இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, March 20, 2019

வாக்களிக்க 11 அடையாள ஆவணங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு


வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், 11 வகையான அடையாள ஆவணங்களைக் காண்பித்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தேர்தல் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

வாக்களிப்பதற்கு முன்பாக வாக்குச்சாவடியில், வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். இந்த அட்டையை அளிக்க இயலாதவர்கள் 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்.

அதன்படி, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி-அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

புகைப்பட வாக்காளர் அட்டை: தேர்தல் ஆணையத்தால் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தொடர்ந்து அளிக்கப்படும். ஆனாலும், இந்த அட்டை மட்டுமே தேர்தலில் வாக்களிப்பதற்கான ஆவணமாகக் கருதப்படாது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதால் மட்டும் ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Tuesday, March 19, 2019

அரசின், 'நீட்' பயிற்சி மார்ச் 25ல் துவக்கம்


பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி, வரும், 25ம் தேதி துவங்க உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், அறிவியல் பாட பிரிவினர், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்கு, தனியார் மையங்களில், பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில், இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது.பொது தேர்வு, நேற்று முடிந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த, 4,000 மாணவர்கள், இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, துாத்துக்குடி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில், உணவு, உறைவிட வசதியுடன், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.பயிற்சி வகுப்புகள், மார்ச், 25ல் துவங்க உள்ளன. இந்த வகுப்புகளில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், நீட் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பாடங்கள் நடத்த உள்ளனர்

முடிந்தது பிளஸ் 2 தேர்வு: ஏப்.,19ல், 'ரிசல்ட்'


பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், ஏப்.,19ல் வெளியிடப்பட உள்ளன.பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது. இறுதியாக, நேற்று, உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அக்கவுன்டன்சி தேர்வுகள் நடந்தன. அத்துடன், பிளஸ் 2வில் அனைத்து பாட பிரிவினருக்கும் தேர்வுகள் முடிந்தன.நேற்று நடந்த,உயிரியல் மற்றும் தாவரவியல் வினாத்தாள், எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். இதற்கான தேர்வு முடிவுகள், லோக்சபா தேர்தலுக்கு மறுநாளான, ஏப்., 19ல் வெளியிடப்பட உள்ளன.

Monday, March 18, 2019

புதிய கல்வி கொள்கை தயார்; மத்திய அமைச்சர் அறிவிப்பு


தேசிய அளவில் கல்வித் துறையில் மாற்றம் செய்யும் வகையில், புதிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ''லோக்சபா தேர்தலுக்கு பின், இந்த புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவேடகர் கூறியுள்ளார்.

நம் நாட்டில், 1986ல், தேசிய அளவிலான கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு, 1992ல், மாற்றம் செய்யப்பட்டது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., கட்சியின் தேர்தல் அறிக்கையில், 'நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்' என, கூறப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றபின், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, முன்னாள் அமைச்சரவை செயலர், டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு, 2016ல், பரிந்துரைகளை சமர்ப்பித்தது.

கடந்த ஆண்டு ஜூனில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில், மற்றொரு குழு அமைக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கையை இறுதி செய்வதற்காக, கஸ்துாரி ரங்கன் தலைமையிலான குழுவின் பணிக்காலம், ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவேடகர் கூறியதாவது: கஸ்துாரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்வி கொள்கையை தயாரித்து அளித்துள்ளது. அதன், ஹிந்தி மொழி பெயர்ப்பும் முடிந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், தற்போது, புதிய கொள்கையை அமல்படுத்த முடியாது.தேர்தலுக்கு பின், புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Wednesday, March 13, 2019

ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி


தமிழகத்தில், லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு, வரும், 24ம் தேதி முதல், இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள், தயாராக இருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tuesday, March 12, 2019

மார்ச் 29ல் விடைத்தாள் திருத்தம்


பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல் துவங்க உள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில்பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. லோக்சபா தேர்தல்ஏப்.18ல் நடக்க உள்ளதால்விடைத்தாள் திருத்த பணிகளை விரைந்து முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதன்படி பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கானமொழி பாடங்களின் விடைத்தாள் திருத்தம்வரும்29ல் துவங்க உள்ளது. முதல் நாளில் தலைமை மதிப்பீட்டாளரும்வரும்30 முதல்ஏப்.6 வரைமுதுநிலை ஆசிரியர்களும் திருத்தம் செய்ய உள்ளனர். ஏப்.11க்குள் விடைத்தாள் திருத்தத்தை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Monday, March 11, 2019

morning prayer 12-3-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

உரை:

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

பழமொழி:

Many drops make a shower

சிறு துளி பெரு வெள்ளம்

பொன்மொழி:

அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.

- சர்ச்சில்

இரண்டொழுக்க பண்பாடு :

1) உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்வேன். அதற்கு மிஞ்சியது பொய் ஆகும் என அறிவேன்

2) இராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் நம் நாட்டின் இரு கண்கள் எனவே அவர்களை மதித்துப் போற்றுவேன்

பொது அறிவு :

1) மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்?

26 மைல்.

2) காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?

சிக்காகோ.

நீதிக்கதை :

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

இன்றைய செய்தி துளிகள் :

1) ஏப்ரல் 10ம் தேதிக்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க தேர்வுத்துறை முடிவு ? - சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளதாக தகவல்

2) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

3) எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

4) பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

5) பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றார்.

Sunday, March 10, 2019

MORNING PRAYER

11-3-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 147

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

உரை:

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

பழமொழி:

Many a slip between the cup and the lip

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

பொன்மொழி:

ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.

- பெர்னாட்ஷா

இரண்டொழுக்க பண்பாடு :

1) எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.

2) நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.

பொது அறிவு :

1) காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?

ரோஸ்

2 தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?

லேண்ட் டார்ம்

நீதிக்கதை :

விறகுவெட்டியும் வனதேவதையும்

                     ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தான்.அவன் வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய காடு இருந்து. அந்தக் காட்டில் நிறைய பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன.

           விறகுவெட்டி தினமும் அதிகாலையில் எழுந்து தன்னுடைய இரும்புக்கோடாலியை எடுத்துக் கொண்டு அந்தக் காட்டுக்குச் செல்வான். நன்றாகக் காய்ந்த மரமாகப் பார்த்து அதை வெட்டிக் கட்டாகக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஊருக்குள் சென்று விற்று வருவான். அந்தப் பணத்தில் அன்றுதேவையான உணவைத் தயாரித்து அவனும் அவன் மனைவியும்  உண்டு  வாழ்ந்து வந்தனர் .            ஒருநாள் நல்ல வெய்யில் நேரம்.விறகுவெட்டி கோடாலியைத் தோளில் போட்டுக் கொண்டு அந்தக் காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். அவன் வெட்டுவதற்குத் தக்கபடி எந்தக் காய்ந்த மரமும் தென்படவில்லை.சூரியன் சையத் தொடங்கியது. தேடித் கொண்டே வந்தவன் அந்தக் காட்டின் நடுவே ஓடும் பெரிய ஆற்றின் கரைக்கு வந்து சேர்ந்தான்.

     அந்த ஆற்றின் நீரை அள்ளிக் குடித்தான்.அந்த ஆற்றின்
கரையில் ஒரு பெரிய மரம் இருந்தது அந்தமரத்தில்  இருந்த  பெரிய கிளையை வெட்டத்  தொடங்கினான்.
           பாதிக் கிளையை வெட்டியபோது திடீரென்று அவன் கோடாலி கைநழுவி வேகமாக ஓடும் ஆற்றில் விழுந்தது.விறகுவெட்டி ஐயோ என அலறியவாறு நீருக்குள் இறங்கித் தேடினான். அவனுடைய கோடாலி அகப்படவே இல்லை.

என்ன செய்வான் பாவம் அங்கேயே அழுதபடி அமர்ந்து விட்டான்.வெகுநேரம் அவன் அழுது கொண்டிருப்பதை அந்தக் காட்டில் இருக்கும் வனதேவதை பார்த்தது.நீரில் இருந்து வெளியே வந்தது.வனதேவதையைப் பார்த்தவுடன் பயத்துடன் எழுந்து நின்றான்.அவனை அன்புடன் பார்த்த வனதேவதை,
"ஏனப்பா வெகு நேரமாக அழுது கொண்டிருக்கிறாய்? "என்று கேட்டது.
விறகுவெட்டியும் அழுதுகொண்டே "என் கோடாலி நீருக்குள் விழுந்துவிட்டது.அது இல்லாமல் என்னால் விறகு வெட்ட முடியாது.

இனி நான் எப்படி வாழ்வேன்?"என்றான்
அதைக் கேட்ட வனதேவதை "கவலைப் படாதே உனக்கு கோடாலிதானே வேண்டும் நான் தருகிறேன்" என்று சொல்லி நீருக்குள் மறைந்தது.
சற்று நேரத்தில் அந்தவனதேவதை ஒரு தங்கக்  கோடாலியைக கையில் பிடித்தபடி வெளியே வந்தது.
"இதோ உன் கோடாலி.இதை வைத்துக் கொள் "
விறகுவெட்டி தன தலையை இல்லை என்பதுபோல் அசைத்தான்.
"இது பொன்னால் ஆனது இதைவைத்து விறகு வெட்ட முடியாது.
மேலும் இது என்னுடையது இல்லை."
என்று சொன்னவன் மீண்டும் அழத்  தொடங்கினான்.
"அழாதே  இரு இதோ வருகிறேன்" என்ற வனதேவதை மீண்டும் நீருக்குள் மூழ்கியது.

சற்று நேரத்தில் வெள்ளியாலான கோடாலியைப் பிடித்தபடி வந்தது.அதையும் பார்த்த விறகுவெட்டி "இதுவும் என்னுடையது இல்லை."என்றபடி தலையை அசைத்தான்.

"கவலைப் படாதே இதோ வருகிறேன் அழாமல் இரு என்று சொல்லியபடியே வனதேவதை நீருக்குள் மூழ்கி எழுந்தது.
இப்போது அதன் கையில் ஒரு இரும்புக்கு கோடாலி இருந்தது.
அதைப் பார்த்த விறகுவெட்டி  "இதுதான் என் கோடாலி." என்று மகிழ்ச்சியுடன்  கூறினான்.

வனதேவதையும் அவனைப் பார்த்து,"உன்னுடைய நேர்மையைப் பாராட்டுகிறேன்.நீ பிறர் பொருளுக்கு ஆசைப்  படாமல் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன்."என்று கூறியபடி மூன்று கோடாலிகளையும் அவனிடம் கொடுத்தது.

"உன் நேர்மையைப் பாராட்டி இந்த மூன்று கோடாலிகளையும் உனக்குப் பரிசாக அளிக்கிறேன்.தங்கம் வெள்ளிக் கோடாலிகளை விற்று நீ செல்வந்தனாக வாழ்வாயாக.உனக்கு என் நல்வாழ்த்துக்கள்."என்று கூறி மறைந்தது.

நேர்மைக்கு கிடைத்த பரிசுகளை ப்  பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு நோக்கி நடந்தான் விறகுவெட்டி.

இன்றைய செய்தி துளிகள் :

1)  17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் ஒரே கட்டமாக நடைபெறும்.

2) தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை

3) மாணவர்களுக்கு
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

4) அரசு ஊழியர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில், உறவினர்களிடமிருந்து பெறும் பரிசுப் பொருட்களுக்கு, கட்டுப்பாடு!

5) இந்தியா சார்பில்  விளையாடும் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வன்  பிஎன்பி பாரீஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அடுத்தடுத்து 3 சுற்றுகளில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Saturday, March 09, 2019

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மதிப்பூதியம் தர ரூ.53.78 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்குவதற்காக, 53.78 கோடி ரூபாய், 29 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுகின்றனர். அவற்றில் உள்ள விபரம் சரியா என்பதை விசாரிக்க, கள ஆய்வுக்கு செல்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது, 'பூத் சிலிப்' வழங்குவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.இப்பணிக்காக, தேர்தல் கமிஷன் சார்பில், மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஆண்டுக்கு, 7,150 ரூபாய்; மேற்பார்வையாளர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், 67 ஆயிரத்து, 669 ஓட்டுச்சாவடி அலுவலர்கள்; 6,414 மேற்பார்வையாளர்கள், பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக, 56.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தர்மபுரி, அரியலுார், நீலகிரி மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களுக்கு, 53.78 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. வரும், 31க்குள், ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Thursday, March 07, 2019

திருப்பூர்,கோவை உள்பட 4 நகரங்களில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


தமிழகத்தில் கோவை உள்பட 4 இடங்களில் புதிதாக கேந்திர வித்யாலய பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 1,199 பள்ளிகளும் தமிழகம், புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலய பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன.

இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்வதால், இங்கு கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கும் 25 சதவீத இடங்கள் போக, மீதம் உள்ள 75 சதவீத இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் முதன்மையாகச் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பாக, அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுபவர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அடுத்து, மாநில அரசில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு சேர்க்க முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு பிரிவினர் சேர்ந்ததுபோக மீதம் உள்ள இடங்களுக்கு மற்றவர்களும் விண்ணப்பித்துச் சேரலாம். இதனால், நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலாய பள்ளிகள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்தியா முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக கேந்திரியா வித்யாலாய பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன.

Sunday, March 03, 2019

பள்ளிகளில் குழந்தைகள் உரிமை மையம்


பள்ளிகளில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க, இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுப்பி உள்ள சுற்றிக்கை:

தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். தொடக்க பள்ளிகளில், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, மூன்று பெற்றோர், வட்டார வள மையத்தின் ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், இந்த மையத்தில், உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும்.

எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளில், ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியைகள், மூன்று பெற்றோர், ஒரு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர், மையத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.இந்த உத்தரவை பின்பற்றி, குழந்தைகள்உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு மையம் அமைத்தது குறித்து, இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Saturday, March 02, 2019

கணினி ஆசிரியர் தேர்வு டி.ஆர்.பி., அறிவிப்பு


:அரசு பள்ளி, கணினி ஆசிரியர் பணிக்கு, ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள். தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின் படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என, தமிழக பள்ளி கல்வி துறை, சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.

Thursday, February 28, 2019

ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்.5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிக்கை (Notification)ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வி ய ôழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிக்கை சார்ந்த முழு விவரங்களும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு


ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' நுழைவு தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியராக பணியாற்ற, 'டெட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முறைகேடுஒன்று முதல், ஐந்தாம் வகுப்புக்கு, டெட் முதல் தாளும்; ஆறு முதல், எட்டாம் வகுப்புக்கு, இரண்டாம் தாளும் தேர்ச்சி பெற வேண்டும்.கடைசியாக, டெட் நுழைவு தேர்வு, 2017 ஏப்ரலில் நடத்தப்பட்டது.

இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே, 2018ல், தேர்வு நடத்துவது தள்ளி போனது.ஆன்லைன் பதிவுஇந்நிலையில், இந்த ஆண்டு, டெட் தேர்வு அறிவிப்பு நேற்று வெளியானது. தேர்வு விதிகள், பாடங்கள், 'ஆன்லைன்' பதிவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், வரும், 15ம் தேதி முதல், ஏப்., 5 வரை ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை, trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.