இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 21, 2018

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: ஆன்லைன் ரசீது


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் ரசீது வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக் கான, பழைய ஓய்வூதிய திட்டம், 2004ல் நிறுத்தப்பட்டு, புதிதாக சேர்வோருக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.இத்திட்டத்தில், இடம் பெற்றவர்களுக்கு, சம்பளத்தில் பிடித்தம் செய்ததற்கு ரசீது வழங் கா மலும், பணப்பயன் கிடைக்காமலும் இருந்தது. எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய, ஆசிரி யர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் செய்தனர்

இந்நிலையில், பங்களிப்பு திட்ட விபரங்கள் அனைத்தும், தமிழக அரசின் கருவூலத்துறை சார்பில், ஆன்லைனில் இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத்துக்கு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, வரும், 23ம் தேதி முதல், ஆன்லைனில் ரசீது வழங்கப்படும் என, கருவூலத்துறை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம்


பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் அதிகாரத்தை, இணை இயக்குனர்களுக்கு வழங்கி, நிர்வாக சீர்திருத்தத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறையில் அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்றி, மே மாதம் முதல், நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, உதவி தொடக்க கல்வி அதிகாரி ஆகிய பதவிகள், ரத்து செய்யப்பட்டன.பள்ளி நிர்வாகம் ஒரே குடையின் கீழ் இருக்கும் வகையில், அனைத்து வகை, தொடக்க, மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகங்கள், பள்ளிக் கல்வியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.இ.ஓ., என்ற, முதன்மை கல்வி அதிகாரி - வருவாய் மாவட்ட நிர்வாக அதிகாரியாகவும், அவருக்கு கீழ், டி.இ.ஓ., என்ற மாவட்ட கல்வி அதிகாரி, அவருக்கு கீழ், பி.இ.ஓ., என்ற வட்டார கல்வி அதிகாரி என, பொறுப்புகள் வழங்கப்பட்டன.

இந்த அதிகாரிகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட, அனைத்து பள்ளிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.இந்த உத்தரவின்படி, ஆசிரியர்கள் நியமனம், இடமாறுதல் வழங்குவது போன்ற அதிகாரங்களும், சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டன. இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு பணி வழங்கப்பட்டது.சி.இ.ஓ.,க்களிடம் அதிகாரங்களை குவித்திருப்பது, சில நேரங்களில் முறைகேடுகளுக்கு வாய்ப்பாகி விடும் என, புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, நிர்வாக சீர்திருத்தத்தில், தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துஉள்ளார்.இதன்படி, பி.இ.ஓ.,க் களை நியமனம் செய்வது, இடமாறுதல் செய்வது போன்ற அதிகாரம், சி.இ.ஓ.,வுக்கு தரப்பட்டு உள்ளது. கல்வி மாவட்டத்திற்குள், ஆசிரியர்களை நியமித்தல், இடமாறுதல் செய்வது போன்ற அதிகாரம், டி.இ.ஓ.,க்களுக்கு தரப்பட்டுள்ளது.ஒரே வருவாய் மாவட்டத்திற்குள் இருக்கும், ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து, இன்னொரு கல்வி மாவட்டத்திற்கு ஆசிரியர்களை இடமாறுதல் செய்வது, சி.இ.ஓ.,வின் அதிகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வருவாய் மாவட்டம் விட்டு, இன்னொரு வருவாய் மாவட்டத்துக்கு, ஆசிரியர்களை இடமாறுதல் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது, இணை இயக்குனர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

*9-ஆம் வகுப்பு விருப்ப பாடமாக தொழிற்கல்வி 67 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது*


https://drive.google.com/file/d/1fguWNb_FB0-0UdkhBLWZPpTH_gpSNQKz/view?usp=drivesdk

Wednesday, July 18, 2018

50 அரசு பள்ளிகளில் விரைவில் இலவச வைஃபை வசதி


தமிழகத்தில் முதல்கட்டமாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச வைஃபை வசதி வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ரூ. 9.06 கோடி மதிப்பில், இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த, அரசுஒப்புதல் அளித்தது.

இதில் முதல்கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.1.23 கோடி செலவில், வைஃபை வசதியை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்தச் சேவையை வழங்க, "டெண்டர்' கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில் பள்ளிகளுக்கு இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்றனர் அவர்கள்.

எந்த புத்தகம் எந்த நூலகத்தில்?'மொபைல் ஆப்'பில் அறியலாம்


எந்த புத்தகம், எந்த நுாலகத்தில் உள்ளது என்ற விபரங்களை, இனி, 'மொபைல் ஆப்' வழியே தெரிந்து கொள்ளலாம்.அனைத்து பொது நுாலகங்களிலும், டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளை, பொது நுாலகத்துறையின் இயக்குனர், ராமேஸ்வர முருகன் மேற்பார்வையில், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, அனைத்து நுாலகங்களின் விபரங்களும், மின்னணு பதிவு தொகுப்பாக மாற்றப்படுகிறது. மாவட்ட மைய நுாலகங்களில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்க உள்ளதால், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கும் பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள, தேவநேய பாவாணர் நுாலகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் முதல், கிளை நுாலகங்கள் வரையிலும், நுாலகங்களின் பணிகளை நவீனப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.

நுாலகங்களை இணைக்கும், 'மொபைல் ஆப்' தயார் செய்யப்படுகிறது. புத்தக வாசிப்பாளர்கள், ஏதாவது முக்கியமான புத்தகங்களை படிக்க வேண்டும் என்றால், அந்த புத்தகம் எந்த நுாலகத்தில் உள்ளது என்பதை, மொபைல் ஆப் வழியாக தெரிந்து கொள்ளலாம்.அனைத்து நுாலகங்களிலும் உள்ள புத்தகங்களின் தலைப்புகள், எழுதியவர், பதிப்பு, பதிப்பாளர் போன்ற விபரங்கள், இந்த, 'ஆப்'பில் இடம் பெறும். இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்த பணிகளை, எம்.எஸ்.சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, பொது நுாலகத்துறை மேற்கொண்டுள்ளது

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாயாகவும், மற்ற பிரிவினருக்கு 500 ரூபாயாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சட்ட கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் போட்டி தேர்வு அறிவிப்பில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கான கட்டணம் 250 ரூபாயில இருந்து, 300 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 500 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வழி பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் நிலையில், தேர்வு கட்டணங்களை குறைக்குமாறு வலியுறுத்தும் நிலையில், கட்டண உயர்வால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Monday, July 16, 2018

வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை ரத்து: 3 நாள்களில் அரசாணை


ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ்) முறையை ரத்து செய்வது குறித்த அரசாணை மூன்று நாள்களுக்குள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் 20 நாள்களில் தொடங்கும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய 82, 000 பேர் பணிக்காக காத்திருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு தகுதிகாண் (வெயிட்டேஜ்') மதிப்பெண் முறையை தளர்த்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த மதிப்பெண் முறையை ரத்து செய்வது குறித்த அரசாணை மூன்று நாள்களில் வெளியாகும்.

பி.எட்., கவுன்சிலிங் நாளை துவக்கம்


பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.

இந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., இரண்டு ஆண்டு பட்டப்படிப்புகள் நடத்தப் படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,707 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி பொறுப்பு முதல்வர் தில்லை நாயகி தலைமையிலான கமிட்டி, இந்த ஆண்டு கவுன்சிலிங்கை நடத்துகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, 6,073 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு, வரும், 18ம் தேதி முதல், 24ம் தேதி வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், தில்லை நாயகி வெளியிட்டு உள்ளார். இதன்படி, நாளை சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடத்தப்படும். வரும், 19ல், தமிழ், ஆங்கிலம்; 20ல், தாவரவியல், விலங்கியல்; 21ல், இயற்பியல், வரலாறு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடத்தப்படும்.

மேலும், வரும், 22ல், வேதியியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 23ல், புவியியல், கணினி அறிவியல், கணிதம் மற்றும் 24ம் தேதி, கணிதம் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

Saturday, July 14, 2018

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க குழுக்கள்


தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

29 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 4 நகராட்சி தொடக்கப்பள்ளிகள் என 33 பள்ளிகளில் ஒருவர் கூடப் படிக்கவில்லை என்பதும் அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர். பல பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் உள்ளதும் அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்தது. குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூடி அம்மாணவர்களை அருகே உள்ள பள்ளிகளில் இணைக்க அரசு முடிவு செய்தது. மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகளை மூடவோ அல்லது அருகில் உள்ள பள்ளிகளுடனோ இணைக்கக் கூடாது என பெற்றோர், ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விழிப்புணர்வுப் பிரசாரத்தை தீவிரப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம், சைக்கிள், செல்லிடப்பேசி, சுற்றுலா என பல சலுகைகளை அறிவித்து தீவிர மாணவர் சேர்க்கையில் அங்குள்ளவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: பெற்றோருக்கு ஆங்கிலக் கல்வி மீதான ஈர்ப்பு வெகுவாக அதிகரித்திருப்பதால் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையிலும் கூட தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.

இருப்பினும் அரசின் சலுகைகள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களைச் சேர்த்து வருகிறோம். தற்போது மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பெற்றோரை கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் வீடு, வீடாகச் சென்று சந்தித்து வருகின்றனர். அப்போது பெரும்பாலான பெற்றோர் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். அவர்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒரு மாணவர் கூட இல்லாத சில பள்ளிகளில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். எந்தவொரு பள்ளியையும் மூடக்கூடாது என்பதில் பள்ளிக் கல்வித்துறை உறுதியாக உள்ளது.

மேலும் இது தொடர்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் அனைத்து கிராமங்கள், நகர்ப்புறங்களில் அது தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரைஅவகாசம் இருப்பதால் 890 பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமும் வாசிப்பு வகுப்பு நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு


தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் வாசிப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, பள்ளி, மாணவ - மாணவியர் இடையே வாசிப்பை அதிகப்படுத்தும் வகையில், ஜூலை, 15 முதல், ஆகஸ்ட், 14 வரை, ஒரு மாதம் வாசிப்பு மாதமாக கொண்டாடப்படும். இந்த ஒரு மாதத்தில், தினமும் ஒவ்வொரு பள்ளியிலும், வாசிப்பு வகுப்பு என, நேரம் ஒதுக்க வேண்டும். இதற்கான புத்தகங்கள், ஒவ்வொரு பள்ளியின் அருகிலும் உள்ள பொது நுாலகத்தில் இருந்து வழங்கப்படும்.

நற்பண்புகள், நற்சிந்தனை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் புத்தகங்களை படிக்கும் வகையில், வாசிப்பு நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, July 13, 2018

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

கல்வி வளர்ச்சி நாள் -15-7-18

Click below

https://drive.google.com/file/d/1KzGeq-uMNplzi-vFMH60eTb61tp_Ebyf/view?usp=drivesdk

Thursday, July 12, 2018

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2 மாதத்தில் இலவச 'வைபை'


தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இரண்டு மாதங்களில், இலவச இணையதள, 'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, 9.06 கோடி ரூபாய் மதிப்பில், இலவச இணையதள, வைபை வசதி ஏற்படுத்த, அரசுஒப்புதல் அளித்தது.

இதில், முதல் கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில், 1.23 கோடி ரூபாய் செலவில், வைபை சேவை வசதி வழங்க,நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகளில், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: அரசு மேல்நிலை பள்ளிகளில், இலவச இணையதள, வைபை வசதி வழங்கும் திட்டத்தை, 2017ல், தமிழக அரசு, அறிவித்தது. தற்போது, இதற்கானநிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.முதல் கட்டமாக, 50 அரசு மேல்நிலைப் பள்ளி களில் சேவை வழங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில், பள்ளிகளுக்கு, இலவச, வைபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு


தமிழக பள்ளிகளில், 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த காமராஜரின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி, அரசின் சார்பில் கொண்டாப்படுகிறது. இந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்க, தமிழக அரசுஉத்தர விட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், அன்று, காமராஜரின் வரலாறு, அவரது திட்டங்கள், சாதனைகள், கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பள்ளிகளில், சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி, காமராஜர் பெயரில் பரிசு வழங்கவும், உத்தரவிடப்பட்டு உள்ளது.

Wednesday, July 11, 2018

மாணவர்களுக்கு பல வண்ண சீருடை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


அரசு பள்ளிகளில், பல வண்ண சீருடைகள் வழங்கப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, 9, 10ம் வகுப்புகளுக்கு, ஒரு வகை நிறத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வேறு வகையான நிறத்திலும், சீருடைகளின் நிறம் மற்றும் உடை வடிவங்கள் மாற்றப்பட்டு உள்ளன.

அதேபோல், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், இந்த ஆண்டு, பச்சை நிறத்தில் சீருடைகள் மாற்றப்பட்டன.இந்நிலையில், மீண்டும் சீருடைகள் மாற்றப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தற்போதுள்ள சீருடை, ஒரே வண்ணத்தில் உள்ளதால், அவற்றுக்கும், தனியார் பள்ளி சீருடைக்கும் இடையே, பெரும் வித்தியாசம் உள்ளது.

இந்த வித்தியாசம் தெரியாத வகையில், பல வண்ணங்களில் இருக்குமாறு, சீருடைகள் மாற்றப்படும். வரும் கல்வி ஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Tuesday, July 10, 2018

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: ஜூலை 16 முதல் பெறலாம்


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் 16 -ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மே 15 -ஆம் தேதி கல்வித் துறை இணையதளத்திலும், மே 17 -ஆம் தேதி அன்று அவரவர் பள்ளியிலும் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஜூலை 16 -ஆம் தேதி காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்!: ஜூலை 15 முதல் தொடங்கும்.நூலகத்துறை அறிவிப்பு


மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்த வகுப்புகளில் அருகே உள்ள அரசு நூலகங்களிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பொது நூலகத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4,600-க்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பொது நூலகத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். உறுப்பினராகச் சேரும் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், பேச்சு, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.

ஜூலை 15 முதல் தொடங்கும்: இது குறித்து பொது நூலகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை-15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை வாசிப்பு மாதமாகக் கொண்டாடப்படும். இந்த ஒரு மாதத்தில் பள்ளிகளில் ஒரு நாள் ஒரு வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்படும். ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் வாசிக்க வாய்ப்பு வழங்கப்படும். ஒரு சுற்று வாசிப்பு முடிவடைந்ததும் மீண்டும் அடுத்த சுற்று தொடங்கும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் இந்த வகுப்புகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் நன்னெறிக் கதைகள், படக் கதைகள், பொது அறிவு, தலைவர்கள் வரலாறு உள்பட பல்வேறு வகையான நூல்கள் பள்ளிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் அரசு நூலகங்களிலிருந்து நூலகர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர தற்போது 14 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நடமாடும் நூலக வாகனங்களை 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

Monday, July 09, 2018

கவிதை

(கவிஞர் யுகபாரதியின் திருமண அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த கவிதை)

உனக்கு

தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.