இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 24, 2015

10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக, பிப்ரவரி முதல் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு, மழை விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு தாமதத்தால், பிப்ரவரி, இரண்டாம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது' என்றனர்.

Wednesday, December 23, 2015

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன.

இந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லாப் பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து டிசம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் அனைத்துப் பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகங்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.

அவற்றை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதியே அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீலாது நபி, கிறிஸ்துமஸ் விடுமுறை நிறைவடைந்து, ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ, மாணவியரிடம் மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப் புத்தகம், நோட்டுகள் இருக்க வேண்டும் என மாநிலக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு


அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது;

இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது.

மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்

தத்கல்' கட்டணம் நாளை முதல் உயர்வு


தத்கல்' டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம், 10 முதல், 30 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது; நாளை முதல் இந்த கட்டண உயர்வு அமலாகும். திடீரென ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், தத்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஏற்கனவே தத்கல் முன்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், நாளை முதல் மீண்டும், 10 முதல், 30 சதவீதம் வரை உயர்த்தி, இந்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வகுப்பு பழைய கட்டணம் (ரூபாயில்) புதிய கட்டணம் (ரூபாயில்) குறைந்தபட்ச துாரம் (கி.மீ.,)
2ம் வகுப்பு இருக்கை 10 - 15 மாற்றமில்லை 100 2ம் வகுப்பு படுக்கை 90 - 175 100 - 200 500 'ஏசி' இருக்கை 100 - 200 125 - 225 250 'ஏசி' மூன்றடுக்கு 250 - 350 300 - 400 500 'ஏசி' இரண்டடுக்கு 300 - 400 400 - 500 500 எக்சிகியூட்டிவ் 300 - 400 400 - 500 250

Tuesday, December 22, 2015

பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு


அரசு பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாத தால் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக புகார் எழுகிறது.

இதை தடுக்கும் விதமாக ஊராட்சி ஒன்றிய, அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஊரகவளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி தலைமைஆசிரியர்கள் கண்காணிப்பில் துப்புரவு பணியாளர்கள் செயல்படுவர். ஊராட்சி நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படும்.ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.750 மற்றும் துடைப்பம், பிளீச்சிங் பவுடர், இதர செலவுகளுக்கு ரூ.300 வழங்கப்படும். நடுநிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ. ௧,௦௦௦, இதர செலவுக்கு ரூ.500 வழங்கப்படும்.

உயர்நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.1,500, இதர செலவுக்கு ரூ.750, மேல் நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.2,௦௦௦, இதர செலவுக்கு ரூ.௧,௦௦௦ வழங்கப்படும்.

3 ஆம் பருவத்திற்குரிய பாட புத்தகங்களையும் , பாட ஏடுகளையும் பெற்று பள்ளியில் தயார் நிலையில் வைக்கவும் , பள்ளி வளாகத்தை 2/1/2016 அன்று தூய்மையுடன் பேணவும் தொ.க.இ அவர்களின் செயல்முறைகள்

Monday, December 21, 2015

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு எந்தெந்த வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்த விவரங்கள் இல்லை.

இந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றை விளக்கி தமிழக அரசின் பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறையானது அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

பதிலில் தகவல் பெறும் விண்ணப்பத்தின் எண், பெறப்பட்ட தேதி, தகவல் அதிகாரியின் பெயர், பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். விண்ணப்பதாரர் கோரிய தகவல்களைத் தெரிவிக்க இயலாது என்றால், அதற்குரிய காரணங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

மற்றொரு தகவல் அளிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பம் மாற்றப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். பதிலை முடிப்பதற்கு முன்பாக, தகவல் கோரி முதல் முறையாக விண்ணப்பித்திருந்தாரா, மேல்முறையீடா என்பதை தெரிவிக்க வேண்டும்.

ஆவணங்களில் சான்றொப்பம்: ஏதேனும் ஆவணங்களை அளித்தால், இவை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்து அதில் தேதி, அவற்றை அளிக்கும் தகவல் அதிகாரியின் பெயருடன் அடங்கிய முத்திரை, பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடு சான்றொப்பம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்


ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்

ஆதார்' அட்டை கணக்கெடுப்புக்கு 'பெல்' நிறுவனத்தின் கீழ் 640 மையங்களில், ஒப்பந்த நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதுவரை 6.23 கோடி பேருக்கு புகைப்படம், கைரேகை, கருவிழி விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதில் 5.63 கோடி பேருக்கு 'ஆதார்' அட்டை வழங்கப் பட்டுள்ளது. 2016 மார்ச்சுக்குள் 100 சதவீத பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சேவை மையங்கள் மூலம் 'ஆதார்' அட்டை பெற, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஜன., 18 முதல் பிப்., 5 வரை தமிழகத்தில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரித்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். பள்ளி, கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது உறுதி செய்யப்படும்.கடந்த 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.1 கோடி. கடந்த 2001ல் இது, 102.2 கோடியாக இருந்தது, என்றார்.

தேர்வு தேதிகள் மாற்றம்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் துறை தேர்வின் தேதி மாற்றப்பட்டு உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

'டிச., 24ம் தேதி, மிலாடி நபி வருவதால், அந்த நாளில் நடக்க இருந்த துறை தேர்வுகள், முன்கூட்டியே, டிச., 23ம் தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் நடக்கும்' என, தெரிவித்து உள்ளார். அதுபோல, மேலும் பிற தேர்வுகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

*ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், டிச., 24ல் நடக்க இருந்த தேர்வுகள், ஜன., 4க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது

*தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில், டிச., 24ல் நடக்க இருந்த தேர்வுகள், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, ஜன., 5ம் தேதியிலும், ஐந்தாமாண்டு மாணவர்களுக்கு, ஜன., 22 தேதியிலும் நடத்தப்படும்.

Sunday, December 20, 2015

ஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி!


அரசு பள்ளி ஆசிரியர்களின் வெள்ள நிவாரண நிதி வசூலிப்பில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக தங்களது ஒருநாள் ஊதியத்தை தருவதாக, ஆசிரியர்களின் ஜாக்டோ, ஜாக்டா, கலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்தன.

இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை அளிக்கலாம் என தமிழக அரசு உத்தர விட்டது.இதற்காக, விருப்பமுள்ளவர்களின் டிசம்பர் மாத ஊதியத்தில் நிவாரண நிதியை பிடித்துக்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மூலம் கல்வி அலுவலகங்களுக்கு அரசாணை நகல் அனுப்பப்பட்டது. ஆனால், பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரிகள், இந்த சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பாததால், டிசம்பர் மாத சம்பள பட்டியலில், நிவாரண நிதி பிடித்தம் குறித்த நடைமுறைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில், விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை கட்டாயம் தர வேண்டுமென, அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்பும், பல தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரியிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை. மேலும் அரசாணை நகலைக் கூட அனுப்பவில்லை. அதனால், டிசம்பர் மாத சம்பளத்துக்கு, வழக்கமாக, 15ம் தேதி தயார் செய்யப்படும் பட்டியலில், ஆசிரியர்களின் பணப்பிடித்தம் குறித்து, பல மாவட்டங்களில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரிகளின் விரைவான செயல்பாட்டால், நிதி வழங்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. வேறு சில மாவட்டங்களில், விருப்பமுள்ள ஆசிரியர்களின் பட்டியலையே கேட்காமல், அதிகாரிகளே உத்தரவிட்டு அனைத்து ஆசிரியர்களின் சம்பளத்தையும் கட்டாயமாக பிடித்தம் செய்கின்றனர். எனவே, இதுதொடர்பாக கல்வித்துறை உயரதிகாரிகள் சரியான செயல்முறை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு


: 2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு
விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.

தமிழக அரசாணை வெளி யிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள் ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோ ருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

Saturday, December 19, 2015

இலவசமாக படிக்கலாம்: சி.பி.எஸ்.இ. பாட நூல்களை இணையதளத்தில் வெளியிட திட்டம் மத்திய மந்திரி தகவல்


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார்.விழாவில் அவர் பேசும்போது, ‘தேசிய கல்வி மற்றும் ஆய்வு படிப்புகளுக்கான பாடநூல்களை இலவசமாக படிக்கும் வகையில், அவற்றை நாங்கள் சுமார் 1½ மாதங்களுக்கு முன் இணையதளத்தில் இ–புத்தகம் மற்றும் செல்போன் செயலிகள் மூலமாக வெளியிட்டுள்ளோம். இதைப்போல எங்கள் சிறந்த ஆளுமையின் ஒரு பகுதியாக சி.பி.எஸ்.இ. பாடநூல்களையும் இலவசமாக படிக்கும் வகையில் இணையதளத்தில் வெளியிட உள்ளோம்’ என்று கூறினார்.

விடுமுறை நாட்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி


பள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சிக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; பாடம் நடத்தக் கூட நேரம் இல்லாத நிலையில், பயிற்சிக்கு அழைப்பதாக குற்றஞ்சாட்டினர்.இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் பண்டிகை விடுமுறை நாட்களில், மூன்று நாட்கள் பயிற்சிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில், டிச., 28 முதல், 30ம் தேதி வரை, 6 - 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கணித பாடப் பயிற்சி நடத்தப்படும். இதில், ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

SLAS english model question paper and answers

Click below

http://doozystudy.blogspot.in/2015/12/slas-english-model-question-paper-and.html?m=1

Friday, December 18, 2015

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு


மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

மழை வெள்ள பாதிப்பு மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், 24-ந் தேதி மிலாது நபி, 25-ந் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இந்த 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

24-ந் தேதி முதல் விடுமுறை 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

24 .12.15 மிலாடி நபி அரசு விடுமுறை அரசாணை.

நிவாரண நிதி: அரசு ஊழியர்கள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல்


கருவூல 'சாப்ட்வேர்' குளறுபடியால் வெள்ள நிவாரண நிதிக்கு அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 'இ.சி.எஸ்.,' முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக கருவூலங்களில் 'வெப் பேரோல் சாப்ட்வேர்' பயன்படுத்தப்படுகிறது.

தற்போது வெள்ள நிவாரண நிதிக்காக அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடம் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு ஊழியரிடமும் விருப்ப கடிதம் பெற வேண்டும். அவர்களின் டிசம்பர் மாத ஒரு நாள் ஊதியத்தை அந்தந்த துறைகளின் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் கணக்கில் பிடிக்க வேண்டும். பின் 'முதல்வரின் பொது நிவாரண நிதி' டி.டி.,யாக அனுப்ப வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கருவூல 'வெப் பேரோல் சாப்ட்வேரில்' அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் ஊதியத்தை துறைகளின் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்கில் நேரடியாக செலுத்த வழியில்லை.

இதனால் கருவூல அதிகாரிகள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.கருவூல அதிகாரி ஒருவர் கூறுகையில், “ துறைகளின் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்கில் செலுத்த 'சாப்ட்வேரில்' வசதி இல்லை. இதனால் ஊதியத்தை பிடிக்க முடியவில்லை. இதில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.

குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் 7 வது ஊதியக்குழு நிர்ணயித்தது எப்படி


காய்கறி, பால், எண்ணெய், எரிபொருள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடிப்படையில் 7 வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயித்துள்ளது.இந்த ஊதியம் கணவர், மனைவி, 2 குழந்தைகள் என, 4 பேர் கொண்ட குடும்பம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.

இதில் ஆணுக்கு ஒரு யூனிட், பெண்ணுக்கு 0.80 யூனிட், 2 குழந்தைகளுக்கு தலா 0.60 யூனிட் என, குடும்பத்திற்கு மொத்தம் 3 யூனிட்டாக கணக்கிடப்பட்டுள்ளது. தினமும் ஒரு யூனிட்டிற்கு 475 கிராம் அரிசி அல்லது கோதுமை, 80 கிராம் பருப்பு வகைகள், 100 கிராம் பலசரக்கு பொருட்கள், 125 கிராம் பச்சை காய்கறிகள், 75 கிராம் இதர காய்கறிகள் தேவைப்படும்.அதேபோல் 120 கிராம் பழங்கள், 200 மி.லி, பால், 56 கிராம் சர்க்கரை, 40 கிராம் எண்ணெய் தேவைப்படும். அதன் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் குடும்பத்திற்கு மாதம் 2.5 கிலோ மீன், 5 கிலோ இறைச்சி, 90 முட்டைகள், 5.5 மீ., புது துணி தேவைப்படும். வாங்கப்படும் பொருட்களின் விலை (ஒரு கிலோவிற்கு):

அரிசி அல்லது கோதுமைக்கு ரூ.25.93, பருப்பு வகைகளுக்கு ரூ.97.84, பலசரக்கு ரூ.58.48, பச்சை காய்கறிகளுக்கு ரூ.38.12, இதர காய்கறிகளுக்கு ரூ.32.80, பழங்களுக்கு ரூ.64.16, சர்க்கரைக்கு ரூ.37.40, எண்ணெய்க்கு ரூ.114.02, மீன்களுக்கு ரூ.268.38, இறைச்சிக்கு ரூ.400.90 செலவாகும்.அதேபோல் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.37.74, ஒரு மீ., துணிக்கு ரூ.164.88, ஒரு குடும்பத்திற்கு சோப்பு ரூ.291.31, எரிபொருள், குடிநீர், மின் கட்டணத்திற்கு ரூ.2,304, திருமணம், பொழுதுபோக்கு, திருவிழாக்களுக்கு ரூ.2,033.38, இதர செலவிற்கு ரூ.4,444.13, மொத்தம் ரூ.18 ஆயிரம் இருந்தால் போதும் என, 7 வது ஊதியக்குழு தெரிவித்துள்ளது.