இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 10, 2018

11-10-18 morning prayer

*School Morning Prayer Activities - 11.10.2018*
*🔷பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*

*🔷திருக்குறள்:63*

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

உரை:
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

பழமொழி :

Cast no pearls before swine

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

*🔷பொன்மொழி:*

வாழ்க்கை என்பது போர்க்களம்; இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை; ஏனெனில் இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

- காண்டேகர்

*🔷இரண்டொழுக்க பண்பாடு :*

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

*🔷பொது அறிவு :*

1.மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது?
துபாய்

2.தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?
நாமக்கல்

*🔷நீதிக்கதை:*

ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை

ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.
மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.
அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.

கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.
பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.
அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.
அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/
ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!
படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.
அத்துடனா?
பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.

ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.
“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.

குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது.

*🔷இன்றைய செய்தி துளிகள்:*

1.ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் தீபாவளி போனஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2.உயரதிகாரிகளுக்கு எதிரான மொட்டை கடிதத்தின் மேல் நடவடிக்கை தேவையில்லை : மத்திய அரசு உத்தரவு

3.தமிழும், தமிழ் நாடும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

4.தாமிரவருணியில் இன்று தொடங்குகிறது மகா புஷ்கர விழா!

5.யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: பளுதூக்குதலில் லால்ரின்னுங்கா சாதனை

செயல்வழி கற்றல் முறை ( ABL ) மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி முறை ( SALM ) அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை தமிழக அரசு வெளியீடு - G.O 200 , Dated : 26.09.2018

Tuesday, October 09, 2018

டெட்' தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி வினாத்தாள்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது.

உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது.பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, நமது நாளிதழில், இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி வெளியானதை தொடர்ந்து, தேர்வு நடத்துவதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், டெட் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வை, தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:ஏற்கனவே, தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்து காணப்படுகிறது. பழைய பாடத்திட்டப்படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால், தரம் இன்னும் சரியும். எனவே, புதிய பாடத்திட்டத்தின் படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால் தான், பணிக்கு வருவோர், சிறப்பாக பாடம் நடத்த முடியும்.

இவ்வாறு கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.பல தரப்பினரும் கோரிக்கை விடுப்பதால், டெட் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலோசனைஇது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி ஆகியோரிடம், டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்தி மற்றும் உறுப்பினர் செயலர், உமா ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பள்ளி மேலாண் குழுவில் எம்.எல்.ஏ.,க்களுக்கு இடம்


பள்ளிகளின் மேலாண்மை குழுவில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை சேர்க்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்த, மத்திய அரசின் சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககம் போன்றவை, நடைமுறையில் உள்ளன.

நடப்பு கல்வி ஆண்டில், இரு திட்டங்களும் இணைக்கப்பட்டு, 'சமக்ரா சிக் ஷா' என்ற, ஒருங்கிணைந்த கல்வி திட்டம், அமலுக்கு வந்துள்ளது. இதில், பள்ளிகளில், மேலாண்மை குழு அமைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளிக்கும், தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி, பெற்றோர் பிரதிநிதிகள், மாணவர் பிரதிநிதிகள், உள்ளாட்சி உறுப்பினர், கல்வி அதிகாரிகள், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள், அதில் இடம்பெற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

இவர்களுடன், அந்தந்த பள்ளிகள் உள்ள தொகுதியின், மூத்த, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., ஆகியோரையும், உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு, அடிக்கடி கூடி விவாதித்து, பள்ளியின் முன்னேற்றம் குறித்து, முடிவு செய்ய வேண்டும். அதன் அறிக்கையை, நிதி செலவு தணிக்கை அறிக்கையுடன் சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.இதை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளிகளின் மேலாண்மை குழுக்களில், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களை உறுப்பினர்களாக சேர்த்து, ஆலோசனை கூட்டம் நடத்த, சமக்ரா சிக் ஷா திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

10-10-18 Morning prayer

10-10-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

பழமொழி :

Carry not coal to New castle

கொல்லன் தெருவில் ஊசி விற்காதே

பொன்மொழி:

வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்; வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும்.

- கீட்ஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது?
இந்தியா

2.கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?
பெல்ஜியம்

நீதிக்கதை

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்

அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது. மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது. சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன. அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.
இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?” என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. “ஏன் இந்த முடிவு?” என்றது சிங்கம். தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது. இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும். இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம். அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது. ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது. அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது. என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது. அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது. பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது. முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.

இன்றைய செய்தி துளிகள்:

1.வங்கக்கடலில் உருவான புயலுக்கு பெயர் 'டிட்லி' - வானிலை மையம் தகவல்!

2.11.57 லட்சம் மாணவர்களுக்கு கையடக்கக் கணினி வழங்க திட்டம்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

3.2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரப்படுகிறதா ?:கண்காணிக்க சிறப்புக்குழு

4.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் முன்கூட்டியே தேர்வு நடத்துதல் உள்ளிட்ட மாற்றங்கள், இந்த ஆண்டு அமலுக்கு வருகின்றன.

5.இளையோர் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா

Monday, October 08, 2018

9-10-18 MORNING PRAYER

9-10-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:61

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

உரை:
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

பழமொழி :

Calm before storm

புயலுக்கு முன் அமைதி

பொன்மொழி:

முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை, அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமம்.

- கோல்டன்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?
பஞ்சாப்

2.வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?
ஒட்டப்பிடாரம்

நீதிக்கதை

உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.
கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.
மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.
கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.
மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.
நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்

இன்றைய செய்தி துளிகள்:

1.பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் பட்டியல் இன்று வெளியீடு : தேர்வு இயக்குநர் தகவல்

2.பருவநிலை மாறுபாட்டால் இந்தியாவை கொடிய வெப்பம் தாக்கும் என எச்சரிக்கை

3.சென்னையில் 4,000 பேருந்து ஊழியர்களுக்கு அபராதம்: பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதால் நடவடிக்கை

4.ரயில்களில் குற்றங்களை தடுக்க புதிதாக 200 போலீசார் நியமனம்: கோவையில் ஏடிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

5.யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி தொடர் 6வது முறையாக இந்தியா சாம்பியன்: பைனலில் இலங்கையை வீழ்த்தியது

தமிழக அரசால் அனுமதிக்கப்படாத பாடநூல்கள்,குறிப்பேடுகள் எதனையும் பயன்படுத்தக்கூடாது--இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் ரத்து செய்தல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்!!



Sunday, October 07, 2018

8-10-18 Morning prayer

8-10-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

பழமொழி :

Call a spade a spade

உள்ளதை உள்ளவாறு சொல்

பொன்மொழி:

நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி.

- ஷேக்ஸ்பியர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1.உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?
ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்

2.ரஷ்யாவின் தலைநகரம்?
மாஸ்கோ

நீதிக்கதை

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்


ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.
கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.
கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..
அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.
அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

இன்றைய செய்தி துளிகள்:

1.தேசிய திறனாய்வுத் தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்!

2.சுனாமி தாக்கியதில் 5000 பேர் மாயம்...... காணாமல் போனவர்களை தேடும் பணியை நிறுத்த இந்தோனேசிய அரசு முடிவு

3.தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

4.பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது: அதிகாரிகள் தகவல்

5.வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி