Government of Tamil Nadu, India - Textbooks Online
click below
Friday, October 25, 2013
Text Books Online - Standard IX - Term II Books
Thursday, October 24, 2013
புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.
பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் 6 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், 35 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள். ஒரு கோடியே 50 லட்சம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெயிலாகக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளனர். அதற்காக சிறப்பு வகுப்புகள் காலை அல்லது மாலையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படுகிறது. கல்வித்துறையை மேம்படுத்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
தற்போது ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அதன்படி மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பித்தால் மாணவர்கள் மனதில் நிலைத்து நிற்கும்? புரிந்து படிக்க என்ன செய்யலாம்? புதிய தொழில்நுட்பத்தில் எப்படி பாடம் நடத்தலாம்? ஆங்கிலத்தில் இலக்கணத்துடன் எப்படி பேச வைக்கலாம்? இலக்கணம் இன்றி பேச்சு வழக்கில் எப்படி பேச வைக்கலாம்? என்பது குறித்து பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ.வளாகத்தில் தொடங்கியது.
இந்த பயிற்சி முகாமில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 90 பேர் கலந்துகொண்டனர். பயிற்சி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பயிற்சி பெறும் இவர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு சென்று மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி பெற்ற பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிப்பார்கள்.
IGNOU B.ed TERM END EXAM 2013-DECEMBER EXAM
Es 331-9.12.13
332_ 10/12
333 _11/12
341 _12/12
342 _13/12
343 _14/12
344 _16/12
345 _18/12
334- 19/12
046_ 20/12
335 _21/12
065 _23/12
361 _24/12
066_26/12
362_27/12
363 _28/12
364_30/12
புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும். பின், அதிகாரிகள் அடங்கிய குழு, ஒவ்வொரு தேர்வரின் சான்றிதழ்களையும், ஆய்வு செய்யும். இந்தப் பணிகள் முடிவதற்கே, பல நாட்கள் ஆகிவிடும். இந்நிலையில், 23, 24ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 மையங்களில், முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
இதில், வழக்கத்திற்கு மாறாக, புதிய முறையை, டி.ஆர்.பி., கையாண்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மையத்திற்கும், சி.இ.ஓ., தலைமையில், நான்கு அலுவலர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பொறுப்பு ஏற்கச் செய்தது. தேர்வர்களுடைய சான்றிதழ்களை, மையத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து முடித்ததும், அது குறித்த விவரங்களை, அங்கே இருந்தபடி, டி.ஆர்.பி., இணையதளத்தில், அப்லோட் செய்தனர். மேலும், தேர்வர்களின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆசிரியர் பணிக்கு, தகுதியானவர் என்றும், தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் ஆவணத்தில், சி.இ.ஓ., உட்பட, நான்கு பேரும் கையெழுத்திட்டு, அதன் நகலை, தேர்வர்களுக்கு வழங்கவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம், டி.ஆர்.பி., அலுவலகத்தில், மீண்டும் ஒரு முறை தனியாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்காது.
நேரடியாக, தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்படும். அதே நேரத்தில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட நான்கு அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு செய்யப்படும் ஆசிரியரில், யாராவது பின்னாளில், தகுதியற்றவர்களாக கண்டுபிடிக்கப்பட்டால், சான்றிதழை சரிபார்த்த, நான்கு அலுவலர்கள் மீதும், துறை ரீதியாக, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.பி., வழிவகை செய்துள்ளது. இது, எங்களுக்கு, தேவையற்ற, டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.
பழுதான கட்டடத்தில் வகுப்பு வேண்டாம் : பள்ளி கல்வி துறை உத்தரவு
"மழைக்காலம் துவங்கியுள்ளதால், பழுதடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: மழைக்காலம் துவங்கியுள்ளதால், பழுதடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். மின்ஒயர்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை, தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில், மாணவர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. சுகாதாரம் குறித்து இறைவணக்க வேளையின் போது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏதாவது பிரச்னை இருப்பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்தச் சுற்றறிக்கை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இரட்டைப்பட்ட வழக்கு வழக்கம் போல் வருகிற (30.10.2013)புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்குவந்த இரட்டைப்பட்டம் வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்கையை தொட்டது. அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013- புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Wednesday, October 23, 2013
இரட்டைப்பட்டம் விசாரணை Serial No - 33 இல் வருகிறது
இன்று (24.10.2013 ) விசாரணை serial no 33 இல் வருகிறது. பட்டதாரி இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு நீயரசர் தடை உத்தரவு வழங்கி உள்ளதால் எந்த பணியிடமும் நிரப்ப முடியாத நிலை உள்ளது. TET RESULT விரைவில் வெளியிடும் நிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு முடிந்தால் அல்லது தடை உத்தரவை நீக்கினால் மட்டுமே இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு தடைநீங்கும் எனவே இன்று விசாரணைக்கு வரும் என்ற ஆவலோடு இருப்போம்...
1,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் குரூப்–2 ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது துறைவாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,000 காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக பணியிடங்கள் சேகரிக்கப்படவில்லை.
அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கான குரூப்–2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வர இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம். இந்த தேர்வு மூலம் 1,000 பேர்களுக்கு மேல் வேலை கிடைக்கும். இந்த அறிவிப்பு காலதாமதம் ஆகுவதற்கு காரணம் ஏற்கனவே நடந்த குரூப்–2 தேர்வில் இன்னும் 140 பேர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட இருக்கிறது. அதன் பின்னர் தான் குரூப்2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அதைத்தொடர்ந்து இந்த வருடத்திற்கான குரூப்–1 தேர்வு அறிவிப்பு வெளியாகும்.
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
செப்டம்பர் / அக்டோபர் 2013ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேல்நிலைத் தேர்வினை
"சிறப்பு அனுமதி திட்டம்" (தட்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. தேர்வு துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய நடைமுறைகளினால் , கடந்த ஆண்டை விட இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகிக்கப்படுகின்றன
பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது முன்னுரிமை தேர்வு (OPTION) திரும்ப பெறப்பட்டுள்ளது
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகிறது. இதில் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அல்லது முதுகலை பட்டதாரி ஆசிரியர் என இரண்டு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவதற்கு பதிலாக ஏதேனும் ஒரு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறுவது சார்பாக தேர்வு செய்ய "OPTION" வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது முன்னுரிமைத் தேர்வு உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநரால் திரும்ப பெறப்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, October 22, 2013
10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் நாளை முதல் விற்பனை
இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, ஈஎல்எம் பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு.
2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.
3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
4. கடலூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர்.
5. விழுப்புரம் - ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்டம், விழுப்புரம்.
6. தஞ்சாவூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம் அருகில், தஞ்சாவூர்.
7. நாகப்பட்டினம் - சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி, பழைய பஸ் நிலையம் அருகில், நாகப்பட்டினம்.
8. திருவாரூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.
9. மதுரை - சேதுபதி மேல்நிலைப் பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரை.
10. தேனி - என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.
11. திண்டுக்கல் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி சாலை, திண்டுக்கல்.
12. ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.
13. விருதுநகர் - டி.டி.என்.எம். நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
14. சிவகங்கை - புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, மதுரை சாலை, சிவகங்கை.
15. திருநெல்வேலி - அரசு மேல்நிலைப் பள்ளி, ரத்னா திரையரங்கம் எதிரில், திருநெல்வேலி.
16. தூத்துக்குடி - லசால் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
17. கன்னியாகுமரி - அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோயில்.
18. வேலூர் - வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.
19. திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.
20. சேலம் - பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மறவனேரி, சேலம்.
21. நாமக்கல் - அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணாசாலை, ராசிபுரம்.
22. தருமபுரி - அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
23. திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
24. கரூர் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கரூர்.
25. பெரம்பலூர் - தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேசபுரம், பெரம்பலூர்.
26. புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.
27. கோவை - நல்லாயன் உயர்நிலைப் பள்ளி, பெரிய கடை வீதி, கோவை.
28. ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பூங்கா அருகில், ஈரோடு.
29. உதகமண்டலம் - அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னூர்.
30. கிருஷ்ணகிரி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி.
31. அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
32. திருப்பூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம், திருப்பூர்.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு
தற்காலிக ஆசிரியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அனு மதி அளித்து உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் சம்பளம் வழங் கப்படுகிறது. இந்த சம்பளம் பெற்றோர் ஆசிரியர் கழக த்தின் நிதியில் இருந்து அரசு பெற்று தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்குகிறது.
இந்த தற்காலிக ஆசிரியர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே நியமனம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் இல்லை தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கிலம், கணி தம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங் களுக்கு தலா ஒரு ஆசிரியரும், வேதியியல் பாடத்திற்கு 2 பேர், வணிகவியல் பாடத்திற்கு 5 பேர், பொருளியல் பாடத் திற்கு 8 பேர் என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள் ளன. குறிப்பாக முருக் கோடை அரசு பள்ளியில் மட்டும் மொத்தம் 5 முதுகலை ஆசிரி யர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க இது வரை தகுதியுள்ள யாரும் ஆர்வம் செலுத்தவில்லை. இதனால் காலிப்பணியிடங் களுக்கு தற்காலிக ஆசிரியர் களை நியமிக்க முடியாத நிலை உள்ளது.
பணியிடங்கள் காலி யாக உள்ள பள்ளிகளில் மாண வர்களின் கல்வித்திறன் பாதிக் கப்பட்டு உள்ளது. காரணம் என்ன? தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு திண்டுக்கல்லில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணியை தொடர்ந்து, 2 அல் லது 3 மாதங்களுக்குள் புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் கள் பணியில் சேர்ந்து விடு வார்கள். இதனால் தற்போது தற்கா லிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய் யப்படுபவர்கள் வேலை இழக் கும் நிலை ஏற்படும் என்று கருதி தற்காலிக பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க முது கலைப் பட்டதாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக கூறப் படுகிறது.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்குமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனத்தில், இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது
. கடந்த 2012ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு மேயிலும், முக்கிய தேர்வு நவம்பரிலும், கடந்த 2013 ஏப்ரலில் நேர்காணலும், ஜூனில் தேர்வு முடிவும் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்திய அளவில் 180 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக கண்டறியப்பட்டு, அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதில் சொந்த மாநிலங்களில் பணியாற்ற 61 பேரும், பிற மாநிலங்களில் பணியாற்ற 119 பேரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 9 காலியிடங்களுக்கு, சொந்த மாநிலத்தை சேர்ந்த 3 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 6 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் 2 பேர் உள்ளனர். இவர்கள் இருவருமே பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள். பொதுப் பிரிவில் (ஓ.சி.,) உள்ள 5 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஒருவர், அடுத்த மாநிலத்தை சேர்ந்தவர். பழங்குடியின வகுப்பினர் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 180 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சொந்த மாநிலங்களிலும், இருபங்கு அடுத்த மாநிலங்களிலும் நியமிக்கப்படுவர். பொதுப் பிரிவில் மொத்தம் 94 பேரில், 19 பேர் சொந்த மாநிலத்திலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும் நியமிக்கப்படுவர். பிற்படுத்தப்பட்டோர் 45 பேரில் 22 பேர் சொந்த மாநிலங்களிலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும், தாழ்த்தப்பட்டோர் 28 பேரில், 11 பேர் சொந்த மாநிலங்களிலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும், பழங்குடியினர் 13 பேரில் 9 பேர் சொந்த மாநிலங்களிலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும் நியமிக்கப்பட உள்ளனர்.
முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பதவி உயர்வில் சிக்கல்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ள நிலையில், பதவி உயர்விற்கு காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என, ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், 2013 ஜூலையில், ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மூலம், தேர்வு செய்யப்பட்டவர்களை, முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிப்பதற்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, 14 மாவட்டங்களில், நேற்று துவங்கி இன்று முடிகிறது. இவர்கள் நியமிக்கப்பட்டால், பதவி உயர்விற்காக, ஐந்து மாதமாக காத்திருக்கும், 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் (முதுகலை பட்டம் பெற்றவர்கள்) பாதிக்கப்படுவர் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. "எங்களுக்கு பதவி உயர்வு அளித்த பின், டி.ஆர்.பி., யில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் எட்வின் கூறுகையில், ""ஒரே நேரத்தில் 2 "டிகிரி' முடித்த ஆசிரியர்கள், பதவி உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால், பதவி உயர்வு பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதிய நியமனங்கள் மூலம், மேலும் பாதிப்பு ஏற்படும். தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தபின், டி.ஆர்.பி., யில் தேர்வானவர்களை நியமிக்க வேண்டும்,'' என்றார்.
750 தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி
தமிழகம் முழுவதும் 750 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொண்டு வருதல், மாணவர்களின் பெற்றோர்களுடன் உறவை மேம்படுத்துதல், பள்ளிகளில் உள்ள நூலகங்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றை சிறப்பாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இங்கிலாந்து, இந்தியா கல்வி ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழகத்தில், முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாசிரியர்கள், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரிகள் என 64 பேருக்கு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 5 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 750 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் தொடக்கத்திலேயோ தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
Monday, October 21, 2013
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்க அரசாணை வெளியிடு
கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வின் போது நிர்வாக மாறுதலில் சென்றவவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து தெளிவற்ற நிலையில் இருந்து வந்தது.இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ,மற்றும் வத்தலகுண்டு ஒன்றியங்களில் மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டது .
தற்போது நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்க அரசாணை வெளியிடு காரணமாக விரைவில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நன்றி -திரு .ஜான்சன் TNPTF
தீபாவளி போனஸ் கேட்டு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம், காஞ்சிபுரத்தில் நடந்தது.மாநிலப் பொதுச் செயலர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாநில கெüரவத் தலைவர் சுந்தரகணேஷ், மாநிலத் தலைவர் ராமர், துணைத் தலைவர்கள் பாபு, இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலத் துணைத் தலைவர் முருகதாஸ் வரவேற்றார். பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை மாதத்தின் முதல் தேதியன்றே அவரவர் வங்கிக் கணக்கில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 7 பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல, தீபாவளி போனஸ், மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஆகிய சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் சீனிவாசன் உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.