இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 01, 2019

Morning prayer 2-1-19

2-1-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

பழமொழி:

Failures are stepping stones to success

தோல்வியே வெற்றிக்கு முதற்படி

பொன்மொழி:

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம்.

-சிம்மன்ஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?
ராஜராஜ சோழன்

2) நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?
சென்னை

நீதிக்கதை :

தங்க இடம் கிடைக்குமா?

மரகதபுரி எல்லையில் அடர்ந்த காடு. மரங்கொத்தி ஒன்று உயரமான மரத்தில் அமர்ந்து எச்சமிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியே வந்த நரியின் தலையில் எச்சம் விழுந்துவிட்டது.

உடனே நரிக்குக் கோபம் தலைக் கேறியது. ”யார்டா அவன்? என் மேல எச்சம் கழித்தது?” என்று சத்தமாக ஊளையிட்டுக் காட்டையே அதிரவைத்தது.

மரங்கொத்திக்குப் பயம் வந்துவிட்டது. ”நரியே, தவறுதலாகப் பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்” என்று வருத்தத்துடன் கூறியது.

”மன்னிப்பெல்லாம் கிடக்கட்டும். நீ மரக்கிளையில் இருப்பதால்தானே எச்சத்தைக் கீழே கழிக்க வேண்டியிருக்கிறது? அது அந்த வழியே வருகிறவர்களின் தலை மீதும் விழுகிறது. அதனால் உனக்குப் பாதுகாப்பான, விசாலமான ஒரு இருப்பிடத்தைக் காட்டுகிறேன். அங்கே போய் சந்தோஷமாக நீ வசிக்கலாம்” என்று ஆசை காட்டியது நரி.

”அப்படியா? எத்தனை நாளைக்குத்தான் நானும் மழையிலும் குளிரிலும் நடுங்குவது? நீ சொல்லும் இடத்துக்கு நான் வரத் தயாராக இருக்கிறேன்” என்றது மரங்கொத்தி.

“சற்று நேரத்தில் திரும்பி வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன். இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டு, நரி ஓடிவிட்டது.

மரங்கொத்தியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புது இடத்துக்குச் செல்லத் தயாரானது. அப்போது காகம் அங்கே வந்தது. நடந்த சம்பவத்தைக் காகத்திடம் விளக்கியது மரங்கொத்தி.

“மரங்கொத்தியே, நரியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இப்படித்தான் ஒரு நாள் நான் வடையை வாயில் வைத்திருக்கும்போது நீ அழகாக இருக்கிறாய், உன் குரலும்  இனிமையாக இருக்கிறது. ஒரு பாட்டுப் பாடு என்றது. நானும்  பாட்டுப் பாட, வடை கீழே விழ, அதைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டது. அதனால் நரியிடம் உஷாராக இரு” என்று சொல்லிவிட்டுச் சென்றது காகம்.

“இந்தப் பொல்லாத காகத்துக்கு எனக்கு ஒரு நல்ல இடம் கிடைப்பதில் விருப்பம் இல்லை போலிருக்கு.  இதை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது மரங்கொத்தி.

அப்போது ஜோடி புறாக்கள் மரத்தில் வந்து அமர்ந்தன. ”மரங்கொத்தியே, எங்கேயோ கிளம்பற மாதிரி இருக்கே?” என்று கேட்டன.

“நரி, எனக்கு ஒரு புது இடம் காட்டுவதாகச் சொல்லியிருக்கு. அதான் காத்துக்கிட்டிருக்கேன்.”

”மரங்கொத்தியே, இந்தக் காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் நேரடியாகச் செயலில் இறங்கும். ஆனால் நரி மட்டும் தந்திரமாத்தான் ஒரு செயலைச் செய்யும். எங்கள் அனுபவத்தில் நரி மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. அதனால் யோசித்து முடிவெடு. நாங்கள் வருகிறோம்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றன.

இந்தக் காட்டில் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு பொறாமை? இவங்களும் நல்லது செய்ய மாட்டாங்க. செய்கிறவர்களையும் தப்பு சொல்வாங்க. என்ன உலகமப்பா” என்று அலுத்துக்கொண்டது மரங்கொத்தி.

அப்போது அங்கு வந்த நரி, ”தயாரா, போகலாமா?” என்று கேட்டது.

மகிழ்ச்சியோடு கிளம்பியது மரங்கொத்தி. அரை மணி நேரப் பயணத்தில் ஓர் குகை அருகே வந்த நரி, ”இதுதான் அந்த வசதியான இருப்பிடம். உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. உன்னுடைய எச்சத்தை மேலிருந்து கழித்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள்” என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டது.

குகைக்குள் நுழைந்த மரங் கொத்திக்கு அதிர்ச்சி. எங்கும் இருள். ஓர் ஓரமாக ஒதுங்கிக்கொண்டது. குகை சற்று வெதுவெதுப்பாக இருந்தது. ’அட, நரி நமக்கு நல்ல இடத்தைத்தான் காண்பித்திருக்கிறது, நன்றி சொல்லணும்’ என்று  நினைத்துக்கொண்டது.

திடீரென்று ஏதோ சத்தம். மரங்கொத்திக்கு வயிறு கலங்கியது. சட்டென்று எச்சம் இட்டுவிட்டது. அவ்வளவுதான், “யாரது? எவ்வளவு தைரியம்?” என்ற குரல் கேட்டது.

’ஐயோ… எங்கு எச்சம் கழித்தா லும் பிரச்சினையாக இருக்கிறேதே’ என்று வருத்தத்துடன் கண்களை மூடிக்கொண்டது மரங்கொத்தி.

அதிகாலை பறவைகளின் சத்தம் கேட்டுக் கண் விழித்தது மரங்கொத்தி. அங்கே கண்ட காட்சியால் மரங்கொத்தியின் உடல் நடுங்கியது. சிங்கராஜா கர்ஜனையோடு நடை போட, அருகே அதன் குட்டிகளும் மனைவியும் அமர்ந்திருந்தன.

’ஐயோ, நரி என்னை ஏமாற்றிவிட்டது. காகமும் புறாக்களும் சொன்னதை நான் கண்டுகொள்ளவில்லை.  இப்போது வசமாக மாட்டிக்கொண்டேனே’ என்று வருத்தப்பட்டது மரங்கொத்தி.

சற்று நேரத்தில் சிங்கராஜாவின் குடும்பம் வெளியே சென்றது. ’எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய குகை? மரத்தில் ஒரு கூடு போதும்’ என்று நினைத்துக்கொண்டு, வேகமாக வெளியே பறந்து சென்றது மரங்கொத்தி.

இன்றைய செய்தி துளிகள் : 

1) தேர்வு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு.

2) 2019-ம் ஆண்டு புத்தாண்டு... நாடு முழுவதும் வெகு விமரிசையாக மக்கள் கொண்டாடியனர் 

3)தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நேற்று முதல் அமல்: தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை

4)சிப் பொருத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகள் நேற்று முதல் செல்லாது : அமலுக்கு வந்தது ரிசர்வ் வங்கி உத்தரவு

5) 2019-ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20, ஒரு நாள் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டி20 அணிக்கு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கெளரும், ஒரு நாள் அணிக்கு நியூஸி.யின் சூஸி பேட்ஸ்சும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

Monday, December 31, 2018

TNPSC annual.planner

http://www.tnpsc.gov.in/annual-planner.html

தொலைநிலைப் படிப்புகளை எந்தெந்த பல்கலைக்கழகங்கள் வழங்க முடியும்? யுஜிசி அறிவிப்பு


2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற விவரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac. in/deb) வெளியிடப்பட்டுள்ளன. தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னர், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டுதலை யுஜிசி நடைமுறைப்படுத்தியது.

இதனால் குறிப்பிட்ட "நாக்' தரப் புள்ளிகளைப் பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி, 2018-2019-ஆம் கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள 5 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது. இதுபோன்று, 2019-2020 கல்வியாண்டில் நாடு முழுவதும் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற அறிவிப்பை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது.

இதில், கடந்த ஆண்டில் தகுதி பெற்றிருந்த அந்த 5 தமிழக பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2019-ஆம் ஆண்டிலும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றன. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம் 30 தொலைநிலைப் படிப்புகளையும், அண்ணா பல்கலைக்கழகம் 3 தொலைநிலைப் படிப்புகளையும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 73 படிப்புகளையும், தமிழ் பல்கலைக்கழகம் எம்.பி.ஏ., பி.எட். உள்ளிட்ட 16 படிப்புகளையும், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பி.காம்., பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஊடகவியல் மற்றும் தகவல்தொடர்பு, பிபிஏ, எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய 5 படிப்புகளையும் வழங்கத் தகுதி பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-இல் நடைபெறும் போட்டித் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், வரும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் எத்தனை போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன என்பது குறித்த பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இந்தப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான (2019) உத்தேச தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் நலன் கருதி பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார் செய்து கொள்ள வசதியாக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிரதான தேர்வுகளாகக் கருதப்படும் குரூப்-1 தேர்வுக்கான அறிவிக்கை ஜனவரியிலும், குரூப்- 2 தேர்வுக்கான அறிவிக்கை மே மாதத்திலும், லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் குரூப்- 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பு ஜூனிலும் வெளியிடப்பட உள்ளன. குறைந்த அளவிலான தேர்வர்கள் பங்கேற்கக் கூடிய தேர்வுகளின் அறிவிக்கைகள் வெளியிடப்படக் கூடிய மாதங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வுக்கான அட்டவணைப் பட்டியலை தேர்வாணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 2016-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 17 அறிவிக்கைகள் மூலம், அனைத்து 17 தேர்வுகளும் நடத்தப்பட்டு 6 ஆயிரத்து 383 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 8 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 22 அறிவிக்கைகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. 2018-ஆம் ஆண்டில் 23 பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிட உத்தேசிக்கப்பட்டு அதில் 15 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அத்துடன் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படாத 16 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மொத்தம் 15 பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், 16 பதவிகளுக்கான தேர்வுகள் வரும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படவுள்ளன. இவற்றின் மூலம் 4,365 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

புத்தாண்டில் 16 வகை தேர்வு; 4,365 இடங்களுக்கு நியமனம்


அரசு துறைகளில் 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில் 16 வகை தேர்வுகள் இந்த புதிய ஆண்டில் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின் சார்பில் வருடாந்திர தேர்வு அட்டவணையை, செயலர் நந்தகுமார் நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016ல் 17 தேர்வுகள் நடத்தப்பட்டு 6,383 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன; 2017ல் 15 ஆயிரத்து எட்டு காலியிடங்களுக்கு 22 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன; இன்னும் இரண்டு தேர்வுகள் நடத்த வேண்டியுள்ளது. அதேபோல் 2018ல் 15 தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த புதிய ஆண்டில் 4,365 காலியிடங்களை நிரப்ப 16 வகை போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

கால அட்டவணையில் குறிப்பிடும் காலங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, December 28, 2018

எல்.கே.ஜி., பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு


மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.

மாநில அளவில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தலா, 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். பல பள்ளிகளில், மாணவர்களே இல்லாத நிலையும் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித் தரத்தை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும், பள்ளிகளை இணைக்க, கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, 3,133 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில், தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் அடங்கும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை ஒன்றாக இணைத்து, ஒரே வளாகத்தில் செயல்பட, ஏற்பாடு செய்யப்பட உள்ளது.இந்த இணைப்பின் வாயிலாக, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் படிக்க முடியும். எனவே, எல்.கே.ஜி.,யில் மாணவர்கள் சேர்ந்தால், பிளஸ் 2 வரை, வேறு பள்ளிக்கு மாற வேண்டியதில்லை. இதற்கான முயற்சியாக, மாவட்ட அளவில், இதுபோன்ற மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. அவற்றின் செயல் திறன் அடிப்படையில், இணைப்பு நடவடிக்கை தொடரும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆரம்ப பள்ளிகளை இணைக்க அரசு முடிவு


அரசு ஆரம்ப பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கையை அனுப்பும் என்றும், அரசு ஆரம்ப பள்ளிகள் எதுவும் இனி தனித்து இயங்காது எனவும், மேலும் வரும் கல்வி ஆண்டில் அனைத்து ஆரம்ப பள்ளிகளும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, December 27, 2018

பிளஸ் 2 பொதுத்தேர்வு: முக்கிய பாடங்களுக்கு நேரம் குறைப்பு


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு கடந்த ஆண்டு முதல் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் பொதுத் தேர்வு மொத்த மதிப்பெண் 1,200-லிருந்து 600 ஆகக் குறைக்கப்பட்டது.

இதுதவிர மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்கள் முதல்தாள், இரண்டாம்தாள் என்ற முறைக்கு பதிலாக ஒரே தாளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளுக்கு தேர்வெழுதும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வின் போது மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கு தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.45 மணியளவில் முடிவடையும். புதிய அறிவிப்பின்படி இந்த பொதுத்தேர்வில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி


அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 1ல், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. 25 சதவீதம்தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடங்கள் முடிக்கப்பட்டு, பாடங்களின் திருப்புதல் நடந்து வருகிறது.

அரசு பள்ளிகளில், 25 சதவீத பாடங்கள் மட்டும் பாக்கி உள்ளன. புத்தாண்டு விடுமுறை முடிந்து, வரும், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, சிறப்பு பயிற்சி அளிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்திலும், சில பகுதிகளுக்கு தேர்வு வைத்து, அவற்றை உடனே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில், மாணவர்கள் கூடுதல் நேரம் படித்து, சிறப்பு பயிற்சி பெற முடியும்.

வார விடுமுறைஇந்த திட்டங்களை, தலைமை ஆசிரியர்கள், தாமாகவே முன்வந்து அமல்படுத்த வேண்டும். மேலும், வார விடுமுறை நாட்களிலும், காலை மற்றும் மாலை வேளைகளிலும் கூடுதல் வகுப்புகள் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய ஆலோசனை தரப்பட்டு உள்ளது. பொது தேர்வில், வெறும் தேர்ச்சி என்ற இலக்கை தாண்டி, அதிக மதிப்பெண் பெறவும் மாணவர்களை தயார் செய்ய, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Wednesday, December 26, 2018

பள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த கல்வி துறை முடிவு


பள்ளி மாணவர்களிடம், ஆதார் எண் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு, மாற்றப்பட உள்ளது. ஆதார் ஆணைய உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடம், ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன.மத்திய - மாநில அரசின் திட்டங்களில் முறைகேட்டை தடுக்க, ஆதார் எண்களை பெற்று, அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேலும், வங்கிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளும், ஆதார் எண்களை சேகரித்து வருகின்றன.இதனால், ஆதார் எண்கள் பல இடங்களில் கசிந்து, தனிநபர் பாதுகாப்புக்கு சிக்கல்ஏற்படுகிறது.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும், ஆதார் எண்ணை சேகரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.அதனால், மத்திய அரசின், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, மாணவர்களின் ஆதார் எண் கட்டாயமில்லை என, அறிவிக்கப்பட்டது.ஆனால், பள்ளி களில் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு பணிகள் நடக்கும் நிலையில், ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இதுதொடர்பாக, ஆதார் ஆணையத்துக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர்.புகாரை விசாரித்த ஆதார் ஆணையம், பள்ளிகள், கல்லுாரிகள், மாணவர்களிடம் ஆதார் எண்ணை கேட்டு, கட்டாயப்படுத்த கூடாது என, உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக பள்ளி களிலும், ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு மாற்றப்பட உள்ளது. தமிழக பள்ளி கல்வியில், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் சார்பில், ஆதார் எண் பெறப்படுகிறது.'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச நல திட்டங்கள் அமல்படுத்துவதால், அதற்கு மட்டும் ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கலாம்.

'மற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு, விருப்பப்பட்டால் மட்டுமே, ஆதார் எண்ணை வழங்கலாம்' என, திருத்தம் செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, December 25, 2018

சத்துணவு மையம் மூடும் திட்டமில்லை


25 குழந்தைகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடுமாறு சமூக நலத்துறையிடம் இருந்து அரசாணை வெளியானது. மாணவர்களுக்கு அருகில் உள்ள சத்துணவு மையங்களில் இருந்து உணவு சமைத்து தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சமூக நலத்துறை, சத்துணவு மையங்களில் உள்ளி காலிப் பணியிடங்களை சரி செய்யவே இந்த ஆணை பிறபிக்கப்பட்டுள்ளதாகவும், சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் தமிழக அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Sunday, December 23, 2018

ஆசிரியர் விபரங்களை டிஜிட்டலில் பதிய உத்தரவு


ஆசிரியர்களின் பணி விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த உதவிகளை பெற, பல பள்ளிகளில், போலியாக கூடுதல் மாணவர் களின் எண்ணிக்கையை காட்டுகின்றனர்.அதேபோல, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடங்களை தக்க வைப்பதற்காக, மாணவர்கள் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரித்து காட்டுகின்றனர்.இதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கும், அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.இந்த பிரச்னைகளை தீர்க்க, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், மாணவர்களின் பெயர், பெற்றோர்கள் பெயர், முகவரி, ரத்தப்பிரிவு, மொபைல் போன் எண், படிக்கும் வகுப்பு மற்றும் பள்ளியின் விபரங்கள் பதிவு செய்யப்படும்.மாணவர்கள், ஆண்டுதோறும் வகுப்புகள் மற்றும் பள்ளிகள் மாறும் போதும், விபரங்கள் புதுப்பிக்கப்படும். இதனால், போலி மாணவர்கள்எண்ணிக்கை குறைந்துஉள்ளது.இந்நிலையில், ஆசிரியர் களின் விபரங்களையும், டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுஉள்ளார்.

வருங்காலங்களில், ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் விபரம் போன்றவற்றை, துல்லியமாக தெரிந்து கொள்ள, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்.மேலும், ஆசிரியர்கள் இடம்மாறும் போது, புதிய பணியிடத்தை குறிப்பிட்டு, டிஜிட்டல் விபரங்களை புதுப்பிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் அனைத்தையும், பள்ளி கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற, 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்ய, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.இந்த விபரங்கள் அடிப்படையில், ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆன்லைனில் குழப்பமின்றி நடத்த முடியும் என்றும் கூறப்பட்டு உள்ளது

Friday, December 21, 2018

கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர் மறு நியமனத்துக்கு கட்டுப்பாடுகள்


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கான் கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை:

மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஆசிரியரின்றி மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அந்த ஆசிரியரின் பண்பு, நடத்தை திருப்தியாக இருந்தாலும், தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். உபரி ஆசிரியர் பணியிடங்கள்:

உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தால் பணி நிறைவு செய்தவர்களை மறு நியமனம் செய்யக்கூடாது. மாணவர்களின் நலன் கருதி உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்களை மறுநிர்ணயம் செய்யும் போது, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மறுநியமனம் வழங்கப்படும். உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பெற்ற ஊதியத்தையே மறு நியமன ஊதியமாக வழங்க வேண்டும். உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூட்டு மேலாண்மையில் இயங்கினால் அந்த நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்யவேண்டும்.

இந்த உபரி பணியிடங்களை மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியர் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ பணியில் சேர வேண்டும். வேறு பள்ளிக்குச் செல்ல மறுத்தால்... அரசு உதவி பெறும் பள்ளிகளில் மானியம் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய அந்தப் பள்ளி நிர்வாகம் மறுத்தால் அந்தப் பள்ளியின் மானியத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடத்துடன் பணிநிரவல் செய்து, தேவையுள்ள பள்ளிக்கு மாறுதல் அளித்து, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டபின், அந்த ஆசிரியர் பணி நிரவல் செய்த பள்ளிக்கு மாறுதலில் செல்ல மறுத்தால், அவ்வாறு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து உபரியாகப் பணிபுரிந்த நாள்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட வேண்டும்.

🔥🔥 *Flash News SUPER ANNUATION GO 261 .Date 20.12.2018*