சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தனியார் பள்ளிகள் இணைய, ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில், இணையும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன. இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ.,யில் இணைய விரும்பும் பள்ளிகளிடம், ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி, ஜன., 2 முதல், துவங்கி உள்ளது. 'பள்ளிகள், http://cbseaff.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். ஜூன், 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
Monday, January 30, 2017
சி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்
அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு
'எம்.பி.ஏ., - எம்.இ., உள்ளிட்ட, இன்ஜி., படிப்புகளுக்கான, 'டான்செட்' தேர்வுக்கு, பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற படிப்புகளில், வரும் கல்வி ஆண்டில் சேர விரும்புவோர், 'டான்செட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான, இத்தேர்வுக்கு, ஜன., 29ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. பிப்., 20 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏ., - எம்.பி.ஏ.,வுக்கு, மார்ச், 25லும், மற்ற படிப்புகளுக்கு, மார்ச், 26லும் தேர்வுகள் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு
பிளஸ் 2 தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, கூடுதல் கால அவகாசம் தரப்பட்டு உள்ளது. தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவிப்பு: வரும் மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, ஜன., 25 முதல், 29 வரை, பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப் படுகிறது. தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, January 28, 2017
நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.பி.எஸ் மற்றும் மேற்படிப்புக்கென தனித்தனியாக இரு சட்டங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.
எனவே நீட் தேர்வின்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதால் இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுதலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத் தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மா கிட்ஸ் வழங்கப்படும்
தமிழக அரசின் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு சுமார் 800 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது: ‘‘இன்னும் ஒரு சில மாதங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அனைவருக்கும் அம்மா கிட்ஸ் எனப்படும் கணிதம் மற்றும் அறிவியலுக்கான உபகரணங்கள் வழங்கப்படும்
தமிழக பள்ளிக்கல்வித் துறையை சீரமைக்கத்திட்டம்
தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்கும் வகையில், உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலக கட்டுப்பாட்டில், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தேர்வுத் துறை, மெட்ரிக் இயக்குனர் போன்ற, பல துறைகள் உள்ளன. இவற்றுக்கு, தனி இயக்குனர்கள் உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் அனுபவம் மிக்கவர்கள் என்றாலும், செயலகத்தில் உள்ள அதிகாரிகள், அவர்களைச் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என, புகார்கள் உள்ளன. பணி நியமனம், பணியிட மாற்றம், நிதி ஒதுக்குதல் போன்றவற்றில், செயலக அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், எந்த கோப்பும் நகர்வதில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இயக்குனரகத்துக்கு தெரியாமல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, செயலக அதிகாரிகளே நேரடியாக தொடர்பு கொண்டு, பரிந்துரைகள் செய்கின்றனர். இதனால், நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுவதாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் தலைமையில் உள்ள அரசு நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இயக்குனர்களுக்கு நெருக்கடி கொடுத்து, ஆதாயத்துடன் செயல்படும், உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பள்ளிக்கல்வியை, மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு நிகராக கொண்டு வர, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்கேற்ப, துறையில் மாற்றம் கொண்டு வரவும், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் பதவியேற்றபோது, அவருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
ஆனால், தற்போதைய உயர் அதிகாரிகள், பாடத்திட்டத்தை கூட மாற்ற, தயக்கம் காட்டுகின்றனர். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன் தயாரித்த பாடத்திட்டத்தை மாற்றவும், புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கவும், குழு அமைக்கவில்லை.மத்திய அரசும், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும், மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்துகிறது. ஆனால், தமிழக மாணவர்கள், இந்த நுழைவு தேர்வுக்கு தகுதி பெற முடியாததால், வெளிமாநில மாணவர்களுக்கு, அதிக வாய்ப்புகள்
கிடைக்கின்றன.இதுபோன்ற பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி, கல்வித் துறையை சீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வி செயலகத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல், தலைமை செயலரின் நேரடி பரிசீலனைக்கு பின் வெளியிடப்படும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Friday, January 27, 2017
தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ஆண்டில் 20ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்
கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது. இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
தற்போது தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் இடையில் பள்ளியில் இருந்து நின்று விடுகின்றனர். இதை தடுக்க பல முயற்சிகள் நடக்கின்றன. மாணவர்கள் இடைநிற்றல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது குறித்த தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதியில் செய்யப்பட்ட பணிகள் என்ன, எவ்வளவு செலவானது என்பது குறித்தும் மத்திய அரசுக்கு விவரம் தர வேண்டும்.
அப்போதுதான் அடுத்த கல்வி ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கணக்கெடுக்கெடுக்கப்படுகிறது. அதில் மாணவர்கள் பெயர், குடும்ப சூழல், பள்ளிக்கும் மாணவர் இருப்பிடத்துக்கும் உள்ள இடைவெளி, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்கள் அனைத்தும் மாநில திட்ட இயக்குநருக்கு செல்லும். அவர் மத்திய அரசுக்கு அனுப்புவார்.
இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு தற்போது முடிந்துள்ளன. இந்த வார இறுதிக்குள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை மாநில திட்ட இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.
இந்த கணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள், மாணவ, மாணவியர் இடையில் நின்றுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
* ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 240 மாணவ, மாணவியர் இருப்பதற்கு பதிலாக 200 மாணவர்கள்தான் உள்ளனர்.
* ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 150 குழந்தைகளுக்கு பதிலாக 100 அல்லது 120 குழந்தைகள் உள்ளனர்.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: ஜனவரி 31-க்குள் தெரியப்படுத்த உத்தரவு
தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜனவரி 31) நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அது தொடர்பான அரசாணையை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்ததோடு, புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், குற்ற பின்னணி உள்ளவர்கள் போட்டியிடாத வண்ணம் பிரமாணப் பத்திரத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு தாக்கல் செய்யாதவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் ராமமோகனராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.குமார் வாதிடுகையில், "தேர்தல் ஏப்ரலில் நடத்தப்படும். இதுகுறித்த விவரங்களை தெரிவிக்க ஐந்து வார கால அவகாசம் தேவை. தனி நீதிபதியின் உத்தரவில் ஒரு சிலவற்றை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
அவற்றை அமலுக்கு கொண்டு வருவதற்கு பல கோடி ரூபாய் செலவாகும்' என்றார். அதைத் தொடர்ந்து, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், "தனி நீதிபதி உத்தரவு சரியான முறையில் உள்ளது. இதை பின்பற்றி தேர்தலை உடனே நடத்த வேண்டும், என்றார். இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், தேர்தலை நடத்த இவ்வளவு அதிக நாள்கள் ஏன் பிடிக்கிறது என்பதை அறிய விரும்புவதாகவும், தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து செவ்வாய்க்கிழமைக்குள் (ஜனவரி 31) நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஏப்ரலுக்குள் டெட் தேர்வு - அமைச்சர் பாண்டியராஜன்
Thursday, January 26, 2017
உதவித்தொகை பெற நாளை எழுத்து தேர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டு, "ஸ்காலர் ஷிப்' வழங்கப்படுகிறது.
இத்தேர்வெழுத, ஏழாம் வகுப்பில், 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்கு, 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 5,223 பேர், நடப்பு ஆண்டுக்கான "ஸ்காலர் ஷிப்' பெறுவதற்கான எழுத்து தேர்வை எழுதவுள்ளனர். இத்தேர்வு, நாளை நடைபெறுகிறது. மாவட்டத்தில், 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மாதம், 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.
Wednesday, January 25, 2017
தமிழக அரசின் 2016ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருது அறிவிப்பு
தமிழக அரசின் சார்பில் 2016ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2016ம் ஆண்டின் ‘சுற்றுச்சூழல் விருதுகள்’ வழங்கி கவுரவிப்பதற்கு தமிழக அரசு உத்தேசித்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனி நபர்கள் 18 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தரமான ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகள் ஏற்றுக்கொள்ளப்படும். வருகிற 30ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறலாம். மார்ச் மாதம் 6ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி அமர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு அறிவித்தது.
அதில் இருந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்படுகிறார்கள். கடந்த 2014–ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். காத்திருக்கும் பட்டியலில் இருந்து தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு
பள்ளி கல்வித்துறையின் அரசு தேர்வுத்துறையால் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நடைபெறுவது தள்ளிப்போகாது. ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்.
ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு நடக்கும் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் விரிவான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.
மார்ச் 25ல் ஸ்டிரைக்: அரசு ஊழியர்கள் அறிவிப்பு
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் நான்கு கட்ட போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர், செல்வம் கூறியதாவது: கடந்த பிப்ரவரியில் புதிய ஓய்வூதியம் திட்டம் ரத்து, சம்பளக்குழு அமைப்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராடினர்.அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை விதி, 110ன் கீழ், புதிய
ஓய்வூதியத் திட்டம் குறித்து நிபுணர் குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், 'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது; இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.நான்கு லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. எட்டாவது சம்பள குழு அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து, பிப்., 2ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், மார்ச் 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி, 18 முதல் 25 வரை, வேலை நிறுத்த ஆயத்த மாநாடுகள், 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு கூறினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது
Tuesday, January 24, 2017
பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்