இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 26, 2013

8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை!

"சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு. இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து இவர் கூறியதாவது:நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணி துவங்கிவிடும்.காய்ச்சல் வந்தபோது, விபத்து நேரிட்ட போது கூட பள்ளிக்கு வந்து விட்டேன். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகள் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன்.

மற்ற நாட்களில் எனக்கு பதில் கணவர் செல்வார். என் பணிக் காலத்தில் இதுவரை 20 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளேன். நான் மட்டும் இல்லை. என் மகன் அரவிந்தன், மகள் அபர்ணா ஆகியோரும் பெரும்பாலும் விடுப்பு எடுப்பதுஇல்லை. நான் எடுக்கும் பாடப்பிரிவில் அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். பெரும்பாலான ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளேன். மீதமுள்ள ஒன்பது ஆண்டுகள் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று மாணவ, மாணவியர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பது தான் என் லட்சியம்.இவ்வாறு ஆசிரியை சசிகலாதேவி உற்சாகத்துடன் கூறினார்.

சென்னை பல்கலைதேர்வு முடிவுகள் வெளியீடு

  சென்னை பல்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.சென்னை பல்கலையில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., - எம்.ஏ., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு, கடந்த ஆண்டு, நவம்பரில், தேர்வு நடந்தது.இத்தேர்வு முடிவுகள், www.unom.ac.in, www.kalvimalar.com, www.examresults.net, உள்ளிட்ட இணையதளங்களில், நாளை வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் பெறுவது, தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்டவை குறித்த விவரங்களை, பல்கலை இணையதளத்தில் பெறலாம்.சென்னை பல்கலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் விவரம் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய கூடாது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை தலைமை ஆசிரியர்களை கொண்டு பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் முருக. செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரத்தை பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர், இரவு நேரக்காவலர், அலுவலக உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். தொடக்க கல்வித் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒன்றிய, உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலக காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வேலை நிறுத்த உரிமை, தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வரும் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் 48 மணி நேர பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளது. இதில் தேசபக்த உணர்வோடு ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 25, 2013

மாணவ, மாணவியர் விவரங்களை இணையத்தில் பதிய மேலும் அவகாசம்

மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களை உள்ளடக்கி, "கல்வி நிர்வாக தகவல் கட்டமைப்பை' உருவாக்க, கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில், பல திட்டங்களை செயல்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, அவர்களின் பெயர்கள், வகுப்பு, பிரிவு, தாய், தந்தை பெயர், வீட்டு முகவரி, தந்தையின் தொழில், குடும்ப வருவாய் என, பல விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பணி, கடந்த ஒரு வாரமாக, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. கல்வித்துறை வழங்கியுள்ள பிரத்யேக இணையதளத்தில் , விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என, பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம், இம்மாதம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மின்வெட்டு பிரச்னை, மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து, தாமதமாக கடிதங்களை பெற்றது போன்ற காரணங்களால், தனியார் பள்ளிகளில், பணிகள் முடியாமல் உள்ளன.

சென்னை புறநகர்களில் உள்ள, பல தனியார் பள்ளிகளுக்கு, இரு தினங்களுக்குமுன் தான், தகவல் கிடைத்துள்ளது. 3,000, 4,000 ம் பேர் பயிலும் பள்ளிகளில், தகவல்களை பூர்த்தி செய்ய, பல நாட்கள் தேவைப்படும் நிலை உள்ளது. இருக்கிற ஒரு சில நாட்களில், மாநிலம் முழுவதும் பணிகள் முடிவடையாத நிலை இருப்பதால், கால அவகாசத்தை, மேலும் நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆரம்பத்திலேயே, இறுதியான தேதியை தெரிவித்தால், பணிகளை முடிக்காமல் இருந்துவிடுவர். இதனால், 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தெரிவித்தோம். ஆனால், பல பள்ளிகளில், பணிகள் முடியாமல் இருப்பது, எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, பிப்.,15 வரை, நீட்டிப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம். இது குறித்த அறிவிப்பு, மாத கடைசியில், பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Professional Tax | புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 2013 தொழில் வரி உண்டா ?

ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை 2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).

புதிய ஆசிரியர்கள் பணி சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகவில்லை என்றாலும், அவர்கள் தொழில் செலுத்தும் அளவு உரிய தொகையை ஊதியமாக பெற்று இருந்தால் அவர்கள் பிப்ரவரி 2013க்கு தொழில் வரி செலுத்த வேண்டும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 17.12.2012 அன்று நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.24,888 மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.15,590 சம்பளமாக கிடைக்க வாய்ப்புள்ளதால் 28.02.2013 வரை முறையே ரூ.61,819 மற்றும் ரூ.38,724 வர வாய்ப்புள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.706ம் இடைநிலை ஆசிரியர்கள் ரூ.238 செலுத்தவேண்டி இருக்கும். தொழில் வரி:  அரையாண்டு வருமானம்  :   21 ,000   வரை                               : இல்லை         21,001  முதல் 30,000 வரை      : ரூ. 94    30,001 முதல்  45,000  வரை     : ரூ.238  45,001  முதல் 60,000 வரை     : ரூ.469 60,001 முதல்  75,000 வரை     : ரூ.706 75,001 முதல்                               : ரூ. 938     

DEE-CCRT 10days Pupperty Training

Thursday, January 24, 2013

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலைத்திறன் போட்டி

  மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் பிப்.1ம் தேதியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் பிப்.2ம் தேதியும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது. கவிதை போட்டி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது. கட்டுரைப்போட்டி பகல் 12 மணி முதல் பகல் 1.30 மணிவரை நடக்கிறது. பேச்சு போட்டி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது. விதிமுறை:

அந்தந்த மாவட்டத்திலுள்ள கலைக்கல்லூரிகள், பொறியிற் கல்லூரிகள், மருத்துவம், கால்நடை மருத்துவக்கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், பல் தொழில் நுட்பக் கல்லூரிகள், பிற கல்லூரிகளில் பியலும் மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். அனைத்து மாணவர்களுக்கும் போட்டி பொதுவானது. ஒவ்வொரு கல்லூரி, பள்ளிகளிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் 3 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். இவர்களை கல்லூரி நிர்வாகம் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், பற்றிய விபரத்தை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, மாணவரே பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்று போட்டி நடப்பதற்கு முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனரிடம் தரவேண்டும்.

மூன்று போட்டிகளில் ஒரு மாணவரே கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மாநில அளவிலான போட்டிக்கான இடம், நாள், நேரம் தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்து பின்னர் அறிவிக்கப்படும். சிறந்த கவிதைக்கு, முதல் பரிசு ரூபாய் 10ஆயிரம், 2ம் பரிசு ரூபாய்7 ஆயிரம். கட்டுரைக்கு, முதல் பரிசு ரூபாய்10 ஆயிரம், 2வது பரிசு ரூபாய்7 ஆயிரம். பேச்சுபோட்டிக்கு, முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம், 2வது பரிசு ரூபாய்7 ஆயிரம் வழங்கப்படும்.

இன்று பி.எட் ., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு முடிவு வெளி ட யீ

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு, கடந்த டிசம்பரில் நடந்தது. இத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று, வெளியிடப்படுகிறது. இதை www.tnteu.in என்ற, இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வில் தவறியவர்கள், மே, ஜூனில் நடைபெறும் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளம் மற்றும் அவரவர் பயின்ற கல்லூரிகளின், முதல்வரிடம் பெற்று, பூர்த்தி செய்து, கல்லூரிகள் வாயிலாக, பிப்.,4 க்குள் அனுப்ப வேண்டும்.

Wednesday, January 23, 2013

ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்

கட்டாயக்கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஒரே நேரத்தில், 2,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால், ஒட்டு மொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால், இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, எந்த வகை பள்ளிகளாக இருந்தாலும், 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின் அறிவிப்பு வெளியாகி, அதன் அடிப்படையில் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், 2,000 பேர் வரை சேர்ந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. இந்த பணி நியமனம், ஆர்.டி.இ., சட்டத்திற்கு எதிரானது என்பதால், இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய, கல்வித்துறைக்கு, அரசு உத்தரவிட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில், முதல்கட்டமாக, தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்ய, துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. இந்த தகவல் தெரிந்ததும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

பணி நீக்க உத்தரவு கடிதங்கள், நேற்று வழங்க இருந்த நிலையில், பிரச்னை குறித்த முழு விவரங்களையும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, பணி நீக்க உத்தரவு வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகி தெரிவித்தார். இந்த பிரச்னை குறித்து, முழுமையாக ஆய்வு செய்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது

: முதலில் மேற்கண்ட தேதிக்குப் பின், ஆசிரியர் பணி நியமனம் செய்யக் கூடாது என, சம்பந்தபட்ட துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். இதை, அதிகாரிகள் செய்யவில்லை. மேலும், ஆசிரியர் நியமனங்களுக்கு, அதிகாரிகள் அனுமதியும் வழங்கி உள்ளனர். இப்படி, ஆரம்பத்தில் நடந்த தவறுகளுக்கு, அதிகாரிகளும் ஒரு காரணமாக உள்ள நிலையில், திடீரென ஆசிரியர்களை மட்டும் பழிவாங்குவது நியாயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்: வரைவு பாடத்திட்டம் பிப்., 13ல் வெளியீட

ு அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பாடத் திட்டங்களை மாற்றி, அவ்வப்போதைய கால கட்டத்திற்கு ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தற்போதுள்ள பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, ஆறு ஆண்டுகள் ஆகின்றன.

எனவே, வரலாறு, அறிவியல், தொழில்துறை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில், புதிய பாடத் திட்டங்களை உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. பாட வாரியாக, தனித்தனி நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டில், முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிற்கும், பல்வேறு பல்கலைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் தலைமையில், தலா மூன்று, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என, ஆறு பேர், உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த குழுக்களுக்கும், ஓய்வுபெற்ற சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகபூஷணராவ், தலைவராக உள்ளார். இக்குழு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், 24 பாடங்களுக்கு, தற்காலிக வரைவு பாடத் திட்டத்தை தயாரித்து முடித்துள்ளது.

பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இருந்து, இதுகுறித்து கருத்து கேட்கும் கூட்டங்கள், வரும் 30, 31 தேதிகளில், மாவட்ட தலைநகரங்களில் நடக்கின்றன. முதல் நாள், செய்முறைத் தேர்வு பாடங்களுக்கான கருத்துக் கேட்பும், மறுநாள், செய்முறைத் தேர்வு அல்லாத பாடங்களுக்கு கருத்துக்களை கேட்டறிய, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் அடிப்படையில், பிப்., 13ல், துறை இணையதளத்தில் (www.tnscert.org) வரைவு பாடத் திட்டத்தை வெளியிட்டு, 27ம் தேதி வரை, மீண்டும் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், அதன்பின் வரைவு பாடத் திட்டத்தை இறுதி செய்து, அரசின் அனுமதிக்கு அனுப்பப்படும் என்றும், துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. அடுத்த கல்வி ஆண்டில் (2014-15), பிளஸ் 1 வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015-16), பிளஸ் 2 வகுப்பிற்கும், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் ஆகின்றன. குழுவின் தலைவர் நாகபூஷணராவ் கூறியதாவது:

ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள பாடத் திட்டங்கள், தேசிய அளவில், உயர்கல்வி சேர்க்கைக்காக நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்கள் உட்பட, பல்வேறு பாடத் திட்டங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில், உயர்கல்வி மற்றும் தொழில்துறைக்கு தேவையான தரமான பாடத் திட்டங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ளவர்களும், வரைவு பாடத் திட்டத்தின் மீது கருத்துக்களை தெரிவிக்கலாம். சமச்சீர் கல்வி திட்டத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து, அதிகமான கருத்துக்கள் வந்தன; மேல்நிலை கல்வி பாடத் திட்டத்திற்கும், அதிகமான கருத்துக்கள் வரும் என, எதிர்பார்க்கிறோம். தரமான கருத்துக்களை சேர்த்து, வரைவு பாடத் திட்டத்தை இறுதி செய்வோம். அரசின் ஒப்புதலுக்குப் பின், பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, அச்சடிக்க வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்போன் கட்டணம் 2 மடங்கு உயர்வு

  ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி செல்போன் நிறுவனங்கள் அழைப்பு கட்டணங்களை சுமார் 2 மடங்கு உயர்த்தி உள்ளன. எனினும் அதுபற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, செல்போன் நிறுவன பங்குகள் விலை புதன்கிழமை உயர்ந்து காணப்பட்டன.

செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனம் வர்த்தக மேம்பாட்டுக்காக செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச நிமிடங்களை 25 சதவீதம் வரை குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான சிறப்புக் கட்டண கூப்பன் (பூஸ்டர்/ரேட் கட்டர்) விலையை ரூ.5 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்தக் கட்டண உயர்வு நாட்டில் உள்ள அனைத்து 22 தொலைத் தொடர்பு வட்டங்களிலும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஒரு சில தொலைத் தொடர்பு வட்டங்களில் மட்டும் செல்போன் கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக ஐடியா செல்போன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதாவது வர்த்தக மேம்பாட்டுக்காக செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கபூர் கூறுகையில், ""செலவு அதிகரித்து வந்த போதிலும், கடந்த 3 ஆண்டுகளாக செல்போன் கட்டணங்கள் குறைக்கப்பட்டன. இப்போதைய வருமானம் செலவை ஈடுகட்டுவதற்குக் கூட போதுமானதாக இல்லை. எனவே கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது'' என்றார். அதேநேரம், செல்போன்களுக்கான முதன்மை கட்டணம் உயர்த்தப்படவில்லை என ஏர்டெல் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், தொலைத்தொடர்புத் துறையின் நிதிநிலை மோசமாக உள்ளதால் கட்டண உயர்வு அவசியமாகிறது என்றும், அப்போதுதான் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். எனினும், கட்டண உயர்வு குறித்து வோடஃபோன் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கருத்து கூற மறுத்து விட்டார். இதன் தொடர்ச்சியாக, ரிலையன்ஸ், ஏர்செல், டாடா ஆகிய செல்போன் நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தும் எனத் தெரிகிறது. ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள், சமீபத்தில் இன்டர்நெட் பயன்பாட்டுக்கான 2ஜி டேட்டா கட்டணங்களை 30 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.

உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் கட்டணங்கள் மிகக் குறைவாக உள்ளன. நிறுவனங்களிடையே நிலவிய கடும் போட்டி காரணமாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வந்ததால் வருமானம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

காமராசர் பல்கலை: பி.எட்., படிப்புக்கு விண்ணப்பம

் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் இரண்டு வருட பி.எட்., படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தற்போது ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பில் அதாவது பி.லிட்.,யில் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், புவி-இயற்பியல், உயிரி-இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், உயிரி-வேதியியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல், நிலவியல்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெரிட் முறையிலும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வரைவோலை எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்ப ரூ.850 வரைவோலை எடுக்க வேண்டும். சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜன.,24ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது. பூத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்.,25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 3ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.