இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, November 22, 2014

INCOME TAX | மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.


மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார். டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள்
நேரடியாக அதிக வருமான வரி செலுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து வருமான வரி வசூலிப்பதை குறைத்தால், சம்பளப் பணம் அவர் களுக்கு முழுமையாகச் செல்லும். அவர்கள் அதிகம் செலவும் செய்வார்கள். இதன் மூலம் மறைமுகமாக வரியை பெற்றுக்கொள்ளலாம்.

அதே நேரம், வரி ஏய்ப்பு செய்பவர்களை தப்பவிடக்கூடாது. அரசுக்கு கிடைக்கும் வரி வருமானத்தில் பாதி அளவுக்கு மறைமுக வரிதான். அதாவது உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி என பல வரிகள் செலுத்தி வருகிறார்கள். என் உதவியாளர் எந்த அளவுக்கு மறைமுக வரி செலுத்துகிறாரோ, அதே அளவுக்கு நானும் மறைமுக வரி செலுத்துகிறேன். செலுத்தும் அளவுகளில் மாற்றம் இருக்குமே தவிர, நாம் அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம். கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை 2 லட்ச ரூபாயிலிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போதைக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவை இல்லை.

மற்ற இதர விலக்குகளை சேர்த்துக்கொண்டால் 3.5 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை வரி இல்லாமல் சமாளிக்கலாம். 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நபர், சரியான சேமிப்பை செய்தால் அவர் வரி கட்டத் தேவை இல்லை. ஆனால், வாடகை, குழந்தைகளின் செலவு ஆகிய காரணங்களால் இந்த எல்லைக்குள் இருப்பவர்கள் பலரால் சேமிக்க முடியவில்லை. மேலும் வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க, தற்போது இருக்கும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பை குறைக்கும் திட்டம் இல்லை. அது சரியான வழியும் அல்ல. இந்த நிலையில், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த விலக்கினை இன்னும் அதிகரிக்கலாம். நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் தற்போதைய அரசின் வருமான சூழ்நிலையில் இது சவாலான விஷயம். கடந்த முறை என்னுடைய எல்லைகளை தாண்டியும் பல சலுகைகளை வழங்கினேன்.

நேரடியாக வருமான வரியாக வசூல் செய்வதை விட, அவர்கள் செலவழிக்கும் பட்சத்தில் பொருளாதார பரிவர்த்தனைகள் அதிகரித்து, மறைமுக வரி வருவாய் உயரும். கிசான் விகாஸ் பத்திரம் கிசான் விகாஸ் பத்திரங்களை மீண்டும் அறிமுகம் செய்திருப்பது கருப்புப் பணத்தை ஊக்குவிப்பதுபோல் அமைந்துள்ளது என்று சில கட்சிகள் அச்சம் தெரிவித்திருப்பது தேவையற்றது. அந்தப் பத்திரத்தை வாங்கும் முதலீட்டாளர்கள் தங்களின் பெயர், விலாசம், பான் அட்டை எண்ணை கண்டிப்பாக அளிக்க வேண்டும். எனவே இந்தப் பத்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியாது. தீவிரவாத அமைப்புகள் கிசான் விகாஸ் பத்திரங்களை வாங்கக்கூடும் என்று எழுப்பப்படும் அச்சங்களும் தேவையற்றது. அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை களத்தில் காங்கிரஸ் கடும் போராட்டங்களை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக மத்திய அரசுக்கு எதிராக அந்தக் கட்சி அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்வாகத்திடம் வழங்க உத்தரவு


  அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, புரசைவாக்கத்தில் உள்ள சர்.சி.எம்.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் பள்ளியின் தாளாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எங்கள் பள்ளிக்கு அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அரசிடமிருந்து நேரடியாகவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்காமல், பள்ளி நிர்வாகத்திடமே ஊதியத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2011-ஆம் ஆண்டு பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

எனவே, கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படும் என மாவட்டக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் சம்பந்தப்பட்ட பள்ளிச் செயலாளரிடமே வழங்கப்பட வேண்டும். இதற்கு முழு அதிகாரம் படைத்தவர் மாவட்டக் கல்வி அதிகாரிதான். இதை நடைமுறைப்படுத்தாதது அவர் செய்த தவறாகும். தாங்கள் நினைப்பதைத்தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என ஆசிரியர்களும், ஊழியர்களும் நினைக்கக் கூடாது.

கல்வி அதிகாரிகளும் அதை அனுமதிக்கக் கூடாது. எனவே, மனுதாரர் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு


   வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது. அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெறுவதற்கு அரசிடம் இருந்து தடையின்மைச் சான்று, அடையாளச் சான்றினைப் பெறுவது அவசியமாகும்.

அவ்வாறு பெற்ற பிறகே அவர்கள் புதிதாக பாஸ்போர்ட் பெறவும், காலாவதியான பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவும் முடியும். இந்தச் சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் புகைப்படம் ஒட்டப்பட்டு சான்று அளிக்கும் அதிகாரி கையெழுத்திட வேண்டும். அதற்கு முன்பாக, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை உறுதி செய்திட வேண்டும். அந்தக் கட்டுபாடுகளின் விவரம்: வெளிநாடுகளில் கல்வி பயிலவோ, பயிற்சிகளை மேற்கொள்ளவோ செல்ல விரும்பும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உரிய அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டும். வெளிநாட்டுப் பயணத்தின் போது அதற்காகும் செலவினங்களை அரசுத் துறையோ அல்லது அரசோ ஏற்றுக் கொள்ளாது.

பயணத்துக்காக அரசு ஊழியரோ அல்லது அதிகாரியோ ராஜிநாமா கடிதங்களை அளித்திட முடியாது. அவ்வாறு செய்வது ஏற்றுக் கொள்ளப்படாது. வெளிநாட்டுப் பயணத்தின் போது எந்தவித வர்த்தகத்தையோ, வணிகத் தொடர்புகளையோ மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வது ஏற்றுக் கொள்ளப்படாது. வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, பயண விடுப்புக்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் தலைவரிடம் அளிக்க வேண்டும். விடுப்புக்குத் தகுதி என்ற பட்சத்தில் உயர் அதிகாரியின் அனுமதி கிடைத்த பிறகே பயணத்தைத் தொடங்க வேண்டும். பாஸ்போர்ட்டுக்காக அரசால் வழங்கப்படும் அடையாளச் சான்றின் காலம் ஆறு மாதங்கள் மட்டுமே ஆகும்.

அதன்பிறகு அது காலாவதியாகி விடும். தமிழக அரசு வகுத்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் அரசு அலுவலர், அதிகாரிகளுக்கே பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்குத் தேவையான அடையாளச் சான்றும், தடையின்மைச் சான்றும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு: பள்ளிக்கல்வித்துறை


    பத்தாம் வகுப்பு, பிளஸ்2வில் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கி பயிற்சியளிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக இவ்வகுப்புகளில் காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் (மெல்லக்கற்கும் மாணவர்கள்) கண்டறியப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பாட வாரியாக கற்பிக்க, சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மாணவர்களிடம் வழங்கி பயிற்சியளிக்கப்படும். மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்த சிறப்பு கையேட்டில் முக்கிய வினாக்கள், அதற்கான விடைகள் இடம் பெற்றுள்ளன. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மெல்லக்கற்கும் மாணவர்களிடம் இவை வழங்கப்படும். இதன்மூலம் அரையாண்டு, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண் பெறலாம்,” என்றார்.

Thursday, November 20, 2014

Part time . teacher s exam .(Ms) No.185 Dt: November 17, 2014

Click below

https://app.box.com/s/yz2eqwpb0qh7d8a4f447

New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme - List of additional Hospitals covered under the Scheme based on the recommendations of the Accreditation Committee for empanelment of Hospitals - Approved - Orders issued.

Click below

http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_807_2014_Rt.pdf

அரசு விடுமுறை தினங்கள்

அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, அடுத்த ஆண்டில் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் மிலாதுநபி பண்டிகை இரண்டு முறை வருகிறது.

2015-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஜனவரி 1 (வியாழன்)    ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 4 (ஞாயிறு)    மீலாதுநபி

ஜனவரி 15 (வியாழன்)    பொங்கல்

ஜனவரி 16 (வெள்ளி)    திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17 (சனி)    உழவர் திருநாள்

ஜனவரி 26 (திங்கள்)    குடியரசு தினம்

மார்ச் 21 (சனி)    தெலுங்கு வருடப் பிறப்பு

ஏப்ரல் 1 (புதன்)    வங்கிகள் கணக்கு முடிவு

(வணிக-கூட்டுறவு வங்கிகள்)

ஏப்ரல் 2 (வியாழன்)    மகாவீரர் ஜெயந்தி

ஏப்ரல் 3 (வெள்ளி)    புனித வெள்ளி

ஏப்ரல் 14 (செவ்வாய்)    தமிழ்ப் புத்தாண்டு- அம்பேத்கர் பிறந்த நாள்

மே 1 (வெள்ளி)    மே தினம்

ஜூலை 18 (சனி)    ரம்ஜான்

ஆகஸ்ட் 15 (சனி)    சுதந்திர தினம்

செப்டம்பர் 5 (சனி)    கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 17 (வியாழன்)    விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 24 (வியாழன்)    பக்ரீத்

அக்டோபர் 2 (வெள்ளி)    காந்தி ஜெயந்தி

அக்டோபர் 21 (புதன்)    ஆயுத பூஜை

அக்டோபர் 22 (வியாழன்)    விஜயதசமி

அக்டோபர் 23 (வெள்ளி)    மொகரம்

நவம்பர் 10 (செவ்வாய்)    தீபாவளி

டிசம்பர் 23 (புதன்)    மிலாதுநபி

டிசம்பர் 25 (வெள்ளி)    கிறிஸ்துமஸ்

இசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவு


    இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகியவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இப்போது சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டில், 1,028 சிறப்பாசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஒருவர் தொடர்ந்த வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். போட்டித் தேர்வு, நேர்காணல் மூலம் சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை அறிவிக்குமாறு அரசுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து, சிறப்பாசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: சிறப்பாசிரியர் நியமனத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்குப் பதிலாக, போட்டித் தேர்வு முறை பின்பற்றப்பட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியான நபர்கள் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்க வேண்டும்.

போட்டித் தேர்வு 95 மதிப்பெண்ணுக்கும், நேர்காணல் 5 மதிப்பெண்ணுக்கும் நடைபெறும். போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்பட வேண்டும். இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தயாரிக்கும். இந்தத் தேர்வில் 190 "அப்ஜெக்டிவ் டைப்' வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு விடைக்கும் அரை மதிப்பெண் வழங்கப்படும். இத் தேர்வுக்கான கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவினருக்கு ரூ.250.

நேர்காணல் மதிப்பெண் விவரம்:

1. கூடுதல் தகுதி - அரை மதிப்பெண்
2. அரசுத் துறை தவிர துறைகளில் பெற்றுள்ள அனுபவம் - அரை மதிப்பெண்
3. அரசுத் துறைகளில் அனுபவம் - 1 மதிப்பெண்
4. என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டுகள் - ஒன்றரை மதிப்பெண்
5. ஆளுமை, தோற்றம் - ஒன்றரை மதிப்பெண் மொத்தம்-5 மதிப்பெண்கள்

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு


    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கு ஓவியம், உடற்கல்வி, தையல் பயிற்சிகளை வழங்க பகுதி நேர சிறப்பாசிரியர்களை நியமிக்க அரசு 2011ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் வாரத்தில் குறிப்பிட்ட பாடவேளைகள் (வாரத்துக்கு 3 நாள்கள்) மட்டும் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பித்து வந்தனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்களின் ஊதியத்தை ரூ.7000ஆக உயர்த்தி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஆணையில் (ஆணை எண் 186) கூறியிருப்பதாவது:

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 15,169 பகுதி நேர சிறப்பாசிரியர்களின் ஊதியம் ரூ.7000 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 தேதியிட்டு வழங்கப்படும். இனி வரும் காலங்களில் சிறப்பாசிரியர்களுக்கு மின்னணு முறையில் (ECS) ஊதியம் வழங்கப்படும். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் (Part Time Teacher) இனி பகுதி நேர பயிற்றுநர்கள் (Part Time Instructor) என அழைக்கப்படுவர் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, November 19, 2014

மானியம் விலை சிலிண்டர் பெற வங்கிக்கணக்கு கட்டாயம்: ஜன. 1 முதல் அமல்!

மானியவிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வங்கிக் கணக்கு கட்டாயம்  என்பதை வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.

சிலிண்டர்  பதுக்கல், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது,  உள்ளிட்ட முறைகேடுகளைத்  தடுக்கும் பொருட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச்  செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின்படி  சிலிண்டர் வாங்குபவர்கள் மானியம் இல்லாமல் முழு விலை கொடுத்து (ரூ.950) பெற வேண்டும். அதன்பின்னர் சிலிண்டருக்கான மானியத்தொகையான ரூ. 560 அவர்களது வங்கி கணக்கில் போடப்படும்.

இதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று முந்தைய அரசு அறிவித்தது. இந்நிலையில் மத்தியில் பா.ஜனதா அரசு பதவியேற்ற பின் ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்று அறிவித்தது. அதேநேரம் ஆதார் அடையாள அட்டை அல்லது வங்கி கணக்கு இருந்தால் தான் மானியம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் 540 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஜனவரி1 ஆம்  தேதி முதல் நேரடி மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி வங்கி கணக்கை தொடங்கி அதனை சமையல் கியாஸ் விநியோகஸ்தர்களிடம் பதிவு செய்ய வேண்டும். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்கள் கருணை காலமாகக்  கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்களை அல்லது ஆதார் எண்களை விநி யோகஸ்தரிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அந்த 3 மாத காலத்தில் கியாஸ் வாங்குபவர்கள் மானியம் கழித்து வழக்கமான முறையில் ரூ.400 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு மேலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள்  கால அவகாசம் வழங்கப்படும். அப்போது  சமையல் கியாஸ் மானியம் தொகை கழிக்காமல் முழு தொகையான  ரூ.950 செலுத்திதான் பெற முடியும். ஆனால் அதற்கான மானியம் பின்னர் வழங்கப்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவு செய்பவர்களுக்கு அரசின் மானியம் கிடைக்காது. முழு தொகை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Tuesday, November 18, 2014

மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு

Click below

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0cTFZVDh2MV9ISzA/view?usp=sharing

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது. விடைத்தாள்களில் எழுதாத பக்கங்கள் அதிகரித்ததை அடுத்து, தேர்வுத் துறைக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய விடைத்தாள்கள், குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

வரும் 2015ல், நடைபெறவுள்ள உள்ள பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்களுக்கு பதில், 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், 30 பக்கங்கள் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களில், 52க்கு பதில், 44; கம்ப்யூட்டர் சயின்ஸ், 40க்கு, 32; அக்கவுன்டன்சி, 54க்கு, 46; இதர பாடங்களுக்கு, 40 பக்கங்களும் வழங்கப்பட உள்ளன. இதேபோல், 10ம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்களுக்கு, 32க்கு, 24; தமிழ் இரண்டாம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், வங்கியில் பணம் பெறும் படிவம் ஆகிய படிவங்கள் தனித்தனியாக வழங்காமல், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.

சமூக அறிவியலில், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில், இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசிய வரைபடம் அச்சிடப்பட்டு சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது. கணிதம், அறிவியல் பாடங்கள் பழையபடியே, 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நவ., 25, 26ல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு

மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது. இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் இத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நியமன கலந்தாய்வும் இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நவ., 25, 26ல் நடக்கின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இவ்வலுவலகத்தால் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அசல் கல்வி சான்றுகளுடன் காலை 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

"நெட்' தேர்வு முடிவு வெளியீடு

  பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு முதுநிலை பட்டப் படிப்பை முடித்து, ஆராய்ச்சிப் படிப்பை (பி.எச்.டி.) முடித்திருக்க வேண்டும். அல்லது முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' தகுதித் தேர்வு அல்லது மாநில அளவில் நடத்தப்படும் "செட்' தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இதில் "நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தி வந்த இந்தத் தேர்வை, இப்போது 2014 டிசம்பர் மாதம் முதல் சி.பி.எஸ்.சி. (மத்திய இடநிலை கல்வி வாரியம்) நடத்துகிறது. இந்த நிலையில், 2014 ஜூன் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவுகளை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.