இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, July 22, 2016

பெண்கல்வி ஊக்கத்தொகை : ஆதார் எண் கட்டாயம்


பெண்கல்வி ஊக்கத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும், என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 18 வயது நிறைவடைந்த தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்வியாண்டு இறுதியில் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். கடந்த ஆண்டு முதல் ஆன்-லைன் முறையில் உதவித்தொகை வழங்கும் பணி நடக்கிறது. இதற்காக 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி., மாணவிகள் தேர்வு செய்யும் பணி தற்போது நடக்கிறது.

உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவிகள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மாணவிகள் 18 வயது நிறைவடையும் போதுதான் உதவித்தொகை அவர்களுக்கு கிடைக்கும் நிலையில், பல மாணவிகள் தங்களின் வங்கி கணக்கை மாற்றிவிடுவதால், உதவித்தொகை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டால், அவர்கள் வேறு வங்கி கணக்கு துவக்கினாலும் சிக்கல் இல்லை.

ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்த முடியும். எனவே, மாணவிகள் ஆக.,31க்குள் ஆதார் எண் பெற்று வழங்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் சிறப்பு குழு அமைத்து ஆதார் எண் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு 25 முதல் விண்ணப்பம்


பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25 முதல் துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பிசியோதெரபி என்ற, மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25ல் துவங்குகிறது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:

மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஜூலை, 24ல் வெளியாகும். ஜூலை, 25 முதல் ஆக., 4 வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆக., 5க்குள் தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப படிவங்களை, www.tnhealth.org மற்றும், www.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

DEE Proceeding Date:22/7/16 -2016-17 Transfer Counselling- Deployment Counselling Guidelines and Instructions Reg

IBPS notification

https://app.box.com/s/lcv9cier9ykbfdvlsshj2vppmw148068

EMIS procedings

TIRUPUR DEEO proceding regard JRC

Thursday, July 21, 2016

TNPSC Group I hall ticket

Click below

http://182.18.164.63/TnpscadmitCardMWE/frmLogin092015MWE.aspx

வி.ஏ.ஓ.: ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு


கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஆகஸ்ட் 1 முதல் 8-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கான எழுத்து தேர்வுக்கான முடிவு ஜூலை 1-இல் வெளியிடப்பட்டது.

இதில், தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் (www.tnpsc.gov.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேதி-நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவு அஞ்சல், குறுஞ்செய்தி-மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும்பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்குரூ. 24,130 கோடி ஒதுக்கீடு


நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிகளைத் தரம் உயர்த்துதல்:

தமிழக அரசு சார்பில் தரமான கல்வி வழங்கும் வகையில், ஆசிரியர் -மாணவர் விகிதம் தொடக்கப் பள்ளிகளில் 1:25, நடுநிலைப்பள்ளிகளில் 1: 24, உயர்நிலைப்பள்ளிகளில் 1:26, மேல்நிலைப்பள்ளிகளில் 1:37 ஆகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய விகிதத்தைவிட அதிகமாகும். புவியியல் தகவல் முறைப்படி தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபட செயலி உதவியுடன் பள்ளிகள் தொடங்குவது, பள்ளிகளின் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளால் குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்ட விதிகளின்படி, பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த 2,31,404 குழந்தைகள், இதுவரை தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். நிகழாண்டில் 86,199 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதற்காக ரூ.125.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகள்: கடந்த ஆண்டு கழிப்பறைகள் பராமரிப்புக்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் ரூ.57.63 கோடி வழங்கப்பட்டன. இந்தத் திட்டம் மத்திய அரசால் பாராட்டப்பட்டதுடன், பிற மாநிலங்களும் இதை முன்மாதிரியாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நிகழாண்டிலும் தொடர்கிறது.

அத்துடன் நடப்பாண்டில் ரூ.59.25 கோடியில் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,339 கழிப்பறை வசதிகள் அமைக்கப்படும். நபார்டு வங்கிக்கடன் உதவியுடன் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்த ரூ. 333.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்எஸ்ஏ-வுக்கு ரூ. 2,329.15 கோடி: அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றுக்கு 2015-16-ஆம் ஆண்டுக்கான பங்குத் தொகை ரூ.848 கோடி வரப்பெற்றது. எனினும் இந்தத் திட்டங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்ய மாநில அரசு தேவையான உதவி செய்து வருகிறது.

அதன்படி அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ரூ.2,329.15 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு ரூ.1,139.52 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.2,705 கோடியில் நலத் திட்டங்கள்: மாணவர்களுக்கு மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், மிதிவண்டிகள், பேருந்து கட்டணச் சலுகைகள் உள்ளிட்ட அனைத்து நலத் திட்டங்களுக்கும் ரூ.2,705 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறைந்தது இடைநிற்றல்: கடந்த ஆண்டில் அரசின் சீரிய முயற்சியால் இடைநிற்றல் விகிதம் தொடக்க நிலையில் 0.90, நடுநிலையில் 1.55, இடைநிலையில் 3.76 அளவில் குறைந்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் இடைநிற்றலை மேலும் குறைக்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'குரூப் 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 1' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: துணை கலெக்டர், டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில், 74 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், பணியிடம் நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலை, 10ம் தேதி அறிவிப்பு வெளியானது. இதற்கான முதன்மை எழுத்து தேர்வு, வரும், 29, 30 மற்றும், 31ம் தேதிகளில், சென்னையில், 38 தேர்வு மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வாணைய இணையதளங்கள், www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகியவற்றி-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த சந்தேகங்களுக்கு, 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது, contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு


பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 2 'ப்ளூ' பிரின்ட் அடிப்படையில், கடந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச கற்றல் கையேடு வழங்கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதனை தயாரித்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முன்கூட்டியே கையேடு வழங்கப்படுகிறது. மழைவெள்ளம் பாதித்த சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேட்டுடன் மன நல ஆலோசனையும் வழங்கப்பட்டதால் தேர்வில் அதிகளவு தேர்ச்சி பெற முடிந்தது.

இதையடுத்து, தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற முடியாதவர்கள் தேர்ச்சி பெறவும், சராசரியாக படிப்பவர்கள் அதிக மதிப்பெண் பெறவும், நல்ல மதிப்பெண் பெறுவோர் மாநில ரேங்க் பெறவும் இந்த சிறப்பு கையேடு உதவும். இதற்காக ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே ஒவ்வொரு பாடத்திலும் அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் மூலம் இதர ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட்டில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

REVISED leave list tirupur dist -pdf

Click below

https://app.box.com/s/3m00j1lcm7ncz4haoljiwidcol0ilylg

TN Budget revised speech 2016-17

Click below

https://app.box.com/s/zo9r39uj15sjc5ngfohdgky50tannymo

TIRUPUR District revised leave list 2016-17

Wednesday, July 20, 2016

TN Budjet 2016-17

2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் உதவி திட்டங்கள், மானியங்களுக்காக ரூ.68,211.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கடலூர் மாவட்டத்தில் மேற்காெள்ள ரூ.140 கோடி ஒதுக்கீடு

* அடுத்த 5 ஆண்டுகளில் 13000 மெகாவாட் அனல் மின்சாரம், 2500 மெகாவாட் புனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

* 3000 மெகாவாட் சூரிய மின்சக்தியும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்.

* பண்ணை இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் கல்வி உதவித்தொகைக்கு ரூ.208 கோடி ஒதுக்கீடு

* திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி

* 2000 புதிய அரசுப் பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி கடன் வழங்கப்படும்.

* தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 2 லட்சத்துக்கு 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய்.

* ரூ.13,856 கோடி மின்சாரத்துறைக்கு மானியமாக வழங்கப்படும்.

* அரசு போக்குவரத்துறைக்கு ரூ.1295.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* லோக் அயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

* இலங்கை அகதிகளுக்காக ரூ.105.98 கோடி,  மாற்று திறனாளிகளுக்கு ரூ.396.74 கோடி ஒதுக்கீடு

* 4லிருந்து 8 கிாாமமாக உயர்த்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக ரூ.703.16 கோடி ஒதுக்கீடு

* இஸ்லாமிய உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000லிருந்து ரூ.1500 அக உயர்த்தப்படும்.

* 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும்.

அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்

* தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

* 100 யூனிட் இலவச மின்சாரத்தால் ஆண்டுக்கு ரூ.1607 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.183.24 கோடி நிதி ஒதுக்கீடு

* சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி ஒதுக்கீடு

* 500 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடியதால் அரசுக்கு ரூ.6,636.08 கோடி இழப்பு

* மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* இந்த நிதியாண்டில் வணிகவரித்துறை வருவாய் ரூ.67,629.45 கோடியாக இருக்கும்.

* அடுத்த ஓராண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

* வேலைவாய்ப்பு அலுவலகங்கள், வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமாக செயல்படும்.

* தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* முதல்வரின் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

* அடுத்த ஓராண்டில் நபார்டு வங்கி உதவியுடன் சாலை மேம்பாடு பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

* ரூ.24.58 கோடி நிதி ஒதுக்கி வைகை, நொய்யல் ஆறுகள் தூர்வாரி மேம்படுத்தப்படும்.

* ரூ.52.64 கோடியில் ஆற்றங்கரையோரங்களில் மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

* ரூ.422 கோடியில் 2673 வீடுகள் காவலர்களுக்கு கட்டப்படும்.

* தமிழகத்தின் வருவாய்த்துறை பற்றாக்குறை ரூ.15,854.47 கோடி, மொத்தம் நிதி பற்றாக்குறை ரூ.40533.84 கோடி

* அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

* அடுத்த ஓராண்டில் ரூ.420 கோடியில் சூரிய ஒளி மின்வசதி கொண்ட 20 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டம்.

* அடுத்த ஓராண்டில் 5.35 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்


ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது. இந்தாண்டில் கலந்தாய்வு விதிமுறையில் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது.

இதன்படி 1.6.2016க்கு முன் பணியேற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்தாண்டு கலந்தாய்வு ஆகஸ்டில் தான் நடந்தது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் 1.6.2016க்கு பின் தான் பணியேற்றனர். இந்த விதியால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது:

புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் நடக்கவுள்ள கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. 1.6.2015ல் கலந்தாய்வு நடந்திருந்தால் இந்த விதிமுறை சரியாக இருக்கும். ஆனால் ஆகஸ்டில் தான் கலந்தாய்வு நடந்தது.மேலும் சென்றாண்டு தலைமையாசிரியர்களாக பதிவு உயர்வு பெற்றவர்களுக்கும் கலந்தாய்வில் எவ்வித தளர்வும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு இதுவும் ஏமாற்றமான விஷயம் தான். சம்பந்தப்பட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு வந்து அனைவரும் பங்கேற்க கல்வித்துறை வாய்ப்பளிக்க வேண்டும்.

மேலும் இக்கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் மற்றும் ஆசிரியர் பணியிடங்களையும் வெளியிட்டு கலந்தாய்வில் சேர்க்கப்பட வேண்டும், என்றார்.

மாணவர்கள் பிறந்த நாளிலும் சீருடை அணிவது கட்டாயம்; கல்வித்துறை உத்தரவு


பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில் வர வேண்டும். மொபைல் போன், இரு சக்கர வாகனங்கள் கொண்டு வருவதற்கு தடை உள்ளிட்ட, 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



தமிழகம் முழுவதும், பள்ளி துவங்கி இரு மாதங்கள் ஆகிவிட்டன. மாணவர் சேர்க்கை, வளாக பராமரிப்பு, கல்வி திட்டங்கள் பின்பற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு நடைமுறைகளுக்கு, கல்வித்துறை சார்பில், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அறிவுறுத்துவது வழக்கம். மாணவர்கள் ஒழுக்க நெறிமுறைகள் பின்பற்றுவதை, கட்டாயமாக்கும் விதமாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதில், கல்லுாரி மாணவர்களை போல, மேல்நிலை வகுப்பு மாணவர்களும், முறுக்கு மீசை வைத்து, கடுக்கன் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். இது, மாணவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளில் இருந்து மீறும் செயலாகும். இதனால், மாணவர்கள் சீருடை அணியும் முறை, இறுக்கமில்லாத அரைக்கை சட்டை மட்டும் அணிதல், தலைமுடி வெட்டுதல், கைகளில் ரப்பர் பேண்டு, செயின் அணிந்து பள்ளிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிறந்த நாளாக இருந்தாலும், சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். விடுப்பு எடுப்பதாக இருந்தால், பெற்றோர் கையெழுத்தோடு, வகுப்பு ஆசிரியரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என, 11 விதிமுறைகள் வகுக்கப்பட்டு, தலைமையாசிரியர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில்,'கல்வித்துறை அறிவித்துள்ள நெறிமுறைகளை மாணவர்களுக்கு எடுத் துக்கூறியுள்ளோம். 'இருசக்கர வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெற்றோருக்கு தெரியப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

பிளஸ்2 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது


பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த மே வெளியானது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக சிறப்புத் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.

சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், துணை தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட மாணவர்கள் விடைத் தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tuesday, July 19, 2016

M.Phil. உயர்கல்வி முன் அனுமதி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கலாம் - தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம்: மனப்பாட பதிலுக்கு இனி 'சென்டம்' கிடைக்காது


பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாளில், இந்த ஆண்டு பெரியளவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இனி, மனப்பாட பதிலுக்கு முழு மதிப்பெண் கிடைக்காது. மருத்துவம், இன்ஜி., மற்றும் சட்டம் போன்ற மேல் படிப்புகளில், பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், மாணவர்கள், கல்லுாரியில் சேர்ந்த பின், முதல் ஆண்டு பருவத்தேர்வில் பல பாடங்களில், 'பெயில்' ஆகின்றனர்.

மாணவர்கள் திணறல் : இதுகுறித்து ஆய்வு செய்ததில், மனப்பாட கல்வியில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர் பலர், கல்லுாரி பாடங்களை புரிந்து படித்து, பதில் எழுத திணறுவது தெரிய வந்தது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன்பின், பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடத்தின் உள்பகுதிகளில் இருந்தும் புதிய கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த மாற்றம் தொடர்பாக, கடந்த கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, அரசு பள்ளிகளுக்கு தேர்வுத் துறையில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த தகவல், நமது நாளிதழில், கல்வி ஆண்டு துவக்கத்திலேயே வெளியானது. பொதுத்தேர்விலும் அதேபோல், புதிய வினாக்கள் இடம் பெற்றன. இதை தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில், இந்த ஆண்டும் புதிய மாற்றங்களை கொண்டு வர, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக உயரதிகாரிகள், கல்வியாளர்கள், வினாத்தாள் தயாரிப்பு ஆசிரியர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை முடிவு செய்வது குறித்து, குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., மற்றும் உயர்கல்விக்கான கல்வி நிறுவனங்களில், மனப்பாட முறை இல்லை. வினாத்தாளில் உள்ள கேள்வியை புரிந்து கொண்டு, அதற்கான பதிலை சரியாக எழுதினால் போதும். ஆனால், தமிழக பள்ளிக்கல்வி மாணவர்கள், இது போன்று புதிய பதிலை எழுத இன்னும் பழகவில்லை.

எனவே, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பாடப் புத்தகத்தில் உள்ள வரிகளை, அப்படியே மனப்பாடம் செய்து எழுதுகின்றனர். புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேள்வியை தவிர, வேறு கேள்வியை கேட்டால், மாணவர்கள் திணறுகின்றனர்.

புரிந்து பதில் எழுத... : புதிய கேள்விகளுக்கு பதில் எழுதும் பழக்கத்தை, கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் அறிமுகம் செய்தோம். இந்த ஆண்டு, வினாக்களின் பொருள் மாறாமல், வினாக்களின் வார்த்தைகளை மாற்றி கேட்கப்பட உள்ளது. எனவே, கேள்வியை மாணவர்கள் நன்றாக புரிந்து, பதிலை எழுத வேண்டும். இதற்கு, பள்ளியிலேயே மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும். பாடத்தில் கூறப்படும் கருத்தையும், தொழில்நுட்பத்தையும் புரிந்து கொண்டு, சரியான பதிலை, பொருள் மாறாமல் எழுத வேண்டும். அதனால், மாணவர்களின் விடை எழுதும் முறையில் மாற்றம் வரும். வரும் தேர்வுகளில், இந்த அடிப்படையில் எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே, முழு மதிப்பெண்ணான, 'சென்டம்' அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்ற வகையில், ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.