இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 07, 2012

பள்ளிகளில் மாணவர்கள் பங்களிப்புடன் "அட்சய பாத்திரம்' வைக்க அரசு உத்தரவு

மாணவர்களிடம் உள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், பள்ளிக்கூட சத்துணவு மையங்களில், "அட்சய பாத்திரம்' வைக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மாணவர்கள் தினமும், ஒரு காய் வீதம் அதில் போடவும், மறுநாள் அதை சமையலுக்கு பயன்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களிடம், சமுதாய ஏற்றத் தாழ்வு நிலவுவதாக, புகார் எழுந்தது.

இதை களையும் வகையில், மாணவர்களின் பங்களிப்போடு, சமையல் மேற்கொள்ளும் நோக்கில், கடந்தாண்டு, "அட்சய பாத்திரம்' திட்டத்தை, முதல்வர் அறிவித்தார். ஒரு சில பள்ளிகள் மட்டும், சில நாட்களுக்கு இதை செயல்படுத்தின. அடுத்த மாதம் முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும், சத்துணவில் புதிய உணவு வகை அமல்படுத்தப்பட உள்ளது. இதில், வெஜிடபிள் பிரியாணி, பிசிபேளாபாத் உட்பட, 13 வகையான கலவை சாதம் மற்றும் ஐந்து வகை சுவையில், முட்டை இடம் பெறுகிறது. சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருவதால், அரசு ஒதுக்கும் நிதிக்குள், தரமான உணவு வழங்குவதில் சிரமம் இருப்பதாக, பணியாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், அரசு சார்பில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவர்கள் இடையே சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், சத்துணவு மையங்களில், "அட்சய பாத்திரம்' திட்டம் அமல்படுத்த வேண்டும்; அந்தந்த பள்ளிகளின் சத்துணவு மையங்களில், இதற்காக பாத்திரம் வைக்க வேண்டும். மாணவர்கள், தினமும் வீட்டில் இருந்து, ஏதேனும், ஒரு காய் கொண்டு வந்து, இதில் போட வேண்டும். மறுநாள் சத்துணவு சமையலுக்கு, அதிலுள்ள காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில், எந்த மாணவர், என்ன காய் இட்டுள்ளார் என்பது குறித்த தகவல், ரகசியமாக வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில்,

""அடுத்த வாரம் முதல், அனைத்து பள்ளிகளிலும், "அட்சய பாத்திரம்' கட்டாயம் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது, அறிமுகப்படுத்தும் புதிய உணவு வகைக்கு, இத்திட்டம் ஏற்றதாக இருக்குமா என்பது தெரியவில்லை'' என்றனர்.

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு

பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை, அக்.,ரில் நடந்த, டி.இ.டி., தேர்வில், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, 5ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரம்மாண்டமாக நடத்த, தமிழக அரசு முடிவு எடுத்தது.இந்நிகழ்ச்சியை தள்ளிப்போடாமல், தேர்வு பெற்றவர்களுக்கு, சூட்டோடு சூடாக, பணி நியமன உத்தரவுகளை வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், விழாவை நடத்த, பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

ஒய்.எம்.சி.ஏ., திடலில் விழா ஏற்பாடுகள் : சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், விமரிசையாக விழா நடக்கும் எனவும், இதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, ஆசிரியர் பணி நியமன உத்தரவுகளையும், மாணவர்களுக்கான நலத்திட்டங்களை துவங்கி வைப்பார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.விழா நடக்கும் இடத்தை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், நேற்று பார்வையிட்டனர். இந்த இடத்தில், விழா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஐந்து நாட்களுக்குள், தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக் கல்வித்துறையில் நடக்கும் பணி நியமனங்கள், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள், "ஆன்-லைன்' முறையில் நடந்து வருகின்றன.

எனவே, 18 ஆயிரம் பேரும், இதே முறையில், பணி நியனம் செய்ய, துறை திட்டமிட்டுள்ளது.விழாவிற்கு முன்நாளில், கலந்தாய்வு நடத்தி, சில பேரை தேர்வு செய்யவும், தேர்வு செய்யப்படுபவர்கள், முதல்வர் கையால், பணி நியமன உத்தரவுகளை பெறவும், துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

TRB - TET மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறத

ு. TRB - TET மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலந்தாய்வு முற்பகல் 08.00 மணிக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu Public Service Commision- Results

தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை- dinakaran

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆசிரியர்கள் நேற்று திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால்  ஏஇஓ.,அதிரடியாக  மாற்றப்பட்டார். திருப்பூர் வடக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக இருப்பவர் குருசாமி.

இவர் ஆசிரியர்களை மனம் புண்ப டும்படி பேசுவதாக ஆசிரியர்கள் புகார் கூறினர். இதையடுத்து, இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த நவம்பர் 8ம் தேதி திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் உதவி தொட க்கக் கல்வி அலுவலர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தை பெண்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திடீர் என முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து அங்கிருந்த தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கரோலினிடம், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவரும் விசாரி த்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, தொடக்க கல்வி அலுவலர் குருசாமி காரமடைக்கு மாற்றப்பட்டார்.

DSE -+2 supplementary Result

Thursday, December 06, 2012

அக்டோபர் மாத பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியீடு

   அக்டோபர் மாதம் பெயிலான மற்றும் தனித்தேர்வர்கள் பிளஸ்–2 எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) அரசு தேர்வுகள் இயக்குனரக இணையதளத்தில் ( www.dge.tn.nic.in )வெளியிடப்படுகிறது.

தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் நேரில் சென்று சான்றிதழ்களை 17 முதல் 19–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். சிறப்பு அனுமதி (தட்கல்) திட்டத்தில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு சான்றிதழ்கள் அவர்களின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.

விடைத்தாள் அச்சுப்பகர்ப்பு நகல் கேட்டோ அல்லது மறு கூடடலுக்கோ 10 மற்றும் 11 தேதிகளில் ஆன்லைனில் www/dge.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க உதவியாளர் பணி: இணையதளத்தில் நுழைவுச் சீட்ட

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணி தேர்வுக்கான நுழைவுச் சீட்டு பெறாதவர்கள் இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டு பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆர். சீதாலட்சுமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் மாநில ஆள் சேர்ப்பு நிலையம் அறிவித்திருந்த பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணிக்கான நுழைவுச் சீட்டு விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நுழைவுச் சீட்டுகளை வியாழக்கிழமைக்குள் (டிசம்பர் 6) தபால் மூலமாக பெறாத விண்ணப்பதாரர்கள், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீர்ர்ல்ள்ழ்க்ஷ.ர்ழ்ஞ் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ழ்க்ஷங்ஷ்ஹம்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுச் சீட்டில் புகைப்படம், கையெழுத்து இல்லாதவர்கள் புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட வேண்டும்.

நுழைவுச் சீட்டுடன் ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, கல்லூரி அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு கூடத்துக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் விண்ணப்பித்தற்கான ஆதாரத்துடன் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அலுவலகத்தில் நுழைவுச் சீட்டை பெறலாம். மேலும் விவரங்களுக்கு,

"கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அலுவலகம், 91, புனித மேரி சாலை, டி.ஏ.என்.எஃப்.இ.டி. அலுவலகம் (3-வது மாடி), அபிராமபுரம், சென்னை - 18' என்ற முகவரியிலோ 044 24616503, 24614289 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, December 05, 2012

டி.இ.டி., தேர்வு பெற்றவர் விவரம் இணையதளத்தில் வெளியீடு

  டி.இ.டி., தேர்வில், தேர்வு பெற்ற, 18 ஆயிரத்து, 382 பேரின் பெயர் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த தேர்வுகளில், தேர்வு பெற்றவர்களின், இறுதி பட்டியலை, நேற்று முன்தினம், டி.ஆர்.பி., வெளியிட்டது.

அதன்படி, இரு தேர்வுகளிலும், 18 ஆயிரத்து, 382 பேர், தேர்வு பெற்றனர். இவர்களின், பெயர் விவரங்கள், டி.ஆர்.பி.,யின், www.trb.tn.nic.in இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளோமா என்பதை அறியலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்திய போது, முதல் தாள்களில் (ஜூலை, அக்டோபர்), 449 பேரும், இரண்டாவது தாள்களில், 84 பேரும், "ஆப்சென்ட்' ஆயினர். இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத இவர்களுக்கு, டி.ஆர்.பி., மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, ஆப்சென்ட் ஆனவர்கள், உரிய காரணத்தை குறிப்பிட்டு, வரும், 10ம் தேதி, டி.ஆர்.பி., அலுவலகத்தில், விண்ணப்பம் தர வேண்டும். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான நபர்களை, இறுதி பட்டியலில் சேர்க்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதிகளவில், விண்ணப்பம் வந்தால், ஏதாவது ஒரு தேதியில், அனைவரையும், சென்னைக்கு அழைத்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்திடவும், டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. மேலும், 1,567 பேர், உரிய கல்வித் தகுதி இல்லாதவர்கள் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இவர்கள், மீண்டும், விண்ணப்பம் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்வு பெற்ற, 47 பேர், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை வழங்கவில்லை. எனவே, இவர்களின் முடிவுகள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவர்களும், 10ம் தேதி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை, நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

TET - தேர்ந்தோர்க்கு சில முக்கிய குறிப்புகள் குறிப் ப

1: TRB வெளியிட்டுள்ள Result இல் உங்கள் Roll No தந்தவுடன் தாங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளது தொடக்க கல்வி துறையா ( அல்லது ) பள்ளி கல்வி துறையா என்ற விவரம் மேலே தரப்பட்டு உள்ளதை குறித்து கொள்ளவும்.

குறிப்பு 2: தங்களின் வரிசை எண் தரப்பட்டு உள்ளது. அதையும் குறித்து கொள்ளவும். TET Re - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே Serial No தரப்பட்டு இருக்கும்.

TET First - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு Serial - No தரப்பட்டு இருக்காது.

IGNOU M.ed Entrance Result 2012

Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Graduate Assistants (PAPER 2) - Individual Query  

Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query  

Teachers Eligiblity Test Supplementary 2012 - Results - Candidates - Graduate Assistants (PAPER 2) - Individual Query

Teachers Eligiblity Test Supplementary 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query

Tuesday, December 04, 2012

பொது வினாக்களாக மாறும் கட்டாய வினாக்கள்? : அரையாண்டு தேர்வில் நடைமுறை-Dinamalar

கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட கட்டாயமாக்கப்பட்ட இரு வினாக்கள், பொது வினாக்களாக மாற்ற உள்ளதாகவும், வரும் அரையாண்டு தேர்விலேயே நடைமுறைப் படுத்தப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட, பாடப் புத்தகத்தில் இல்லாத, கட்டாயமாக்கப்பட்ட வினாக்களால், சதம் பெற்றவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்தது;

மாணவ, மாணவியர் பலர், கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டனர். தற்போது, மாணவர்களின் நலன் கருதி, கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட உள்ளது. வாய்மொழி உத்தரவு, எழுத்துப் பூர்வமாக வரும் வரை, ஏதுவும் சொல்ல இயலாது' என்றார்.

கோவை மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில், ஐந்து மதிப்பெண் ஒன்றும், இரண்டு மதிப்பெண் ஒன்றும், கட்டாய வினாக்களாக கேட்கப்பட்டன. இதனால், சதம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. வரும், 19ம் தேதி முதல், ஜன., 7ம் தேதி வரை, அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட்டது குறித்து, தகவல் சார்ந்த அறிக்கை ஏதும், இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி

10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளின் இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் விவரம்:   பாடம்  முந்தைய காலியிடங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள்  இப்போதைய காலியிடங்கள் 1. தமிழ் 2,298 1,815 483 2. ஆங்கிலம் 4,826 3001 1,825 3. கணிதம் 2,664 1,365 1,299 4. இயற்பியல் 1,454 410 1,044 5. வேதியியல் 1,453 643 810 6. தாவரவியல் 625 62 563 7. விலங்கியல் 622 74 548 8. வரலாறு 4,304 1,182 3,122 9. புவியியல் 1,076 75 1,001 10. சிறுபான்மையின மொழிப்பாடங்கள் 110 91 19 மொத்தம் 19,432 8,718 10,714

குரூப் 4 கலந்தாய்வு டிசம்பர் 17 முதல் தொடக்கம்

குரூப் 4 பிரிவின் கீழ் வரும் இளநிலை உதவியாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் உள்ள பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 6-ம் தேதி நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்கள் கம்ப்யூட்டர் வழி விண்ணப்பத்தில் கோரியுள்ளபடி மூலச்சான்றிதழ்கள் மற்றும் அவைகளுக்கான சான்றொப்பமிடப்பட்ட நகல்களை கலந்தாய்வுக்கு வரும்போது தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும், கம்ப்யூட்டர் வழி விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு படிப்பை தமிழ்வழி மூலம் பயின்றுள்ளதாக உரிமை கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் சான்றிதழ் பெற்று கலந்தாய்வுக்கு வரும்போது கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். இந்தச் சான்றிதழ் அவர் விண்ணப்பிக்கும்போது, தமிழ் வழியில் பயின்றார் எனக் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும், தட்டச்சர் பதவிக்கான அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்பட்ட தேர்வின் தேர்ச்சிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை சரிபார்ப்பின்போது கட்டாயம் அளிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, December 03, 2012

25 ஆண்டுகள் பணி நிறைவு பொதுத்துறை ஊழியர்களுக்கும் பணப்பரி”

அரசுப் பணியில், 25 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்களின் பணியாளர்களுக்கும், நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப்பணியில், 25 ஆண்டுகள், எவ்வித குறையும் இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், பாராட்டுச் சான்றிதழும், "கிசான் விகாஸ்' பத்திரமும் வழங்கப்பட்டு வந்தது. கிசான் விகாஸ் பத்திரம் வழங்குவதை சமீபத்தில், மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து, கிசான் விகாஸ் பத்திரத்திற்குப் பதில், 2000 ரூபாய் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆண்டுக்கு இருமுறை, இதில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் கீழ் வரும், அரசுக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், இத்திட்டத்தை நீட்டித்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

  வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் மழை நீடிப்பதால் நாளை  (செவ்வாய்க்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அறிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், மணவாளநகர், வேப்பம்பட்டு, கடம்பத்தூர், திருப்பாச்சூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் லேசான அளவில் மழை பெய்து கொண்டே இருந்தது.மழை காரணமாக இன்று (4–ந் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கே.வீரராகவ ராவ் உத்தரவிட்டு உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:– கும்மிடிப்பூண்டி– 40, ஊத்துக்கோட்டை– 21, திருவள்ளூர்– 20, அம்பத்தூர்– 19, பொன்னேரி– 14.6, செங்குன்றம்– 14, தாமரைப்பாக்கம்– 13, பூண்டி– 10.6, சோழவரம்– 9, திருவாலங்காடு– 8, பள்ளிப்பட்டு– 4, பூந்தமல்லி, திருத்தணி, செம்பியம்– 3.மழை காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் சித்ரசேனன் அறிவித்துள்ளார்.  

இனி ஒரு நாளுக்கு 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே

இனி ஒரு நாளில் 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும். இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஒரு நாளில் ஒரு மொபைலில் இருந்து 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்தது.

ஆனால் ஆணையத்தின் இந்த முடிவுக்கு டில்லி ஐகோர்ட் தடை விதித்தது. கட்டுப்பாடு தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவது போல் உள்ளதாக டில்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில், சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மீண்டும் எஸ்.எம்.எஸ்., கட்டுப்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Award of Incentive to the Govt Employee record 25yrs of Unblemised service- Letter

Saturday, December 01, 2012

குரூப்-1 முதனிலைத் தேர்வு தேதி மாற்றம்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதிக்குப் பதில் ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், ணிகவரித் துறை உதவி ஆணையர்,மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 24 ஆகவும் வரும் ஜனவரி 27ம் தேதி தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

மெட்ரிக் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்ற அந்தஸ்துக்குள் வராது ஐகோர்ட்டு உத்தரவ

மெட்ரிக் பள்ளிகளை தனியார் பள்ளிகள் என்ற அந்தஸ்துக்குள் கொண்டு வர முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வாரியத்தின் கீழ் வந்தன முன்பிருந்த விதிமுறைகளின்படி, தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகத்தின் இணைப்பை பெற்றிருக்க வேண்டும். பின்னர் இந்த விதி மாற்றப்பட்டு, மெட்ரிகுலேஷன் வாரியம் உருவாக்கப்பட்டது.

பின்னர் இந்த வாரியத்தின் கீழ் மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில் மெட்ரிக் வாரியத்துக்கு மெட்ரிக் பள்ளிகள் தொகை செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மெட்ரிக் பள்ளிகளை தனியார் பள்ளிகள் என்ற அந்தஸ்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுக்கள் தள்ளுபடி இந்த வழக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்த நீதிபதி ப.சதாசிவம் (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி), மெட்ரிக் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால் பின்னர் இந்த வழக்கை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி) விசாரித்து, நீதிபதி சதாசிவத்தின் உத்தரவுக்கு மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் தர்மாராவ், ஆர்.சுப்பையா ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் மெட்ரிக் பள்ளிகளை கொண்டு வர முடியாது. மெட்ரிக் வாரியத்துக்கு கொடுக்க வேண்டிய நிதி, கல்வி கட்டண கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. எனவே நீதிபதி ப.சதாசிவத்தின் உத்தரவை பின்பற்றி, மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.