இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, June 14, 2018

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


2018-2019-ம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர் படிப்பு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் 18-ந்தேதி காலை 10 மணிக்கு www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அன்று தொடங்கி 30-ந் தேதி மாலை 5 மணிவரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாணவர்கள் தங்களுடைய விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்துவதற்கு பற்று அட்டை (டெபிட் கார்டு ), கடன் அட்டை (கிரெடிட்கார்டு ) மற்றும் இணைய வங்கி சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.250 ஆகும்.

மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளடு செய்து, அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபின் சேமிப்பு (சேவ்) பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும். இத்தளத்தில் பணம் செலுத்திய பிறகுதான் விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அவர் அளிக்கும் விவரங்கள் கலந்தாய்வின் போது சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள் பற்றிய விளக்கங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, சிறப்பு இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பங்கள் பதிவேற்ற வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை மேற்கூறிய இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு க.அறிவொளி தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர மாணவர்கள் கூட்டம் அலை மோதும். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு அதிகமாக இருந்தது. பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கூட மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே இருந்தது. இதனால் கடந்த ஆண்டு 2 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் மாணவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.

*15.06.2018 விடுமுறை ரத்து-அரசாணை.*

ரம்ஜான் சனிக்கிழமை என தமிழக ஹாஜி.அறிவிப்பு

சிறப்புத்துணைத்தேர்வு தனித்தேர்வர்களுக்கான செய்தி


Wednesday, June 13, 2018

ஜாக்டோ ஜியோ' போராட்டம் வாபஸ்


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின், உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர், மூன்று நாட்களாக, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

'போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்; வேலைக்கு திரும்ப வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தபோதும், அரசு தரப்பில், பேச்சு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, ஜாக்டோ - ஜியோ, நேற்று இரவு அறிவித்தது.இது குறித்து, ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''அரசின் வேண்டுகோள் அடிப்படையில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ''கோரிக்கையை நிறைவேற்றுவதில், தாமதம் ஏற்பட்டால், மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,'' என்றார்.

Tuesday, June 12, 2018

உயர் தொடக்க நிலை ஆசிரியர்க்கு பயிற்சி

பணிநிரவல் குறித்த செயல்முறைகள்

https://drive.google.com/file/d/1WYmyabQs5dbw3FKJw1GZiLwvZ6hXctk7/view?usp=drivesdk

தேர்வு தேதி அறிவிப்பு

பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு 2019ம் ஆண்டு மார்ச் 1ந் தேதி தொடங்கும்

11ம் வகுப்பு பொதுத் தேர்வு 2019 ஆண்டு மார்ச் 6ந் தேதி தொடங்கும்

பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

2019 மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

மாணவர்கள் தேர்வுக்கு மன அழுத்தம் இன்றி தயாராக தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு

தேர்வு முடிவுகளும் வழக்கத்தை விட 10 நாட்கள் முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன

19.04.2019 அன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு

8.5.2019 அன்று பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு

29.04.2019 அன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு

Monday, June 11, 2018

நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்: கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல்


வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார். தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர் தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.

7 லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் தொகையையும் வழங்கி வருகிறது. பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் (டிடிஓ), நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம், எண்ம ஒப்பம் மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, தமிழகத்தின் நிதிநிலை விவரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைக்கும். இதன் மூலம் தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். 2018 அக்டோபர் மாதத்தோடு, சிடி மூலம் சம்பளப் பட்டியல் வாங்கும் நடைமுறை முடிவுக்கு வரும்.

கணினி மயமாக்கும் திட்டம் 2018 நவம்பர் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே முதன் முறையாக கருவூலத்துறை முழுமையாக கணினி மயமாக்கப்படுவது தமிழகத்தில்தான் என்றார் அவர்.

புதிய பாடநூல் பயிற்சி மற்றும் கருத்தாளர்கள் விபரம்


https://drive.google.com/file/d/1OfGq0RXQ8ytzhdyk75Ik-33ZjiN0K78O/view?usp=drivesdk

மொழிப்பாடத்தேர்வுகளான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஓன்றாக எழுதுவதற்கான செயல்முறை

Click below

https://drive.google.com/file/d/1aPKi5yvY80ILL-5bDZtdAVqLWA730EWE/view?usp=drivesdk

Sunday, June 10, 2018

பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு


கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தற்போது பயோ-மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெற்றோர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

இருப்பினும் இந்த பயோ-மெட்ரிக் முறையைப் பயன்படுத்துவதால் பள்ளிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகள் சுமார் 34,180, நடுநிலைப் பள்ளிகள் சுமார் 9938, உயர்நிலைப் பள்ளிகள் சுமார் 4574, மேல்நிலைப் பள்ளிகள் சுமார் 5,030 உள்ளன. அவற்றில் சில லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஊதியம், அகவிலைப்படி உயர்வு குறித்த விவரங்கள், விடுப்பு குறித்த பதிவேடுகள், வருடாந்திர ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை கையாள்வதற்கென்று ஆசிரியரல்லாத ஊழியர்கள் எவரும் கிடையாது. இவற்றை எல்லாம் அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் யாராவது ஒருவரோ அல்லது சிலரோ இணைந்துதான் இப்பணிகளை செய்து வருகின்றனர்.

கல்வித்துறை அலுவலகம் செல்வது, கருவூலத்துக்கு செல்வது என்பன உள்ளிட்ட பணிகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளதால், பல நாள்கள் அத்தகைய ஆசிரியர்கள் பள்ளிக்கு முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட நேரமோ செல்ல முடியாத நிலை ஏற்படுவதுண்டு. சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பலர் இருப்பதால் பிரச்னையில்லை. அவர்கள் அனைத்து விதமான அலுவலகப் பணிகளையும் கையாண்டு கொள்வர். ஆனால், பல அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர், எழுத்தர், உதவியாளர் போன்றோர் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, பள்ளி திறப்பது முதல் அடைப்பது வரையும், ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை பெறுவதையும், அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள்தான் செய்ய வேண்டிய நிலையுள்ளது.

மேலும் பணிப் பதிவேடு எழுதுவது, அதை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைப்பு செய்வது உள்ளிட்ட பணிகளையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. மாதத்தில் பல நாள்கள் அலுவலகப் பணிக்காக அவர்கள் வெளியே சென்றுவிடுவதால், குறிப்பிட்ட பாட வேளைகளில் ஆசிரியர் இன்றி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு அதிரடியாக பயோ-மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பயோ-மெட்ரிக் முறையில் தங்கள் வருகையையும், வெளியேறும் நேரத்தையும் பதிவிட்டு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அலுவலக வேலையாக வெளியே செல்லும் ஆசிரியர் பயோ-மெட்ரிக் முறையில் மாலை வெளியேறும் நேரத்தைப் பதிவிட பள்ளிக்குத் திரும்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக ஊதிய பில்கள் உள்ளிட்ட இதரப் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் பள்ளியைவிட்டுச் செல்ல முன்வராத நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியரல்லாத பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா? பல்வேறு விதமான பணிகளுக்காக, ஆசிரியரல்லாத பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமிப்பதில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என கருதினால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு ஓர் ஆசிரியரல்லாத பணியாளரை நியமிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி நியமிக்கப்பட்டால், ஆசிரியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்காது என்கின்றனர் கல்வியாளர்கள்.

'ஜாக்டோ - ஜியோ' சார்பில் இன்று முதல் உண்ணாவிரதம்


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், இன்று முதல், காலவரையற்ற போராட்டம் நடத்தப்படுகிறது.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டா - ஜியோ அமைப்பினர், தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக, ஜாக்டோ - ஜியோ சார்பில், காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் இன்று முதல், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது

Saturday, June 09, 2018

புதிய பிளஸ் 1 புத்தகம்: 'டிஜிட்டல்' வடிவில் வெளியானது


புதிய பாடத்திட்டத்தில், கண்கவர் படங்கள், தகவல்களுடன், பிளஸ் 1 பாட புத்தகம், ஆன்லைனில், டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில், 13 ஆண்டுகளாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருந்தது. இதனால், தமிழக மாணவர்கள், பிளஸ் 2 முடித்ததும், போட்டி தேர்வுகளில், நவீன தொழில்நுட்ப கேள்வி களை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். எனவே, பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இதன்படி, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில், ஒன்று, ஆறு, ஒன்பது வகுப்புகளுக்கான, புதிய பாடத்திட்ட புத்தகங்கள், அனைத்து பள்ளி களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. பிளஸ் 1 புத்தகத்தில் மட்டும், பிழைகள் இருந்த தால், அவற்றை சரிசெய்யும் பணி நடந்து வந்தது.இந்நிலையில், பிழைகள் சரிசெய்யப்பட்ட, புதிய பாடத்திட்ட புத்தகம், தமிழக பாடநுால் கழகத்தின், http://www.textbooksonline.tn.nic.in என்ற, இணையதளத்தில், டிஜிட்டல் வடிவில்வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில், ஒரு வாரத்திற்கு முன், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. சில அரசு பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கியுள்ளதால், மாணவர்களின் வசதிக்காக, பிளஸ் 1 புத்தகத்தை, ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை, ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய புத்தகத்தில், தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள், தனித்தனி புகைப்படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.கண்ணை கவரும் வண்ணங்களில் படங்கள், பார்கோடு மற்றும் இணையதள இணைப்புகள் புத்தகங்களில் அச்சிடப்பட்டு உள்ளன. மேலும், போட்டி தேர்வு வினாக்கள், உயர்கல்வி படிப்புகள், வேலைவாய்ப்பு தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

பிளஸ் 1 புத்தகம், வரும், 11ம் தேதி முதல், தமிழ்நாடு பாடநுால் கழக விற்பனை மையங்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது. தனியார் பள்ளிகள் மொத்தமாக, 'ஆர்டர்' செய்து, பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Thursday, June 07, 2018

ஜூன் 11 முதல் பிளஸ் 1 பாடநூல் விற்பனை


புதிய பாடத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட பிளஸ் 1 பாடநூல்கள் வரும் 11-ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகவும் தனியார் பள்ளிகளுக்கு பாடநூல் நிறுவனம் மூலம் நேரடியாகவும், அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்கள் மூலமாகவும் பாப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்காக சென்னை டிபிஐ வளாகத்தில் பாடநூல் கழக கவுன்ட்டரிலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு கவுன்ட்டரிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பிளஸ் 1 புத்தகங்கள் ஜூன் 2-ஆவது வாரம் விற்பனைக்கு கிடைக்கும் என பாடநூல் நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும் டிபிஐ வளாக பாடநூல் கவுன்ட்டரில் தினமும் ஏராளமான பெற்றோர் பிளஸ் 1 புத்தகங்களை வாங்க வந்து செல்கிறார்கள்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் ஜூன் 11 முதல் விற்பனைக்கு கிடைக்கும். பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்களிலும் வாங்கலாம். மாணவ-மாணவிகளும் பாடப் புத்தகங்களை ஆன்லைன் (www.textbookcorp.in) மூலம் பதிவுசெய்தும் இந்திய அஞ்சல்துறை பார்சல் சேவை, தனியார் கூரியர் சேவை ஆகியவற்றின் மூலமாகவும் பெறலாம்'' என்றார்.

எம்.பி.ஏ., எம்சிஏ சேர்க்கை: ஜூன் 13 முதல் விண்ணப்பப் பதிவு


எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு www.gct.ac.in, www.tn-mbamca.com ஆகிய இணையதளங்கள் மூலம் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவைச் செய்ய வேண்டும். ஜூலை 12 கடைசி நாளாகும்.

ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர், அதைப் பிரதி எடுத்து உரிய ஆவணங்களை இணைத்து 'செயலர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்சிஏ சேர்க்கை, அரசு பொறியியல் கல்லூரி, கோவை - 641 013' என்ற முகவரிக்கு ஜூலை 16-ஆம் தேதி வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.gct.ac.in, www.tn-mbamca.com இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம்


தமிழக பள்ளி கல்வித்துறையில், 30 ஆண்டுகளுக்கு முன், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் துவங்கப்பட்டது. மாவட்ட வாரியாக, மெட்ரிக் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது, பள்ளிக் கல்வித் துறையில், நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, மெட்ரிக் பள்ளிகளை, மெட்ரிக் இயக்குனரகத்தில் இருந்து மாற்ற, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.

இதற்காக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆளுடைய பிள்ளை தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இந்த குழு அறிக்கையில், அனைத்து வகை பள்ளிகளையும் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கலைக்கப்பட்டு, 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' புதிதாக உருவாக்கப்பட உள்ளது. இதன் கீழ், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., என, அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளும், இணைக்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது

Wednesday, June 06, 2018

தேர்வுத்துறையிலும் வந்தது மாற்றம்


தமிழகத்தில் கல்வித்துறைக்கு உட்பட்ட மண்டல தேர்வுத்துறை அலுவலகங்களுக்கு பதில், மாவட்டம் வாரியாக தேர்வுத்துறை அலுவலகம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வித்துறை நிர்வாக மாற்றத்தையடுத்து, அனைத்து வகை பள்ளிகளும் பள்ளி கல்வி இயக்குனரின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து தேர்வுத்துறை நிர்வாகத்திலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, கடலுார், சேலம், வேலுார் மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர் அந்தஸ்தில் துணை இயக்குனர்கள் கீழ், மண்டல தேர்வுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.பொதுத் தேர்வுகள் நடத்துவது, வினாத்தாள் வழங்குவது, மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகளை இவ்வலுவலக பணியாளர்கள் மேற்கொள்வர். இந்நிலையில், மண்டல அலுவலகங்களுக்கு பதில் மாவட்டம் தோறும் டி.இ.ஓ.,க்கள் தலைமையில், தேர்வுத்துறை அலுவலகம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்வுத்துறை மாவட்ட அலுவலகங்கள் அமைக்க கருத்துரு கேட்கப்பட்டுள்ளது. இதன்படி டி.இ.ஓ., வின் கீழ் ஒரு கண்காணிப்பாளர், ஐந்து பணியாளர் கொண்ட அலுவலகம் அமைக்க அடிப்படை வசதியுடன் கூடிய கட்டடம் தேர்வு செய்து, அதன் விவரம் தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது," என்றார். 'ஆடிட்' அலுவலகமும் இணைகிறது கல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவலகங்கள் (தணிக்கை) செயல்படுகின்றன.

ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் தலா 17 கண்காணிப்பாளர் உள்ளனர்.இவற்றையும் மாவட்டத்திற்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் பிரித்து அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.