இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 08, 2017

கண்ணியமான உடை அணிய கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிரிக்கை

கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் வர வேண்டும் என்றும், கண்ணியமாக உடை அணியுங்கள் என்றும் அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கலை கல்லூரிகள், பி.எட். கல்லூரிகள், உடற்பயிற்சி கல்லூரிகள் உள்பட மொத்தம் 1,480 கல்லூரிகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த கல்லூரிகளுக்கு, கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அறிவுரை கூற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம்.

அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வர்கள், புதிதாக சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு தேவையான அறிவுரைகளை கூறியிருப்பார்கள். மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும். கல்லூரிகளில் இந்த ஆடை கட்டுப்பாடு ஏற்கனவே அமலில் உள்ளது.

கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் வரவேண்டும். தேவையான மற்றும் தவிர்க்க முடியாத விடுமுறையை தவிர மற்ற விடுமுறைகளை எடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் குறுந்தகடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவில் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மத்திய அரசின் நீட் தேர்வை எழுதுவதற்கு வசதிபடைத்த மாணவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவு செய்து பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையை போக்குவதற்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் 54 ஆயிரம் கேள்விகள் உரிய புகைப்படத்துடன் 30 மணி நேரம் ஓடக்கூடிய குறுந்தகடு (சி.டி.) வழங்க உள்ளோம்.

புதிய பாடத் திட்டம் குழு : மதுரையில் இன்று கருத்துகேட்பு


பள்ளி கல்வியில் புதிய பாடத்திட்டம் தயாரிப்புக்கான கருத்து கேட்புக் கூட்டம் மதுரையில் இன்று (ஆக.,9) நடக்கிறது. தமிழக பள்ளிகளில் பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையாக, அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்கும் பணி துவங்கி உள்ளது.

இதற்காக சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்களிடம் இதுகுறித்து குழு ஆலோசனை நடத்தி வருகிறது.இதன் முதல் கூட்டம் சென்னையில் கடந்த மாதம் நடந்தது. அடுத்ததாக, மதுரை காளவாசலில் உள்ள தர்பார் ஓட்டலில் இன்று (ஆக.௯) நடக்கிறது. இதில் அனந்தகிருஷ்ணன், எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து செய்துள்ளார்.

இந்த வார கண்மணி இதழில் என் வரிகள்

யோகா மனு தள்ளுபடி

யோகாவை கட்டாயமாக்கக் கோரிய மனு தள்ளுபடி

பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமாக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜே.சி.சேத் என்பவர் தொடர்ந்த வழக்கில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த மத்திய அரசு, ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் யோகாக் கல்வியை அடிப்படை உரிமையாக அமல்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், யோகா கல்வியைக் கட்டாயமாக்குவது குறித்து அரசு கொள்கைரீதியில் முடிவெடுக்கலாம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற தனியார் தொண்டு நிறுவன விழா ஒன்றில் பேசிய மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே.குரியன், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யோகா கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒருவரின் ஆளுமை முழுமையான வளர்ச்சி பெற யோகா உதவும் என்றும் கூறியிருந்தார்.

Monday, August 07, 2017

P.F online statement 2016-17

Click below

http://www.agae.tn.nic.in/onlinegpf/

பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும் ௨ ஊக்க ஊதிய உயர்வு : பள்ளி கல்வித் துறை உத்தரவு


நான்கு ஆண்டுபோராட்டத்திற்கு பின்பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும், உயர்கல்விக்கு ௨ ஊக்க ஊதிய உயர்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வி தகுதிகளுக்கு ௨ ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., (அ) எம்.எஸ்சி.,க்கு முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் பல்கலை.,கள் தொலைதுாரகல்வியில் இருந்து எம்.எட்.,ஐ நீக்கின. இதனால்ஆசிரியர்கள் தொலைதுார கல்வி மூலம் எம்.எட்., படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எம்.எட்.,க்கு பதிலாக எம்.பில்., (அ) பி.எச்டி., முடித்திருந்தாலும் ௨வது ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என, 2013, ஜன.,1 ல் பள்ளி கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. தமிழாசிரியர்களை பொறுத்தவரை பி.லிட்., முடித்தோர் எம்.ஏ.,க்கு ஒரு ஊக்க ஊதியமும், பி.எட்.,க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர். ஆனால் பி.ஏ., பி.எட்., முடித்து பட்டதாரி தமிழாசிரியராக சேர்ந்தோருக்கு எம்.ஏ.,க்கு மட்டும் ஒரே ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வந்தது.

'மற்ற பட்டதாரி ஆசிரியர்களைப்போல் தங்களுக்கும் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,' என வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதையடுத்து ஒரு ஆசிரியர் தங்களது பணிக்காலத்தில் உயர்கல்விக்கு ௨ ஊக்க ஊதிய உயர்வு பெறலாம். அதன்படி பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் எம்.எட்., (அ)எம்.பில்., (அ) பி.எச்டி முடித்திருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம். இந்த உத்தரவை அரசாணை வெளியிட்ட 2013, ஜன.,1லிருந்து செயல்படுத்த வேண்டுமென, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

பி.எப்., விபரங்கள் அறிய எளிய நடைமுறை அறிமுகம்


சம்பளம் பெறும் ஊழியர்கள், பி.எப்., நிலவரம் அறியவும், தொகை பெறவும், 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.மாத சம்பளம் பெறும் ஊழியர்களிடம், பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதில், 4.5 கோடி சந்தாதாரர்கள், 45 லட்சம் ஓய்வூதியர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்த சேமிப்பு கணக்கு விபரங்கள், முந்தைய ஆண்டு செலுத்திய தொகை, அதற்கான வட்டி மற்றும் இருப்பு விபரங்கள் ஆகியவை, ஊழியர்களுக்கு, நிறுவனம் மூலம், பிப்., மாதம் வழங்கப்படும். தற்போது, 'இ--கவர்னன்ஸ்' முறையில், எளிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 'ஆன்ட்ராய்டு' போன் மூலம், இ.பி.எப்.ஓ., என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இணையதளத்தில் நுழைந்தால், சந்தாதாரருக்கு வழங்கப்பட்டுள்ள, யு.எ.என்., எண் மூலம் தங்கள் வைப்பு நிதி பாஸ் புக்கை காணலாம். கடைசியாக செலுத்தப்பட்ட, பி.எப்., தொகை மற்றும் இருப்பு தொகை விபரங்களையும் பெற முடியும்.தற்போது, பி.எப்., தொகை திரும்ப பெறுதல் மற்றும் கடன் பெற, இந்த செயலி வழியாக விண்ணப்பிக்கும் வகையில், நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் இணைந்துள்ள ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

சுதந்திரதினம் கொண்டாடுதல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழாசிரியர்களுக்கு M.Phil ஊக்க ஊதியம் வழங்கலாம்.பள்ளிக்கல்வி இயக்குநர் தெளிவுரை


BSNL

மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம்: லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்

ப.முரளிதரன்

மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல் அறி முகப்படுத்தியுள்ளது. இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த் தப்பட உள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன், மொபைல் போன் இணைப்புகளை ஒருங்கிணைத்து பேசுதல், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.

இன்றைய நவீன யுக வாழ்க்கைக்கு தகவல் தொடர்பு இன்றியமையாததாக உள்ளது. இதனால் தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல் வேறு சேவைகளை வழங்கி வரு கின்றன. இந்நிலையில், அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சேவை களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை பொது மேலாளர் (வளர்ச்சி) பி.வி.கருணாநிதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்களில் முன் னோடி நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் திகழ்கிறது. தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர் களும், 5 லட்சம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களும் உள்ளனர். தமிழகம் முழுவதும் 2000 தொலை பேசி இணைப்பகங்கள் உள்ளன.

எங்களது வாடிக்கையாளர் களுக்கு மதிப்பு கூட்டு சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளோம். இதன்படி, வாடிக்கையாளர் களுக்கு அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட் புரோட்டோகால் வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவை வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளோம்.

மூன்று கட்டமாக செயல்படுத் தப்பட்டுவரும் இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, ரூ.14 கோடி செலவில் 26 தொலைபேசி இணைப்பகங்களில் 1.06 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட் புரோட்டோகால் வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக, ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் வரும் 31-ம் தேதிக்குள் முடிக்கப் படும். மூன்றாம் கட்டமாக ரூ.25 கோடி செலவில் ஆயிரத்து 500 சி.டாட் மேக்ஸ் தொலைபேசி இணைப்பகங்களில் உள்ள 6 லட்சம் லேண்ட்லைன் இணைப்பு கள் தரம் உயர்த்தப்படும். இப்பணி இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும். நான்காம் கட்டமாக ரூ.20 கோடி செலவில் 2 லட்சம் லேண்ட்லைன் இணைப்புகள் தரம் உயர்த்தப்படும். இப்பணி அடுத்த ஆண்டு நிறைவடையும்.

இந்தப் புதிய சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் மோடம் இல்லாமல் லேண்ட் லைன் போனிலேயே இன்டர்நெட் சேவையைப் பெறலாம். இதற்காக இன்டர்நெட் புரோட்டோகால் வசதி கொண்ட தொலைபேசி கருவியை (SIP Handset) பயன்படுத்த வேண்டும். லேண்ட்லைன் தொலைபேசி அழைப்புகளை மொபைல் போனிலும், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைன் போன் வழியாகவும் மாற்றிப் பேசலாம். மேலும், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள லாம். அத்துடன், வாட்ஸ்-அப்-பில் குழுக்களை ஏற்படுத்தி தகவல் களை பரிமாறிக் கொள்வதைப் போல இச்சேவையை பயன் படுத்தி நண்பர்கள், குடும்ப உறுப் பினர்கள் இடையே குழுக்களை ஏற்படுத்திப் பேசலாம்.

இதைத் தவிர, மொபைல் போனில் ப்ரீபெய்டு சேவை உள்ளது போன்று இந்த லேண்ட் லைன் போனிலும் ப்ரீபெய்டு சேவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லேண்ட்லைன் போனுக்கான வழக்கமான மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மேலும் பல கூடுதல் வசதிகளைப் பெற முடியும். இவ்வாறு பி.வி.கருணாநிதி கூறினார்.

Sunday, August 06, 2017

நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்


பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 23ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும், பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி(செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு)பி.எஸ்சி ரேடியோலஜி, இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய படிப்புகளில் இந்த ஆண்டு மாணவ மாணவியரை சேர்க்கை நடக்க உள்ளது.

இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 23ம் தேதி 22 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 24ம் தேதிக்குள் வரை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரில் பெற விரும்புவோர் அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு விண்ணப்ப மனுவுடன் விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டுக்கு கட்டணம் ரூ. 400க்கான டிடி கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ‘‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10’’ என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்ப்பட்டோர்(்அருந்ததியர்), பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்ப படிவக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.

ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்களுக்கு கூடுதலான ஆசிரியர்களும், அதிக மாணவர்களுக்கு குறைவான ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆக.1 ஆம் தேதி மாணவர் சேர்க்கை அடிப்படையில் மீண்டும் பணி நிரவல் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஆகஸ்ட் முதல் தேதி அன்று மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து, அதன் அடிப்படையில் பணி நிரவல் நடைபெறுவது வழக்கம். பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறை, தற்போது முதல் முறையாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய கல்வி ஆண்டின் (2016}17) மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நிரவல் நிகழாண்டில் நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வியில் மாவட்டத்திற்குள்ளும், தொடக்க கல்வித்துறையில் வட்டார அளவிலும் ஆசிரியர்கள் பணி நிரவல் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2017}18 ஆம் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை என்பது சில பள்ளிகளில் அதிகரித்தும், பல பள்ளிகளில் குறைந்தும் உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல், முன்னதாக ஆசிரியர் பணி நிரவல் நடைபெற்றதன் காரணமாக 2017}18 ஆம் கல்வி ஆண்டில், பல பள்ளிகளிலும் குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்களுக்கு 10 ஆசிரியர்கள் வரை பணிபுரியும் நிலை உள்ளது. அதே நேரத்தில், அதிக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் குறைவான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 160 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் 5 ஆசிரியர்களும், 160க்கும் கூடுதலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும் பணிபுரியும் வகையில், பணி நிரவல் அமைய வேண்டும் என்பதே அரசின் விதிமுறையாக உள்ளது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக மே மாதமே பணி நிரவல் நடைபெற்றதால், தற்போது பல பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாற்காலிக ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை நடத்துகின்றனர். இதனிடையே, 2017 மே 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பலர் ஓய்வுப் பெற்றுள்ளதால், அந்த காலிப் பணியிடங்களும் தற்போது கூடுதல் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளியில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிவதால் அரசு சார்பில் ஊதியத்திற்காக செலவிடப்படும் பணமும் பயனில்லாமல் போவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், மீண்டும் பணி நிரவல் நடத்தி, உபரியாக உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கல்வியாண்டின் தொடக்கத்திலோ, இடைப்பட்ட காலத்திலோ ஆசிரியர்கள் பணி ஓய்வு நாள் வந்தாலும், அவருக்கு அந்த கல்வியாண்டின் இறுதி ( மே 31ஆம் தேதி) வரை பணி புரிவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் நிகழாண்டில் மே மாதமே பணி நிரவல் நடத்தப்பட்டதால், அதற்கு பின் ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் குறித்த பட்டியல் கணக்கிடப்படவில்லை. மேலும், ஆகஸ்ட் முதல் நாளிலேயே மாணவர் சேர்க்கை விவரம் சேகரிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பணி நிரவல் நடத்தப்பட்டதால், தற்போது உபரி பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறை பிரச்னை எழுந்துள்ளது.

மே மாதம் நடைபெற்ற பணி நிரவலின் போதும், மாவட்ட வாரியாக ஒரு பாடத்திற்கு 10க்கும் குறைவான பணியிடங்களுக்கு மட்டுமே பணி நிரவல் நடைபெற்றன. வட மாவட்டங்களில் குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மீண்டும் முறையாக பணி நிரவல் நடைபெற்றால் மட்டுமே, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்றார்.

புதிய பாடத்திட்டம் தயாரிப்பு - 4 இடங்களில் கருத்து கேட்பு


புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, மதுரை, கோவை உட்பட, நான்கு இடங்களில், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கலைத்திட்ட வடிவமைப்புக்குழு மற்றும் உயர்மட்டக்குழு என, இரு குழுக்களை, தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுக்களின் ஆலோசனை கூட்டம், ஜூலையில் நடந்தது.

நேற்று முன்தினம், இரண்டாவது முறையாக, டி.பி.ஐ., வளாகத்தில், கலைத்திட்டக்குழு கூடி ஆலோசித்தது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடமும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, வரும், 9ல், மதுரை; 11ல், கோவை; 22ல், சென்னை; 24ல், தஞ்சாவூர் என, நான்கு இடங்களில் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், பங்கேற்க விரும்புவோர், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி விபரம் பெறலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, பாடத்திட்டம் குறித்து, கருத்துக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு; முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்


'தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், நாடு முழுவதும் ஆசிரியர் தின மாக கொண்டாடப்படுகிறது. இதில், மாநிலங் களில் தனித்தனியாகவும், தேசிய அளவில் தனியாகவும், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, மாநில அளவில் விருது பெறு வோரின் பட்டியலை, வரும், 20க்குள், மாநில குழுவுக்கு அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், 'மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத் திய, முன்மாதிரியான ஆசிரியர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.'அவர்கள் விண்ணபிக்க வில்லை என, விட்டு விடக்கூடாது. புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது' என, தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு, நல்லாசிரியர் விருது வழங்கியதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. அதிகாரிகளின் உறவினர்கள், மேல் அதி காரிகளுக்கு வேண்டியவர்கள், ஆசிரியர் சங்கத் தினருக்கு நெருங்கியவர்கள், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருக்கு, இந்த விருது வழங்க, சிபாரிசு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நடைமுறை, பள்ளிக்கல்வி செயலர், உதய சந்திரன், இயக்குனர், இளங்கோவன் கூட்டணி யில், மாற்றப்படும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ள னர். அதேபோல, 2016 குழுவில் இடம் பெற்ற அதி காரிகளே, தங்கள் பெயரை சிபாரிசு செய்த சம்பவங்களும் நடக்காது என, நம்பிக்கையில் உள்ளனர்.