இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 24, 2014

காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?

Dial *99*99# from your Mobile handset

சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். காஸ் மானியம் பெற, ஆதார் எண்ணோடு, வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுக்க வேண்டும். ஜனவரி முதல், இந்த நடைமுறை அமலுக்கு வருவதால், இம்மாத இறுதிக்குள், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமை, வங்கியிடம் அளிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது. காஸ் முகமை மற்றும் வங்கியில் இந்த விவரங்களை அளித்த பின், காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதா என்பதை அறிய, இவலச எஸ்.எம்.எஸ்., சேவையை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், *99*99# என, மொபைல் போனில் அழுத்தினால், 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் கேட்கும்.

ஆதார் எண்ணை பதிவு செய்தால், காஸ் மானியம் பெற வங்கிக் கணக்கு எண், இணைக்கப்பட்டு விட்டதா என்ற தகவலை அறியலாம். எஸ்.பி.ஐ., மறுப்பு: இதற்கிடையே, காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கை இணைக்க, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) வாடிக்கையாளர்களிடம், கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்தது. இப்புகாரை, வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''வங்கியின் எந்தக் கிளையிலும், காஸ் மானியத்துக்கு, வங்கிக் கணக்கை இணைக்க, கட்டணம் வசூலிப்பதில்லை. கட்டணம் வசூலித்து இருந்தால், அத்தொகை வாடிக்கையாளர்களுக்கு, திருப்பி அளிக்கப்படும்,'' என்றார்.

Tuesday, December 23, 2014

கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் சேர்க்கை நடத்த மாட்டோம்: தனியார் பள்ளிகள்

கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர்க்கையை நடத்தப் போவதில்லை என, தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

25 சதவீதம்

நாட்டில், 6 - 14வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கல்வி அடிப்படை உரிமை. நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடம் அளிக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அரசே வழங்கும் என்பது, கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படை. இந்த சட்டம், 2009ல் அமலுக்கு வந்தபோதும், தமிழகத்தில், 2011ல் அமல்படுத்தப்பட்டது. அதன்பின், இச்சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

தனியார் பள்ளிகளில்,

கடந்த 2013 - 14ல், 49,864 மாணவர்; 2014 - 15ல், 89,954 மாணவர் என, 1,39,818 பேர், இரண்டு ஆண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளுக்கு, வகுப்பு அடிப்படையில், 5,000 - 6,000 ரூபாயை கட்டணமாக அளிக்க, தமிழக அரசு முடிவெடுத்தது. இந்த வகையில், 2013 - 14ல், 25.13 கோடி ரூபாய்; 2014 - 15ல், 45.27 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாக, இந்த கட்டணத்தை தமிழக அரசு வழங்கவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறியதாவது: தமிழக அரசு, எங்களுக்கு தர வேண்டிய, கட்டணத் தொகையை தரவில்லை. பள்ளிகளின் முதல்வர் பெயரில் வங்கி கணக்கு துவக்குமாறு கூறினர்; துவக்கிவிட்டோம். மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து விவரங்களையும் அளித்து விட்டோம். ஆனால், இதுவரை, கட்டணத் தொகை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுக்கான பணத்தை, இந்த ஆண்டு செப்டம்பரில் தருவதாக கூறினர்; இதுவரை தரவில்லை. சமீபத்தில், மத்திய அரசு, அந்த பணத்தை தரமுடியாது என்று கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

விவர அறிக்கை அதேநேரம், பெற்றோர் பல வகைகளில் எங்களை மிரட்டுகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு, 25 சதவீத மாணவர் சேர்க்கையை நடத்தப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து, கல்வித்துறை தரப்பில் கேட்டபோது, "

கடந்த ஆண்டு கட்டணம் தொடர்பான விவர அறிக்கை, தயாரிக்கப்பட்டு அதற்கான கோப்பு, நிதித்துறையில் உள்ளது. இன்னும் அனுமதி வரவில்லை. வந்ததும், கொடுத்து விடுவோம். இந்த ஆண்டிற்கான கட்டணத்திற்கு, மத்திய அரசு அனுமதிபெற, கோப்பு அனுப்பப்பட்டுள்ளது" என்றனர். மத்திய அரசு மறுப்பு ஏன்? கடந்த 2013 - 14ல், மாணவர் சேர்க்கையின்போது, தமிழக அரசு, குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால், மாணவர்களை சேர்த்த பள்ளிகளை பொறுத்தவரை, கட்டணம் வேறுபட்டது. இதுகுறித்த அறிக்கை மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசோ, அரசு பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தரப்படும் என கூறியது. தமிழக அரசின் அறிக்கைபடி, கட்டணத்தை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

6 மாதம் நீட்டிப்பு

2005ம் ஆண்டுக்கு முன் வெளியிட்ட 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வங்கி முடிவு செய்தது. இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன. தற்போது இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான காலக் கெடுவை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து ரிசர்வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் சான்று இன்று முதல் வழங்கப்படுகிறது

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மேற்கண்ட தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.

மாணவர்கள் படித்த அந்தந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை எந்த மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கொடுத்தார்களோ அங்கேயே மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது.

மேற்கண்ட தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.மாணவர்கள் படித்த அந்தந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில்
அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை எந்த மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கொடுத்தார்களோ அங்கேயே மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.மேற்கண்ட தேர்வுக்கு விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் 30ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்துக்குரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்.மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை நேரிலேயே செலுத்தலாம்.

TNOU B.ed results published

Click below

http://www.tnou.ac.in/bedrslt2014.htm

TNPSC GROUP IV tentative answer key released

Click below

http://www.tnpsc.gov.in/answerkeys_21_12_2014.html

Monday, December 22, 2014

காமராஜ் பல்கலை பருவமுறை நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியீடு

மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பருவமுறை (சி.பி.சி.எஸ்.,) நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலையின் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., எம்.காம்., (சி.ஏ.), எம்.எஸ்.ஐ.டி., எம்.எஸ்.சி., (ஐ.டி.எம்.), எம்.ஏ., (ஆங்கிலம்) ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மதிப்பெண் பட்டியலுக்கு காத்திருக்காமல் அதற்கான விண்ணப்பங்களை www.mkuniversity.org இணையத்தில் பெறலாம். விண்ணப்பத்துடன் கட்டணத்தை டிடி-யாக இணைத்து, ஜன.,8 க்குள் அனுப்ப வேண்டும் என தேர்வாணையர் விஜயன் தெரிவித்துள்ளார்.

அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது. இதுபோல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல் பொது வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த வகுப்பினருக்கும் இன்றுடன் தேர்வுகள் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறைக்குப் பின்னர் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பல தனியார் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படுகின்றன. சில தனியார் பள்ளிகள் ஜனவரி 5ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளன. அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் 3ம் பருவத்திற்குரிய பாட புத்தகங்கள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை: தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட அட்டவணையில் திருத்தமோ மாற்றமோ செய்யவில்லை என்று தேர்வுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்கும் என்று கடந்த 4ம் தேதி அரசுத் தேர்வுகள் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டு இருந் தது. அதில் 24ம் தேதி நடக்க உள்ள தமிழ் 2ம் தாள் தேர்வு 20ம் தேதியே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது.

இதனால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, தேர்வுத்துறைக்கு மாணவர்கள் மட்டுமின்றி சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தொடர்பு கொண்டு தகவல் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வுத்துறை நேற்று மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் மறுப்பு அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒன்று. எனவே தேர்வுகள் தொடர்பான சரியான செய்திகள் மாணவர்களை சென்றடைவது மிக அவசியம். தவறான செய்திகள் பெற்றோர், மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தேர்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளுமே தேர்வுத்துறையால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

தேர்வுக்கால அட்டவணை போன்ற அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் மட்டும் கூடுதலாக பத்திரிகை, டிவி வாயிலாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும். 10ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில் கடந்த வாரத்தில் ஒரு சில நாளிதழ்களில் 10ம் வகுப்பு கால அட்டவணை மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியிட்டன. இது தவறான செய்தி. பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

அரசு விடுமுறை நாட்கள் 2015

பணி பாதுகாப்புக்கு சட்டம்; ஆசிரியர்கள் வலியுறுத்தல் -dinamalar

"ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும்,' என வலியுறுத்தி, திருப்பூரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது; 250 பெண்கள் உட்பட 400 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பணி பாது காப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியும், சங்க நிர்வாகிகள் பேசினர்."

கவுரவமானதாக கருதப்பட்ட ஆசிரியர் பணி, இன்று, அச்சத்துக்குரியதாக மாறிவிட்டது. மாணவர்களை கண்டித்தால், ஆட்களை திரட்டி வந்து தாக்குகின்றனர். பெண் ஆசிரியர்களை, மாணவர்கள் கேலி செய்வது அதிகரித்துள்ளது. இப்பிரச்னைகளுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் கணேஷ் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ஜோசப் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

சி.இ.ஓ., விசாரணை : ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில், முதன்மை கல்வி அலுவலர் முருகன் நேற்று விசாரணை நடத்தினார். நடந்த சம்பவம் குறித்து, தாக்கப்பட்ட ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டபோது, ""பிரச்னை தொடர்பாக நேரில் வருமாறு, மாணவியரின் பெற்றோர் அழைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம், இனி நடக்காமல் தடுக்க, இரு தரப்பினருக்கும் தகுந்த அறிவுரை வழங்கப்படும்,'' என்றார்.

Sunday, December 21, 2014

குரூப் - 1 தேர்வு எப்போது என்பது, 15 நாட்களில் அறிவிக்கப்படும்; குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே, வி.ஏ.ஓ., கலந்தாய்வு நடத்தப்படும்,''

குரூப் - 1 தேர்வு எப்போது என்பது, 15 நாட்களில் அறிவிக்கப்படும்; குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே, வி.ஏ.ஓ., கலந்தாய்வு நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார். தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பிரிவில், காலியாக உள்ள, 4,963 பணியிடங்களுக்கான அறிவிப்பை, அக்., மாதம், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.

இதற்கான எழுத்துத் தேர்வு, தமிழகம் முழுவதும், 244 தேர்வு மையங்களில், 4,448 தேர்வு அறைகளில் நேற்று நடந்தது. வீடியோவில் பதிவு:இத்தேர்வில், 12.72 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 84 சதவீதம் பேர் அதாவது, 10.43 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முழுவதும், வீடியோவில் பதிவு செய்யப்பட்டது; இணைய தளம் வழியாக கண்காணிக்கப்பட்டது. சென்னை, எழும்பூரில் உள்ள அரசு பள்ளியில் நடந்த தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:குரூப் - 4 தேர்வு முடிவுகள், இரண்டரை மாதங்களில் வெளியிடப்படும். குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, 15 தினங்களில் வெளியாகும். வி.ஏ.ஓ., பணிக்கான கலந்தாய்வு, ஜன., 7, 8ம் தேதிகளில் நடத்தப்படும்.

முன்னதாக, குரூப் - 2ஏ பணிக்கான கலந்தாய்வு, வரும், 29ம் தேதி நடக்கும். வி.ஏ.ஓ., கலந்தாய்வை முதலில் நடத்தினால், அதில் தேர்வானவர்கள், குரூப் - 2 ஏ கலந்தாய்வில் பங்கேற்று சென்று விட வாய்ப்புள்ளது. இதனால், வி.ஏ.ஓ., பணியில், மீண்டும் காலியிடம் ஏற்பட்டு விடும். இதை தவிர்க்கவே, கலந்தாய்வில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.குரூப் - 4 தேர்வுக்கு, 10ம் வகுப்பு அடிப்படை கல்வித்தகுதியாக இருந்த போதும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.

தவறான வினாக்கள் திண்டுக்கல்:தமிழகத்தில் நேற்று நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், தவறான வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு வினாக்களில், பொது அறிவு பகுதியில் சரியான விடையை தேர்வு செய்க என்ற கேள்வியில், 'சி' பிரிவில் முப்படைகள் கொடிநாள் எது என, கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வு செய்வதற்கு, அதில் சரியான விடையே (டிச., 7) கொடுக்கப்படவில்லை.அடுத்த வினா, 1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி, 11 கி.மீ., துாரத்தை கடக்க, எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும் என, கேட்கப்பட்டுள்ளது.

இதில், ஆரத்திற்கான அலகு கொடுக்கப்பட வில்லை. இதனால், விடையை கண்டுபிடிக்க முடியாது.அதேபோல், 'ஏ'க்கு 'பி'யை போல், 2 மடங்கும், 'பி'க்கு 'சி'யை போல், 2 மடங்கும் கிடைக்கும்படி, 700 ரூபாயை பிரித்தால், அவர்கள் பெறும் தொகை எவ்வளவு என்ற கேள்வியில், ஆங்கிலத்தில் கேட்கப்பட்டது தவறாக உள்ளது. இதனால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர். குரூப் - 4 தேர்வில், தமிழ் கேள்விகள் எளிமையாக இருந்தன. கணிதம் தொடர்பான கேள்விகள், சிந்தித்து பதிலளிக்கும் வகையில் இருந்தன. நேரம் போதவில்லை. தொடர்ந்து, படித்துக் கொண்டே இருப்பவர்கள், சுலபமாக வெற்றி பெறலாம். தேர்வில் பங்கேற்றவர்கள்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

பிளஸ் 2 தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வணிகவியல், கணக்குப் பதிவியல், அலுவலக மேலாண்மை, தட்டச்சு செய்முறை ஆகியவை அலுவலக செயலாண்மை (ஆபிஸ் செகரெட்டரிஷிப்) பிரிவில் வழங்கப்பட்டு வந்தன. இதில் தட்டச்சு செய்முறைத் தேர்வு எழுத்துத் தேர்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்டு வருகிறது. பிற தேர்வுகளைப் போல் இல்லாமல், இந்தத் தேர்வு, தட்டச்சு இயந்திரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், பிற பாடங்களுக்கான விடைத்தாள் கட்டுகள் பெறப்பட்ட பிறகும் கூட, தட்டச்சுத் தேர்வு விடைத்தாள்களைப் பெற முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, இந்தத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதனடிப்படையில், தட்டச்சுத் தேர்வை, பிற செய்முறைத் தேர்வுகளோடு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவிட்டுள்ளார்.

பிற தொழிற்கல்வி பாடங்களின் செய்முறைத் தேர்வுகள் போலவே, இந்தப் பாடப்பிரிவுக்கும் வினாத்தாள் அமைத்து 200 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்த வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூபாய் தாள் மாற்ற அவகாசம்: ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது

2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் தந்து மாற்றிக் கொள்வதற்காக தரப்பட்ட அவகாசம் வரும் ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது. கறுப்புப் பணப் புழக்கத்தை தடுக்கும் வகையில் ரூபாய் தாள்களில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் கடந்த 2005ம் ஆண்டில் சேர்க்கப்பட்டன. எனவே, பாதுகாப்பு குறைந்த 2005க்கு முந்தைய ரூபாய் தாள்களை திரும்பப் பெற எண்ணிய ரிசர்வ் வங்கி, இது குறித்த அறிவிப்பை கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிட்டது.

அதன்படி ஏப்ரல் 1-ம் தேதிக்குள் 2005-ம் ஆண்டுக்கு முந்தைய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் தாள்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் தரப்பட்டது. அதன் பின்னர் அந்த அவகாசம் ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டுக்கு பின் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்ட ஆண்டு பின்புறம் இடம் பெற்றிருக்கும். இதற்கு முன் அச்சான தாள்களில் அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது.

Saturday, December 20, 2014

PF interest year wise

ஆசிரியர் தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்த வேண்டும்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் கொண்டு ஆண்டுதோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மடத்தூர் ஹிந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

2013-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை ஒரே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை ஏராளமாக உள்ளன. அதனால், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, முடிந்த அளவு அதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும்தான் நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.

மனுதாரர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பாக பணியமர்த்தப்பட்ட ஒரு பிரிவினர் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியில் தொடரவும், அதற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஆசிரியர்கள் அனைவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கற்றுக் கொடுப்பதற்கு முழுத் தகுதி உடையவர்கள். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவில்லை.

இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே தாற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தகுதி பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் தானாகவே பணியிலிருந்து வெளியேற வேண்டியதுதான். எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனிதில் வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.