இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, February 24, 2016

மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்


பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது. அதற்காக பல்கலைகள், பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.இதனால் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அனைவருக்கும் தேசிய கண்டுபிடிப்பு இயக்கத்தை (ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்) அறிமுகம் செய்தது. டில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த திட்டம் ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகமாகியது. தமிழகத்தில் நேற்று 18 கல்வி மாவட்டங்களில் துவங்கப்பட்டது. இதன்மூலம் இளம் விஞ்ஞானிகளாக மாணவர்கள் உருவாக்கப்பட உள்ளனர். இதுதவிர அறிவியல், கணித பாடங்களில் மாணவர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிப்பது, கண்டுபிடிப்பு திறன்களை வெளிக்கொணர்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளன.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் துவங்கப்பட்டது. நேற்று திண்டுக்கல் சின்னாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்க விழா நடந்தது. இதில் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மேரி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வேளாங்கன்னி ஒருங்கிணைப்பாளர்கள் சேசுராஜா பயாஸ், ராஜா முன்னிலை வகித்தனர்.சேசுராஜாபயாஸ் கூறியதாவது:

கணிதம், அறிவியல் கற்பித்தலில் எளிமையும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் பயனளிக்கும். இதன்மூலம் புதிய கண்டுபிடிப்பாளர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம், என்றார்.

Monday, February 22, 2016

PLUS two hall ticket

Click below

http://www.tndge.in/

பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு


அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள், 'சென்டம்' எனப்படும், 100 சதவீத மதிப்பெண் பெறுவதற்காக, கடும் முயற்சி எடுக்கின்றனர். தேர்வெழுதும் போது, அதில் சில வினாக்களுக்கு விடை தெரியாவிட்டால், அவர்கள் எழுதிய விடைத்தாள் முழுவதிலும், குறுக்கு கோடிட்டு அடித்து விடுகின்றனர்.இதன் மூலம், அவர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தில், 'பெயில்' ஆவதால், உடனடி தேர்வெழுதி, அதில் சென்டம் பெற முயற்சிக்கின்றனர்.

மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ப்பதற்காக, பிளஸ் 2 மாணவர்களை சென்டம் எடுக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும், 'டுடோரியல்' நிறுவன ஆசிரியர்கள், இது போன்ற, 'ஐடியா'க்களை தருகின்றனர்.மாணவர்களின் இந்த குறுக்கு வழியை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 'மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதிவிட்டு, அந்த விடைத்தாளை குறுக்கு கோடிட்டு, முழுவதுமாக அடித்து விட்டால், அது ஒழுங்கீனமாகக் கருதப்படும். இந்த ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்கள், அடுத்து வரும், இரண்டு பருவத்துக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.இதற்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: தேர்வுத் துறை விதிகள் என்ன என்பதை, எந்த பெற்றோருக்கும் தெரிவிப்பதில்லை. எந்த அடிப்படை தகவல்களையும் இணையதளத்தில் வைக்கவில்லை. தேர்வு கால அட்டவணையை கூட பதிவேற்றம் செய்யவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அடிப்படை தகவல்களை, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில், எந்த விதியையும் பின்பற்றாமல், யாரிடமும் கருத்து கேட்காமல், புதிய தண்டனை விவரங்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை, உடனே வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு பெற்றோர் கூறினர்.'கிரிமினல்கள் போல் பார்ப்பதா?'தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நல சங்க தலைவர் எஸ்.அருமை நாதன் கூறியதாவது: தேர்வுத் துறை தன் விதிகளை, அனைவருக்கும் தெரியும்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

அதே போல், மாணவர்களுக்கு முன்கூட்டியே விதிகளை அறிவிக்க வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு, விதிகளை விளக்கமாக எழுத்து மூலம் காட்டியது இல்லை. 'விடைத்தாளை அடித்தால், இரண்டு பருவங்களுக்கு தேர்வு எழுத தடை' என்ற அறிவிப்பு, மாணவர்களை விபரீத உணர்வுகளுக்கு கொண்டு செல்லும். மாணவர்களை கிரிமினல்களை போல் பார்க்கும் மனப்போக்கை தேர்வுத் துறை மாற்ற வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் போராட்டக்குழு. விளக்கக் கூட்டங்களில் பங்கேற்போர் விபரம்.

Click below

https://app.box.com/s/haiehnsaa1svyx3454het4v3jotnvtz1

Sunday, February 21, 2016

பள்ளி தேர்வுகள், தேர்தல் வருவதால்அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் 3 மாதம் ஒத்திவைப்பு: ஜாக்டோ அறிவிப்பு


ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட, 28 ஆசிரியர் சங்கங்களை ஒன்றிணைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ) உருவாக்கப்பட்டது. ஜாக்டோ சார்பில், ‘புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது.இந்தநிலையில், ஜாக்டோவின் உயர்மட்டக்குழுக் கூட்டம் திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ் பள்ளியில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற முன்னாள் மேலவை உறுப்பினரும், அமைப்பாளருமான முத்துசாமி, துணை அமைப்பாளர் இளங்கோ ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜாக்டோ தனது கோரிக்கைக்காக தொடர்ந்து போராடி வந்தது. ஆனால் இந்த அரசு செவிமடுக்கவில்லை. 6 கட்ட தீவிர போராட்டத்துக்கு பிறகும் முதல்வர் ஜெயலலிதாவும், நிதியமைச்சர் பன்னீர்செல்வமும் கண்டுகொள்ளாத செயல் எங்களை அவமதித்து, அவமானப்படுத்தும் செயல். இந்த அரசின் மதிக்காத செயலை கடுமையான வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். கோரிக்கைகளை வென்றெடுப்பது தான் எங்கள் ேநாக்கம், லட்சியம்.

ஆனால் மார்ச் மாதம் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித்ேதர்வுகள், சட்டமன்ற ேதர்தல் வர உள்ளதால், ேபாராட்டத்தை 3 மாத காலத்துக்கு ஒத்தி வைக்கிறோம். இனி எந்த ேபாரட்டமும் நடத்தி பயனில்ைல. எனவே, எங்கள் 15 அம்ச ேகாரிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் ெவளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்


பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழ் அல்லாத இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற, 11 மொழிகளை தாய்மொழியாக கொண்ட, 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 2006ல், தமிழக அரசு அமல்படுத்திய அரசாணைப்படி, அனைத்து மொழி மாணவர்களும் தமிழை கட்டாய பாடமாக படிக்க வேண்டும்.

இதன்படி, 'தமிழ் படித்தவர்கள், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை கட்டாய தேர்வாக எழுத வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு, 'முறையாக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; புத்தகங்கள் வழங்கப்படவில்லை' எனக்கூறி, பிறமொழி மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக மொழி சிறுபான்மை பாதுகாப்பு பேரவை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதில், தமிழ் கட்டாய தேர்வு உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, பிறமொழி மாணவர்களுக்கான தேர்வு பட்டியலில் இருந்து, தமிழ் பாடத்தை நீக்கும் பணியை தேர்வுத்துறை அவசரமாக மேற்கொண்டது; ஆனால், அரசு அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இதில், பெரும்பாலான மாணவர்கள் நிம்மதி அடைந்தாலும், இன்னொரு தரப்பில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, கடந்த காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில், தமிழில், 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தமிழ் பாடம் நீக்கப்படவில்லை. அதனால், பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விழிப்புணர்வு இல்லை: இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: விண்ணப்பம் அளித்த மாணவர்களுக்கு மட்டும் விலக்கு என்கின்றனர். கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மாணவர்களுக்கு, இந்த பிரச்னை பற்றிய விழிப்புணர்வு இல்லை; பள்ளி தலைமை ஆசிரியர்களும் வழி நடத்தவில்லை. பள்ளிகளில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாததால் மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை .சமீபத்தில் வெள்ள பாதிப்பால் தங்கள் மாநிலத்துக்கு சென்று திரும்பிய பலருக்கு, இந்த பிரச்னை பற்றியே தெரியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீட்டுக்கடனுக்கு ஏற்ற வங்கி எது?

வீட்டுக் கடன் இல்லாமல் சொந்த வீடு என்ற எண்ணத்தை இன்று யாரும் நினைத்துகூடப் பார்க்க முடியாது. சொந்த வீடு வாங்குவதில் வீட்டுக் கடன் அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒருவர் எந்த வீட்டை வாங்கலாம் என்ற முடிவைகூட விரைவாக எடுத்துவிடுவார்.

ஆனால், எந்த வங்கியில் வீட்டுக் கடன் வங்கலாம் என்பதில் குழம்பிவிடுவார். பொதுத் துறை வங்கியில் வாங்கலாமா, தனியார் வங்கியில் வாங்கலாமா எனக் குழப்பம் அதிகரிக்கும். விரைவாக எந்த வங்கியில் வங்கிக் கடன் கிடைக்கும் என்றும் கணக்குப் போடுவார்கள். வீட்டுக் கடன் வழங்குவதில் பொதுத்துறை, தனியார் வங்கிகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன?

இன்று வீட்டுக் கடன் வழங்காத வங்கிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். எல்லா பொதுத் துறை வங்கிகளும் வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. பொதுத் துறை வங்கிகளுக்குப் போட்டியாகத் தனியார் வங்கிகளும், வீட்டு வசதி நிறுவனங்களும் வீட்டுக் கடன்களைப் போட்டி போட்டு வழங்கி வருகின்றன. எல்லாப் பொதுத்துறை வங்கிகளும் வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன என்றாலும், ஒருசில பொதுத்துறை வங்கிகளே வீட்டுக் கடன் வழங்குவதில் மிகத் தீவிரமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

தனியார் வங்கிகளைவிடப் பொதுத் துறை வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டிக் குறைவாக இருக்கும் என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அது உண்மைதான். பொதுத்துறை வங்கிகளில் கடனுக்கான வட்டி பெரும்பாலும் சிறிது குறைவாக இருக்கும். காரணம், பொதுத் துறை வங்கிகளுக்கு நிதித் திரட்டும் செலவு (அதாவது, காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) குறைவு என்பதுதான் காரணம். அதனால் வீட்டுக் கடனை குறைந்த வட்டியில் பொதுத்துறை வங்கிகளால் தர முடிகிறது என்று காரணம் கூறப்படுகிறது. ஆனால், தனியார் வங்கிகளுக்கு நிதி திரட்டும் செலவு அதிகமாக இருப்பதால் அவற்றால் அரசு வங்கிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு குறைவான வட்டியில் கடன் தர முடிவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தனியார் வங்கியில் வீட்டுக் கடன் விரைவாகக் கிடைக்கும் என்றும் பொதுத் துறை வங்கிகளில் தாமதமாகக் கிடைக்கும் என்ற ஒரு கருத்து எப்போதும் உண்டு. தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன் கேட்டு மனு கொடுத்த உடனேயே அதற்கான பணிகள் தொடங்கிவிடும். வங்கியின் பிரதிநிதி கடன் கேட்டவரை அணுகி என்னென்ன தேவை என்பதையெல்லாம் சொல்லிவிடுவார். மேலும் நேரடியாக வந்து விண்ணப்பம் கொடுப்பது, ஆவணங்களை வாங்கிச் செல்வது, வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனைக் கேட்பது என நமக்கு வேலையே வைக்கமாட்டார். வீடு அல்லது அலுவலகம் வந்துகூட எல்லாவற்றையும் முடித்துத் தருவார்.

ஆனால், பொதுத் துறை வங்கிகளில் நிலவரம் அப்படியில்லை. கடன் கேட்பவர்தான் எல்லாவற்றுக்கும் வங்கியை அணுக வேண்டும். பொதுத் துறை வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் நேரடியாக வந்து விண்ணப்பம் கொடுப்பது, ஆவணங்களை வாங்கிச் செல்வது போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. மேலும் தனியார் வங்கியில் வீட்டுக் கடனை வாடிக்கையாளருக்குப் பெற்றுத் தரும் பிரதிநிதிக்கு ஊக்கத் தொகைக் கொடுப்பதும் உண்டு என்பதால் தனியார் வங்கிப் பிரதிநிதிகள் கால நேரம் பார்க்காமல் பணியாற்றவும் செய்கிறார்கள். மேலும் தனியார் வங்கியில் ஒவ்வொரு மாதமும் இவ்வளவு வீட்டுக் கடன் வழங்க வேண்டும் என்ற இலக்கும் உள்ளது. இதன் காரணமாகவும் வீட்டுக் கடன் விரைவாக வழங்கப்படுகிறது.

பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரை ஆவணங்களை நிதானமாக ஆராயும். கட்டுமான அப்ரூவல் விஷயத்தில் பொதுத் துறை வங்கிகள் சிறிதும் சமரசம் செய்துகொள்வதில்லை. சொத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை முடிவு செய்த பிறகே வீட்டுக் கடன் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. தனியார் வங்கியிலும் ஆவணங்களைத் தீவிரமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்தே வீட்டுக் கடன் தருவார்கள். என்றாலும், பொதுத் துறை வங்கியில் அதற்குக் கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்படுவதும் உண்டு.

பொதுத் துறை வங்கிகளைவிடத் தனியார் வங்கியில் விரைவாகக் கடன் கிடைத்தாலும் வட்டிக் கடன் சிறிது கூடுதலாக இருக்கும். சுமார் 0.50 முதல் 1 சதவீதம் வரை கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு. உதாரணமாகத் தனியார் வங்கியில் ஒருவர் 20 லட்சம் ரூபாயை 9.90 சதவீத வட்டி வீதத்தில் 20 ஆண்டுகளுக்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதில் கூடுதலாக 1 சதவீத வட்டியைக் கணக்கிட்டால்கூட சுமார் 2 லட்சம் ரூபாய் கூடுதல் வட்டியாக வருகிறது. அரை சதவீதம் என்றால்கூட 1 லட்சம் ரூபாய் வந்துவிடுகிறது.

தனியார் வங்கியிலும், பொதுத் துறை வங்கியிலும் வீட்டுக் கடன் வாங்குவதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன. எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவது சிறந்தது என்பது இனி உங்கள் கையில்தான்!

Saturday, February 20, 2016

TNPTF NEWS


வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக  ஒத்தி வைப்பு. அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டக்குழு அறிவிப்பு.

இன்று நடைபெற்ற அரசு ஊழியர் மற்றும் அனைத்து ஆசிரியர் போராட்டக்குழு தற்பொழுது நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நமது போராட்டக்குழுவை தற்பொழுது பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. முதல்வரின் அறிவிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அறிக்கையையும் அமைச்சர் குழு கோரியுள்ளது.

முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த நமது அறிவிப்புகளை சில திருத்தங்களுடன் அரசாணை வெளியிடவும், மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை மையப்படுத்தியும் நமது போரட்டக்குழு சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் மாநில பொறுப்பாளர்கள் இன்று இரவு 8.00 மணிக்கு அமைச்சர் பெருமக்களை சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கோரிக்கைள் நிறைவேறாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போராட்டக்குழு கூடி முடிவு செய்யும்.

தகவல்: திரு.செ.பாலச்சந்தர், பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Friday, February 19, 2016

மகள் திருமணத்திற்கு பள்ளிக்கு 2 நாள் விடுமுறை : ஹெச்.எம் உள்பட ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம்?


ஜலகண்டாபுரம் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் மகள் திருமணத்திற்காக பள்ளிக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலைமை ஆசிரியை உள்பட அனைத்து ஆசிரியர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த குப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் குப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியையாக தமிழ்ச்செல்வி என்பவரும், 9 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். தலைமையாசிரியை தமிழ்செல்வியின் மகள் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்நிலையில் நேற்று முன் தினமும், நேற்றும் என 2 நாட்கள் பள்ளிக்கு திடீரென விடுமுறை விடப்பட்டது. மகள் திருமணத்தையொட்டி, உள்ளூர் பண்டிகை எனக் காரணம் கூறி, தலைமை ஆசிரியை 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விட்டதாக கூறப்படுகிறது.

முழு ஆண்டுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தலைமை ஆசிரியை தனது தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக, பள்ளிக்கு விடுமுறை அறிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியை தமிழ்செல்வி கூறுகையில், ‘‘குப்பம்பட்டியில் முனியப்பன் கோயில் பண்டிகை நடந்ததால், பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. வேறு காரணம் இல்லை,’’ என்றார். இது குறித்து பொது மக்கள் கூறுகையில், ‘‘குப்பம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக எந்த கோயில் பண்டிகையும் நடக்கவில்லை. தலைமை ஆசிரியர் கூறுவது போல், முனியப்பன் கோயிலிலும் பண்டிகை நடக்கவில்லை.

தனது மகளின் திருமணத்தில், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக, பள்ளி கல்விக்குழுவினருடன் சேர்ந்து பொய்யான தீர்மானத்தை நிறைவேற்றி, நடக்காத பண்டிகைக்கு விடுமுறை விட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இந்நிலையில், இந்த புகார் குறித்து நங்கவள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் ெசங்கோட்டுவேலு விசாரணையை துவக்கி உள்ளார். அவர் கூறுகையில், ‘‘குப்பம்பட்டி பகுதியில் புதன், வியாழன் ஆகிய 2 நாட்கள் உள்ளூர் கோயிலில் திருவிழா நடைபெற உள்ளதாக பள்ளி கல்விக்குழு தலைவர் கிருஷ்ணசாமி, அனைவரின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தற்போது புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட கல்வி அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று பள்ளி வழக்கம் போல் திறக்கப்பட்டது. இதனிடையே சுற்று வட்டாரத்தில் எங்குமே பண்டிகை நடக்காததால், தலைமை ஆசிரியை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை என்றே தெரிகிறது. ஆசிரியர்களும் இதற்கு ஒத்துழைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வித்துறை உயரதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பள்ளியின் ஆசிரியர்களிடமும், தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதன் முடிவில் ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. இச்சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்.கே.ஜி.,க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்' சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சார்பில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயித்து, அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கும், உள்கட்டமைப்பு, நில அளவு, அங்கீகார நிலை, அரசு விதிமுறைகளை பின்பற்றுதல், மாணவர், ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதி அமைத்தல் போன்ற பல அம்சங்களை கருத்தில் கொண்டு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.இதன்படி, முதல் கட்டமாக, கடந்த ஆண்டுடன் கட்டண நிர்ணயம் காலம் முடிந்த, 10 ஆயிரம் பள்ளிகளுக்கு அடுத்த,இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பல பள்ளிகளுக்கு, 40 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தான், கல்வி கட்டணம் அதிக அளவு வசூலிக்கப்படுகிறது. சென்னை, கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில், எல்.கே.ஜி.,க்கான கல்வி கட்டணமாக, 42 ஆயிரத்து, 500 ரூபாய் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பள்ளிகள்:

நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள்,  6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே வகுப்புகள் நடத்துகின்றன. இவற்றிலும் பல பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இவற்றில், வித்யா விகாஸ், வெற்றி விகாஸ் ஆகிய பள்ளிகளில், பிளஸ் ௨ படிப்புக்கு, 30 - 35 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 18, 2016

ஆதார் எண் சேகரிக்ககாலக்கெடு நீட்டிப்பு


தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில், பொதுமக்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, தமிழகத்தில், ஜன., 18 முதல் பிப்., 5 வரை, வீடு வீடாகச் சென்று, ஆதார் எண் சேகரிக்கும் பணி நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.பணி நிறைவடையாததால், பிப்., 25 வரை இப்பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.