இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, April 03, 2015

ஆன் லைனில் விடைத்தாள் நகல்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, 'ஆன் - லைன்' மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; வரும் 10ம் தேதி முடிய உள்ளது. இந்த ஆண்டு பொதுத்தேர்வில், பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

தேர்வு முடிவு வெளியானதும், மேற்படிப்புக்காக, கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் கூடுதல் வசதியாக, மாணவ, மாணவியர் மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக, விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு, 'ஆன் - லைன்' மூலம், விடைத்தாள் நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Annamalai university May 2015 exam time table&instructions

Click below

http://www.annamalaiuniversity.ac.in/dde/exam_timetable.php

Thursday, April 02, 2015

இனி வங்கிகளுக்கு 2&4 சனிக்கிழமைகளில் விடுமுறை

இனி மாதத்தில் 2 சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை.. நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

வங்கி ஊழியர்களின் பல கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பின் வங்கிகளுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, வாரத்தில் 5 வேலைநாட்கள் போன்ற காரணங்களுக்காக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 15 சதவீத ஊதிய உயர்வும், வாரத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிப்பதாக வங்கி அமைப்புகளுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது..இதர சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்படும்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு புதிய முறை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை எண் இணைப்பதற்கான ஐசிஆர் எனும் புதிய முறை இந்தியாவிலேயே முன் மாதிரியாக பொள்ளாச்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் பதிவு செய்யும் பணி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான தகவல்கள் பணியாளர்கள் மூலமாக கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே முன் மாதிரியாக பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்கள் தகவல்களைப் பதிவு செய்ய ஐசிஆர் என்ற புதிய முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென கொடுக்கப்படும் படிவத்தில் வாக்காளர் பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண், ஆதார் எண், வாக்காளர் எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்து அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அந்தப் படிவம் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் பிழை, காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இதற்கான மென்பொருளை தமிழகத் தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. இதனால், 1 மணி நேரத்தில் 1,000 படிவங்கள் வரை கணினியில் பதிவேற்றலாம். இதன்படி, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் இந்தத் திட்டம் புதன்கிழமை முதல் செயல்படுத்தப்படுகிறது. முதல் நாளில் 700 பேரின் தகவல்கள் ஐசிஆர் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ப்ளஸ் 2 தேர்வுக்கு முன் ஜாதி சான்று வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை வழங்க வருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்டபின்பே ஜாதி, இருப்பிடம் போன்ற சான்றுகளை கேட்டு மாணவர்கள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கின்றனர்.

ஒரே சமயத்தில் அதிகமான விண்ணப்பங்கள் வருவதால் சான்றுகள் வழங்க தாமதம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க தேர்வு முடிவுக்கு முன் தாலுகா அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் 'ஆன்-லைனில்' சான்றுகளை வழங்க வருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.இதில் ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை பெற்று கொள்ளலாம். ஏற்கனவே சான்று பெற்றோர் அதன் நகல்களை பெறலாம். மேலும் மெய்த்தன்மை குறித்து சந்தேகம் ஏற்படாத வகையில் சான்றுகளில் ரகசிய குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்த்து கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Wednesday, April 01, 2015

பி.எப். நிதி 5%லிருந்து 15% வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

பி.எப். நிதி பங்குச் சந்தைக்கா?
ஏ.கே.பத்மநாபன் கடும் எதிர்ப்பு

தொழிலாளர்களின் பி.எப். பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சிஐடியு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்ம நாபன் விடுத்துள்ள அறிக்கையில், தொழிலாளர் களின் பி.எப். நிதியிலிருந்து 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று மத்திய பாஜக கூட்டணி அரசு எடுத்துள்ள முடிவை வன்மையாக கண்டித்துள்ளார்.
பாஜக அரசு கடைப்பிடித்து வரும் தாராளமய மாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முன் இருந்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சர்கள், இதுதொடர்பாக தொழிற்சங்கங் களுடன் ஆலோசனை நடத்த வேண்டுமென்ற நிலையை எடுத் திருந்தனர்.

ஆனால் தற்போதைய தொழிலாளர் துறை அமைச்சர் பி.எப். நிதியை பங்குச் சந்தை ஊகவணிகத்தில் ஈடுபடுத்த முழு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் இ.பி.எப். சட்டம் மற்றும் இதர வகை சட்டம் 1952ல் திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய சட்டத்திருத்தங்களால் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு தகர்க்கப்படும் என சிஐடியு குற்றம் சாட்டுகிறது.

பி.எப் சந்தாதாரர்கள் தேசிய ஓய்வூதிய நிதிய திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் சந்தாதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் சமூக பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று ஏ.கே.பத்மநாபன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பி.எப். நிதியை சூறையாடுவதைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்திருத்தங்களை கண்டித்தும் ஓரணியில் திரள வேண்டும். பாஜக கூட்டணி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பாட புத்தக விலை உயர்வு

முப்பருவ முறையின் கீழ் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான

பாடப் புத்தகங்களின் விலை விவரம்

பழைய விலை புதிய விலை

முதல் வகுப்பு தொகுதி -1 ரூ. 30 ரூ. 40

தொகுதி-2 ரூ. 30 ரூ. 50

இரண்டாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 30 ரூ. 50

தொகுதி-2 ரூ. 35 ரூ. 50

மூன்றாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 30 ரூ. 40

தொகுதி-2 ரூ. 60 ரூ. 90

நான்காம் வகுப்பு தொகுதி-1 ரூ. 30 ரூ. 50

தொகுதி-2 ரூ. 60 ரூ. 90

ஐந்தாம் வகுப்பு தொகுதி -1 ரூ. 35 ரூ. 50

தொகுதி-2 ரூ. 65 ரூ. 90

ஆறாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 40 ரூ. 60

தொகுதி-2 ரூ. 65 ரூ. 100

ஏழாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 45 ரூ. 70

தொகுதி-2 ரூ. 95 ரூ. 140

எட்டாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 55 ரூ. 90

தொகுதி-2 ரூ. 110 ரூ. 160

ஒன்பதாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 60 ரூ. 80

தொகுதி-2 ரூ. 50 ரூ. 70

தொகுதி-3 ரூ. 90 ரூ. 120

பத்தாம் வகுப்பு

தமிழ் ரூ. 85 ரூ. 110

ஆங்கிலம் ரூ. 85 ரூ. 90

கணிதம் ரூ. 85 ரூ. 160

அறிவியல் ரூ. 85 ரூ. 170

சமூக அறிவியல் ரூ. 85 ரூ.130

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ்ப் புத்தகங்களின் விலை

1 முதல் 4-ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களின் விலை

ரூ. 60 என்பதில் மாற்றமில்லை.

5-ஆம் வகுப்பு ரூ. 60 ரூ. 70

6-ஆம் வகுப்பு ரூ. 65 ரூ. 90

7-ஆம் வகுப்பு ரூ. 65 ரூ. 100

8-ஆம் வகுப்பு ரூ. 65 ரூ. 110

9-ஆம் வகுப்பு ரூ. 70 ரூ. 140

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களின் விலை 250 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர்களுக்கு ஏப் 4ல் நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினிப் பயிற்றுநர்களுக்கு சனிக்கிழமை (ஏப். 4) பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினிப் பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வருகை தர வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் அன்றைய தினம் காலை 9 மணிக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப் 6 முதல் புத்தகங்கள்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது. அதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் இந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதில் பிளஸ் 2 புத்தகங்கள் 100 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன. பத்தாம் வகுப்புக்கான புத்தகங்களும் மாவட்டங்களுக்கு பெரும்பாலும் அனுப்பப்பட்டு விட்டன. 9-ஆம் வகுப்புத் தேர்வுகள் நிறைவடைந்ததும் இந்த மாணவர்களுக்கான புத்தகங்களும் விநியோகிக்கப்பட உள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இதில் 3.17 கோடி புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும். 1.35 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கானது. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும்.

Tuesday, March 31, 2015

கோடை விடுமுறையில் வகுப்பு?

அடுத்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கியது.

2 வருடம் பாடம் படிப்பு

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-வது வகுப்பு பாடங்களை படிக்காமல் எஸ்.எஸ்.எல்.சி. பாடங்களையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11-வது வகுப்பு பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ்-2 பாடங்களையும் படிக்க வைக்கப்படுகிறார்கள்.

இந்த சம்பவம் கடந்த பல வருடங்களாக நடக்கிறது. அதாவது ஒரு வருட பாடங்களை 2 வருடம் படிக்கும் இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிடைப்பது மிக சிரமம். அதுபோல கல்வி கட்டணமும் அந்த பள்ளிகளில் அதிகம். 2 வருடம் ஒரே பாடங்களை படிப்பதால் பெரும்பாலும் இந்த பள்ளி மாணவர்கள்தான் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று வருகிறார்கள்.

உயர்கல்வியில்மிளிர முடியவில்லை

ஆனால் அந்த பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் புரிந்து படிக்காத காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. சேர்ந்தவர்கள்கூட கணிதத்தேர்வில் தோல்வி அடைகிறார்கள். காரணம் இவர்கள் 11-வது வகுப்பு கணிதத்தை படிக்காதது என்று கூறப்படுகிறது. அதாவது இந்த மாணவர்களால் உயர் கல்வியில் பிரகாசிக்க முடியவில்லை.

இந்த பள்ளிகளின் நடவடிக்கைகளை பார்த்து தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 9-வது வகுப்பு பாடம் நடத்துகிறார்கள். 11-வது வகுப்பையும் நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கோடை விடுமுறையில் ஒரு மாதம் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு பாடத்தை நடத்துகிறார்கள்.

அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கியது

இதை அறிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாமும் கோடை விடுமுறையில் வகுப்பு நடத்தலாம் என்று கருதி தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் அடுத்த வருடம் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்த முடிவு செய்துள்ளனர். சில பள்ளிகளில் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை நடத்தப்படுகின்றன. இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-

பிளஸ்-2 பாடம் எடுக்கும் வகுப்பு கோடை விடுமுறையில் தொடங்கி உள்ளது. ஒருவாரம் வேதியியல் பாடம் நடத்த திட்டமிட்டு வேதியியல் தொடங்கி உள்ளனர். அடுத்த வாரம் கணிதம் நடத்த உள்ளனர். அதற்கு அடுத்தவாரம் இயற்பியல் நடத்த இருக்கிறார்கள். ஏப்ரல் 22-ந்தேதி வரை வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. ஆனால் இந்த முறை அனைத்து பள்ளிகளிலும் அல்ல. சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

Monday, March 30, 2015

எம்.காம், பி.எட் ஊக்க ஊதியம் இல்லை

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே கடைசி வாரத்திலும் வெளியாகும்,” என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார். அரக்கோணத்தில் அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும், 155 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, 208 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதி செய்யப்படும். ஏப்ரல் முதல் வாரத்திலேயே, 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படும். ஜூனில், 6 லட்சம் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, மே கடைசி வாரத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

வாக்காளர் அடையாள அட்டையில் வண்ண புகைப்படம்

வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை மாற்றி, புதிய புகைப்படத்தைச் சேர்க்க, தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கி உள்ளது. வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிக்காக, வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் எண், 'இ - மெயில்' முகவரி உள்ளிட்டவற்றை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கடந்த, 25ம் தேதி முதல், வீடு வீடாகச் சென்று சேகரித்து வருகின்றனர். 'பழைய கருப்பு வெள்ளை அடையாள அட்டையில் உள்ள தங்களது புகைப்படம் தெளிவாக இல்லை; அட்டையும் சேதமடைந்துள்ளது.

அதை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வாக்காளர்கள் தரப்பில், தேர்தல் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு, தற்போது தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டையில் உள்ள, தங்களது பழைய புகைப்படத்தை மாற்ற, படிவம் 8யை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, புதிய கலர் படத்தை, அதனுடன் இணைக்க வேண்டும்.

இப்பணிகள் முடிந்து, ஜூலையில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில், புதிய புகைப்படம் இடம் பெறும். முதற்கட்டமாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு, புதிய, 'சிலிப்' வழங்கப்பட்டு, புதிய அடையாள அட்டை பின்னர் தரப்படும். ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள், இல்லாத வாக்காளர்களின் விவரங்கள், தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Sunday, March 29, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் விரைவில் பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். நாட்டில் நிலவும் விலைவாசிக்கேற்ப, இவர்களுக்கான சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க, சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷன், 10 ஆண்டு களுக்கு ஒருமுறை, தன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்கும். இதன்படி, வரும் ஆகஸ்ட்டில், ஏழாவது சம்பளக் கமிஷன், தன் பரிந்துரையை அளிக்க உள்ளது.

சம்பளம் உயரும்:

இந்த பரிந்துரையில் சில திருத்தங்கள் செய்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும். இதனால், நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு கள், தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என, ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே, ஒவ்வொரு துறைகளைச் சேர்ந்தவர்களும், தங்களுக்கு தேவையான சம்பள உயர்வு, சலுகைகள் குறித்து, ஏழாவது சம்பளக் கமிஷனிடம் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசு ஊழியர் சங்கம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
*மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை, 26 ஆயிரமாக ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்.
*மூன்று முறை பதவி உயர்வு என்ற நிலையை மாற்றி, முதல் நிலை அதிகாரிகள் போல், ஐந்து முறை பதவி உயர்வு வழங்க வேண்டும்.
*கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை, மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.
*'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு, முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
*தற்போது, 50 சதவீதமாக இருக்கும் ஓய்வூதியத்தை, 67 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவை உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதவிர, மத்திய அரசில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும், தனித்தனியாகவும், ஏழாவது சம்பளக் கமிஷ னிடம் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளன.

இந்திய வருவாய் துறையான, ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள், 58 பக்க மனுவை கொடுத்து உள்ளனர். இதுகுறித்து, ஐ.ஆர்.எஸ்., சங்க தலைவர் ஜெயந்த் மிஸ்ரா கூறியதாவது:பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து, வரித்துறை அதிகாரிகளை விட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கே அதிக சம்பளம் தரப்படுகிறது. முன், வரியை வசூலிக்கும் பொறுப்பு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் இருந்தது.

நேர்முக வரி வருவாய்:

தற்போது நிலைமை மாறி விட்டது. நேர்முக வரி வருவாயை வசூலிக்கும் பொறுப்பை, நாங்களே கவனித்து வருகிறோம். 2001ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2014ல், நேர்முக வரி மூலம் கிடைத்துள்ள வருவாய், 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த வருவாயை வசூலிப்பதற்கான செலவு, மிகவும் குறைவு. நாங்கள் வசூலிக்கும், ஒவ்வொரு, 100 ரூபாய்க்கும், 57 பைசா மட்டுமே அரசு செலவிடுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் வரி வசூலுக்காக செலவிடும் தொகையை விட, இது மிகக்குறைவு. எனவே, ஏழாவது சம்பளக் கமிஷனில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விட, எங்களுக்கு கணிசமான சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதுபோல், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கம் சார்பிலும், 137 பக்க அறிக்கை தரப்பட்டு உள்ளது. அதில், 'நாடு முழுவதும், 4,720 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு நியாயமான சம்பள உயர்வு அளிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சம்பள கமிஷன்:

* 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சம்பளக் கமிஷன், தன் பரிந்துரையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
*இந்த கமிஷன் அமைக்கப்பட்ட இரு ஆண்டுகளில், தன் பரிந்துரையை அரசிடம் அளிக்கும்.
*இந்த கமிஷனின் பரிந்துரைப்படி தான், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வு அளிக்கப்படும்.
*இதில் சில திருத்தங்களை செய்து, மாநில அரசுகளும், தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிக்கும்.
*தற்போது, ஏழாவது சம்பளக் கமிஷன், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் மாத்துார் தலைமையில், 2014ல் அமைக்கப்பட்டது.
*இந்த கமிஷன், வரும் ஆகஸ்ட்டில் தன் பரிந்துரைகளை தாக்கல் செய்யும் என தெரிகிறது.
*இந்த பரிந்துரைகள், அடுத்தாண்டு ஜன., 1ம் தேதி முதல், அமல்படுத்த வாய்ப்புள்ளது.