இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, August 23, 2014

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாவட்டங்களில் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, துறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை, அதில் நிலுவையில் உள்ளவை போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்," மாவட்ட வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் அதில் நியமிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது,என்றார்.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு தாள் ஒன்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பணி நாடுகளுக்கான அறிவிப்பு:-

இடைநிலை ஆசிரியர் நியமனம் 2012-13, அறிவிக்கை எண் 06/2014 நாள் 21.08.2014 க்கான தமிழ் நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற தகுதியான பணிநாடுநர்களில் பட்டியலில் இருந்து தாள் இரண்டில் தேர்ச்சி பெற்று ஏற்கனவே 10.8.14 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களை நீக்குவது என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இவ்வறிக்கையினை வெளியிடுகிறது. எனினும் ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது தெரிவினை ரத்து செய்து இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டுமே தங்களை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவிக்க விரும்பின் அவர்கள் மட்டும் 25.8.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேரில் வருகை புரிந்து அதற்குரிய எழுத்துப்பூர்வமாக விருப்பக் கடிதத்தினை சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டும் மற்றவர்கள் வருகை தர வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. உறுப்பினர் செயலர்.

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Important Instructions To Paper I Qualified Candidates

Friday, August 22, 2014

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு செப்.25-இல் தொடக்கம்

தனித் தேர்வர்களாக எழுதும் மாணவர்களுக்கான எட்டாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என, சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழ், 26-ஆம் தேதி ஆங்கிலம், 27-ஆம் தேதி கணிதம், 29-ஆம் தேதி அறிவியல், 30-ஆம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஆங்கில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம்'

'நாளை நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு, இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கு, தேர்வர்கள், பதிலளிக்க தேவையில்லை' என, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாளை நடக்கும், சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு தொடர்பாக, சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளில், சில சட்ட திருத்தங்களை, மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பையும், மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தேர்வர்களுக்கு அறிவிக்கப்படும் புதிய அறிவிப்பு வருமாறு: 24.8.14ல், முதல் மற்றும் இரண்டாம் தாள் என, சிவில் தேர்வு, முதல்நிலை தேர்வு நடக்கும். இரண்டாம் தாள் தேர்வு கேள்வித்தாளில், 10ம் வகுப்பு தரத்தில் இடம் பெற்றுள்ள ஆங்கில திறனறிதல் கேள்விகளுக்கு, தேர்வர்கள், பதிலளிக்க வேண்டாம். இந்த கேள்விகள், 'கிரேடு' மற்றும் 'மெரிட்' பட்டியலுக்காக, மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. எனவே, தேர்வர்கள், ஆங்கில கேள்விகளை தொட தேவையில்லை. மேலும், ஆங்கில கேள்விகள், இந்தி வழி கேள்வித்தாளில் அச்சடிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மொத்த மதிப்பெண்ணில், ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண், கழிக்கப்படும். எனவே, பிரதான தேர்வுக்கு (மெயின்) தகுதியான தேர்வர்களை தேர்வு செய்யும்போது, முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண் போக, மீதியுள்ள மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Thursday, August 21, 2014

இடைநிலை ஆசிரியர்கள் 2,408 பேர் விரைவில் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


   அரசு பள்ளிகளில் பணியமர்த்த இடைநிலை ஆசிரியர்கள் 2ஆயிரத்து 408 பேர் விரைவில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது. விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்புவது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிலுவையில் (பேக்லாக்) இருக்கும் பணியிடங்கள் 845 ஆகும். அவற்றில் பெண்களுக்கு 307 இடங்கள். மேலும் ஆதிதிராவிடர்களுக்கு அதிக இடங்கள் இருக்கின்றன. நிலுவையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிலுவையில் இல்லாமல் இந்த வருட காலிப்பணியிடங்கள் 830. அவற்றில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கு மட்டும் 88 இடங்கள் உள்ளன.

பெண்களுக்கு 327 இடங்கள் உள்ளன. மேலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளில் 64 இடங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 பணியிடங்களும் உள்ளன. மொத்தத்தில் 2 ஆயிரத்து 408 இடங்கள் உள்ளன. இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை: கணித ஆசிரியர்கள் எதிர்ப்பு

பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணைக்கு தமிழ்நாடு கணித ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. நிகழாண்டு, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த அட்டவணையின்படி, செப்டம்பர் 18-ஆம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாளும், 19-ஆம் தேதி கணிதத் தேர்வும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிதத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், அட்டவணையில் விடுமுறை அளிக்கப்படாததற்கு தமிழ்நாடு கணித ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.விஜயகுமார் கூறியது: பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு செயல்முறைத் தேர்வின் மூலம் 50 சதவீதம் மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால், கணிதப் பாடத்துக்கு 200 மதிப்பெண்களுக்கும் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியுள்ளது. மேலும், பொதுத் தேர்வில் கணிதப் பாடத்தில் தோல்வியடையும் மாணவர்களே அதிகம். பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுக்கு 50 சதவீதப் பாடம் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், காலாண்டுத் தேர்வில் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு எழுதிய அடுத்த நாளே கணிதத் தேர்வை மாணவர்கள் எழுதும்பட்சத்தில் பல மாணவர்கள் கணிதத்தில் தோல்வியடைய நேரிடலாம்.

இது அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு, பொதுத் தேர்வு வரை தொடரவும் வழிவகுக்கக்கூடும். எனவே, மாணவர்களின் நலன் கருதி ஆங்கிலம் இரண்டாம் தாள் முடிந்து குறைந்தபட்சம் ஒருநாள் விடுமுறை விட்டு கணிதப் பாடத்துக்கான தேர்வு நடத்த வேண்டும் என்றார் அவர்.

"நெட்' தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு


கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது. கடந்த மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் வரும் டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வை சிபிஎஸ்இ நடத்த உள்ளது. பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெறுவதற்கும் "நெட்' தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்கள் என இரு முறை இந்தத் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு முறையே மார்ச், செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும்.

கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்காக மட்டுமே "நெட்' தேர்வை நடத்திவந்த யுஜிசி, மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் 1989-ஆம் ஆண்டு முதல், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறவும், கல்லூரிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் சேர்த்து நடத்தி வருகிறது. இந்த நிலையில், இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை இப்போது சிபிஎஸ்இ-யிடம் ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது: யுஜிசி-யின் பணிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத் தேர்வை சிபிஎஸ்இ-தான் நடத்தப்போகிறது. இந்தத் தேர்வை சிபிஎஸ்இ முதன்முறையாக நடத்த இருப்பதால், கேள்வித்தாள் மாதிரிகளை அளிப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் யுஜிசி செய்துதரும் என்றார் அவர்.

இந்த மாற்றம் காரணமாக, இத் தேர்வை எழுதுபவர்கள் இனி cbse.nic.in என்ற இணையதளத்தையும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ), அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (ஏஐபிஎம்டி), மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) என்பன உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார்


     ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

. தேர்வு பெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த, மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா, அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால், பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பிரமாண்டமாக நடந்தது.

அதன்பின், தற்போது தான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில், நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு, முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். 2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது.

ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு, இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும், 28ம் தேதிக்குள், 2,000 பேரின், தேர்வு பட்டியல், தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்த

செப்.,6,7ல் அறிவியல் கண்காட்சி


   "பள்ளி மாணவர் களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி, திருச்சியில் செப்.,6,7 தேதிகளில் நடக்கிறது, ”என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார். அவரது சுற்றிக்கை: 2013 14ம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்காக, மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களின் படைப்புகள் செப்.,6,7ல் திருச்சி ஷிவானி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறும், மாநில அளவிலான கண்காட்சி யில் இடம்பெற உள்ளன.

அதில் அமைச்சர்கள், கலெக்டர்,பள்ளிகல்வித்துறை உயரதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். எனவே மாவட்ட அளவி லான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களின் பெயர்கள் பள்ளி முகவரி அவர்கள் படைத்த சாதனங்கள் உள்ளிட்ட விபர பட்டியலை முதன்மைக்கல்வி அதிகாரிகள் மெயிலில் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். கலந்து கொள்ள வரும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட சான்றுடன் வருவது அவசியம். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013

Wednesday, August 20, 2014

அனைத்து அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் கலவை சாதத்துடன் மசாலா முட்டை வழங்கும் வகையில், சத்துணவுக்கூட ஊழியர்களுக்கு மறு பயிற்சி

அனைத்து அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் கலவை சாதத்துடன் மசாலா முட்டை வழங்கும் வகையில், சத்துணவுக்கூட ஊழியர்களுக்கு மறு பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை சமூக நலத்துறை மேற்கொண்டு வருகிறது.

13 வகை சத்துணவு

தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், கடந்த ஆண்டு முதல், அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களிலும் மற்றும் 3 அரசு பள்ளிகளிலும் சோதனை அடிப்படையில் எலுமிச்சை சாதம், புளி சாதம், கொண்டைக்கடலை சாதம், கீரை சாதம், கருவேப்பிலை சாதம், சாம்பார் சாதம், சோயா சாதம், வெஜிட்டபுள் புலவு உள்பட கலவை சாதங்களும், தக்காளி முட்டை, மிளகு முட்டை, தக்காளி மற்றும் மிளகு கலந்த முட்டை, அவித்த முட்டை என மொத்தம் 13 வகைகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம்

இந்த பள்ளிகளில், மாணவ-மாணவிகள் கலவை சாதம் மற்றும் மசாலா முட்டைகளை விரும்பி உண்ணுகின்றனர். இதனால், சாப்பாடு வீணாவது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின உரையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை அனைத்து அங்கன்வாடிகள் மற்றும் அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கான அரசாணை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்துணவு ஊழியர்களுக்கு மறு பயிற்சி

கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை வழங்கும் திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்துவதன் மூலம், சுமார் 54 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.

அனைத்து அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவுக்கூட ஊழியர்களுக்கு கலவை சாதம் மற்றும் மசாலா முட்டை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே சத்துணவு ஊழியர்களுக்கு செப் தாமு மூலம் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது அனைத்து பள்ளிகளிலும் இந்த உணவு முறை பயன்பாட்டிற்கு வர உள்ளதால், மீண்டும் செப் தாமு மூலம் சத்துணவுக்கூட ஊழியர்களுக்கு மறு பயிற்சி வழங்க சமூக நலத்துறை பரிசீலனை செய்து வருகிறது.

இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 பேர் கொண்ட குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மூலம் அனைத்து பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவுக்கூட ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க சமூக நலத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது

தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன.
ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு, 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, விருது வழங்க உள்ளார்.
விருதில், ரொக்கம், 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்:

1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.
2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.
3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை,
விழுப்புரம் மாவட்டம்.
4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.
5. நடராஜன், தலைமை ஆசிரியர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
6. ஆண்டிரூவ்ஸ், தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.
7. தெரேன்ஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி., அமலாராக்கினி நடுநிலைப்பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.
8. நளினி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம் மாவட்டம்.
9. முத்தையா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கே.செம்பட்டி, மதுரை மாவட்டம்.
10. உதயகுமார், தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, சேலம் மாவட்டம்.
11. நசிருதீன், தலைமை ஆசிரியர், நகராட்சி உருது மகளிர் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
12. ராமகிருஷ்ணன், அரசு ஆரம்ப பள்ளி, வெள்ளாளபாளையம், கோவை மாவட்டம்.
13. தாமஸ், தலைமை ஆசிரியர், பாரத் மாதா உதவிபெறும் ஆரம்ப பள்ளி, உப்பாட்டி, நீலகிரி மாவட்டம்.
14. விநாயக சுந்தரி, தலைமை ஆசிரியை, சங்கரகுமார் ஆரம்ப பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
15. ராமசாமி, தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச உதவிபெறும் ஆரம்ப பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
16. நீலகண்டன், தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுபேட்டை, வேலூர் மாவட்டம்.
17. சாஷி ஸ்வரண்சிங், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
18. கஸ்தூரி, தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
19. ஆதியப்பன், தலைமை ஆசிரியர், எம்.எப்.எஸ்.டி., மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை.
20. செல்வசேகரன், முதுகலை ஆசிரியர், கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.
21. கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.
22. பாலுசாமி, தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை மாவட்டம்.

பிளஸ் 2, 10ம் வகுப்பிற்கு காலாண்டு தேர்வு அறிவிப்பு

  பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டு உள்ளார். மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வை, மாணவர்கள், பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்வில் கடைபிடிக்கும் முறையைப் போலவே, காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, '10ம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு, செப்., 17ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரையும், பிளஸ் 2, காலாண்டுத் தேர்வு, செப்., 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரையும் நடக்கும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்து உள்ளார்