இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, September 24, 2019

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை உதவித் தொகை: என்எம்எம்எஸ் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு வியாழக்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் உஷாராணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

உதவித்தொகை வழங்க மாணவர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வரும் டிச.1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை செப்.26-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் வரும் அக்.11-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் அக்.16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதியுடையோர்: மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளி) நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் பெற்றோரின் குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ செலுத்தி அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு முறை: என்எம்எம்எஸ் தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி-1-இல் மனத்திறன் படிப்பறிவுத் தேர்வு (Mental Ability Test-MAT) காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும். பகுதி 2-இல் படிப்பறிவுத் தேர்வு , (www.dge.tn.gov.in) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

Monday, September 23, 2019

பள்ளிகளில் தள்ளி போனது காந்தி ஜெயந்தி விழா


காலாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டதால், அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், காலாண்டு தேர்வுகள் முடிந்து, இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அதுவரை, பள்ளிகளில் வகுப்புகள் இயங்காது; ஆனால், நிர்வாகப் பணிகள் மட்டும் நடக்கும். இந்நிலையில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை, மத்திய அரசு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, அக்., 2 வரை, காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்த, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மீண்டும் திறந்ததும், அக்., 3 முதல், காந்தி ஜெயந்தி விழாவை நடத்த, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. விடுமுறைகளில், காந்தியை ஓவியமாக வரையவும், காந்தி குறித்த பொன்மொழிகளை எழுதவும், காந்தியின் போராட்ட வாழ்க்கை குறித்து கட்டுரை எழுதவும், மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Sunday, September 22, 2019

மாணவியருக்கு பேரீச்சம் பழம் அரசு பள்ளிகளில் வழங்க உத்தரவு


அரசு பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி பெறும் மாணவியருக்கு, பேரீச்சம் பழம் உள்ளிட்ட, சத்தான பொருட்கள் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்' என்ற வாசகத்துடன், பெண் குழந்தைகளுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பயிற்சிக்கு, ஆரோக்கியமான, திடகாத்திரமான மாணவியரை தேர்வு செய்து, அவர்களின் உடல் நலன் பாதிக்காத வகையில், பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும், யோகா வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், பயிற்சிக்கு வரும் மாணவியருக்கு, வேர்க்கடலை, பேரீச்சம் பழம் உட்பட, விட்டமின் சத்துக்கள் நிறைந்த பொருட்கள் வழங்கவும், அதற்கு, அரசிடம் நிதி பெற்றுக் கொள்ளும்படியும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காலாண்டு தேர்வு இன்று நிறைவு நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், இன்றுடன் காலாண்டு தேர்வு முடிகிறது. நாளை முதல், ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், மூன்று பருவ தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும், முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு, செப்., 12ல் துவங்கியது. மொழி பாடங்கள், முக்கிய பாடங்கள் மற்றும் இணை படிப்புகள் உள்ளிட்ட அனைத்துக்கும், தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இன்றுடன், அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. இதை தொடர்ந்து, நாளை முதல், அக்., 2 வரை, ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

காந்தி ஜெயந்தி, அக்., 2ல் கொண்டாடப்படும் நிலையில், பள்ளிகள் திறக்கும், அக்., 3ல் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, இம்மாதம், 30ம் தேதியில் இருந்து, முதல் பருவ தேர்வுகள் துவங்க உள்ளன. இடைபட்ட நாட்களில், காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்பின், அக்டோபர், 25 முதல், முதல் பருவ தேர்வுக்கான விடுமுறை விடப்படுகிறது.

Saturday, September 21, 2019

அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பூட்ஸ் மற்றும் காலுறை


தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பூட்ஸ் மற்றும் காலுறைகள் வழங்கப்படும் என, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரை விரகனூரில் சனிக்கிழமை நடைபெற்ற மெட்ரிக். பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் மொத்தம் 2,038 மெட்ரிக். பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பூட்ஸ் மற்றும் காலுறைகள் வழங்கப்படும். மேலும், 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகள் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகள் (டேப்லெட்) வழங்கப்படும். அனைத்து அரசுப் பள்ளி வகுப்பறைகளில் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் 7 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளும், 60 ஆயிரம் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டுகளும் அமைத்து கொடுக்கப்படும். மேலும், 7,500 அரசுப் பள்ளிகளில் காணொலிக் காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும். பள்ளிக் கல்வித் துறை மூலம் கல்விக்கென தனியாக தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவதாக ஒரு தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று, அனைத்து மாநிலங்களிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தயாராக உள்ளனர். ஆனால், தமிழகத்தில் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு 3 ஆண்டுகள் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படும். அதுவரை 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Wednesday, September 18, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம் இன்ஜி.,- மருத்துவ பாடங்கள் பிரிப்பு


பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாட பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து

தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணைபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட தொகுப்புகளில் மாற்றம்செய்யப்படுகிறது.

இந்த மாற்றம் வரும் 2020 - 21ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழுவின் அறிக்கை மற்றும் அரசு தேர்வுகள் இயக்குனரின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.மொழி பாடம் மற்றும் ஆங்கிலம் தவிர மூன்று முதன்மை பாட தொகுப்பு 500 மதிப்பெண்களுக்கும் நான்கு முதன்மை பாட தொகுப்பு 600மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். இதில் எதை வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். தற்போது பிளஸ் ௧ படிப்பவர்கள் அடுத்த கல்வியாண்டில் இப்போது படிக்கும் பாடதொகுப்பில் பிளஸ் ௨வை தொடரலாம் என கூறப்பட்டுள்ளது.புதிய அரசாணையின் படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் இணைந்த முதலாம் பாடப்பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. அறிவியல் மட்டும் உள்ள இரண்டாம் பாடப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம் செய்யப்பட்டுள்ள பாட தொகுப்புகள்

பொது அறிவியல் பிரிவு
* கணிதம், இயற்பியல், வேதியியல்
* இயற்பியல், வேதியியல், உயிரியல்
* கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்
* வேதியியல், உயிரியல், மனை அறிவியல்
கலை பிரிவு
n வரலாறு, புவியியல், பொருளியல்
n பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல்
n வணிகவியல், வணிக கணிதம் மற்றும்
புள்ளியியல், கணக்கு பதிவியல்
* வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்
* முன்னேறிய தமிழ், வரலாறு, பொருளியல்
தொழிற்கல்வி பிரிவு
* கணிதம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
* கணிதம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
* கணிதம், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
* கணிதம், சிவில் இன்ஜினியரிங்
* கணிதம், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
* கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்
* உயிரியல், நர்சிங்
* மனை அறிவியல், டெக்ஸ்டைல் டிரஸ் டிசைனிங்
* மனை அறிவியல், உணவு சேவை மேலாண்மை
* உயிரியல், வேளாண் அறிவியல்
* வணிகவியல், கணக்கு பதிவியல்,
டைப்போக்ராபி மற்றும் கணினி அறிவியல்
n வணிகவியல், கணக்கு பதிவியல், ஆடிட்டிங் - பிராக்டிக்கல்

Tuesday, September 17, 2019

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஆரோக்கியமாக இருக்கும் மாணவிகளை மட்டுமே பயிற்சிக்குத் தேர்வு செய்ய வேண்டும். தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் குறைந்தபட்சம் ஒன்றரை மணி (90 நிமிஷங்கள்) நேரம் வீதம் வாரத்துக்கு 2 வகுப்புகள் நடத்த வேண்டும்.

கராத்தே பயிற்றுநர் ஆணாக இருக்கும்பட்சத்தில் ஒரு பெண் ஆசிரியர் பயிற்சியின்போது உடனிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிப்பதுடன், மாணவிகளுக்கு பேரீச்சம் பழம் உட்பட ஊட்டச்சத்து பொருள்களும் வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 , 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு விலக்கு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நாடு முழுவதும் அமல்படுத்தும் நிலையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பெரியார் பிறந்த நாளையொட்டி ஈரோடு பெரியார், அண்ணா நினைவகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காலாண்டுத் தேர்வுக்குப் பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி. மத்திய அரசின் மூலமாக, காந்தியின் பிறந்த நாளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காந்தி ஜயந்தி நாளில் அவரது படம் வைக்கப்பட்டு, விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். காலாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற முறையில் மத்திய அரசால் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டடத்தில் மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவுகளை முதல்வர்தான் எடுக்க வேண்டும் என்றார்.

Sunday, September 15, 2019

8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு


எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி, பிளஸ் 1ல், பொதுத் தேர்வு அமலுக்கு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, எட்டாம் வகுப்புக்கான கற்பித்தல் முறைகளில் மாற்றம் செய்வதற்காக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 25 மதிப்பெண்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடத்துவது போல், எட்டாம் வகுப்புக்கும் நடத்தலாம் என, ஆலோசனை நடத்தப்படுகிறது. அதனால், எட்டாம் வகுப்பு மாணவர்கள், அறிவியல் ஆய்வகங்களை பயன்படுத்தஅனுமதி அளிக்கப்படும். பள்ளிகளில் சிறப்பு செய்முறை தேர்வு பயிற்சியும் அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

Saturday, September 14, 2019

8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், ஏற்கனவே உள்ள, முப்பருவ பாடமுறை ரத்து செய்யப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில், வழக்கமான தேர்வு நடத்த வேண்டும்.

தேர்வு நடத்துவது தொடர்பாக, மாநில அரசுகள் சுயமாக முடிவு எடுக்க லாம் என, இந்த ஆண்டு மார்ச்சில், மத்திய அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி, நடப்பு கல்வி ஆண்டு முதல், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. குழப்பம்இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார். சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற, மத்திய கல்வி வாரியங்கள், இன்னும் முடிவெடுக்காத நிலையில், தமிழக அரசு முந்திக் கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த அறிவிப்பால், பல்வேறு நடைமுறை குழப்பங்களும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. தற்போதைய நடைமுறைப்படி, ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையிலும், முப்பருவ பாடமுறை அமலில் உள்ளது.இதன்படி, மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வு, இரண்டாம் பருவ தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பருவ தேர்வுக்கும் பாட வாரியாக, தனியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

முதல் பருவ தேர்வு முடிந்ததும், அந்த பாட புத்தகங்களை பயன்படுத்துவதில்லை.அடுத்த பருவ தேர்வில், முதல் பருவ தேர்வுக்கான பாடங்களில் இருந்து, கேள்விகளும் இடம் பெறாது. இரண்டாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும், மூன்றாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும் புத்த கங்கள் வழங்கப்படும். அந்தந்த பருவ தேர்வுக்கு, அந்தந்த பாடப் புத்தங்களை மட்டுமே படிக்க வேண்டும். முந்தைய பருவ பாடங்களை படிக்க தேவையில்லை. அபாயம் இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்ததால், மாணவர்கள், ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் மொத்த பாடங்களையும் படித்தாக வேண்டும்.அப்படியென்றால், முதல் பருவ பாடங்களை, இரண்டாம் பருவத்துக்கும், முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களை, மூன்றாம் பருவ தேர்வுக்கும் சேர்த்து படிக்க வேண்டியதிருக்கும். இதனால், மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதுடன், புத்தக சுமையும் அதிகரிக்கும்.

மேலும், பொது தேர்வு முறை அமலானால், முப்பருவ பாட முறையை, ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடர் மதிப்பீட்டு முறை என்ற, சி.சி.இ.,நீக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஓராண்டு பாடங்கள் அனைத்தையும், மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு கூடுதல் வேலை நாட்களும், நேரமும் தேவைப்படும். எனவே, சி.சி.இ., முறைக்கு தேவையான, பாடம் தொடர்பான இணை செயல்பாடுகளில், மாணவர்களால் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். அதேபோல், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, தொடர்ந்து அடிப்படை கல்வி கிடைப்பதிலும், சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக, கல்வியாளர்கள் கருதுகின்றன

Wednesday, September 11, 2019

இடை நிற்றல் மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு


இடைநிற்றல் மாணவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து பள்ளிக் கல்விக்கான எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப் படிப்பை தொடராமல் இடைநின்ற மாணவர், வயது பூர்த்தியாகியும் பள்ளிக்கு வராதவர் குறித்த விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.

இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களைப் பள்ளியில் சேர்க்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொடக்க கல்வி பயின்று இடையில் நின்ற மாணவர்கள், 14 வயதுக்குட்பட்ட, பள்ளி செல்லாத மாணவர்கள் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். பள்ளி விட்டு வேறு பள்ளி சென்ற மாணவர்களின் விவரங்களையும் சேகரித்து புதுப்பிக்க வேண்டும். இந்தப் பணி முடிவடைந்தவுடன் சேகரிக்கப்பட்ட விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பள்ளி கட்டடங்கள் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்


வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்கும் பணியை, பொதுப்பணித்துறை துவங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் அரசு பள்ளி கட்டடங்களை, மாநில அரசின் நிதி வாயிலாக மட்டுமின்றி, நபார்டு வங்கி கடனுதவியுடன் பொதுப்பணித் துறையினர் கட்டியுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும், அரசு கட்டடங்களை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதியில், பள்ளி கட்டடங்களிலும் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. தற்போது, மாநிலம் முழுவதும் கட்டப்பட்ட, பல்வேறு பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. வெள்ள அபாய காலங்களில், பொதுமக்களும், இந்த கட்டடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டடங்கள் குறித்து, 10 நாட்களில் கணக்கெடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.சேதமடைந்த பள்ளிகளில், மழைக்கு முன், தற்காலிக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.