இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, May 20, 2018

கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி; அரசியல் பின்னணி இருப்பதாக சந்தேகம்


தொடக்கப் பள்ளியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தால், அதிகார மையங்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழக அரசு, கற்றல், கற்பித்தல் மற்றும் பாடத் திட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், ஆசிரியர்கள் இடமாறுதல், பணி நியமனம், பயிற்சி மற்றும் கல்வித் துறையின் இடமாறுதல்களிலும், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், இரண்டு நாட்களுக்கு முன், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
குளறுபடி:
'நிர்வாக முறையை நீண்ட சுற்றலில் விடும் வகையில், புதிய அரசாணை அமைந்துள்ளது. இதனால், நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படும்' என, அதிகாரிகள் மட்டத்திலும், ஆசிரியர் சங்கங்கள் மத்தியிலும் அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. புதிய அரசாணைப்படி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தனியாக, மாவட்ட அதிகாரிகள் செயல்பட மாட்டார்கள்.

தற்போது, இந்த பணியில் உள்ள அதிகாரிகள், அனைத்து பள்ளிகளுக்கான மாவட்ட அதிகாரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளைப் போல், தங்களுக்கு வழங்கப்படும் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அனைத்து வகை பள்ளிகளையும், கவனிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.அவர்களுக்கு அடுத்து தற்போது செயல்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். உதவி அதிகாரிகள் அனைவரும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கட்டளைப்படி செயல்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய அரசாணையால், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் ஆகியோருக்கான அதிகாரங்கள், தானாகவே குறைகின்றன. இதுவரை, தலைமையகத்தில் உள்ள, இணை இயக்குனர்கள் மேற்கொண்டு வந்த, பல நிர்வாக பணிகள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால், இணை இயக்குனர்களுக்கு இனி என்ன வேலை என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

பணிச்சுமை:
அதேபோல், தற்போதுள்ள நிலை மாற்றப்பட்டதால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம் கூடுதலாக வழங்கப்பட்டதுடன், பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. இதுவரை, பள்ளிக்கல்வி இயக்குனரின் கட்ட ளைப்படி செயல்பட்ட, சி.இ.ஓ.,க்கள், இனி தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரின் உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவால், மாவட்ட வாரியாக பள்ளிகளின் நிர்வாக பணிகளில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர், ஒரு வகையான உத்தரவும், மற்ற இயக்குனர்கள் இன்னொரு வகையான உத்தரவும் பிறப்பித்தால், அவற்றில், எதை செயல்படுத்துவது என்பதில், சி.இ.ஓ.,க்கள், திணறுவர்.

'இதுவரை, தனி இயக்குனரகம் அமைத்து, தெளிவாக நிர்வாகம் நடந்தது. தற்போது, அனைத்தையும் இணைத்து, குழப்பம் ஏற்படுத்தியிருப்பது ஏன் என, தெரியவில்லை' என, ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் வழியே, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் அதிகாரத்தை பயன்படுத்தி, நிர்வாகத்தில் நேரடியாக தலையிட, அரசியல் கட்சியினர் முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இந்த அரசாணையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Saturday, May 19, 2018

புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: கவுன்சிலின் செயல்பாடுகள் மாற்றியமைப்பு


ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ("எஸ்சிஇஆர்டி') செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட உத்தரவு:

தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கும், ஏற்கெனவே பணியில் உள்ளோருக்கும் தேவையான பயிற்சிகளை மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அளித்து வருகிறது. இதற்காக மாவட்டங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பயிற்சியின் அவசியம் என்ன? இப்போது பாடத் திட்டங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சி அளிப்பது அவசியமாகிறது. எனவே, இப்போதுள்ள மாவட்ட அளவிலான கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்களை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க தமிழக அரசுக்கு மாநிலக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.

அதன்படி, பணிக்கு முந்தைய பயிற்சிகளை மட்டும் அதிகளவு அளிக்க 12 மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் அதன் அருகேயுள்ள மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 12 மாவட்ட நிறுவனங்கள், பணிக்கு முந்தைய பயிற்சிகளை அளிப்பதில் கவனம் செலுத்தும்.

மாவட்டங்களை ஒருங்கிணைத்துப் பயிற்சி:

சென்னை மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்துடன் வேலூர், கடலூருடன் விழுப்புரம், கிருஷ்ணகிரியுடன் சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டத்துடன் நாமக்கல், கரூர் , பெரம்பலூருடன் திருச்சி, அரியலூர், திருவாரூர் மாவட்டத்துடன் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையுடன் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகருடன் மதுரை, தேனியுடன் திண்டுக்கல் மாவட்டமும், கோத்தகிரியுடன் கோவை, திருப்பூரும், திருநெல்வேலியுடன் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் அண்டை மாவட்டங்களை இணைத்துப் பயிற்சி அளிக்கப்படும். ஆனாலும், இந்த 12 மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களைத் தவிர்த்து தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 20 மாவட்ட நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மட்டுமே அளிக்கும். அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை மட்டுமே அளித்திடும்.

மொத்தம் 704 பேரின் மேற்பார்வையில்...ஒவ்வொரு மாவட்ட பயிற்சி நிறுவனத்தில் ஒரு முதல்வர், ஒரு துணை முதல்வர், 5 மூத்த விரிவுரையாளர்கள், 14 விரிவுரையாளர்கள், ஒரு நூலகர் இருப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 22 பேர் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 704 பேர் பணியில் இருப்பர்.

DSE - முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்கு கண்டனத்துடன் பின்னேற்பு வழங்கல் ஆணை!


Friday, May 18, 2018

பி.இ. படிப்பு : முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் வெளியீடு


பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் வசதிக்காக முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2018) வெளியிடப்பட்டுள்ள இந்த விவரங்களில் 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில், தங்களுக்கு எந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மாணவர்கள் முன்கூட்டியே கணித்துக் கொள்ள முடியும்.

மேலும், ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் முன்னதாக இந்த கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ள 5 முதல் 10 பொறியியல் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் குறித்து வைத்துக் கொள்வது வசதியாக இருக்கும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான பி.இ. கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் ஏற்கெனவே கூறியுள்ளனர். அதாவது, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட மூன்று துறைகள் மற்றும் பி.எஸ்.ஜி. போன்ற முன்னணி பொறியியல் கல்லூரிகளுக்கான கட்-ஆப் குறைய வாய்ப்பு இல்லை எனவும் இரண்டாம் நிலை பொறியியல் கல்லூரிகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2 முதல் 3 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.இ.: முன் வைப்புத் தொகையைச் செலுத்திய பிறகே இடங்களைத் தேர்வு செய்ய முடியும்


ஆன் லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், முன் வைப்புத் தொகையைச் செலுத்திய பிறகே, இடங்களைத் தேர்வு செய்ய முடியும். இதற்கு 5 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்-லைன் முறை மூலம் நடத்தப்பட உள்ளது.
இக்கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்கள் மூலமாகப் பங்கேற்கலாம்.

5 சுற்றுகள்: ஆன்-லைன் கலந்தாய்வு 5 சுற்றுகளாக நடத்தப்படும். முதல் சுற்றுக்கு 15,000 பேர், இரண்டாம் சுற்றுக்கு 25 ஆயிரம் பேர், மூன்றாம் சுற்றுக்கு 30,000 பேர் என ஒவ்வொரு சுற்றுக்கும் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு அழைக்கப்படுவர்.
இவ்வாறு ஒவ்வொரு சுற்றில் பங்கேற்கும் மாணவர்களும் இடங்களைத் தேர்வு செய்து, இறுதி செய்ய 3 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்படும். இந்த மூன்று நாள்களுக்குள் இடங்களை இறுதி செய்துவிடவேண்டும்.

முன் வைப்புத் தொகை: கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன் வைப்புத் தொகையாக ரூ.5,000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. மாணவர்கள் ரூ. 1000 செலுத்தினால் போதுமானது.
இந்தக் கட்டணத்தைச் செலுத்திய பிறகே மாணவர்கள் இடங்களைத் தேர்வு அனுமதிக்கப்படுவர். இந்த முன் வைப்புத் தொகையைச் செலுத்த இடங்களைத் தேர்வு செய்யும் 3 நாள்கள், அதற்கு முன்பாக இரண்டு நாள்கள் என மொத்தம் 5 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.

பணம் திரும்பப் பெறுவது எப்படி?  ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்த மாணவர், பின்னர் பொறியியல் படிப்பில் சேர விரும்பவில்லை எனில், செலுத்திய முன்வைப்புத் தொகையில் 80 சதவீதத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்று இடங்கள் எதையும் தேர்வு செய்யாத மாணவர்களுக்கு, முன் வைப்புத் தொகை முழுவதுமாகத் திரும்ப அளிக்கப்படும்.

இந்தத் தொகையைப் பெற ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு முடிந்த பிறகே இதற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதவி கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி ஆகிறார் அரசாணை வெளியீடு


உதவி கல்வி அதிகாரி இனி வட்டார கல்வி அதிகாரி என அழைக்கப்படுவார் என்றும், அவர் தனது வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்றும், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

உதவி கல்வி அதிகாரிகள் இனிமேல் வட்டார கல்வி அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் இனிமேல் தொடக்க கல்வி துறையில் உள்ள பள்ளிகளை மட்டும் அல்லாமல், பள்ளி கல்வித்துறையில் உள்ள பள்ளிகள், மெட்ரிகுலேசன் இயக்குனரக பள்ளிகள் அனைத்தையும் அவர்களது எல்லைக்குட்பட்ட இடங்களில் ஆய்வு செய்வார்கள்.

அதுபோல மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளாக மாற்றப்படுகிறார்கள். அவர்களும் தங்களின் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்வார்கள். முதன்மை கல்வி அதிகாரிகளின் பணிகளும், அவர்களுக்குள்ள பொறுப்புகளும் வருமாறு.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்யவேண்டும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறதா? என அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருடம் ஒருமுறை அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்யவேண்டும். அதுபோல மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் ஆய்வு செய்யவேண்டும்.

மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். தொடக்கப்பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் நிலவரத்தை அதற்குரிய இயக்குனருக்கு, மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரையை அனுப்பி வைக்கவேண்டும். அரசு உதவி பெறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் அங்கீகாரம் முறையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறதா? என்று ஆராயவேண்டும்.

சுயநிதி பள்ளிகள் தொடங்கவும், மூடவும் அதற்குரிய இயக்குனருக்கு பரிந்துரைக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்று பார்க்கவேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்


தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி உள்ளார். கல்வி கட்டணம் நிர்ணயம் குறித்து டி.வி.மாசிலாமணி கூறியதாவது:- தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு 5 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்து இணையதளத்தில் (www.tamilnadufeecomittee.com) வெளியிட்டு உள்ளோம்.

மீதம் உள்ள 4 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்துவிடுவோம். பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பாக 2018-2019-ம் ஆண்டுக்கான அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். கட்டணம் நிர்ணயிக்கப்படாத 4 ஆயிரத்து 500 பள்ளிகளில், ஆயிரத்து 844 பள்ளிகள் கருத்துருவை அனுப்பியதால் 1000 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 850 பள்ளிகள் கருத்துருவை அனுப்பின. அந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அனுப்பாத பள்ளிகள் உடனடியாக கருத்துருவை கமிட்டி இணையதளத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஜி., 2ம் ஆண்டு 'ஆன்லைன்' பதிவு துவக்கம்


பாலிடெக்னிக், பி.எஸ்.சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.நடப்பாண்டில், 18-ம் தேதி முதல், ஜூன் 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜி., கல்லுாரியில் நடக்கிறது.பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ கூறியதாவது:ஆன்லைனில, www.accetlea.com என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், 300 ரூபாய்க்கு வங்கி வரைவோலையை, செயலர், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை, காரைக்குடி என்ற முகவரிக்கு எடுத்து கொள்ள வேண்டும்.எஸ்.சி., - எஸ்.சி.ஏ., - எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பித்த பிறகு, 10-ம் வகுப்பு, பட்டயபடிப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழ், முதல் தலைமை பட்டதாரி சான்றிதழ் நகல், ஜாதி, இருப்பிட சான்றிதழ், வங்கி வரைவோலையை மேற்கண்ட அழகப்பா பல்கலை இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை பிரிவுக்கு வருமாறு தபாலில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

Child books

https://drive.google.com/open?id=1tjZ-sxD3yWJSzjYzXMKiEUMZ7T45XCwv

G.o 101


https://drive.google.com/file/d/1ZPl4b7DAyTm96YdUb10DVaYyqwxh34Nw/view?usp=drivesdk

Thursday, May 17, 2018

பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்கள் ஒருங்கிணைப்பு: அரசாணை வெளியீடு


தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்களை (எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ) இணைத்து, ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

ஒன்று முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தொடக்கக் கல்வியின் தரம் உயர்வு, மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டம் மூலமாகவும் 9, 10 -ஆம் வகுப்புகளில் படிக்கும் 14 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வியின் மேம்பாடு, ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான்(ஆர்எம்எஸ்ஏ) திட்டம் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

திறமையான நிர்வாகம், குறைவான செலவு போன்ற காரணங்களுக்காக இந்த இரண்டு திட்டங்களின் நிர்வாக அமைப்புகளை இணைக்கலாம் என, கடந்த 16.11.17 மற்றும் 3.4.18 ஆகிய தேதிகளில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கடிதம் எழுதியது. அதில், 'இந்த இரண்டு திட்டங்களின் நிர்வாகத்தையும் ஒன்றாக இணைத்து, மாநிலத்தில் ஒரு முகமையின்கீழ் கொண்டு வந்து அமல்படுத்த வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'இரண்டு திட்ட நிர்வாகத்தையும் இணைத்த பிறகு, அதை நிர்வகிப்பதற்காக அரசின் துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை கூடுதல் திட்ட இயக்குநராக நியமிக்கலாம்' என்று முன்மொழிந்துள்ளார். திட்ட நிர்வாகத்தை இணைத்த பிறகு மாநிலம், மாவட்டம், வட்டார அளவில் ஏற்படுத்தப்பட வேண்டிய நிர்வாக முறை குறித்தும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இணைப்புக்குப் பிறகு அரசுக்கு திரும்ப சமர்ப்பிக்க வேண்டிய பதவிகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அவரது கடிதத்தை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதையடுத்து சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் ஆகிய திட்ட நிர்வாகத்தை இணைத்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாக (சமக்கிரா சிக்ஷா அபியான்) அமல்படுத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பதவிகளை உருவாக்குவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இணை இயக்குநர் மற்றும் 434 பதவிகளை அரசிடம் சமர்ப்பிக்கவும் சர்வ சிக்ஷா அபியானின் மாநிலத் திட்ட இயக்குநருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2வில், 1,200க்கு, 'குட்பை'; வரும் ஆண்டில் 600, 'மார்க்' தான்


பிளஸ் 2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், 8.60 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்று, 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். வரும், 21ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு அறிமுகமாகி, 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, ஆறு பாடங்களுக்கு, தலா, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.தற்போது, நுழைவு தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டு உள்ளதால், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வுஅறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண் வழங்கப் படும் முறை, 100 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை, நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகமாகி உள்ளது.இதன்படி, பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், 600 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த, 600 மதிப்பெண் முறை, வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2க்கும் அறிமுகம் ஆகிறது. எனவே, இந்த ஆண்டுடன், 1,200 மதிப்பெண் முறை முடிவுக்கு வந்துள்ளது.

மேலும், பிளஸ் 2க்கு மட்டும், தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையும் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு ஒரு சான்றிதழ், பிளஸ் 2க்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இறுதியாக, இரண்டு வகுப்புகளுக்கும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Wednesday, May 16, 2018

தோல்வியுற்ற, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு ஜூன் 25-இல் தேர்வு


பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் ஜூன் 25-ஆம் தேதி முதல் மறுதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு 91.1 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட இது ஒரு சதவீதம் குறைவாகும். இந்தநிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தேர்வெழுதாத மாணவ-மாணவிகளுக்கு வரும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்றும், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள் மறு கூட்டலுக்கு மே 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த மன அழுத்தத்தை போக்கும் வகையில் மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கவுன்சலிங் பெற விரும்பும் மாணவர்கள் "14417' என்ற "ஹெல்ப் லைன்' எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் மாணவர்களுக்குத் தேவையான கவுன்சலிங் உதவிகள் கிடைக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.