இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, February 05, 2014

ஓராண்டு கால பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் தேர்வு எழுத அனுமதி இல்லை-dinamani

. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. ஒரு படிப்பில் மூன்றாண்டு பட்டம் பெற்று, வேறாரு படிப்பில் ஓராண்டு பட்டமும் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பிரச்னை எழுந்தது. இதை எதிர்த்து ஓராண்டு பட்டம் பெற்றவர்களும் மூன்றாண்டு கால பட்டம் பெற்றவர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, ஓராண்டு கால பட்டம் பெற்றவர்களை இடைநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கவும், ஆசிரியராக நியமனம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது எனவும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து 214 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். மேலும், ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பல்கலைக்கழக விதிகளில் பட்டப் படிப்புக்கு என பல்வேறு விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த விதிகளில், ஓராண்டு பட்டப்படிப்புகள் இடம் பெறவில்லை. மேலும், அரசு பள்ளிகளில் சாதாரண மாணவர்கள்தான் படிக்கின்றனர்.

அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும். இந்த ஓராண்டு பட்டதாரிகளால் அந்த மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதனால், ஓராண்டு கல்வியில் பட்டம் படித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவும் அங்கீகாரம் வழங்கக் கூடாது என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரிதான். மேலும், ஓராண்டில் பட்டம் பெற்றவர்கள் மூன்றாண்டு படித்து பட்டம் பெற்றவர்களுக்கு சமமாக மாட்டார்கள். ஓராண்டு பட்டம் படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதி இல்லை என அவர்களை நிராகரித்த அதிகாரிகளின் செயலும் சரிதான்.

எனவே, மேல் முறையீடு செய்த இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஓராண்டு பட்டம் படித்தவர்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அங்கீகரிக்க கூடாது என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் உறுதி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு.- tnkalvi


இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள், அரசின் எதிர் மனு தாக்கலால் இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சமாதானம் அடைந்தனர்.
எனினும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வரும் வாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  

Tuesday, February 04, 2014

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு


இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது  என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பென்ஷன் ரூ.1,000 : பி.எப்., கூட்டத்தில் இன்று முடிவு

  மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும், மத்திய டிரஸ்டிகளின் போர்டு கூட்டம், இன்று, டில்லியில் நடக்கிறது. இதில், குறைந்தபட்ச பென்ஷன் தொகையை, 1,000 ரூபாயாக மாற்றுவது குறித்து, முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக, 6,500 ரூபாய் வரை, அடிப்படை சம்பளம் பெறுவோர் மட்டுமே, பென்ஷன் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்ற நிலை உள்ளது. இனி, 15 ஆயிரம் ரூபாய் வரை, அடிப்படை சம்பளம் பெறுவோர், பயன்பெறும் வகையில், இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பெறும் ஓய்வூதிய தொகை, குறைந்தபட்சம், 1,000 ரூபாயாக நிர்ணயிப்பது குறித்தும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதன்மூலம், 28 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர்.

பென்ஷன் ரூ.1,000 : பி.எப்., கூட்டத்தில் இன்று முடிவு

  மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும், மத்திய டிரஸ்டிகளின் போர்டு கூட்டம், இன்று, டில்லியில் நடக்கிறது. இதில், குறைந்தபட்ச பென்ஷன் தொகையை, 1,000 ரூபாயாக மாற்றுவது குறித்து, முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக, 6,500 ரூபாய் வரை, அடிப்படை சம்பளம் பெறுவோர் மட்டுமே, பென்ஷன் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்ற நிலை உள்ளது. இனி, 15 ஆயிரம் ரூபாய் வரை, அடிப்படை சம்பளம் பெறுவோர், பயன்பெறும் வகையில், இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பெறும் ஓய்வூதிய தொகை, குறைந்தபட்சம், 1,000 ரூபாயாக நிர்ணயிப்பது குறித்தும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதன்மூலம், 28 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர்.

பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியீட

ு 2013 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த பி.எட்., எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. பி.எட்., எம்.எட்.துணைத் தேர்வு முடிவை www.tnteu.in என்ற இணையதளத்தில் அறியலாம். தேர்வில் தவறியவர்கள் ஜூன் மாதம் நடக்க உள்ள தேர்வில் கலந்துக்கொள்ள பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வு: 1,262 பணியிடங்களுக்கு வரும் 10 முதல் கலந்தாய்வு

  குரூப் 2 தொகுதியில் நேர்காணல் அல்லாத ஆயிரத்து 262 பணியிடங்களுக்கு கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்பட குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது.

அதில், நேர்காணல் அல்லாத ஆயிரத்து 262 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் 10- ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள், பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அரசுப் பணியாளர் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

முதுகலை தேர்வு பட்டியல் வெளியீடு

முதுகலை வரலாறு, பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தமிழ்வழி பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), வெளியிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் தேர்வில், இந்திய கலாசாரம் மற்றும் மனையியல் பாடம் மற்றும் வரலாறு, பொருளியல், வணிகவியல் ஆகிய பாடங்களில், தமிழ்வழி பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, wwww.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

10, பிளஸ் 2 மாணவருக்கு இலவச கையேடு: அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உத்தரவு

. அனைத்துப் பள்ளிகளிலும், கடந்த பருவத்தேர்வில், 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை, கல்வித்துறை ஆய்வு செய்தது. இதன்படி, குறைந்த மதிப்பெண் பெற்றவர், இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும்; நன்கு படிப்பவர்கள், கூடுதல் மதிப்பெண் பெறும் வகையிலும், நாகை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராம கிருஷ்ணன் தலைமையிலான ஆசிரியர் குழுவினரால், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில், ஐந்து பாடங்களுக்கு, 150 பக்கங்களும்; பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல், பொருளியல், வரலாறு பாடங்களுக்கு, 120 பக்கங்களும் கொண்ட கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், "இந்த கையேட்டில், அனைத்து பாடங்களிலும், எளிமையான பகுதிகளில் துவங்கி, கடினமான பகுதிகள் வரை, முக்கிய வினாக்கள் தொகுக்கப்பட்டு, விடைகள் தரப்பட்டுள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், தலா இரண்டு கையேடுகள் வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு நகல் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்,” என்றார்.

ஒரு நாள் வேலை நிறுத்தம், டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

இன்று (4.2.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 6.3.2014 -வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது. 2.2.2013 மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜாக் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடக்கக்கல்வித் துறையில் உள்ள 6 இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் ஏழாவது சம்பள கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி மாத்தூர் நியமனம்

- மாறி வரும் விலைவாசிக்கேற்ப மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன்களை மத்திய அரசு நியமித்து வருகிறது. அந்தந்த காலகட்டத்தின் வாழ்க்கை செலவினங்களை சீராய்வு செய்யும் இந்த சம்பள கமிஷன், கால மாற்றத்துக்கேற்ப அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட வேண்டிய புதிய சம்பளம் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரையை ஏற்று அரசு ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தி வழங்கும்.

இதன் அடிப்படையில் மாநில அரசுகளும் இதற்கு சற்றேறக் குறைய தங்களது ஊழியர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்கும். கடைசியாக அமைக்கப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், அதை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் கடந்த 2006-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. இதேபோல், 2016-ம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பாக பரிந்துரை செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட சம்பளக் கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. செயலாளராக மீனா அகர்வால், நிரந்தர உறுப்பினராக எண்ணை துறை செயலாளர் விவேக் ரயே, பகுதிநேர உறுப்பினராக ரதின் ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சம்பள திருத்தம் தொடர்பான தனது பரிந்துரையை இந்த கமிஷன் 2 ஆண்டுகளுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கமிஷன் வழங்கும் பரிந்துரை 2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும், அவர்களை தொடர்ந்து அனைத்து மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான மாநில அரசு ஊழியர்களும் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Monday, February 03, 2014

மத்திய அரசின் 10 சதவீத அகவிலைப்படி கணக்கீடு எப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது, 90 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கூடுதல் 10 சதவீத அகவிலைப்படி உயர உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா? ஒவ்வொரு மாதமும், இந்திய அளவில் பரவலாக, பொருட்களின் விலை குறியீட்டுப் புள்ளி சேகரிக்கப்படுகிறது. அதன் சராசரியை கணக்கிட்டுக் கொள்கின்றனர்.

இப்படி கடந்த ஆண்டின் (2013), 12 மாத சராசரியை எடுத்துக் கொள்கின்றனர். அதனுடன், 2005 ம் ஆண்டின் சராசரியை கழித்து, அதை நூறால் பெருக்குவர். பின், அந்த தொகையை மீண்டும், 2005ம் ஆண்டின் சராசரி விலைப்புள்ளி குறியீட்டால் வகுப்பர். இதில் கிடைக்கும் தொகையே, ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அகவிலைப்படி சதவீதம். இதன்படி கடந்த 12 மாத விலைப்புள்ளி சராசரி 232.17 இதனுடன் 2005ம் ஆண்டின் விலைப்புள்ளி சராசரி 115.76ஐ கழித்து, நூறால் பெருக்கி, மீண்டும் 115.76ஆல் வகுக்க 100.56 சதவீதம் வருகிறது.

இது இப்போது வழங்கப்பட வேண்டிய சதவீதம். ஏற்கனவே 90 சதவீத அகவிலைப் படியை பெற்று வருவதால், மீதியுள்ள 10 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படும்.

PG Tamil medium 2011-12 provisional selection list released by TRB

TRB - PG General Merit List
click below

http://111.118.182.232:96/result_pg.aspx

TET PAPER II - 2013 (Revised Result- 11/01/2014)

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

Sunday, February 02, 2014

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் தொடங்க திட்டம்

ஆசிரியர்களின் ஜாதகமாக விளங்குவது அவர்களின் பணி பதிவேடு எனப்படும் சர்வீஸ் ரெஜிஸ்டர் ஆகும். ஆசிரியர்களின் விபரங்கள் மட்டுமின்றி அவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு கட்டங்களிலும் அவர்களின் பதவி உயர்வு, சம்பள விபரங்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றிருக்கும். மேலும் பணிக்காலத்தில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரங்களும் இதில் இடம் பெறும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பணிபதிவேடு வெள்ளம், தீ போன்ற சூழலால் பள்ளிகளில் இருந்து பாதிக்கப்பட்டால் அந்த ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அவர்கள் பணிபதிவேட்டை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டு.

இந்தநிலையில் பணி பதிவேட்டை ஆன்லைன் மயமாக்கி இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் என்ற பெயரில் மாற்றம் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சம்பள கமிஷனின் போது ஊதிய நிர்ணய விபரங்கள், பதவி உயர்வு, இடமாறுதல்கள், ஓய்வு கால பலன்கள் போன்றவை எளிதாக மேற்கொள்ள முடியும்.பள்ளிகளில் தற்போது கல்வி மேலாண்மை முறையில் மாணவ, மாணவியர் விபரங்கள் புகைப்படத்துடன் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களின் விபரங்கள் ‘டீச்சர்ஸ் புரொபைல்‘ என்ற பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக தொடக்க கல்வித்துறையில் ஒன்றிய வாரியாக இந்த பதிவுகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் இ-சர்வீஸ் ரெஜிஸ்டருக்கான விபரங்களும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதற்கான கருத்தாளர்களுக்கான கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட்டம் தோறும் பள்ளிகள் தொடர்பான தகவல் சேகரிப்பு தொகுப்பில் இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் என்ற பகுதியில் ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. அதில் ஆசிரியர்கள் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், இனம், மொழி, பதவி உயர்வு விபரங்கள், பெறுகின்ற சம்பளம், வீட்டு முகவரி, ரத்த பிரிவு, உடல் அடையாளங்கள், போட்டோ, இ-மெயில் முகவரி, செல்போன் எண், இருசக்கர, 4 சக்கர வாகனம் இருப்பின் அதன் பதிவு எண், பான்கார்டு போன்ற விபரங்கள் பதியப்படும். மேலும் இதன் தொடர்ச்சியாக பணி பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்ற விடுப்பு, விடுப்பு ஒப்படைப்பு, டிபிஎப், சிபிஎஸ், எஸ்பிஎப், எச்எப் போன்றவற்றுக்கு வாரிசு நியமனம், ஆதார் அட்டை எண் போன்றவையும் பதிவு செய்யப்படும்‘ என்றார்.இதன்மூலம் இனி ஆசிரியர்களின் பணிபதிவேடு எளிதில் கையாளத்தக்க வகையில் வெள்ளம், தீ போன்றவற்றால் எந்த சூழ்நிலையிலும் சேதப்படுத்தப்படாத இ-சர்வீஸ் ரெஜிஸ்டராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் 8-இல் துவக்கம் By திருப்பூர்,

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு, வங்கித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கும் வகையில், திருப்பூரில் பாரதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் துவக்க விழா வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெற உள்ளது.   பாரதி கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் துவக்க விழா வரும் 8-ஆம் தேதி காலை 9.30 மணியளவில், குஜராத் சமாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன் தலைமை வகிக்கிறார். திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.தங்கவேல், மாநகர காவல் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர், 99522 37383, 97871 71225 எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று, இப்பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் த.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயனடைவார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ""ஆரம்ப கால மதிப்பீட்டின்படி இந்த ஆண்டு 10 சதவீதத்திற்கு குறைவாக அகவிலைப்படி இருக்காது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம்'' என்று தெரிவித்தனர். இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12 முதல் 2 நாள்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

குரூப்-1: 79 காலியிடங்களுக்கு 1.8 லட்சம் பேர் போட்டி

   துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 79 காலியிடங்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பட்டதாரிகள் போட்டி போடுகிறார்கள். மூன்று துணை ஆட்சியர்கள் (ஆர்.டி.ஓ.), 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 33 வணிகவரி உதவி ஆணையர்கள், 10 ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களை (மொத்தம் 79 இடங்கள்) நேரடியாக நியமிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த டிசம்பர் 29-ம் தேதி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.

முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதிலிருந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற அடிப்படையில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் அனுமதிக்கப் படுவர். எனினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களையும் மெயின் தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 70 பேருக்கு சிறப்பு அனுமதி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 என்றும், மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைமுறையில் இருந்த 5 ஆண்டு பணிநியமன தடை சட்டத்தால் பாதிக்கப்பட்டதையும், அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வழங்கிய 5 ஆண்டு வயது வரம்புச் சலுகையை பயன்படுத் திக் கொள்ள முடியாததையும் குறிப்பிட்டு தங்களை குரூப்-1 தேர்வெழுத அனுமதிக்குமாறு வயது வரம்பை கடந்த சுமார் 70 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களை தேர்வெழுத அனுமதிக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி 70 பேர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப் பித்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் குரூப்-1 முதல்நிலைத்தேர்வுக்கு சில நிபந்தனைகளுடன் தற்காலி கமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.