இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 07, 2013

மாதந்தோறும் டீசல் விலையை 1 ரூபாயாகவும், சமையல் கேஸ் ரூ.10 வரையும் அதிகரிக்க திட்டம்: பொதுமக்கள் அதிர்ச்சி

மாதம்தோறும் உயர்த்தப்படும் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வில் நிர்ணயித்த அளவைவிட மேலும் அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டு தோறும் 90 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் விலையை சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இதேபோல் டீசல் விலையை மாதந்தோறும் 50 பைசா உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மே மாதம் முதல் கடும் சரிவை சந்தித்தது. இதனால் கச்சா எண்ணெய்யை கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு 11 ரூபாய் வரையும், சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 555 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

இதையடுத்து மாதந்தோறும் 50 பைசா உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலையை ஒரு ரூபாயாக உயர்த்தவும், இதேபோல் சமையல் கேஸ் விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன

அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக்கல்வி புதிய இயக்குநர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக புதிய இயக்குநராக ஆர்.எம்.ச ந்திரசேகரன்  வியாழக்கிழமை பொறுப்பேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியராக ஆர்.எம்.சந்திரசேகரன் 1990 ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இடையில் 2007-2010ல் திருச்சி அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.

பின்னர் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியராக பணியா ற்றி வருகிறார். இந்நிலையில் இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக புதிய இயக்குநராக பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு வியாழக்கிழமை பொறுப் பேற்றார்.  இதற்கு முன்பு இருந்த இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் மேலாண்மைத்துறை பேராசி ரியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 06, 2013

10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாத

. தனியார் பள்ளிகள் அவ்வாறு வற்புறுத்தினால் பெற்றோர்கள் இ-மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களை கல்வியாண்டின் இடையில் பெற்றோர்களின் விருப்பமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்கி தனித்தேர்வர்களாக அவர்களை பொதுத்தேர்வு எழுத வலியுறுத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலமாகவும், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டங்களிலும் பள்ளி மாணவர்களை எந்தக் காரணத்தாலும் தனித்தேர்வர் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்தால் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுமாறு மெட்ரிக் பள்ளிகள் வற்புறுத்துவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு இ-மெயில் மூலமó புகார்கள் வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் இடையில் பெற்றோர் விருப்பமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது.

இந்த மாணவர்களை எந்தக் காரணம்கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணிப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது. இந்த விதிகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கும் என்றால் கீழ்க்கப்பட்ட இ-மெயில் முகவரியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம். இ-மெயில் முகவரி:  dmschennai2010@gmail.com, எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்: 94421-44401, 94435-74633.

பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்

தமிழகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், தமிழ் வாசிப்புத் திறன், மிக மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, தமிழ் வாசிப்புத் திறன், 64 சதவீதமாக இருப்பதும், எஸ்.எஸ்.ஏ., மூலம், அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில், 'பள்ளிகள் இல்லாத, தொலை தூர குடியிருப்பு பகுதிகளில், புதிய பள்ளிகள் துவங்க, கருத்துரு அனுப்பவும், ஆசிரியரல்லாத பள்ளிகளில், உடனடியாக, ஆசிரியர்களை நியமிக்கவும், தமிழ்வாசிப்புத் திறனை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு

அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட, அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இக்கல்வி முறையால், மாணவர்களின் கல்வி தரம் மேம்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிடுவதற்காக, அடைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வு 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. இதற்காக, வட்டார அளவில், 10 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள, தலா, 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பட்டியல், அனைவருக்கும் கல்வி இயக்க இயக்குனநரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், அடைவுத் தேர்வுக்கான நாள் அறிவிக்கப்படவுள்ளது.

முதுகலை பட்டப் படிப்பில் இணையான பாடப்பிரிவுகள்

  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சில பட்டப்படிப்புகளுக்கு சமமான பாடங்கள் குறித்த தெளிவுரை வழங்கி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதன்படி சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., பொது மேலாண்மை (பப்ளிக் மேனேஜ்மென்ட்) படிப்பு, முதுகலையில் பொது நிர்வாகப் படிப்புக்கு (பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்) இணையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., வளர்ச்சி நிர்வாகம் (டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும் (ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பு), எம்.ஏ., பொது நிர்வாகம் (பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்) படிப்புக்கு இணையானது.

சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.எஸ்சி., பயன்பாட்டு புவியியல் (அப்ளைடு ஜியாக்ரபி) படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி., புவியியல் (ஜியாக்ரபி) படிப்பு. மேலும் சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., தமிழ் இலக்கியப் படிப்புக்கு (தமிழ் லிட்டரேச்சர்) இணையானது எம்.ஏ., தமிழ் எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்தகவலை அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வவர்மா அரசாணையாக வெளியிட்டுள்ளார்.

Tuesday, November 05, 2013

TET Final Answer Key paper 1

TET Final Answer key paper 2

TRB CUT OFF IN DETAILS


The Cutoff given by TRB is follows:
+2
Above 90%-10 mark
80 to 90 %- 8 mark
70 to 80% - 6 mark

60 to 70%- 4 mark
50 to 60% - 2 mark
UG
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark
Below 50%- 10 mark
B.Ed
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark
T.E.T
Above 90% - 60 mark
80 to 90% - 54 mark
70 to 80%- 48 mark
60 to 70%- 42 mark

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்,

 பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்) 80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண் 70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண் 60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண் 50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண் 50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண் பி.எட். படிப்பு 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண் 70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண் 60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்

   'ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, 7000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். மாநில பதிவு மூப்புப்படி, 2009ம் ஆண்டில், 7,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 2013 வரை, பணி மாறுதல் கலந்தாய்வு வாய்ப்பு அளிக்கவில்லை. அரசுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

"இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம்' சார்பில் பணிமாறுதல் கோரி, தனித்தனியாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். "சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட மாறுதல் கேட்டால், விதிகளுக்கு உட்பட்டு வழங்கலாம்' என, கடந்த செப்டம்பரில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. கோர்ட் உத்தரவின்படி, தமிழக அரசு இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக., 17, 18 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், விரைவில் வெளியாகவுள்ளன. இதில், தேர்ச்சி பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் அளிக்கும் பட்சத்தில், மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விடும்.

இதனால், பல ஆண்டுகளாக போராடி பெற்ற கோர்ட் தீர்ப்பிற்கு, எந்த பலனும் இல்லாமல் போய் விடும் என்ற அச்சத்தில், 7,000 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளாக மாறுதல் இன்றி, 7,000 ஆசிரியர்கள் குடும்பத்துடன் தவிக்கின்றனர். 2012 ல் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 9,567 இடைநிலை ஆசிரியர்கள், அவரவர் சொந்த மாவட்டங்களில் நியமனம் பெற்றனர். டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை, காலியான பணியிடங்களில் நியமித்தால், ஏற்கனவே தவிக்கும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், மேலும் பாதிக்கப்படுவர். டி.இ.டி., யில் தேர்ச்சி பெறுவோர் நியமனத்திற்கு முன், 2009 க்கு பின், நியமனம் பெற்ற எங்களுக்கு, சிறப்பு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆறாவது ஊதிய குழு பரிந்துரையின்படி, 7,000 ஆசிரியர்களின் அடிப்படை சம்பளமும் மாற்றியமைக்க, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராபர்ட் கூறினார்.

செவ்வாய் கிரகம் செல்ல 10 மாதங்கள் ஏன்?

"பூமியில் இருந்து சந்திரன் இருக்கும் தூரத்தை விட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில் செவ்வாய் கிரகம் இருப்பதால், "மங்கள்யான்' செயற்கைகோள், செவ்வாய் கிரகத்தை அடைய, 10 மாதங்களாகும்,'' என, "அறிவியல்புரம்' இணையதள ஆசிரியர் என்.வி.ராமதுரை கூறினார். "மங்கள்யான்' பயணம் குறித்து அவர் கூறியதாவது: பூமியில் இருந்து, நான்கு லட்சம் கி.மீட்டர் தூரத்தில் சந்திரன் உள்ளது. சொல்லப் போனால், பூமி என்ற பங்களாவின், "அவுட் ஹவுஸ்' போல சந்திரன் உள்ளது. ஆனால், இதைவிட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில், செவ்வாய் கிரகம் உள்ளது. பூமியும், செவ்வாய் கிரகமும், தனித் தனியான நீள் வட்டப் பாதையில், சூரியனை சுற்றி வருகின்றன.

சூரிய குடும்பத்தின் சுற்றுப்பாதையில், இந்த கிரகங்கள் சுற்றி வரும் வேகம், ஒரே சீராக உள்ளது. பூமியும், செவ்வாயும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், அருகில் நெருங்கி வரும். இதைக் கணக்கில் கொண்டே, "மங்கள்யான்' செயற்கைகோள், தற்போது, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுகிறது. இப்பணி, இந்திய விண்வெளி ஆய்வில், மிக முக்கியமான வெற்றி. பூமியும், செவ்வாய் கிரகமும் அருகில் இருக்கும்போது தான், குறைவான எரிபொருள் செலவில், செயற்கைகோளை அனுப்ப முடியும். மேலும், செயற்கைகோளுக்கும், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும், தகவல் தொடர்பு சீராக இருக்கும். தூரம் அதிகரிக்கும் போது, தகவல் தொடர்பு சரியாக இருக்காது. எனவே, பூமியும், செவ்வாயும் அருகில் இருக்கும் காலத்தைக் கணக்கில் கொண்டு, "மங்கள்யான்' செயற்கைகோளை, தற்போது ஏவுகின்றனர

். பூமியின் சுற்று வட்ட பாதையை விட்டு வெளியேறும் வரை தான், செயற்கைகோளுக்கு எரிபொருள் தேவைப்படும். அதன்பின், ஆற்று நீரில் செல்லும் படகு போல, செயற்கைகோள் விண்வெளியில் மிதந்தபடி சென்று கொண்டு இருக்கும். பூமியும், செவ்வாய் கிரகமும் தனித் தனியான நீள் வட்டப் பாதையில், சூரியனை சுற்றி வருகின்றன. முதலில், பூமியின் சுற்று வட்டப் பாதையிலிருந்து வெளியேறி, செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றும் நீள் வட்டப் பாதைக்கு, செயற்கைகோளை கொண்டு செல்ல வேண்டும். அதன்பின்பே, செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட சுற்று வட்ட பாதையில் செயற்கைகோளை சேர்க்க முடியும்.

பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் கடக்க, 10 மாதங்களாகும். எனவே, "மங்கள்யான்' செயற்கைகோள் செவ்வாய் கிரகத்தை அடையும் காலத்தை, அது ஏவப்பட்ட நாளிலிருந்து, 10 மாதங்களாக கணக்கிட்டுள்ளனர்.இவ்வாறு, ராமதுரை கூறினார்.

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: வெறும் 4 சதவீதம் பேர் "பாஸ்!'

டி.ஆர்.பி., மூன்றாவது முறையாக, ஆகஸ்ட்டில் நடத்திய டி.இ.டி., தேர்வு முடிவை, நேற்றிரவு வெளியிட்டது. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். முந்தைய தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன.

தமிழகத்தில், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர் பணி), 2.62 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியர் பணிக்கானது), 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக இருந்தன. இரு வாரங்களாக, தேர்வு முடிவை, தேர்வர் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு, தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், 27,092 பேர், தேர்ச்சி பெற்றனர். வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதாலாக தேர்ச்சி பெற்றனர். கடந்த தேர்வில், 2.99 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்

TET Exam Paper II Results

Tamil Nadu Teacher Eligibility Test Result -2013

http://111.118.182.204/TET_Paper2_result/TET_Paper2_Result.aspx

TET exam result I Tamilnadu candites

Tamil Nadu Teacher Eligibility Test Result -2013

http://111.118.182.204/TET_Paper1_result/TET_Paper1_Result.aspx

Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Click here for Provisional Mark List for Paper I

தமிழகத்தில் கடந்த  ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு .சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தகவல் பலகையில் மதிப்பெண்கள் ஒட்டப்பட்டுள்ளது. Source-jaya+

Monday, November 04, 2013

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்: தமிழக அரசு புதிய உத்தரவு

அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகள் எளிமையாகின்றன. மேலும்,  வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக வேலைகளை நிரந்தரமாக்கும் பணிகள் இனி விரைந்து மேற்கொள்ளப்படும். 

வாரிசுகளுக்குத் தரப்பட்ட தாற்காலிகப் பணியை வரன்முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இதற்காக, அரசு ஊழியர்களின் வாரிசுகளிடம் இருந்து 15 வகையான சான்றிதழ்கள் பெறப்பட்டன. வாரிசுகள் தற்போது பணிபுரியும் துறையின் உயர் அதிகாரியிடம் இந்தச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும். இத்துடன், 18 வகையான பிரிவுகள் அடங்கிய ஒரு படிவத்தையும் சேர்த்துப் பெற்று அரசு பரிசீலனைக்கு அந்த அதிகாரி அனுப்பிவைப்பார்.

இவ்வாறு பலவகையான சான்றிதழ்களைத் திரட்டித் தரவேண்டியுள்ளதால் வாரிசுகளின் பணி நிரந்தரம் காலதாமதமாகிறது. இதைத் தவிர்க்கும்வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், கல்வி தகுதி மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல்களை அனுப்பினால் போதும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்தச் சான்றிதழ்களுடன் வாரிசு பற்றிய அடிப்படை விவரங்களைத் தெரிவிப்பதற்கான 18 பிரிவுகளைக் கொண்ட ஒரு படிவத்தையும் அரசுத் துறைகளின் தலைவரின் ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். பணிவரன்முறை எளிதாகும்:

சான்றிதழ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக கருணை அடிப்படையிலான பணிவரன்முறைகள் எளிதாக நடைபெறும் என பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலாம்: பி.எப்., ஆணையர்

பி.எப்., தொகை முதிர்வு மற்றும் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களில், நடவடிக்கை எடுக்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம், என, பி.எப்., ஆணையர் பிரசாத் கூறியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.எப்., தொகை முதிர்வு மற்று கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, ஐந்து நாட்களில் தீர்வு காணப்படுகிறது. அதிகபட்சமாக, 20 நாட்களில் தீர்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காமல், நிலுவையிலிருந்தால், சந்தாதாரர்கள், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்களில், தேவையான தகவல்கள் இல்லாமல் இருந்தால், அவற்றை பூர்த்தி செய்தும் அளிக்கலாம். இவ்வாறு, பிரசாத் கூறியுள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இளங்கலை, முதுகலை, தொழில் படிப்பு, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பு குறித்து விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகிய தகவல்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 07ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்கள் பெற www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

SSA SPD 18.10.2013 அன்றைய ஆய்வு கூட்ட அறிக்கை மற்றும் அறிவுரைகள்

Sunday, November 03, 2013

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி~


*மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை ~06.11.2013
உயர் தொடக்கநிலை~08.11.2013

*மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை ~12.11.2013
உயர் தொடக்கநிலை~19.11.2013

*வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி~
தொடக்க நிலை ~16.11.2013

உயர் தொடக்கநிலை~23.11.2013

courtesy:tntam

Saturday, November 02, 2013

மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 1268 துவக்கப்பள்ளிகளுக்கு "பூட்டு'

"அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இருக்காது' என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர். தமிழக அரசு, சமீப காலமாக, கல்வித்துறையில் நவீன பாட முறைகளையும், இலவச திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது; இருந்தும், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெற்றோகளின் ஆங்கிலக் கல்வி மோகமே, இதற்கு காரணம். இதனால், அரசுப்பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள, 23,576 துவக்கப்பள்ளிகளில், 1268 பள்ளிகளை மூட, அரசு முயற்சித்து வருவதாக, ஆசிரியர் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில்,"முதல் கட்டமாக, 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இப்பள்ளிகளில், தற்போது, இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு மேலாளர், இரண்டு ஆயாக்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளிகளை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு, மூன்று முதல், நான்கு பள்ளிகள் மூடப்படும். இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே, இருக்காது' என்றனர்.