இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, June 16, 2018

நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் புதிய கல்விமுறை!


பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும் நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் 16.60 கோடி குழந்தைகளுக்கு புதிய கல்விமுறையை 2018-19 கல்வியாண்டு முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரைவு ஆவணம் தயார்செய்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி கடந்த மாதம் கருத்துகளை கேட்டுப் பெற்றுள்ளது.

அரசுகளின் பங்களிப்பு என்ன?: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பும், மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும். தமிழகம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் புது தில்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் 60:40 விகிதத்தில் பங்களிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு 90:10 விகிதத்தில் பங்களிப்பு எனவும், சண்டீகர், அந்தமான்-நிக்கோபார், லட்சத்தீவு ஆகியவற்றுக்கு மத்திய அரசே 100 சதவீதம் நிதி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பயன் பெறும் வகுப்புகள்: இத்திட்டமானது ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை முழுமையாக அமல்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இப்போதுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அமல்படுத்தப்படுகிறது.

"சமக்ர சிக்ஷா அபியான்': பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ட்ரீய மாத்யமிக் சிக்ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) ஆகிய 2 திட்டங்களையும் இணைத்து "சமக்ர சிக்ஷா அபியான்' (எஸ்எம்எஸ்ஏ) என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2001- ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு செயல் வழிக் கற்றலும், 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பித்தல் நடைபெற்றது.
இதில், 6-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பள்ளி வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளைக் கட்டுவது, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிதல், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி, பெண் கல்வி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இடம் பெற்றிருந்தன. 2012-இல் இத்திட்டம் முடிவடைந்தாலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

இதேபோல, 2005-ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அமல்படுத்தப்பட்டது. இதில், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கற்பித்தல் முறையை மேம்படுத்தி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வியை உறுதி செய்தது. இப்போது, இரு திட்டங்களையும் இணைத்து நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கல்வி செயல்பாடுகள் சமக்ர சிக்ஷா அபியானின் கீழ் மேற்கொள்ளப்படும்.

ஏற்கெனவே எஸ்எஸ்ஏ மற்றும் ஆர்எம்எஸ்ஏ திட்டங்களுக்குத் தனித்தனியே அலுவலர்கள் நியமித்து மாநில அளவில், மாவட்ட அளவில், வட்டார அளவில் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்நிலையில், இரண்டும் ஒன்றாக இணைக்கப்படுவதால் இவ்விரு திட்டங்கள் சார்ந்த அலுவலகங்களும் இனி கலைக்கப்படும். அவற்றுக்குப் பதிலாக
"சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தை செயல்படுத்த புதிய அலுவலர்களைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். ஒரே அலுவலகம் செயல்படும். கல்வித்துறை அமைச்சரைத் தலைவராக கொண்ட ஆளுகை குழுவும், பொதுக் கல்வித் துறை செயலாளரைக் கொண்ட நிர்வாகக் குழுவும் இடம் பெறும். புதிய குழுக்களுக்கான அதிகாரங்களும், கட்டுப்பாடுகளும் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு மாநிலங்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எப்படி?: முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரைத் தலைமையாகக் கொண்டு, தலைமைச் செயலர், பள்ளிக் கல்விச் செயலர் ஆகியோர் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூலம் மாநில அமலாக்க அமைப்பை உருவாக்கி, மாநில திட்ட இயக்குநர் நியமனம் செய்து, பள்ளிக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குத் தனியாக ஒரு இயக்குநர் (எஸ்சிஇஆர்டி), பள்ளிகளின் மேம்பாடு, ஆசிரியர்கள் பயிற்சிக்கு தனி இயக்குநர், மாணவர்களின் உரிமைகள் பாதுகாப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும். தொழில்நுட்பக் குழுவும் ஏற்படுத்தப்படும். இந்த மாநிலக்குழுவின் நிர்வாக வடிவமைப்பின்படியே, மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் குழுக்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒதுக்கீடு எவ்வளவு?: இத் திட்டத்துக்காக 2018-19ஆம் ஆண்டுக்கு மட்டும் மத்திய அரசு பங்களிப்பாக ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.1427.30 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தின் பங்களிப்பான 40 விழுக்காடு தொகையும் சேர்த்தால் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு இத்திட்டத்துக்கு முழுமையான ஒப்புதல் அளித்தவுடன் அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவித்து தமிழகத்துக்கான முழு மத்திய நிதி ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இத்திட்டத்துக்கு முழுமையான ஒப்புதல் அளித்தவுடன் அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவித்து தமிழகத்துக்கான முழு மத்திய நிதி ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Friday, June 15, 2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு வருகிற 22-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19 கடைசி தேதியாகும். பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தத் தேர்வில் தாள்-1, தாள்-2 என இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-1 இல் மட்டும் பங்கேற்றால் போதுமானது. அதுபோல் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-2 இல் பங்கேற்றால் போதுமானது. இரண்டு நிலைகளிலும், அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களும் எழுத வேண்டும். இந்த தேர்வானது 16-9-2018 அன்று நடத்தப்பட உள்ளது. காலையில் 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 22-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வறை அனுமதிச் சீட்டை 20-8-2018 அன்று ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். கல்வித் தகுதி: பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன், 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும். அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டையும் எழுதுபவர்களுக்கு ரூ.1200. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 350 கட்டணம். இரண்டு தாள்களையும் எழுத ரூ. 600 செலுத்தினால் போதுமானது. மேலும் விவரங்களுக்கு சி.டி.இ.டி. இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மனப்பாட முறை ஒழிகிறது: முழு பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு


கல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு இனி ப்ளுபிரிண்ட்' அடிப்படையில் கேள்விகள் கேட்காமல், முழுமையாக பாடப் புத்தகத்தில் இருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படும் முறையை பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தவுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட பாடத்தில் இருந்து குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு, குறிப்பிட்ட பகுதியில் உதாரணமாக 1,2,5,10 மதிப்பெண்களுக்கு என வினாக்கள் கேட்கப்படும். இதனால் ஆசிரியர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தை மட்டுமே மாணவர்களுக்கு கற்பித்து வந்தனர்.

இந்த முறையால் மாணவர்கள் மனப்பாடம் மட்டுமே செய்து, பொதுத் தேர்வினை எழுதினர். பாடப் புத்தகத்தினை முழுவதுமாகப் படிக்காமல் இருந்தனர். இதனால் மாணவர்கள் தமிழக அளவில் அதிகளவில் மதிப்பெண்களை குவித்தனர். ஆனால் மத்திய அரசின் எந்த போட்டித் தேர்வையும் பெரும்பாலான மாணவர்களால் சிறப்பாக எழுதி வெற்றிப்பெற முடியவில்லை.

மேலும் தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் உயர் கல்வியில் தேர்ச்சி பெறாமல் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் பிளஸ் 2 வகுப்பு பாடங்களில் குறிப்பிட்ட சில பாடங்களை மட்டுமே நடத்தி மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததே ஆகும்.

ப்ளு பிரிண்ட்' முறை நீக்கம்:

இந்தநிலையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவினர் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை முற்றிலும் மாற்ற வேண்டும் என கூறி, ப்ளுபிரிண்ட் முறையை நீக்கி உள்ளனர். இதையடுத்துஅரசுத் தேர்வுத்துறை இயக்ககம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வின் போது வினாத்தாள் எப்படி வடிவமைக்கப்படும் என்பது குறித்தும், மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஆசிரியர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. இந்த அறிவுரைகள் விவரம்:-

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும், அரசின் போட்டித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும் புத்தகத்தின் கருத்துக்களை நன்கு படித்து உணர்ந்து அதனடிப்படையில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், ஆசிரியர்கள் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர் திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் வினாக்கள் ஆகியவற்றுக்கும் விடையளிக்க பயிற்றுவிக்க வேண்டும்.
சிந்தித்து பதிலளிக்கும் வினாக்கள்:  நிகழ் கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாளில் தோராயமாக 20 சதவீதம் வினாக்கள் (ஒரு மதிப்பெண் , சிறுவினா, குறுவினா, நெடுவினா) கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள், பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர் திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் இருப்பது அவசியம். .

பிளஸ் 2 வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் ஜூலை முதல் வாரத்தில் அனுப்பப்படும்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டுள்ள வினாக் கட்டமைப்பின்படி வினாத்தாள் அமையும். எனவே, கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பினை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெறமுடியாது என்பதனை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி பாடத்தின் உட்கருத்தினை புரிந்து கொண்டு படிக்குமாறும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், வினாத்தாளில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை நன்கு படித்தபின் தேர்வெழுத அறிவுறுத்த வேண்டும். மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்தெழுதுக' என்ற தலைப்பில் இடம்பெறும் வினாக்களுக்கு, வினா எண் குறியீட்டுடன், விடையினையும் சேர்த்து எழுதினால் மட்டுமே உரிய மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் குறியீடு மட்டுமோ அல்லது விடை மட்டுமோ எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது எனவும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
மேலும், விடைத்தாள் முழுமைக்கும் நீலம் அல்லது கருப்புமையில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தலைப்புகள், வினாக்களுக்கு மட்டும் கருப்பு மையினைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத

நாளைய கலந்தாய்வு, நாளை மறுநாள் (17.06.2018) ஒத்திவைப்பு.... தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

Thursday, June 14, 2018

DEE – ஆசிரியர்களுக்கு Pay Certificates ஐ BEO தான் வழங்க வேண்டும்

சிறப்பாசிரியர் முடிவு வெளியீடு

http://trb.tn.nic.in/srt2018/Msg3.htm

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


2018-2019-ம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர் படிப்பு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் 18-ந்தேதி காலை 10 மணிக்கு www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அன்று தொடங்கி 30-ந் தேதி மாலை 5 மணிவரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாணவர்கள் தங்களுடைய விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்துவதற்கு பற்று அட்டை (டெபிட் கார்டு ), கடன் அட்டை (கிரெடிட்கார்டு ) மற்றும் இணைய வங்கி சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.250 ஆகும்.

மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளடு செய்து, அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபின் சேமிப்பு (சேவ்) பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும். இத்தளத்தில் பணம் செலுத்திய பிறகுதான் விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அவர் அளிக்கும் விவரங்கள் கலந்தாய்வின் போது சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள் பற்றிய விளக்கங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, சிறப்பு இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பங்கள் பதிவேற்ற வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை மேற்கூறிய இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு க.அறிவொளி தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர மாணவர்கள் கூட்டம் அலை மோதும். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு அதிகமாக இருந்தது. பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கூட மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே இருந்தது. இதனால் கடந்த ஆண்டு 2 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் மாணவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.

*15.06.2018 விடுமுறை ரத்து-அரசாணை.*

ரம்ஜான் சனிக்கிழமை என தமிழக ஹாஜி.அறிவிப்பு

சிறப்புத்துணைத்தேர்வு தனித்தேர்வர்களுக்கான செய்தி


Wednesday, June 13, 2018

ஜாக்டோ ஜியோ' போராட்டம் வாபஸ்


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின், உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர், மூன்று நாட்களாக, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

'போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்; வேலைக்கு திரும்ப வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தபோதும், அரசு தரப்பில், பேச்சு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, ஜாக்டோ - ஜியோ, நேற்று இரவு அறிவித்தது.இது குறித்து, ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''அரசின் வேண்டுகோள் அடிப்படையில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ''கோரிக்கையை நிறைவேற்றுவதில், தாமதம் ஏற்பட்டால், மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,'' என்றார்.

Tuesday, June 12, 2018

உயர் தொடக்க நிலை ஆசிரியர்க்கு பயிற்சி

பணிநிரவல் குறித்த செயல்முறைகள்

https://drive.google.com/file/d/1WYmyabQs5dbw3FKJw1GZiLwvZ6hXctk7/view?usp=drivesdk

தேர்வு தேதி அறிவிப்பு

பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு 2019ம் ஆண்டு மார்ச் 1ந் தேதி தொடங்கும்

11ம் வகுப்பு பொதுத் தேர்வு 2019 ஆண்டு மார்ச் 6ந் தேதி தொடங்கும்

பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

2019 மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

மாணவர்கள் தேர்வுக்கு மன அழுத்தம் இன்றி தயாராக தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு

தேர்வு முடிவுகளும் வழக்கத்தை விட 10 நாட்கள் முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன

19.04.2019 அன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு

8.5.2019 அன்று பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு

29.04.2019 அன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு

Monday, June 11, 2018

நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்: கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல்


வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார். தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர் தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.

7 லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் தொகையையும் வழங்கி வருகிறது. பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் (டிடிஓ), நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம், எண்ம ஒப்பம் மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, தமிழகத்தின் நிதிநிலை விவரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைக்கும். இதன் மூலம் தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். 2018 அக்டோபர் மாதத்தோடு, சிடி மூலம் சம்பளப் பட்டியல் வாங்கும் நடைமுறை முடிவுக்கு வரும்.

கணினி மயமாக்கும் திட்டம் 2018 நவம்பர் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே முதன் முறையாக கருவூலத்துறை முழுமையாக கணினி மயமாக்கப்படுவது தமிழகத்தில்தான் என்றார் அவர்.