இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, July 25, 2017

ஊரக திறனாய்வு தேர்வு

ஊரக திறனாய்வு தேர்வு - 2017 க்கான அறிவிக்கை வெளியீடு...

நோக்கம் : அரசு பள்ளி பயிலும் திறன் மிக்க மாணவர்களுக்கு மாவட்டம் தோறும் 100 மாணவர்களுக்கு உதவி தொகை

உதவி தொகை : 9 முதல் 12 வரை 1000 ரூபாய் மதாந்திர உதவி தொகை

தகுதி : 9ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும்

வருவாய் : 1 லட்சம் மிகாமல் குடும்ப ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்

பாடப்பகுதி : 9 ம் வகுப்பு வரை MAT + SAT

விண்ணப்ப தேதி : ஜூலை 24 முதல் ஆக 7 வரை

விண்ணபிக்கும் முறை : CEO அலுவலகம் மூலம் மட்டுமே விண்ணபிக்க வேண்டும்

வழி : தலைமை ஆசிரியர் மூலம்

கட்டணம் : 10 ருபாய்

வாழ்த்துகள்

நிகழாண்டில் 1 லட்சம் பேருக்கு கல்விக் கடன்: செப்டம்பரில் புதிய திட்டம் தொடக்கம்


தமிழகத்தில் நிகழாண்டில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டம் செப்டம்பரில் தொடங்கப்படும் என்று தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கடன்களைப் பெற்று மாணவ, மாணவிகள் தங்களது உயர்கல்வியைத் தொடர ஏதுவாக கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் பல்வேறு புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் ரேங்க் முறை ரத்து, பல ஆண்டுகளாக இருந்து வந்த பாடத் திட்டங்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை என பல்வேறு முக்கிய மாற்றங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை தயாராகி வருகிறது. இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்போது மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்திலும் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கல்விக் கடன் முகாம்கள்: பிளஸ் 2 வகுப்பை முடிக்கும் மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் கல்விக் கடன் பெற வங்கிகளுக்கு ஏறி, இறங்கும் நிலை உள்ளது. இந்நிலையைப் போக்கும் வகையில் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியம் தோறும் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான பணிகள் பள்ளிக் கல்வித் துறையில் தொடங்கப்பட்டுள்ளன.

செப்டம்பரில் தொடக்கம்: கல்விக் கடன்களுக்கான முகாம்கள் செப்டம்பரில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இம்முகாம்கள் நடத்தி முடிக்கும் போது, சுமார் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான கல்விக் கடன்கள் பெற்றுத் தரப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். அவர், அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார். இக்கல்வியாண்டில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதே அளவுக்கும் கல்விக் கடன்கள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் இலக்கணம், அகராதிக்கு புதிய மொபைல் 'ஆப்ஸ்'


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் தமிழ் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தாய் மொழி மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ் பாடத்தை எளிமைப்படுத்தி படிக்கும் வகையில் மொபைல் 'ஆப்ஸ்' தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், வகுப்பு வாரியாக பாடங்கள் இடம்பெற்றிருக்கும்; இலக்கணம் கற்றுக் கொள்ளலாம்; மொழி சிறப்புகள், தமிழ் சொற்களின் அகராதியும் இடம் பெற்றிருக்கும். இந்த மொபைல் 'ஆப்சை' பதிவிறக்கம் செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு தினமும் தமிழ் அகராதி சொற்கள் மற்றும் இதர தகவல்கள் எஸ்.எம்.எஸ்., ஆக வரும். இதனால் அன்றாடம் புதிய சொற்களை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் தமிழ் படிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை.

தூர்தர்ஷன் 'லோகோ' மாறுகிறது

டிடி' எனப்படும், மத்திய அரசு, 'டிவி சேனல்' நிறுவனமான, தூர்தர்ஷன், 1959ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வரும் தன், 'லோகோவை' மாற்ற திட்டமிட்டுள்ளது. புதிய லோகோவை வடிவமைப்பதற்கான போட்டியையும் நடத்துகிறது.

ஊக்க ஊதிய உயர்வு அரசாணை



TNPTF வட்டார தணிக்கை படிவம்


நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திய செயல்முறைகள்


ஜேக்டோ-ஜியோ முடிவுகள்

ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ சார்பில் கூறப்பட்ட கருத்துக்கள்

1.ஆகஸ்ட் 5 அன்று CRC வைப்பதை ரத்து செய்ய வேண்டும் என 9கோரிக்கையை இயக்குனரிடம் அளிப்பது எனவும் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது.

2. ஆகஸ்ட் 6 ம்தேதி நடைபெறும் TNPSC தேர்வு, ஆகஸ்ட் 5 நடைபெறும் பேரணிக்கு தடையாக இருக்கும் பட்சத்தில் TNPSC EXAM தேர்வு பணியினை புறக்கணிப்பது.

3. ஜேக்டோ ஜியோ போராட்டங்களில் ஜேக்டே ஜியோ பதாகைகள் (பேனர்) தவிர எந்த  ஒரு தனிப்பட்ட அமைப்பு தனது பதாகைகளை (பேனர்,கொடி) பயன்படுத்த கூடாது.

4. ஆகஸ்ட் 5 பேரணிக்கு மாநில ஜேக்டோ ஜியோ சார்பில் சுவரொட்டி, துண்டு பிரசுரம் வழங்கப்பட வேண்டும்.

5. ஆகஸ்ட் 5 பேரணியில் சென்னையில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு refresh பண்ணுவதற்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.

6. ஜேக்டோ ஜியோ ஆயத்த கூட்டங்கள் நடைபெறும்போது ஒருங்கிணைப்பாளர் தவிர ஜேக்டோ சார்பில் இருவர்,  மற்றும் ஜியோ சார்பில் இருவர் தலைமையில் நடைபெற வேண்டும்.

7. தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் அக்குழுவில் ஜேக்டோ 22 சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

8. ஆகஸ்ட் 5 பேரணிக்கு மாவட்ட ஜேக்டோ அல்லது ஒன்றிய ஜேக்டோ அல்லது மாவட்ட ஜேக்டோ ஜியோ மூலம் மொத்தமாக கலந்து கொள்ள வேண்டும்.

9. ஜேக்டோ ஜியோ முத்தான மூன்று கோரிக்கைகள்

*cps ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

*8வது ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், அதுவரையான காலகட்டத்திற்கு 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்

*7வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை கலைந்து பிறகு 8 ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்

10. நாளை மாலை (26.07.2017) அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 5 பேரணியில் கலந்து கொள்ள ஆயத்த கூட்டங்கள் நடைபெற வேண்டும்.

ஜேக்டோ-ஜியோ அதிரடி முடிவுகள்.

1. 05.08.2017 கோட்டை நோக்கி பேரணி.

2. 22.08.2017 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்.

3. 26.08.2017 மற்றும் 27.08.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.

4. 07.09.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

Monday, July 24, 2017

டிஇடி சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது


ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது. இதையடுத்து, ஜூலை 24ம் தேதி சான்று சரிபார்ப்பு நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் சான்று சரிபார்ப்பு தொடங்கியது. இதில் 18 ஆயிரத்து 769 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் 222 அறைகளில் சான்று சரிபார்ப்பு நடக்கும். ஒரு அறையில் 25 பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாளும், சேலத்தில் 5 நாட்களும் சரிபார்ப்பு டக்கும். மற்ற இடங்களில் 2 அல்லது 3 நாட்கள் நடக்கும். சென்னையில் அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.

2017-18ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 8 கல்லூரிகளில் 32 புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்


தமிழகத்தில் 2017-18ல் 8 கல்லூரிகளில் 32 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2017-18ம் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பிஎஸ்சி, முதுநிலை எம்.காம், எம்.ஏ தமிழ், எம்.பில் இயற்பியல், வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் எம்.பில் தமிழ், பி.எச்டி தமிழ், எம்.பில் வரலாறு, பொன்னேரி அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பி.காம் கூட்டுறவியல், பி.ஏ பொருளியல், எம்.பில் வேதியியல், வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம், எம்.பில் வரலாறு, எம்.பில் தாவரவியல், எம்.பில் வேதியியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன. அதேபோல் கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் பி.ஏ பொது நிர்வாகம், பி.சி.ஏ, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ தமிழ், எம்.எஸ்சி தாவரவியல், எம்.ஏ ஆங்கிலம், எம்.எஸ்சி புவி அமைப்பியல், சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி தாவரவியல், எம்.பில் இயற்பியல், பி.எச்டி இயற்பியல், செங்கற்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி கணிதம், எம்.ஏ தமிழ், எம்.பில் கணினி அறிவியல், பி.எச்டி கணிதம், பி.எச்டி வேதியியல் என மொத்தம் 32 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரிகள் கல்வி இணை இயக்குநர் பொறுப்பு சுகிர்தராணி ஜூலினா கூறுகையில், ‘தமிழகத்தில் 8 அரசு கல்லூரிகளில் 32 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படுவதாக கல்லூரிகள் கல்வி இயக்குநர் மஞ்சுளா அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் வேலூர், கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றார்.

பிளஸ் 2 துணை தேர்வு 'ரிசல்ட்'


பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த உடனடி துணைத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜூன், ஜூலையில் நடந்த பிளஸ் 2 உடனடி துணைத் தேர்வின் முடிவு இன்று வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் முதல், பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், 27, 28ல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, விண்ணப்பிக்க வேண்டும்.

திருப்பூர் வடக்கு ஜாக்டோ ஜியோ அறைகூவல்

திருப்பூர் வடக்கு
இன்று 24-7-17 ஜாக்டோ ஜியோ கூட்டம் தேவாங்கபுரம் பள்ளியில் நடைபெற்றது.அனைத்து இயக்கப் பொறுப்பாளர்களும் கூடி கருத்துக்களை தெரிவித்தனர்.இதன் முடிவாக 5ம் தேதி சென்னை பேரணிக்கு 4ம் தேதி இரவு புறப்பட்டு 5ம் தேதி இரவு கிளம்பி 6ம் தேதி அதிகாலை வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு CRC க்கும் ஒரு பேருந்து வீதம் திருப்பூர் வடக்கிலிருந்து 11பேருந்துகளில் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. இயக்க வேறுபாடு இல்லாமல் CRC வாரியாக ஆசிரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

*51/2 இலட்சம் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் அணி திரண்டு சென்னையையே ஸ்தம்பிக்க வைக்க உள்ளனர்

*வரலாற்று சிறப்புமிக்க இப்போராட்டத்தில் பங்கேற்று வரலாற்றில் உங்கள் பெயரையும் வருங்கால சந்ததிகள் உச்சரிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்

*கைகட்டி வேடிக்கை பார்ப்பவன் கையில் பூக்கள் விழுவதில்லை

*உங்களுக்கான மூச்சுக்காற்றை நீங்களே சுவாசியுங்கள்.

*ஓராயிரம் கைகள் ஒன்று கூடினால் மலையை தகர்க்கலாம்.மனதை கரைக்கலாம்

வரலாற்றில் இடம் பிடிப்போம்
இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்

-தோழமையுடன் மணி

5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது

5 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது - மத்திய அரசு கடுமை!
வி.எஸ்.சரவணன்

கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும். மேலும், மாணவர்கள் இடை நிற்றல் இல்லாமல் பள்ளிக் கல்வியை முடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி/தேர்ச்சியின்மை என்கிற அளவுகோல் கொள்ளாமல், அனைவரையும் ஆல் பாஸாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைக்குத் தமிழக அரசு வருவதற்கு முக்கியக் காரணம், கல்வி குறித்து விழிப்புஉணர்வு அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில் இடைநிற்றல் தொடர்ந்து வருவதே. இந்தத் திட்டம் மூலம் இடைநிற்றலின் விகிதம் வெகுவாகக் குறைந்துவருகிறது என்று சமூகச் செயல்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர். மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்படைகிறது என்கிற குற்றச்சாட்டையும் சிலர் வைத்து வருகின்றனர்.

'இந்தித் திணிப்பை ஏற்க மாட்டேன்': கன்னையா குமார் பேச்சு!
இந்நிலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, 5 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் எனும் முறையைக் கைவிடக் கூறியுள்ளது. 5,6,7 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் தேர்வு வைக்கப்படும். அதில் அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு மே மாதத்தில் மீண்டும் ஒரு தேர்வு வைக்கப்படும். அதிலும் அவர்கள் தேர்ச்சி பெற வில்லையெனில், மீண்டும் அதே வகுப்பில் அடுத்த ஆண்டும் படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் 16-ம் பிரிவின் கீழ் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கைவிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் 5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றன.

இந்த முடிவால் மீண்டும் இடைநிற்றல் அதிகரிக்கக்கூடும் எனக் கல்விச் செயல்பாட்டாளர்கள் தரப்பில் பேசப்படுகிறது. மேலும், 5 முதல் 8-ம் வகுப்பு வரை என்பது ஒன்றாம் வகுப்பு முதலே கட்டாயத் தேர்ச்சி கைவிடப்படும் எனும் செய்திகள் உலவுகின்றன.

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கவுன்சிலிங் வழிகாட்டி. படித்துவிட்டு பகிருங்கள் :

பொறியியல் கவுன்சிலிங் வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகள் . மிக மிக எளிமையாக பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு வந்திருக்கும் பொறியியல் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்துக்கொண்டு வந்தால் பயணம் செய்யும் சென்னை மாநகராட்சி பேருந்தில் கட்டணச்சலுகை உண்டு. ஆகவே,முன்னமே அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்து வாருங்கள்.

இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடம்  காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். :

* மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்.

* அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள், கவுன்சிலிங் நடப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்னமே வந்துவிடுங்கள்.

* அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் வங்கி கவுண்டர்களில் உங்களின் அழைப்புக் கடிதத்தை காட்டி, ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். நீங்கள் எஸ்.சி. அல்லது எஸ்.டி. மாணவராக இருந்தால், ரூ.1000 கட்டினால் போதுமானது. இதைக்கட்டியதும் ஒரு ரசீதை எண்ணோடு தருவார்கள்.

* நீங்கள் அங்கிருக்கும் டிஸ்ப்ளே அரங்கில் ஒவ்வொரு கல்லூரியில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து பெரிய திரைகளில் வந்து கொண்டிருக்கும். அதைப் பார்த்து, அதற்கேற்ப கல்லூரிகளை தெரிவு செய்து கொள்ளலாம்.

* முன்னதாகவே, குறைந்தபட்சம் மூன்று கல்லூரிகளை, அதுவும் அவற்றுக்கான எண்ணோடு (விண்ணப்பம் பெற்றபொழுது கொடுக்கப்பட்ட புத்தகத்தில் அந்த எண் இருக்கும்) குறித்துக்கொண்டு வாருங்கள்.

* உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு முன்னமே நீங்கள் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்படுவீர்கள். மாணவர் உடன் ஒரே ஒரு நபர் (பெற்றோர் அல்லது காப்பாளர்) மட்டுமே கூட செல்ல இயலும்.

* உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் காத்திருப்பீர்கள். உங்களிடம் ஒரு சிறிய படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் பெயர், விண்ணப்ப எண் முதலிய விவரங்களைப் பூர்த்தி செய்து வைத்திருங்கள். மூன்று கல்லூரிகளும் கேட்கப்பட்டு இருக்கும். அதை கவுன்சிலிங் அறைக்குள் போனபிறகு பூர்த்தி செய்து கொள்ளலாம்.

* உங்களை உள்ளே அழைத்ததும் கவுன்சிலிங் அறைக்குள் செல்லலாம். முதலில் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். ஒரிஜினல்களை காட்ட வேண்டும்; சரிப்பார்த்து முடிந்ததும் ஒரிஜினல்களை கட்டாயம் வாங்கிக்கொள்ளுங்கள்.

* அதற்குப் பிறகு கணினி முன் போய் உட்காருவீர்கள். துறை அல்லது கல்லூரி சொன்னால் அதில் காலியாக உள்ள இடங்களை சொல்வார்கள். இப்படி மூன்று

சாய்ஸ்களை நீங்கள் தரவேண்டும். (கல்லூரி பெயரில் கவனமாக இருங்கள். ஒரே பெயரில் எண்ணற்ற கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரி குறியீட்டு எண் இங்குதான் பயன்படும்).

* நீங்கள் கேட்ட துறை இருக்கிறது என்றால் பச்சை விளக்கு எரியும். நீங்கள் அத்துறையை எடுத்து கொள்ளலாம். சிவப்பு எரிந்தால் அத்துறை இடங்கள் பூர்த்தி ஆகிவிட்டன என்று அர்த்தம். ஒருவேளை மஞ்சள் எரிந்தால் உங்களுக்கு முன்னர் இருக்கும் மாணவர் எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப உங்களுக்கு அவ்விடம் கிடைக்கலாம். அதுவரை காத்திருங்கள் என்று அர்த்தம்.

* கல்லூரியை தேர்வு  செய்ததும், உங்களிடம் அந்தக் கல்லூரிதானா என்று வழிகாட்டும் நபர் உறுதி செய்துவிட்டு உங்களை மேலே அனுப்புவார். அங்கே உங்களுக்கு அந்தக் கல்லூரி கிடைத்ததற்கான உத்தரவை தருவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். கூடவே நீங்கள் தேர்வு செய்த கல்லூரியில் கட்ட வேண்டிய மீத தொகைக்கான வங்கி சலானை தருவார்கள். அதையும் வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பிட்டு இருக்கும் தேதிக்கு ஏற்ப மீதிப் பணத்தை கட்ட வேண்டும். இவ்வளவுதான் கவுன்சிலிங்.

பின்குறிப்புகள்:

* ஒரு வேளை அழைப்புக் கடிதம் வராமல் போயிருந்தாலும் சிக்கலில்லை. உங்கள் கவுன்சிலிங் நாள் என்று என்று அறிந்துகொண்டு ஒரு மணி நேரம் முன்னரே வந்துவிடுங்கள். என்கொயரி பிரிவுக்கு போய் உங்கள் விண்ணப்ப எண்ணை சொன்னால் உங்களுக்கான அழைப்பு கடிதத்தை தந்து விடுவார்கள்.

* குறிப்பிட்ட தினத்தன்று கவுன்சிலிங் வரமுடியாமல் போனால், அடுத்த செஷனில் கலந்துகொள்ள முடியும். எனினும் அப்பொழுது உள்ள இடங்களில் இருந்தே தெரிவு செய்ய முடியும்.

*சில படிப்புகளில் SS எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன் பொருள் self supporting. தற்சார்பு  கல்லூரியில்/நல்ல கல்லூரியில்  ஒரு துறையில் பொதுவான இடங்களும், SS எனக் குறிப்பிடப்பட்ட இடங்களும் இடம் பெற்றிருக்கும். ஒன்றும் குழம்ப வேண்டாம். அவை கூடுதலாக கட்டணம் கொண்ட படிப்புகள். மற்றபடி பாடத்திட்டம், பாடங்கள், ஆசிரியர், தேர்வுகள் அனைத்தும் ஒன்றே. நல்ல கல்லூரி என்றால் தைரியமாக எடுங்கள்.

* முழுக்க முழுக்க வெளிப்படையாக நடக்கும் இந்த கவுன்சிலிங்கில் சீட் வாங்கித் தருகிறேன் என்று யாராவது பணம் கேட்டால் நம்பவே நம்பாதீர்கள். உங்களின் மதிப்பெண்ணுக்கு உரிய சீட் கண்டிப்பாக கிடைக்கும்.

*முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்  அதற்கான சான்றிதழை தங்களுடைய பகுதி தாசில்தாரிடம் பெற்று வர வேண்டும். இதை சமர்ப்பித்தால் கட்டணச்சலுகை   உண்டு. விண்ணப்பிக்கிற போது இணைக்க மறந்திருந்தாலும் கவுன்சிலிங்கின் போது கொண்டு வரலாம்.

கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

* முறையான அங்கீகாரம்!

* காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.

* பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.

* கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.

* படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.

* பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.

* நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!