, அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்கி, அன்றே புதிய வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment