இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 31, 2015

‘பான்’ எண் கட்டாயம் இன்று முதல் அமல் ‘பான்’ எண் இல்லாதவர்கள் தவறான தகவல் அளித்தால் 7 ஆண்டு ஜெயில் மத்திய அரசு எச்சரிக்கை


குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ‘பான்’ எண் கட்டாயம் என்ற நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. ‘பான்’ எண் இல்லாதவர்கள், தவறான தகவலை அளித்தால், 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.பான் எண் கட்டாயம் வருமான வரித்துறை சார்பில் பொதுமக்களுக்கு நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மட்டுமின்றி, சொத்து பரிவர்த்தனைகளுக்கும் இந்த எண் கேட்கப்படுகிறது.உள்நாட்டில் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இதில் மேலும் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஓட்டல் பில்தொகை, வெளிநாட்டு விமான பயண டிக்கெட் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தினால், ‘பான்’ எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

இன்று அமல் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினாலோ, ரூ.10 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துகள் வாங்கினாலோ, கேஷ் கார்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தினாலோ, பட்டியலிடப்படாத கம்பெனிகளின் பங்குகளை ரூ.1 லட்சத்துக்கு மேல் வாங்கினாலோ ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என்று அறிவித்தது. இவை உள்பட மொத்தம் 20 பரிவர்த்தனைகளுக்கு ‘பான்’ எண் கட்டாயம் ஆக்கப்பட்டது.இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது.படிவம் இந்நிலையில், ‘பான்’ எண் இல்லாதவர்கள், தவறான தகவலை அளித்தால், 7 ஆண்டுவரை ஜெயில் தண்டனை அளிக்க வருமான வரி சட்டத்தில் வழிமுறை இருப்பது தெரியவந்துள்ளது.‘பான்’ எண் இல்லாதவர்கள், ‘பான்’ எண் கட்டாய வரம்புக்குள் பரிவர்த்தனை செய்தால், அவர்கள் ‘படிவம் எண்–60’–ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

ஒரே பக்கம் கொண்ட அந்த படிவத்தில், அந்த நபரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களையும், ரொக்கம், காசோலை, கார்டு, வரைவோலை, ஆன்லைன் பரிமாற்றம் போன்றவற்றில் எந்த வழிமுறையில் அவர் பரிவர்த்தனை செய்தார் என்ற விவரத்தையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.அவரது மொத்த வருமான விவரமும், படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும். விவசாய வருமானமும், விவசாயம் அல்லாத வருமானமும் பூர்த்தி செய்யும்வகையில், தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ‘ஆதார்’ எண் நிரப்ப தனிஇடம் இருக்கும்.அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தையும் (ஆதார், வாக்காளர் அட்டை போன்றவை) இணைக்க வேண்டும்.7 ஆண்டுவரை ஜெயில் இப்படி ‘பான்’ எண் இல்லாதவர்கள் பூர்த்தி செய்த படிவம் எண் 60–ல் ஏதேனும் தவறான, பொய்யான விவரங்கள் இடம்பெற்று இருந்தால், அவர்கள் மீது வருமான வரி சட்டம் 277–வது பிரிவின்கீழ் வழக்கு தொடர வருமான வரித்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பொய் தகவல்கள் இடம்பெற்றது நிரூபணமானால், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய இருந்த தொகை ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் 6 மாதம் முதல் 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய நினைத்த தொகை, ரூ.25 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் 3 மாதம் முதல் 2 ஆண்டுவரை கடுங்கால் தண்டனை விதிக்கப்படும்.இத்தகவல்களை வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அரசுப் பள்ளிகளில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம்!


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் தொடர வேண்டும். இதற்கான ஆசிரியர்களையும் நியமித்து தனியார் பள்ளிகளுக்கு ஈடாக மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது. முப்பருவ கல்வி முறையில் பாடப் புத்தகங்களைப் பிரித்து வழங்கி, மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கணினித் தொழில்நுட்பங்கள் தொடர்பான பாடத் திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி, சிபிஎஸ்இ பாடத் திட்டங்களில் ஆரம்பக் கல்வி முதல் கணினி அறிவியல் கற்பிக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் போன்று கணினி அறிவியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கைவிடப்பட்ட கணினி பாடம்: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட போது, 6ஆம் வகுப்பு தொடங்கி 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்காக புத்தகங்கள் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஆனால், ஓராண்டிலேயே திடீரென கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டது. கணினி அறிவியல் பாடம், கடந்த 2004 முதல் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 1,200 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அங்கு கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்படவில்லை. கணினி அறிவியல் ஆய்வகங்கள் இருந்தும் பாடத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. கணினி அறிவியல் பாடத்துக்கும் நீண்ட காலமாகப் போதிய ஆசிரியர்கள் நியமிக்காமல் பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் வேதனை: இதுகுறித்து கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலர் வெ.குமரேசன் கூறியதாவது:

மேல்நிலைப் படிப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை ஏராளமான மாணவர்கள் விரும்பித் தேர்வு செய்து படிக்கின்றனர். ஆனால், தமிழக அரசுப் பள்ளிகளில் உயர்நிலை வரை கணினி அறிவியல் பாடம் இல்லாமல் உள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வந்து பல கோடி ரூபாய் செலவிட்டு புத்தகங்களை அச்சிட்டு வழங்கினர். ஆனால், அவை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பயன்பாடின்றிக் கிடக்கின்றன. தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், 2,000 பள்ளிகளில் மட்டுமே கணினி அறிவியல் பாடத் திட்டம் உள்ளது. இதற்காக, கடந்த 2004ஆம் ஆண்டில் 1,800 கணினி ஆசிரியர்களையும், அதன் பின்னர் 2010-இல் 190 ஆசிரியர்களை மட்டுமே தேர்வு செய்தனர். அதன்பின்னர், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 2,000 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வரவில்லை.

அண்மையில், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 400 பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் இல்லை. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கணினிகளும், ஆசிரியர்கள் இல்லாமல் முடங்கிய நிலையில்தான் உள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்கு பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் நிலை உள்ளது. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் படிப்படியாக கணினிப் பாடம் கொண்டு வரப்படும்; ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல முறை அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. புதிய கல்விக் கொள்கை, மின்யுக இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டத்தில் கணினி அறிவியல் பாடத் திட்டத்தை ஆரம்பப் பள்ளி முதலே கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும். பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். பி.எட்., கணினி அறிவியல் முடித்துள்ள 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதைய சூழலில் கணினிப் பாடம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பிரிவு உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்து அனுப்பும் பாடப் பிரிவுகளையே நடத்தி வருகிறோம். இதுகுறித்து அரசு தரப்பில்தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

Tuesday, December 29, 2015

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015

2017 மார்ச் முதல் அஞ்சலகங்கள் வங்கிகளாக செயல்படும்


அஞ்சலகங்கள் வங்கிகளாக மாறும் திட்டம் 2017 மார்ச் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அஞ்சலகங்களை பேமன்ட் பேங்க் எனப்படும் பணம் வினியோகிக்கும் வங்கிகளாக மாற்றும் திட்டம் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். அஞ்சலகங்களில் தொடங்கப்படும் பேமன்ட் வங்கியுடன் இணைந்து செயல்பட உலக வங்கி, பார்கிலே நிறுவனம் உள்ளிட்ட 40 சர்வதேச நிதி அமைப்புகள் ஆர்வம் காட்டி யுள்ளன. பேமெண்ட் வங்கி தொடங்க 11 நிறுவனங்களின் விண்ணப்பங்களை கொள்கை அளவில் ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் தபால் துறை உள்ளிட்டவற்றை பேமன்ட் வங்கிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை சார்பில் டிசம்பர் 25ம் தேதி முதல் சிறந்த நிர்வாக வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹரித்துவார், ஆஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் வைபி ஹாட் ஸ்பாட் உள்பட 25 வசதிகளை ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில், புதிய திட்டங்களை தொடங்குவதில் பிஎஸ்என்எல் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

டிசம்பர் 20ம் தேதி வரை 33 ஆயிரத்து 702 கிராமங்களுக்கு தொலை தொடர்பு வசதி கிடைக்கும் வகையில் 75 ஆயிரத்து 593 கிமீ தொலைவுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்திற்குள் 50 ஆயிரம் கிராமங்களுக்கும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம் கிராமங்களுக்கும் தொலை தொடர்பு வசதி மேம்படுத்தப்படும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இணைய சேவை சென்று சேர்வதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Sunday, December 27, 2015

ஜன.30ல் பஸ் மறியல் : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டம்


15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 30 முதல் பிப்.,1 வரை தொடர் பஸ் மறியல் நடத்தப்படும் என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொது செயலாளர் மயில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 6 வது ஊதியக்குழுவை அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு அரசு அமல்படுத்தியது. அதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்கவில்லை. இதனால் 70 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே 2006 ஜனவரிக்கு முன் மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பெற்றனர். அந்த சம்பளத்தை 6வது ஊதியக்குழுவின் மூலம் தமிழக அரசு பறித்துவிட்டது.

இதை எதிர்த்து எங்கள் கூட்டமைப்பு சார்பில், பல கட்டபோராட்டம் நடத்தப்பட்டது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது '6வது ஊதியக்குழு முரண்பாடு களையப்படும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்தாகும்,” என முதல்வர் ஜெ.,உறுதி அளித்தார். ஆனால், இன்று வரை அது நடக்கவில்லை.

தமிழகத்தில், ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் தோற்றத்தால், அரசு பள்ளிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றன.டிச.,18ல் நைரோபியில் நடந்த உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் கல்வி, சுகாதாரம் காக்கப்படும் என, மத்திய அரசு கையெழுத்திட்டது. இதன் மூலம் உலக வர்த்தக அமைப்பில் உள்ள எந்த நாடும் இந்தியாவில் உயர்கல்வி நிலையங்கள் துவக்கலாம். இதனால் கல்வி வணிகமாக மாறி, உயர்கல்வி எட்டாக்கனியாகும்.

பிப்ரவரி 5 முதல் 7ம் தேதி வரை துாத்துக்குடி, கோவில்பட்டியில் 6வது மாநில மாநாடு நடக்க உள்ளது. இதில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இவை உட்பட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ பேரமைப்பு சார்பில், ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடக்கும்.

ரூ.10 ஆயிரம் : 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் வழங்காததால், இடைநிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியருக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300; தர ஊதியம் ரூ.4,200 என நிர்ணயித்தது. ஆனால், தமிழக அரசு ரூ.5,200; ரூ.2,800 என குறைத்து நிர்ணயம் செய்துள்ளது, என்றார்.

டில்லியில் மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்


பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடும் மாணவர்களை கண்டறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த, டில்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி அரசின் புதிய திட்டம் பற்றி, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

டில்லியில், 1,000 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 15 லட்சம் பேர் படிக்கின்றனர். மாணவ, மாணவியர், பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கவும், எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட அடையாள அட்டைகளை மாணவர்களுக்கு வழங்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது. பள்ளியில் நிறுவப்படும் கண்காணிப்பு கேமராக்களுடன் எலக்ட்ரானிக் அடையாள அட்டைகள் இணைக்கப்படுவதால், மாணவ, மாணவியரின் நடமாட்டத்தையும், அவர்கள் பள்ளிக்கு மட்டம் போடுவதையும் கண்டறிய முடியும்.

டில்லியில், அறிவியல், விளையாட்டு, வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் தனித்துவத்துடன் கல்வி வழங்கும், 10 பள்ளிகள் கொண்ட, பள்ளி கிராமத்தை நிர்மாணிக்க, டில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, கிழக்கு டில்லியில், 30 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், ஓராண்டில் துவங்கப்படும். இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார். '

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்) பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Saturday, December 26, 2015

தமிழக அறநிலையத்துறை யால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும், ஜன., 1 முதல், 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய தடை

கோவில்களில் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, மதுரை உயர் நீதிமன்ற கிளை வழங்கி உள்ள தீர்ப்பை தொடர்ந்து, அறநிலையத்துறை, அனைத்து கோவில்களுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், 'கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும். 'ஆண்கள் வேட்டி, சட்டை, பைஜாமா குர்தா; பெண்கள் புடவை, ரவிக்கை, சுடிதார், ஷால், தாவணி போன்ற உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். 'ஷார்ட்ஸ், மிடி, குட்டை பாவாடை, ஜீன்ஸ், லெக்கிங்ஸ்'போன்ற ஆடை அணிந்து வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது.

'போலீஸ், தீயணைப்பு படையினர் போன்ற சீருடைப் பணியில் ஈடுபடுவோருக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை' என கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,293 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியரிடையே, அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்கு போட்டியிட விரும்பும் மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மாணவியர் தேர்வுஅந்த நிதியில், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட, மாநில, தேசிய விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், இவ்விருதுக்கு போட்டியிட பிற்படுத்தபட்டோர் மற்றும் பொதுப்பிரிவில், 4,612 பேரும், எஸ்.சி., பிரிவில் 1,621 பேரும், எஸ்.டி., பிரிவில் 60 பேரும் சேர்த்து மொத்தம் 6,293 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேரடியாக வரவுஇவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி மாணவ, மாணவியரின் வங்கிக்கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்படும்

Friday, December 25, 2015

'ஆன்-லைனில்' துறைத்தேர்வு


அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை மாநில அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் நடத்துகின்றன.

மின்னாளுமை திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறைகளும் 'ஆன்லைன்' மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பணியாளர் தேர்வாணையங்களும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து வகை தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் 'ஆன்லைனில்' வெளியிடப்படுகின்றன. ஒருசில போட்டித் தேர்வுகளும் 'ஆன்லைனில்' நடத்தப்படுகின்றன. 2016 முதல் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகளையும் 'ஆன்லைனில்' நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின் மாநில அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளும் 'ஆன்லைனில்' நடத்தப்படும்.

தேர்தல் பாதுகாப்பு பணியில்என்.சி.சி., மாணவர்கள்


வரும் 2016 பொதுத்தேர்தல் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., மாணவர்களை ஈடுபடுத்தும் திட்டம் உள்ளது. இதற்காக அவர்கள் குறித்த விபரங்களை தயார் செய்ய போலீசுக்கு தேர்தல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் பணியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை பயன்படுத்துதல் போன்ற சில ஆரம்ப கட்ட பணிகளில் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழலை தவிர்க்க, பள்ளி, கல்லுாரிகளில் உள்ள என்.சி.சி., மாண வர்களை பயன் படுத்தலாம் என, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான சில தகவல்களை பெற எஸ்.பி., அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., படை யிலுள்ள மாணவர்கள் எண்ணிக்கை பற்றி போலீசார் கணக்கெடுக்கின்றனர்.போலீசார் கூறுகையில்,

“தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படையை போன்று, என்.சி.சி., பிரிவு மாணவர்களை பயன்படுத்தலாம். தேர்தல் தேதி நெருங்குவதால் என்.சி.சி., படை குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ஏற்பாடு செய்ய இயலாது என்பதால் முன் கூட்டியே தயார் செய்கிறோம்,” என்றனர்

சான்டா கிளாஸ்

சாண்டா கிளாஸ்

செயிண்ட் நிக்கோலஸ் என்பவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில், தற்போது துருக்கி என அறியப்படும் மைரா என்ற இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு கிறிஸ்துவ பாதிரியார் ஆவார். தன் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால், அவர்களின் சொத்து முழுவதும் செயிண்ட் நிக்கோலஸை வந்தடைந்தது. அதனால் அவரும் பெரும் பணக்காரராக விளங்கினார். மிகவும் நல்லவராகவும் விளங்கினார் இவர். ஏழைகளுக்கு உதவுவதன் மூலமும், தேவை உள்ளவர்களுக்கு ரகசிய பரிசுகளை அளிப்பதன் மூலமாகவும் நல்ல பெயரைப் பெற்றிருந்தார்.

செயிண்ட் நிக்கோலஸ் சக்தி

இறந்த குழந்தைகளுக்கு மீண்டும் உயிரைப் பெற்று தரும் அபார சக்தியையும் செயிண்ட் நிக்கோலஸ் கொண்டிருந்தார். பேகன் கோவில்களை அழித்தல், கடலில் மரணிக்கும் பல கடலோடிகளின் உயிர்களை காத்தல் என அவரின் படைப்புகளுக்காகவும் அவர் புகழ் பெற்றிருந்தார்.

சாண்டா கிளாஸ்

சாண்டா கிளாஸ் என அறியப்படும் இந்த சிறுவன், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே உணவருந்தி, மீதமுள்ள ஐந்து நாட்களுக்கும் விரதம் இருப்பதாக நம்பப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக தற்போது இது கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறது. ஆனால் பலரும் இதனை உண்மையென நம்புகின்றனர். இனி, செயிண்ட் நிக்கோலஸ் என்பவர் உண்மையிலேயே யார் என்பதையும், அவரை ஏன் கிறிஸ்துமஸ் பண்டிகையின் தந்தை எனவும் சாண்டா கிளாஸ் எனவும் அழைக்கின்றனர் என்பதையும் பார்க்கலாம்.

ஏன் புகைப்போக்கியின் அருகில் காலுறை தொங்கவிடப்படுகிறது?

ஏழையாக இருந்த ஒரு ஆணுக்கு மூன்று மகள்கள் இருந்தார்கள். அப்பெண்களுக்கு வரதட்சணை அளிக்க அவனிடம் போதிய பணம் இல்லாததால், அவர்கள் திருமணம் ஆகாமல் இருந்தனர். ஒரு இரவு, சாண்டா கிளாஸ் என அறியப்படும் செயிண்ட் நிக்கோலஸ், அவன் வீட்டு புகைபோக்கி மூலம் தங்க நாணயங்கள் அடங்கிய மூட்டையை ரகசியமாக போட்டார். காய்வதற்காக நெருப்பின் அருகில் போடப்பட்டிருந்த காலுரையில் அது விழுந்தது. அதனால் தான் என்னவோ இன்றளவும் கூட புகைப்போக்கியின் அருகில் காலுறை தொங்க விடப்படுகிறது.

சாண்டா கிளாஸ் என்ற செயிண்ட் நிக்கோலஸ்

அவனுடைய இரண்டாம் பெண்ணின் திருமணத்திற்கும் இது தொடர்ந்தது. கடைசியாக, யார் இதனை அளித்தது என்பதை கண்டுபிடிக்க தீர்மானித்த அந்த ஏழை தந்தை, ஒவ்வொரு சாயங்காலமும் நெருப்பின் அருகில் மறைந்து கொண்டான். ஒரு நாள் இரவு, தங்கத்தை அளித்து வந்த நபரை அவன் பிடித்து விட்டான். அது தான் சாண்டா கிளாஸ் என்ற செயிண்ட் நிக்கோலஸ் என்பதை அவனம் தெரிந்து கொண்டான்.

சாண்டா கிளாஸ் என்ற செயிண்ட் நிக்கோலஸ்

இதனை வெளியே சொல்லி விட வேண்டாம் என ஏழை தந்தையிடம் நிக்கோலஸ் வேண்டிக் கொண்டார். அதற்கு காரணம் தன் மீது கவனம் விழுவதை அவர் விரும்பவில்லை. இருப்பினும், வெகு விரைவிலேயே நாட்டிலுள்ள அனைவரின் கவனத்திற்கும் இச்செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அதன் பின், யாருக்கு பரிசு கிடைத்தாலும், அது சாண்டா கிளாஸ் அளித்ததே என அனைவரும் நம்பத் தொடங்கினார்கள்.

சிறந்த துறவி

தன் இரக்க குணத்தின் காரணமாக, நிக்கோலஸ் ஒரு துறவியாக போற்றப்பட்டார். இவர் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது மாலுமிகளுக்கும் துறவியாக விளங்கினார். கடல் புயலின் போது மாலுமிகளை இவர் காப்பாற்றியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும், சிறுவர்கள் இந்த புனித துறவியை வழிபடுகிறார்கள். நம் வீட்டு புகைபோக்கி வழியாக இறங்கி வந்து பரிசுகளை வழங்க கோரி, பலர் இவருக்கு கடிதங்களும் எழுதுகிறார்கள்.