இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 15, 2014

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு.


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல்எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கருவூலம் மூலம் சம்பளம்
மற்றும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும், சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர், தமக்கு கீழ் உள்ள அரசு ஊழியருக்கான சம்பள பில் தயாரித்து, கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, சம்பள பில் பெறுவதை, காகித கோப்புகளாகவும், சிடி வடிவிலும், பெறப்பட்டு வந்தது.இதன்மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் சம்பளம் பெறும் தலைப்பு, மொத்த செலவு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது கருவூலத்துறை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் மாத சம்பளம் முதல், ஆன்லைனில் பில் சமர்பிக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் தனித்தனியே, "யூசர் ஐடி',"பாஸ்வேர்டு' வழங்கப்படும். கருவூலத்துறை இணையதளத்தில் இ-பே ரோல் எனும் பகுதியில், இதை பயன்படுத்தி, அலுவலர்களின் பில்களை, ஆன்லைனில்சமர்பிக்கலாம்.

பின் வழக்கம் போல, வங்கிக்கணக்குகளில், "இ.சி.எஸ்' முறையில் சம்பளம்வழங்கப்பட்டுவிடும். ஆவணங்களாக தயாரித்து வழங்கி வந்த முறையை, ஒழித்துள்ள நிலை, தலைமை அலுவலர்களின் பணி பளுவை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர் மாதத்துக்கான சம்பள பில்களை, "ரிகர்சல்' போல், ஆன்லைனிலும், பதிவு செய்துவிட்டு, ஆவணமாகவும் தரலாம் எனவும், அடுத்த மாதம் கண்டிப்பாக, ஆன்லைன் முறையில் மட்டுமே, பில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பில் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, நேற்று சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆன்லைனில் பில் சமர்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சேலம் கருவூல பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.

Tuesday, October 14, 2014

இணையதளம் மூலம் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் இணையதளம் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னைதலைமைச் செயலகத்தில் பிரவீண்குமார் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தின் இணையதளத்தின் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் . ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம்.

பொதுச் சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தனியான எண் வழங்கப்படும். அதன் மூலம், அந்த விண்ணப்பத்தின் நிலையை எளிதாக அறிந்து கொள்ள முடியும். கல்லூரிகளில் 18 வயது நிரம்பிய மாணவ-மாணவிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென ஒவ்வொரு கல்லூரியில் தேர்தல் ஆணையத்தின் தூதராக ஒரு மாணவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஆயிரத்து 400 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், வாக்காளர் அடையாள அட்டைகள் தவறில்லாமல் அச்சிட வழி ஏற்படும்.

செல்போன் வசதி: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை இணையதளம் (ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) மூலம் அறியலாம். அடையாள அட்டை எண் தெரியாவிட்டால் தந்தை பெயர், வாக்காளர் பெயர் ஆகியவற்றை இணையதளத்தில் அதற்கான பக்கத்தில் தட்டச்சு செய்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், வாக்காளர் அடையாள அட்டையின் எண் தெரிந்தால், அதைக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் செல்போன் வசதியை (94441 23456) பயன்படுத்தி பட்டியலில் பெயர் இருக்கிறதா? எந்த வாக்குச் சாவடியில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த செல்போன் சேவை புதன்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பை ஊக்குவிக்க மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேரணிகள், ஓவியங்கள், மனிதச் சங்கிலிகள் உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை: தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகள் இருந்தன. இப்போது, 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார் பிரவீண்குமார்.

வாக்காளர் பட்டியல் விவரம் அறிய எஸ்.எம்.எஸ்., சேவை துவக்கம்


   வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம், வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. இப்பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, வாக்காளர் அறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன் சார்பில், எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை, இன்று அல்லது நாளை முதல் அமலுக்கு வரும்.

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அறிய விரும்புவோர், EPIC என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு, 94441 23456 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, எந்த ஓட்டுச்சாவடி யில் பெயர் உள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லாதோர், தேர்தல் கமிஷன் இணையதளத்தில், தங்கள் பெயர் மற்றும் தந்தை பெயரை குறிப்பிட்டு, தேடிப் பார்க்கலாம்.

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Provisional Selection list of Candidates for Miniority Subjects DSE / DEE and Other Departments

Http://trb.tn.nic.in/B.T%20Asst%202014/14102014/msg.htm

Direct Recruitment of Computer Instructor - Click here for Notification

Http://trb.tn.nic.in/Comp%20Instructor%202014/13102014/msg.htm

ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 16,933 பேர் தேர்ச்சி


இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 334 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். இந்நிலையில், இந்தத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதன்படி, முதல்நிலைத் தேர்வில் 16,933 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்வு நிறைவடைந்து 50 நாள்களில் முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

R.L list

Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees

Http://www.tn.gov.in/karuvoolam/cps_new/cps_index.html

SCHOOL details

https://app.box.com/s/w9krz43eyub3to2zcr84

Monday, October 13, 2014

பாரதிதாசன் பல்கலை: 2014-2015-பி.எட்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

Http://www.bdu.ac.in/admission/cde2014/CDE_BED_2014.PDF

TNPSC GROUP 4 anouncement

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்.

5 ஆயிரம் பணியிடங்கள்

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4–ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கு அறிவிக்கையினை  (செவ்வாய்க்கிழமை) வெளியிடவுள்ளது.

பதவிகள்: இளநிலை உதவியாளர் பிணையம் (39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133); தட்டச்சர் (1683); சுருக்கெழுத்து தட்டச்சர் (331); வரித் தண்டலர் (22); வரைவாளர் (53) மற்றும் நில அளவர் (702). மொத்தத்தில் காலிப்பணியிடங்கள் 4 ஆயிரத்து 963.

நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்

கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள். கட்டணம் செலுத்த நவம்பர் 14–ந் தேதி கடைசி நாள். தேர்வு டிசம்பர் 12–ந் தேதி காலை நடைபெற உள்ளது.

தேர்வு மையங்களின் எண்ணிக்கை: 244 (மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள்)

விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளத்தில் இணையவழி விண்ணப்பம் மூலம் மட்டுமே.

விண்ணப்பிக்கும் முறை

ஏற்கனவே நிரந்தர பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தர பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

நிரந்தர பதிவு செய்திருத்தல் மட்டுமே இப்பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டு மூலம், விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

இதுகுறித்த சந்தேகங்களை 044–25332855, 044–25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002–ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Saturday, October 11, 2014

இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை,சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளிகளில் எஸ்.டி., மாணவியருக்கு கராத்தே பயிற்சி


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், எஸ்.டி., மாணவியருக்கு கராத்தே பயிற்சியளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் நீலகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். பழங்குடியின மாணவியரின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு கராத்தே பயிற்சியளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தர்மபுரி மாவட்டத்தில், 90 பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில், 69 பள்ளிகள், சேலம் மாவட்டத்தில், 105 பள்ளிகள், நீலகிரி மாவட்டத்தில், 33 பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில், 185 பள்ளிகளும் சேர்த்து மொத்தம், 482 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது: இன்றைய சூழலில் பெண்களுக்கு பல இடங்களில் பல சூழ்நிலைகளில், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெரு நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும், பெண்கள் பல இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்காக மாணவியருக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு உருவாகியுள்ளது. மாணவியர் மன தைரியத்துடன் சமுதாயத்தை எதிர்கொள்ள கராத்தே பயிற்சி அவசியமாகிவிட்டது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை, 3 மாதங்களுக்கு, தகுதி வாய்ந்த கராத்தே பயிற்சியாளர்களை கொண்டு, மாணவியருக்கு பயிற்சியளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாலைவேலையில், வாரத்துக்கு இரண்டு நாட்கள், ஒரு மணி நேரம் வீதம் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் நிதியை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி ஒதுக்கீடு செய்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Sastra University b.ed prospectus

Friday, October 10, 2014

Bharathiar University : Results of M.Ed. Entrance Exam – July 2014.

வாக்காளர் பட்டியல் திருத்தம் : 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்

2015 ஜன.,1ஐ தகுதி நாளாகக்கொண்டு 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் அக்.,15ல் துவங்கி நவ.,10 வரை நடக்கிறது. இதை கண்காணிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பூஜா குல்கர்னி; விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூருக்கு சுகந்தி; தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலத்திற்கு சுதீப்ஜெயின்; அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூருக்கு முகமது அஸ்லாம்; நாகை, தஞ்சை, திருவாரூருக்கு அண்ணாமலை; நாமக்கல், கரூர், திண்டுக்கல்லுக்கு சித்திக்;

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோட்டிற்கு பாலச்சந்திரன்; மதுரை, தேனி, விருதுநகருக்கு வெங்கடேஷ்; ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு மணி வாசகம்; தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரிக்கு சமயமூர்த்தி ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் : மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

  மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வு செய்து வருகிறது. குஜராத் மாநில அரசின், முன்னாள் தலைமை செயலர், மான்காட், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த, ரங்கராஜன், உலக வங்கி சார்பில், அமெரிக்காவைச் சேர்ந்த, மூனா ஆகியோர், அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில், மத்திய குழு ஆய்வு செய்தது. நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகில் உள்ள, ஓங்கூர் தொடக்கப் பள்ளி, சாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சாரத்தில் உள்ள, வட்டார வள மைய பயிற்சி மையம் உட்பட பல இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அனைவருக்கும் கல்வி இயக்குனரக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய குழுவுடன் பார்வையிட்டு வருகின்றனர். இன்றும், விழுப்புரம் மாவட்டத்தில், பல அரசு பள்ளிகளில், திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ரங்கராஜன் கூறுகையில்,

''பள்ளிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்; தற்போதைக்கு, எதுவும் கூற முடியாது,'' என்றார். இணை இயக்குனர், நாகராஜ முருகன் கூறுகையில், ''மாணவர்களின் வாசிப்புத் திறன், ஒட்டுமொத்த கல்வித்தரம், பள்ளிகளில் உள்ள வசதிகள், ஆசிரியரின் கற்பித்தல் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும், மத்திய குழுவினர் பார்வையிடுகின்றனர். இதுவரை பார்வையிட்ட பள்ளிகளில், மத்திய குழுவினர், எவ்வித குறையையும் தெரிவிக்கவில்லை,'' என்றார்.

7 % அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு -தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம

் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் 7% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதி இட்டு வழங்க உத்தரவு. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் வேலையில் இது பெரிய உதவியாக இருக்கும் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.... தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு

Thursday, October 09, 2014

அக்டோபர் 16 முதல் மீண்டும் "கிஸான் விகாஸ்' திட்டம்


"கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தபால் துறைத் தலைவர் டி.மூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: உலக தபால் தினத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் தேசிய தபால் வாரம் அக்டோபர் 9 முதல் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

. விரைவு தபால் சேவையில் அன்றைய தினம் அனுப்பும் தபாலை அன்றைய தினமே பட்டுவாடா செய்யும் திட்டம், சென்னை அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலை ஆகிய இரண்டு தபால் நிலையங்களில் 24 மணி நேர விரைவு தபால் சேவை மையம், தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு தபால், பார்சல் பதிவு மையங்கள் ஆகிய புதிய திட்டங்கள் அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கப்படுகின்றன. மேலும், சென்னையில் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமையும் விரைவு தபால்களுக்கு சிறப்பு பட்டுவாடா செய்யும் சேவை தொடங்கப்படுகிறது. அக்டோபர் 14-ஆம் தேதி, தமிழகத்தில் தெரிவு செய்யப்பட்ட தபால் அலுவலகங்களில் தனியார் "டி.டி.ஹெச்' சேவைக்கான சந்தா வசூல் செய்தல், டி.வி.எஸ். நிறுவனத்தில் கடன் மூலம் வாங்கிய இரண்டு சக்கர வாகனங்களுக்கான மாதத் தவணை செலுத்தும் சேவை ஆகியவை தொடங்கப்படுகின்றன.

கடந்த நிதியாண்டில் வணிக நடவடிக்கைகள் வாயிலாக தமிழக தபால் துறைக்கு ரூ.1,041 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிகழாண்டு ஆகஸ்ட் வரை, ரூ.440 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனி நபர் கடிதப் போக்குவரத்து, 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில், வணிகக் கடிதங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்தாண்டில், தமிழக தபால் வட்டம், 2.5 லட்சம் பார்சல்களை கையாண்டுள்ளது. இது நிகழாண்டு ஆகஸ்ட் வரை 3.35 லட்சமாகும். இந்த எண்ணிக்கை 7 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் மொத்தமுள்ள 11,888 தபால் நிலையங்கள், 2,506 துணை தபால் நிலையங்கள், 94 தலைமை தபால் நிலையங்களில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 2 ஆயிரம் கிராமப்புறத் தபால் நிலையங்களில் இன்னும் 6 மாதங்களுக்குள் கணினி வசதி ஏற்படுத்தப்படும். தற்போது 9,288 கிராமிய தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.

மின் கட்டணம் வசூல் சேவையில், தமிழக தபால் துறைக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் 4 கிராமப்புற, 4 துணை தபால் நிலையங்கள் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பரில் "கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. அக்டோபர் 16-ஆம் தேதி முதல் "கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என்றார் டி.மூர்த்தி.

அரசு பள்ளிகளில் 'தூய்மை' : ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

"பள்ளி அலுவலகம், வகுப்பறைகளில் ஒட்டடை அடித்து, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அக்.2ல் 'கிளீன் இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்தார். மோடியின் இத்திட்டம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளத

ு. 'தூய்மை பள்ளி' திட்டம்: இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளில், அக்.,9 முதல் 2015 ஆக.,15 வரை 'தூய்மை பள்ளி' திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். அதில், பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தை சுத்தமாக வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் முட்புதர்களை அகற்ற வேண்டும். பள்ளி குடிநீர் தொட்டியில் 'குளோரினேஷன்' செய்ய வேண்டும். சத்துணவு மையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடல் வேண்டும். தலைமை ஆசிரியர் அறை, வகுப்பறை, நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றில் ஒட்டடை அடித்து தூய்மையாக வைக்க வேண்டும். பள்ளி வளாக கதவுகள், ஜன்னல்கள், பேன், நாற்காலிகள், மாணவர் இருக்கைகள், அலமாரி, கம்ப்யூட்டர், டிவி.,க்கள், லேப்-டாப் போன்றவற்றில் படிகிற தூசிகளை அன்றாடம் துடைத்து, தூய்மையாக வைத்திடல் வேண்டும்.

பள்ளி கட்டடங்களை பழுதுபார்த்து, வெள்ளை அடிக்கவேண்டும். விழிப்புணர்வு: மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு தர வேண்டும். தினமும் நடக்கும் காலை வழிபாட்டில் மகாத்மா காந்தியின் சுத்தம், சுகாதாரம் சார்ந்த கூற்றுக்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவியம், தனிநடிப்பு போட்டிகள் நடத்தி, 'தூய்மையான பள்ளி' என, அறிய செய்தல் வேண்டும். மேலும், தினமும் மாணவர்கள் பல் துலக்குதல், குளித்தல், நகம் வெட்டுதல், சுத்தமான உடை அணிதல், சாப்பிடுவதற்கு முன் சோப்பால் கை கழுவுதல் குறித்து பயிற்சி அளிக்கவேண்டும். இது போன்ற செயல்பாடுகள் மூலம், அந்தந்த பள்ளிகளை, 'தூய்மை பள்ளி'களாக வைத்திருக்கவேண்டும், என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு


இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுகிறது.  இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம் தன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது” என்று நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.