இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 27, 2014

1,807 இடங்களுக்கு 2 லட்சம் விண்ணப்பங்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, சமீபத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டது.

இதற்கான தேர்வு, ஜன., 10ம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில், கடந்த, 10ம் தேதி முதல் வழங்கப்பட்டன. இதில், கடந்த, 25ம் தேதி காலை, சென்னையில் விண்ணப்பங்கள் காலியானதால், பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து, வேலுாரில் இருந்து விண்ணப்பங்கள் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டன.அன்று வரை, சென்னையில், 13 ஆயிரம் உட்பட, தமிழகம் முழுவதும், 1.40 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனதாக, டி.ஆர்.பி., வட்டாரத்தில் கூறப்பட்டது. இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில், வீட்டு மனை வாங்க, முன்பணமாக, 20 சதவீதம் வழங்கப்படுவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில், வீட்டு மனை வாங்க, முன்பணமாக, 20 சதவீதம் வழங்கப்படுவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட, 15 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது.வீட்டு மனை வாங்க, கடன் தொகையில், முன் பணமாக, 20 சதவீதம் வழங்கப்பட்டது.

இதை, 50 சதவீதமாக, உயர்த்தி வழங்க வேண்டும் என, தலைமைச் செயலக ஊழியர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்தது.அதை பரிசீலித்த அரசு, 20 சதவீதமாக வழங்குவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், முன்பு, முன்பணமாக, அதிகபட்சம், 5 லட்சம் ரூபாய் பெற்றனர்.

இனிமேல், 12.50 லட்சம் ரூபாய் பெறலாம். இதற்கான ஆணையை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தலைமைச் செயலக ஊழியர் சங்கம், நன்றி தெரிவித்துள்ளது

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை NMMS தேர்வு


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்
துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் மாணவர்களைத் தேர்வு செய்ய டிசம்பர் 27-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தங்களது பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்யுமாறு தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் இந்த விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிக்குரிய அனைத்து விண்ணப்பங்களையும் டிசம்பர் 5 முதல் 8-ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களையும், தேர்வுக் கட்டணத்தையும் மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

NMMS exam application form

Click below

http://www.tndge.in/

AIDS awarness competition

Click below

https://app.box.com/s/vlw2b1ppf6xhsyai8hpk

Wednesday, November 26, 2014

குறைந்த மாணவர்களைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

மாணவர் சேர்க்கை 25க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சி பள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அதிகரிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 80 ஆயிரமாக குறைந்துள்ளது.

தனியாருக்கு எது?

குறிப்பாக, திருவல்லிக்கேணி, சேத்துபட்டு, தி.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வகுப்பிலும் சேர்த்து 50 மாணவர்கள் மட்டும் உள்ள பள்ளிகள் நகரில் அதிகமாக உள்ளன.

மொத்தம் 25 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் ஏழு பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன. அந்த பள்ளிகளை மூட விரும்பாத மாநகராட்சி நிர்வாகம், 25க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

அதற்காக, மும்பை, டில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள பெரிய கல்வி நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய மாநகராட்சி கல்வித்துறை, ஏழு பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளை வரும் கல்வியாண்டு முதல் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி பள்ளி கட்டடம், உபகரணங்கள், மின் கட்டணம், பராமரிப்பு, மாணவர்களுக்கான சலுகைகள் வழங்குவது ஆகிய பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும்.

நிர்வாகம், ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை ஆகிய பணிகளை, பள்ளியை நடத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். அதற்காக ஒரு மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டிற்கு செலவிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

எந்தெந்த பணிகள்?

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.நகர்., திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு உள்ளிட்ட தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் ஏழு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது.

கல்வியாண்டு துவங்குவதற்கு முன், இந்த பள்ளிகளை நடத்த உள்ள நிறுவனங்கள் விரும்பும் வகையில், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். சீருடை மாற்றம் குறித்து முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக்க பகுதிக்கு விடிவு எப்போது?

சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகளை, மாநகராட்சி கல்வித்துறை கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்க, தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசாணை வெளியிட, மாநகராட்சி, அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்காததால், விரிவாக்க பகுதி பள்ளிகள் பரிதாப நிலையில் உள்ளன. அரசு கல்வித்துறையை காட்டிலும், மாநகராட்சி கல்வித்துறை மூலம், மாணவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படுவதால், விரைவில் விரிவாக்க பகுதி பள்ளிகளை, மாநகராட்சியோடு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

Tuesday, November 25, 2014

Salary detail form

Click below

https://app.box.com/s/huy56h61nlnklaju9b6w

DDO Code form

Click below

https://app.box.com/s/2tdnm6gkjkf4rplvl431

இனிமேல் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் விதிவிலக்கின்றி சிறப்புக் கட்டணம் வசூலிப்பதற்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விரைவில் அனுமதியளிக்க உள்ளது.

வங்கிப் பரிவர்த்தனைகளை எளிமையாக்குவதற்காகவும் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் ஏ.டி.எம். மற்றும் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை வங்கிகள் வழங்கி வருகின்றன. தொடக்கத்தில், அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம்.களில் அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகளை மட்டுமே பயன்படுத்தி பணம் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதன்பிறகு, எந்த ஏ.டி.எம்.மிலும் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறகு, மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்-களை மாதத்தில் 5 தவணைகளுக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு தவணைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் மாதத்தில் 5 தவணைகள் மட்டுமே ஏ.டி.எம்.களை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலதிக தவணைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தன. இனி அடுத்த கட்டமாக, ஆன்லைன் மூலம் நடைபெறும் அனைத்து விதமான வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பிலிருந்து ’தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள், வெளியூர் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தினால் கமிஷன் பிடித்தம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானோர் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். சினிமா டிக்கெட்டிலிருந்து டெலி ஷாப்பிங் வரை அனைத்துவிதமான பரிவர்த்தனைகளும் இப்போது ஆன்லைன் மூலம் எளிதில் செய்ய முடிகிறது. ஆனால், இந்தப் பரிவர்த்தனைகளுக்காக பெரும்பாலான வங்கிகள் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.

இந்தியா முழுவதும் தினமும் சுமார் 10 லட்சம் கோடிக்கு ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இதில் ஒருவர் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்குக்கு ஆன்லைனில் பணம் மாற்றப்படுவதற்கு தற்போது மிகக் குறைந்த அளவிலான கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கின்றன. ஒருசில பரிவர்த்தனைகள் கட்டணம் ஏதும் இல்லாமலும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஏ.டி.எம். பயன்பாட்டுக்கு அனைத்து வங்கிகளும் கட்டணம் விதிக்கத் தொடங்கினால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் இன்னும் அதிகரிக்கக் கூடும். மேலும், குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்கக் கூடாது என அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகள் குறைந்தபட்ச பண இருப்பு கட்டுப்பாட்டை அமலில் வைத்திருப்பதால் சாமானியர்கள் வங்கிக் கணக்குத் தொடங்கத் தயங்குகிறார்கள். இதனால் இவர்களின் பரிவர்த்தனைகள் அனைத்தும் நேரடி கொடுக்கல் வாங்கல் மூலமே நடைபெறுகிறது. இந்த நிலைமையை தவிர்த்து அனைவரது பண பரிவர்த்தனைகளையும் வங்கிகள் மூலமாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் குறைந்தபட்ச பண இருப்பு முறையை ரத்து செய்ய அறிவுறுத்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், இந்த அறிவிப்பால் வங்கிகளுக்கு குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத கணக்கு களையும் அதிகம் பரிவர்த்தனை இல்லாத கணக்குகளையும் கையாள வேண்டிய பணிச்சுமை ஏற்படுகிறது. இதைக் கணக்கில் கொண்டு விதிவிலக்கு ஏதுமின்றி அனைத்து விதமான ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டு வங்கிகள் தரப்பிலிருந்து அண்மையில் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியும் இதை பரிசீலிப்பதாக உறுதி கொடுத்திருக்கிறது. எனவே விரைவில் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரலாம் என்று வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அரைச்சம்பள விடுப்பு கணக்கிடும் முறை

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை:
உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.

செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)

அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள்.

அப்படியானால்,

27 நாட்கள் அரை சம்பளம்,

4 நாட்கள் முழு சம்பளம் .

முதலில் உங்களின் அக்டோபர் மாத்தத்தின் ஒரு நாள் PAY-ஐ கண்டுபிடிக்க வேண்டும்.

காரணம் Pay-ஐ தவிர மற்ற அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.DA அறிவிக்கப்பட்டிருந்தால் புது DA தொகையினையும், அந்த மாதம் தங்களுக்கு Increment எனில் அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

>Pay-13,380/31=431.61

(ஒரு நாள் Pay)

>Half pay=431.61/2=215.8

(அரை நாள் Pay)

27 days half pay=215.8*27=5826.

4 days full pay= 431.61*4=1726.4

Pay-7553 (5826+1727) + DA-8697 (72%)+ HRA-760+ MA-100=17,110.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக 1.80 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. சென்னையில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விநியோகிக்கப்படுகின்றன.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்களாக அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இரவு காவலர்கள், கோடை விடுமுறையிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்குவது போல, 17 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.பள்ளித் தளவாட பொருட்களின் பாதுகாப்பு கருதி, காவலர்களும் விடுமுறை காலங்களில் முழு நேர பணியில் ஈடுபடுகின்றனர்.

எனவே அவர்களையும் விடுமுறையற்ற பணியாளராக கருதி, அந்நாட்களையும் ஈட்டிய விடுப்பாக கணக்கிட வேண்டும். தற்போது ஓராண்டுக்கு வழங்கப்படும் 17 நாட்கள் ஈட்டிய விடுப்பை, 30 நாட்களாக உயர்த்தும்படி, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கடந்த சட்டசபை மானிய கோரிக்கையின் போது அறிவுறுத்தப்பட்டது.அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வி முதன்மை செயலர் சபிதா அனுப்பியுள்ள உத்தரவில்,

"அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் காவலர்கள், விடுமுறையற்ற பணியாளர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்களாக உயர்த்தி அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உரிய திருத்தங்கள், அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் தனியாக வெளியிடப்படும், என உள்ளது

பொதுத்தேர்வில் மாநில தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை

"10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை மாநில அளவிலான தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. சென்னையில் நேற்றுமுன்தினம் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "அடுத்தாண்டு நடக்கும் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மாநில அளவில் 90ல் இருந்து 95 ஆக உயர்த்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக தலைமையாசிரியர்கள் மூலம் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் வழங்கப்பட்டு சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளது.

6,7,8,9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் எழுதும் திறன், பேசும் திறன், அடிப்படை கணிதத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,”என்றார்.

பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்.

..
மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களின்
தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வுக் கூட்டத்தில், உயர்திரு பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் உயர்திரு.பூஜா குல்கர்னி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்தனர்.காலாண்டுத் தேர்வில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி இலக்கை அடையவேண்டும் அதற்கான முழு முயற்சிகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

6,7,8 ஆகிய வகுப்புகளில் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்கள் மாணவர்களுக்கு அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Monday, November 24, 2014

அகஇ - 2015-16ம் ஆண்டுக்கான புதிய தொடக்க / உயர் தொடக்கப் பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் பெறுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

CLICK below

https://drive.google.com/file/d/0B69z3JTclPnxbVNKdjBMdTBVRTg/view?usp=sharing

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2015 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2015 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உணவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில் உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டைகளில் இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் நியாயவிலை கடைகளில், 2015 ஆம் ஆண்டுக்கான உள்தாளை குடும்ப அட்டையுடன் இணைத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 23, 2014

ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் குழப்பம்


 

விண்ணப்பத்தில் ஆண்டை குறிக்கும் இடத்தில் இருகட்டங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது விநியோகிக் கப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்க வரும் 26-ம் தேதி கடைசி நாள்.

விண்ணப்பத்துடன் படிவத்தை நிரப்ப உதவும் வழிமுறை கையேடு ஒன்றும் கொடுக்கப்படுகிறது. அதில் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு என்ற இடத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆண்டு மற்றும் மாதம் குறிக்க வேண்டும் என, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தில் வரிசை எண் 9-ல் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு காலத்தில் ஆண்டுக்கான வரிசையில் இரண்டு கட்டங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வரிசை கட்டங்களில் 0 முதல் 4 வரை வரையிலும், இரண்டாவது வரிசை கட்டங்களில் 0 முதல் 9 வரையிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதில் மாதத்தை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை. ஆனால், ஆண்டை குறிப்பிடும் கட்டத்தில் குழப்பம் இருப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கான வரிசையில் முதல் கட்டத்தில் 4 வரை மட்டும் எண் உள்ளதால் 2000-க்கு முன்பு பதிவு செய்தவர்கள் வருடத்தைக் குறிப்பதில் குழப்பம் அடைந் துள்ளனர்.

எனவே தேர்வு வாரியம் உடனடி யாக காலம் எண் ஒன்பதிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என, தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் மருத்துவ காப்பீடு : மத்திய அரசு புதிய திட்டம்


    அனைத்து தரப்பு மக்களுக்கும் காப்பீடு அளிக்க புதிய திட்டத்தை ஜனவரி மாதத்தில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதார காப்பீடு அளிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி அனைவருக்குமான தேசிய சுகாதார உறுதி திட்டத்தை செயல்படுத்து வது குறித்து வரையறை செய்ய சுகாதார அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கடந்த வாரம் கேட்டுக்கொண்டது. தற்போது மத்திய அரசு ராஷ்டிரீய ஸ்வஸ்திய பீமா யோஜனாவை (ஆர்எஸ்பிஒய்) செயல்படுத்தி வருகிறது.

இதில் புதிய அம்சங்களை சேர்த்து அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் வரையறைகளை மாற்றம் செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஆர்எஸ்பிஒய்ஐ தொழிலாளர் அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் தேசிய சுகாதார உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட உள்ளது. பின்பு இரண்டையும் இணைத்து ஒரே திட்டமாக செயல்படுத்தப்படும். இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவுறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைவருக்குமான காப்பீடு திட்டம் 50 அத்தியாவசிய மருந்துகள், முக்கிய பரிசோதனைகள், ஆயுர்வேதம், ஹோமியோபதி உட்பட 30 மாற்று மருந்துகளை சலுகை விலையில் பெற வழிவகுக்கும். இவை ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கும். மற்றவர்கள் சிறு தொகையை செலுத்தி சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெறலாம். முக்கிய மருத்துவ கருவிகளை குறைந்த விலையில் பெறமுடியும். ஆர்எஸ்பிஒய்ஐ 2008ம் ஆண்டு ஏப்ரலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது.