இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 29, 2018

Morning prayer 30-11-18

30-11-18

திருக்குறள் : 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

உரை:

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

பழமொழி:

Do what you can with what you have where you are

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

பொன்மொழி:

தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஆங்கில எண் 3-க்கு இணையான தமிழ் எண்?

2.ஆங்கில எண் 4-க்கு இணையான தமிழ் எண்?
சு

நீதிக்கதை :

பொய் சொல்லாதே

அது ஒரு அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.

முத்து தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் அவன் மாலையில் வீடு திரும்புவான்.

ஒரு நாள் முத்து தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். முத்துவிற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு ஒரு விளையாட்டு பையன், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான். வேறு வழியில்லாமல் அவனிடமே முத்து ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து முத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.

அடுத்த நாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான்.

காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.

தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென "புலி வருது, புலி வருது", என்று கூச்சலிட்டான்.

ராமுவின் அலறலை கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் "புலி எங்கே" என்று ராமுவிடம் கேட்டனர். அனால் ராமுவோ, "புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன்", என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டி விட்டு சென்றனர். ராமுவிற்கோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.

அடுத்த நாளும் ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்துகொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.

மூன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே "புலி வருது, புலி வருது" என்று கூச்சலிட்டான்.

ராமு அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.

பாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றது.

நான் உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான்.

நீதி: ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என  நம்ப மாட்டார்கள்.

இன்றைய செய்தி துளிகள் :

1.புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

2.தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த NMMS தேர்வு டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3.TNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

4.அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

5.செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் கருணாவை வென்று மீண்டும் உலக சாம்பியன் ஆகியுள்ளார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென்

Wednesday, November 28, 2018

பள்ளிகளில் 'சர்வே'க்கு தடை


பள்ளி கல்வித் துறை அனுமதியின்றி, தனியார் நிறுவனங்கள், பள்ளிகளில் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் கல்வி திறன், குடும்ப பின்னணி, கல்வி கட்டணம், மாணவர்களின் தனிப்பட்ட விருப்பம், உள்கட்டமைப்பு வசதி குறித்து, பல தனியார் அமைப்புகள், பள்ளிகளில், 'சர்வே' எடுக்கின்றன.அந்த ஆய்வுகளை, தவறாக பயன்படுத்துவதாகவும், புகார்கள் வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக,சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுமதியின்றி, எந்த அமைப்பும், ஆய்வு மேற்கொள்ள கூடாது என, கூறப்பட்டுள்ளது.

Monday, November 26, 2018

1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது


பள்ளிகளில், 1 மற்றும் 2ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வீட்டு பாடங்கள் தரக்கூடாது' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:

பள்ளி மாணவர்கள் எடுத்து வரும், நோட்டு, புத்தகங்கள் உட்பட, 'பேக்'குகளின் எடை விஷயத்தில், அரசின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும். கூடுதல் புத்தகங்கள், பொருட்களை எடுத்து வரும்படி, மாணவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. 1 - 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க கூடாது.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எடுத்து வரும், பாட புத்தகங்கள் அடங்கிய, 'பேக்'கின் எடை, 1.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது; 3 - 5ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 2 அல்லது 3 கிலோ இருக்கலாம்;

மேலும், 6 - 7ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 4 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 8 - 9ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 4.5 கிலோவுக்கு மிகாமலும், 10ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மொழி, கணிதம் தவிர வேறு பாடங்களை பரிந்துரைக்கக் கூடாது. மேலும், 3 - 4ம் வகுப்பு மாணவர்களுக்கு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைக்கும், மொழிப்பாடம், கணிதம், சுற்றுச்சூழலியல் பாடம் சொல்லி தரப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கஜா புயல் ஒரு நாள் ஊதியம் வழங்குவது குறித்து


Sunday, November 25, 2018

*மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டி நடைபெறும் அரசாணை எரிப்பு குறித்து-அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது அரசாணை எரிக்கும் போராட்டம்*

பி.டி.ஏ., கூட்டம் கட்டாயம் ரூ.2.24 கோடி நிதி ஒதுக்கீடு


பள்ளிகளில், மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த உத்தர விட்டுள்ளதோடு, செலவின நிதியாக, 2.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் மூலம், மத்திய அரசின் நிதி, பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பராமரிப்பு நிதி, குறைந்தபட்சம், 25 ஆயிரத்தில் இருந்து, அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இத்தொகையை, பெற்றோர் - ஆசிரியர் கழகத்துடன் சேர்ந்து, பள்ளிக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், பல பள்ளிகள் இதை பின்பற்றவில்லை. எனவே, மாநில திட்ட இயக்குனர், சுடலைகண்ணன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை மூலம், உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், ஏப்ரல் மாதம் வரை, மாதந்தோறும் ஒரு முறை பெற்றோர் - ஆசிரியர் கூட்டம், கட்டாயம் நடத்த வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழகத்தில் உள்ள, 37 ஆயிரத்து, 358 பள்ளிகளுக்கு, 2.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. இத்தொகையில், ஒரு கூட்டத்துக்கு, சிற்றுண்டி செலவாக, தலா ஒரு பள்ளிக்கு, 100 ரூபாய் வீதம் அளிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, November 22, 2018

ஜனவரியில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நவ.26 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நவ.26-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கு 1.1.2019 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் நவ.26-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் டிச.5-ஆம் தேதி புதன்கிழமை வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre) நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.

முதல் முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவித்துள்ளார்.

Wednesday, November 21, 2018

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தல்: சிறப்பு வகுப்பறைகள் அமைக்க திட்டம்


அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வருகிறது.

அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, சேர்க்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கில வழி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பறையில் தமிழ்வழி மாணவர்களுடன் அமர வைத்து வகுப்புகள் கையாளப்படுகின்றன. ஆனால், பிளஸ் 2 வகுப்புகளில், இந்த முறையை பின்பற்றுவதில் சிக்கல் உள்ளது. இதனால், சில பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழி கற்பித்தல் தொடங்கப் படவில்லை. மாணவர் சேர்க்கை இருந்தும் வகுப்பறை இல்லாததால் ஆங்கில வழி பிரிவுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் நீடித்து வருகிறது.

இது தொடர்பாக சென்னையில் அண்மையில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி சேர்க்கை குறித்த விவரங்கள் மாவட்ட வாரியாக, சேகரிக்கப்பட்டு வருகின்றன.

morning prayer 22-11-18

22-11-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:87

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

பழமொழி :

Do not lock the stable door when the horse is gone

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யதே

பொன்மொழி:

சிந்திக்க தெரியாதவர்களுக்கு
கேளிக்கைதான்
சந்தோஷத்தை
அளிக்கக் கூடிய விஷயம்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது?
நீலகிரி

2.புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
நாக்பூர்

நீதிக்கதை

ஏன் சிரிக்கிறாய் ?


ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு கிடக்கும் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும்.

பெண் கழுதை எந்த வேலையும் பார்ப்பதில்லை. பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி எழும். மிகவும் மகிழ்ச்சியாக, வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது.

ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்து சேர்ந்தது. களைப்பின் மிகுதியால் வந்தவுடனே படுத்தும் விட்டது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை பரிதாபப்பட்டது.

“”உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது!” என கிண்டல் செய்தது.

“”என்ன செய்வது என் நிலை அப்படி, உழைத்தால் தான் முதலாளி விடுவார்!” என்றது ஆண் கழுதை.

இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது.

“”ஏன் சிரிக்கிறாய்?”

“”சிரிக்காமல் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? நான் மட்டும் கஷ்டப்பட்டு வேலையா செய்கிறேன்!”

ஆண் கழுதை அதை ஆச்சரியத்துடன் பார்த்தது.

“”ஆமாம்… நானும் இதைப் பற்றி உன்னிடம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். அதை முதலில் கூறு!”

“”பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் அப்படிப் போய் விட மாட்டேன்!”

“”பிறகு என்ன செய்வாய்?”

“”அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பொறுத்துக் கொண்டு படுத்துக் கொள்வேன். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்!” என்றது பெண் கழுதை.

“”இவ்வளவுதானா!” ஆச்சரியமாகக் கேட்டது ஆண் கழுதை.

“”ஆமாம்… நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான். எல்லாம் நம் கையில்தான் உள்ளது!” என அறிவுரை வழங்கியது.

காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். இன்று ஆண் கழுதை படுத்துக் கொண்டு சண்டித்தனம் செய்தது.

பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழுவதாய்த் தெரியவில்லை. பண்ணையாள் பல விதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டு, முதலாளியிடம் சென்றான்.

“”அய்யா! இந்த ஆண் கழுதை என்றுமில்லாமல் சண்டித்தனம் செய்கிறது!” என்றான்.

“”சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ!” என்றார்.

பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லைக் கொண்டு வந்து போட்டான்.

பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக் கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டதை எண்ணி மிகவும் வருந்தியது பெண் கழுதை.

இன்றைய செய்தி துளிகள்:

1.டெல்டாவில் கஜா கோரத்தாண்டவம் உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி 6வது நாளாக மக்கள் கடும் அவதி

2.கடையநல்லூரைச் சேர்ந்த துவக்கப் பள்ளி மாணவர்கள் தங்கள் பாக்கெட் மணியை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

3.டெல்டா மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

4. 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்

5.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி

Saturday, November 17, 2018

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2018 -ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்ய கால அட்டவணை வழங்கி இயக்குநர் உத்தரவு



நவ.25-க்குள் நீட் பதிவை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பதிவுகளை நவ.25-ஆம் தேதிக்குள் முடிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர முடியும்.

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 412 மையங்களில் நேரடி வகுப்பு, விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் பதிவை கடந்த நவ. 1-ஆம் தேதி தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. தொடங்கியது.

இதில், விண்ணப்பிப்பது தொடர்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என பள்ளிக் கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் விண்ணப்பத்தை, தலைமை ஆசிரியர்களே பதிவு செய்து தர பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவை பின்பற்றி நவ.25-ஆம் தேதிக்குள் நீட் பதிவு பணிகளை முடித்து மாணவர்கள் பட்டியலை ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

Friday, November 16, 2018

துணைத்தேர்வுகள் ரத்து: தனித்தேர்வர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல்


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தனித் தேர்வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

பள்ளிக் கல்வித்துறை அண்மையில் வெளியிட்ட அரசாணையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வெழுதி தோல்வியுறும் மாணவர்களுக்கு 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் மார்ச்-ஏப்ரல் பொதுத் தேர்வு, ஜூன்- ஜூலை பருவ சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தவும், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு (தனித் தேர்வர்கள்) செப்டம்பர்- அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனவே 2019-ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் அந்த மூன்று வகுப்புகளுக்கும் துணைத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச்-ஏப்ரல் பருவத்தில் நடத்தப்படும் பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவும், தனித்தேர்வராகவும் எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் ஜூன், ஜூலை சிறப்பு உடனடித் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அரசாணையின்படி செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வு ரத்து செய்யப்படுவதால் வரும் 2019 ஜூன், ஜூலை முதல் மார்ச் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும், ஜூன், ஜூலை பருவத்தில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 உடனடி சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வெழுதலாம் என கூறியுள்ளார்.

Special leave for gov servants


Monday, November 12, 2018

Morning prayer 13-11-18

13-11-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

பழமொழி :

Do i Rome as Romans do

ஊரோடு ஒத்து வாழ்

பொன்மொழி:

பிறரின் வீழ்ச்சியிலிருந்து,
நீ தவிர்க்க வேண்டிய
பாவங்கள் என்ன என்பதைக்
கற்றுக் கொள்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.பண்பாடுகளின் தாய்நகரம்?
பாரிஸ்

2.தண்ணீர் தேசம், மிதவை நகரம்?
வெனிஸ்

நீதிக்கதை

நான் கத்தவே இல்லை !

கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.

எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.

“”எப்போது?” என்று கேட்டார் விமானி.

“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.

இன்றைய செய்தி துளிகள்:

1.நவம்பர் 15ம் தேதி கடலூர் - வேதாரண்யம் இடையே பலத்த காற்றுடன் கஜா புயல் கரையை கடக்கும் எனத் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

2.LKG, UKG பாடப்பிரிவுகளுக்கு சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கொட்டையன்

3.ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு : வரும்15ம் தேதி ஆலோசனை

4.பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புகளை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது? உயர் நீதிமன்றம்

5.ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர்: லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா