இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 17, 2014

புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 12 லட்சம் வாக்காளர்கள் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டைகள் ஓரிரு நாளில் வழங்கப்படும்


  போலி அட்டைகளை தயாரிக்க இயலாத வகையில் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இப்போது தயாரிக்கப்பட்ட அட்டைகள், ஸ்மார்ட் கார்டு போல இருக்கும். புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 12 லட்சம் வாக்காளர்களுக்கு அவை வழங்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சிக்கும், திருவள்ளூர் மாவட்டத்துக்கும் வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விட்டன. மேலும் 20 மாவட்டங்களுக்கு இன்னும் இரண்டு நாள்களில் வழங்கப்பட்டு விடும். இந்த மாவட்டங்களில் இன்னும் ஓரிரு நாளில் புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கும். மீதமுள்ள மாவட்டங்களுக்கு 15 நாள்களுக்குள் வண்ண அடையாள அட்டைகள் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்

அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை செலவிடுகிறது. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், பள்ளி பராமரிப்புக்கான பள்ளி பதிவேடு, ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு, மாணவர் வருகை பதிவேடு, ஊதிய பதிவேடு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பதிவேடு, வாசித்தல் திறன் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, இலவச பொருள் வழங்கும் பதிவேடு, மாணவர் திறன் பதிவேடு, தணிக்கை பதிவேடு, காலநிலை அட்டவணை என 64 வகையான நோட்டுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி பராமரிக்கின்றனர்.

மேலும், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகளை, ஆண்டுக்கு மூன்று முறை, வாடகை வாகனம் பிடித்து, கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர்களுக்கு வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் நிறைய உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும், என்றனர்.

தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

EMIS STUDENT height,weight details

EER report FORM

Tuesday, September 16, 2014

சென்னை நீதிமன்றத்தில் TET வழக்கு விசாரணை -

 சென்னை நீதிமன்றத்தில் நீதியரசர்கள்அக்னிஹோத்ரி எம்.எம் சுந்தரேஸ் ஆகியோரடங்கிய அமர்வுக்குமுன் TET வழக்குகள் மீது வாதம் தொடர்ந்து நடைபெற்றது துவங்கியது.வாதிகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்அரசு சார்பாக அட்வகெட் ஜெனரல் சோமயாஜி. வாதாடினார்

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.5% தளர்வினால் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது,வெயிட்டேஜ் முறையினால் பாதிப்பு ஏற்பட்ட நிலை,பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆசிரியர் தேர்வு முறைகள், வேலைவாய்ப்பக பதிவுக்கு ,பணி அனுபவத்துக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்படவேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து, தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் போன்ற வெவ்வேறு விதமான வாதங்களை முன்வைத்தனர். அனைவரும் ஒரே விதமான வாதங்களை முன்வக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகெட் ஜெனரல் சோமயாஜி.5% தளர்வினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போதைய வெயிட்டேஜ் முறை நீதிமன்றத்தின் பரிந்துரைப்பட்யே நடைமுறைப்படுதப்பட்டுள்ளது. அதிகம்பேர் தேர்ச்சிபெற்று காலிப்பணியிடங்கள் குறைவாக உள்ளநிலையில் பணிநியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை கடைபிடிக்கவேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்...

பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது..

வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார்.

அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது ",இது போட்டி நிறைந்த உலகம் மேலும் திறமையான ஆசிரியர்களை உருவாக்கவே இந்த வெய்ட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என கூறி மழுப்பி விட்டர்..

மதிய நேரத்தில் வழக்கறிஞர் திருமதி தாட்சாயினி ரெட்டி  அவர்கள் 5%தளர்வானது,  அரசியல் உள்நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது என கடுமையாக எதிர்த்தார் ...

இதற்கு நீதியரசரோ மாநில கல்வித்துறையில் நீதிமன்றம் தலையிட முடியாதென உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை சுட்டிக்காட்டினார்....

பின் அரசாணை 71க்கு எதிராக தாட்சியாயினி ரெட்டி அவர்கள் "+2வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 400மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு  வழங்கப்படுகின்றன அதேபோல் கலைப்பிரிவு(வரலாறு) பாடத்தில் ஒரு மதிப்பென்னும் வழங்கப்படவில்லை...

பின் எவ்வாறு வெய்ட்டேஜ் முறை சரியாகும் .. என கேள்வி எழுப்பினார் இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை...

மேலும் இதை நீதியரசர் அக்கினிகோத்திரி  அவர்கள் ஏற்றுக்கொண்டார்...

இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது மேலும் இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் அதிகப்படியான வாதத்தை முன்வைக்க விரும்புவோர் கடித ஆனை மூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்து மாலை 4:30க்கு முடிந்தது...

இருதரப்பினரும் நேரடி வாதங்களை முடித்த நிலையில்,இனி எழுத்துப்பூர்வ வாதங்களை அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும்.

தீர்ப்புக்குப் பின்னரே பணிநியமனம் நடைபெறக்கூடும் எனவும் அதுவரை பணிநியமனம் நடைபெற வாய்ப்பில்லை என நீதிமன்ற நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

இன்றும், நாளையும் நடைபெற இருந்த காலாண்டு தேர்வு தள்ளிவைப்பு வாசிக்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு ஒரே அட்டவணையின்படி நடத்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 15–ந் தேதி முதல் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடைபெற இருந்த தேர்வுகள் அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்காக வாக்காளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை? தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வாசிக்கப்பட்டது


உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக வாக்காளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை? என்பது பற்றி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பூத் சிலிப்புகள் இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 530 பதவி இடங்களுக்கு 18–ந் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்களிப்பதற்கு வசதியாக வாக்காளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தால் அதிகாரிகள் மூலம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டன.

இந்த பணி 16–ந் தேதியோடு (நேற்று) நிறைவு பெற்றது. 14 ஆவணங்கள் இந்த பூத் சிலிப்பை கொண்டுவந்தால் ஓட்டுபோடுவதற்காக வேண்டிய ஆவணங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துவர தேவையில்லை. பூத் சிலிப் இல்லை என்றால், அடையாளம் காணும் வகையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 14 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வரவேண்டும்.

அதன்படி, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் அட்டை, மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவை வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சாதி சான்றிதழ் இந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதிக்கு முன்னதாக வழங்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள், தபால் கணக்கு புத்தகம் அல்லது கிசான் கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன் உள்ளவை), முன்னாள் படைவீரர் ஓய்வூதிய புத்தகம், ஓய்வூதிய வழங்கல் ஆணை போன்ற புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் விதவைகள் அல்லது குடும்பத்தினருக்கான சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட தியாகியின் அடையாள சான்றிதழ், இந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி வரை உரிய அலுவலரால் வழங்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், ஆதார் அட்டை புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி உரிமம், மாற்றுத்திறனாளிகள் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் சான்று, இந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதிக்குள் வழங்கப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடன் அட்டை, தொழிலாளர் நல திட்டத்துறையின் புகைப்படத்துடன் கூடிய நலவாழ்வு காப்பீட்டுத் திட்ட ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வரவேண்டும்.

புகைப்படம் கட்டாயம் இந்த ஆவணங்களில் வாக்காளரின் புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் அடையாள ஆவணமாக வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலரால் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறன் குறைவு: எஸ்.எஸ்.ஏ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்


அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில், வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு, பொதுத்தேர்வுகளில், மாநில அளவில், அதிக இடங்களை பிடித்த, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், வாசிப்புத் திறன் மிக குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.எஸ்.எஸ்.ஏ., சார்பில், பல வகையான ஆய்வுகள், பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், எட்டாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாசிப்புத் திறன் குறித்து, கடந்த ஆண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.

கல்வித் துறை இணை இயக்குனர்கள் குழு, மாவட்ட வாரியாக சென்று, தமிழ் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, மாணவர்களிடம் கொடுத்து, வாசிக்கச் செய்தது. அதில், பெரு நகரங்களில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர், வாசிக்கத் திணறி உள்ளனர்.இந்த ஆண்டு, பொதுத்தேர்வில், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மாணவர்கள் தான், மாநில அளவில், அதிக மதிப்பெண்களை பெற்று, 'ரேங்க்' பெற்றனர். இந்த மாவட்ட மாணவர்கள் தான், வாசிப்புத் திறனில், மிகவும் பின் தங்கியிருப்பதாக, ஆய்வில் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.ஆய்வு முடிவின் அடிப்படையில், தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன், அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். இதுகுறித்து, துறை வட்டாரம் கூறியதாவது:

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, ஒரு சுற்றறிக்கையை, இயக்குனர் அனுப்பி உள்ளார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், முறையாக, அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, மாணவர்களை, பாடப் புத்தகங்களை வாசிக்கச் செய்து, அவர்களின் திறனை அறிய வேண்டும்.பாடப் புத்தகங்களை வாசிக்க, மாணவர்கள் திணறி னால், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரிடம், விளக்கம் கேட்டு பெற வேண்டும் எனவும், இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இவ்வாறு, துறை வட்டாரம் தெரிவித்தது.

பிரச்னைக்கு அரசு தான் காரணம்! மாணவரிடையே, வாசிப்புத் திறன்குறைவாக இருப்பதற்கு, ஆசிரியர், சரியாக பாடம் நடத்தாதது தான் காரணம் என, அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இழுத்தடிக்கும் டி.ஆர்.பி.,

ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இத்துறைக்கு உட்பட்ட துவக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு 1500 ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையால் ஐந்தாண்டுகளில் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை குறைகிறது.

ஒரு பள்ளியில் உள்ள ஆசிரியர், 40 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றுப் பணியாக செல்கிறார். மேல்நிலை பள்ளிகளில், தாவரவியல், விலங்கியல் பாடங்களை ஒரே ஆசிரியரும், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் பொருளியல் என மூன்று பாடங்களையும் ஒரே ஆசிரியரும் பல பள்ளிகளில் கற்பிக்கும் நிலையுள்ளது. ஆசிரியைகளை மாற்றுப்பள்ளிக்கு அனுப்புவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநியமனங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடக்க பள்ளிகளில் 75 ஆசிரியர் (11 மாற்றுத்திறனாளி பிரிவுக்கு) பணியிடங்கள், 249 பட்டதாரி ஆசிரியர்கள் (இதில் 111 பேர் பள்ளி கல்வித் துறைக்கு மாறுதல்), முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 33 பேர் ஒதுக்கீடு செய்ய மார்ச் மாதம் இத்துறையால் சிபாரிசு செய்யப்பட்டது.

இதற்கான ஒதுக்கீடும் ஆகஸ்ட்டில் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பணி நியமனத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மாவட்ட தலைவர் சின்னப்பாண்டி கூறியதாவது: இத்துறையில் 6 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் இல்லை. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கிறது. பள்ளி கல்வியில், தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளில் 9 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இத்துறையில் சென்றாண்டு தரம் உயர்த்தப்பட்ட ஐந்து மேல்நிலை பள்ளிகளில் தலா 5 பணியிடங்களே ஏற்படுத்தப்பட்டன. அதிலும் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. கள்ளர் சீரமைப்பு துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, டி.ஆர்.பி., மூலம் ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Monday, September 15, 2014

பி.எட் எம்.எட் படிப்பு இரண்டு ஆண்டு! விரைவில் வெளியாகிறது அரசாணை- தினமலர

*தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசின் என்.சி.டி.இ முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது

*ம.அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது

*இதில் அடுத்த ஆண்டு 2015-16ல் அமுல்படித்த முடிவெடுக்கப்பட்டது

*விரைவில் அரசாணை வெளியாகும் என தெரிகிறது

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து


"ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:தொடக்க கல்வித் துறையில் குழுக்கள் அமைத்து மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், வாசிப்பு மற்றும் எழுதும் திறன் ஆய்விற்கு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

.தொடக்க கல்வியில் மாணவர்கள் கல்வித் திறன் குறைந்து வருகிறது என்ற தகவல் தவறானது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ' மாணவர் அடைவு திறன்' ஆய்வில், குறிப்பிட்ட வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி கல்வி போதிக்கப்படுகிறது. இதை பின்பற்றாத பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.ஆசிரியர்கள், கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை நான் பிறப்பிக்கவில்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது தான், என்றார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

பின்னணி என்ன? கடந்த சில வாரங்களுக்கு முன் தொடக்க கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 'கல்வி அலுவலங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது,' என உத்தரவிடப்பட்டது.இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. செப்.,10ல் மாநில அளவில், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்நிலையில், சுற்றறிக்கை குறித்து இளங்கோவன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Saturday, September 13, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை.இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.மொத்தம் 72,888 பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்தச் சான்றிதழ்களை மூன்று வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது.ஆனால், பத்து நாள்களில் 50,276 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் முதல் முறையாக இணையதளத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ்களை 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும். ஒவ்வொரு தேர்வரும் இரண்டு முறை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம். சான்றிதழ்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தொடர்பாக செயல் விளக்கங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்.சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை எனக் கூறி சுமார் 400 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும். இதுவரை 22,612 பேர் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.இவர்கள் அனைவரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.