இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 16, 2018

புதிய வசதி

க்ரூப் மெசேஜ்களுக்கு வாட்ஸ் அப்பில் புது வசதி

வாட்ஸ் அப் செயலி தனது வாடிக்கையாளர்களுக்கு சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாட்ஸ் அப் க்ரூப் பயன்படுத்துபவர்களுக்காக இந்த புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய வசதி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் இன்று முதலே கிடைக்கும். க்ரூப்ஸ் சேவையில் 4 புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

1. க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்
அதாவது வாட்ஸ் அப் செயலில் ஒரு க்ரூப்பை நிர்வாகிப்பவர் அந்த க்ரூப் குறித்த ஒரு சிறிய விளக்கத்தை அதில் சேர்க்க முடியும். யாராவது புதிதாக குழுவில் இணைக்கப்பட்டால் அந்த டிஸ்க்ரிப்ஷன் சேட்டின் தலைப்பில் இடம்பெறும்.
க்ரூப் டிஸ்க்ரிப்ஷனைச் சேர்க்க ஒருவர் வாட்ஸ் அப் செயலியில் க்ரூப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் விளக்கத்தைச் சேர்க்கவேண்டும். குழுவின் பெயருக்குக் கீழ் இந்த விளக்கம் இடம் பெற்றிருக்கும்.
இவ்வாறு சேர்க்கப்படும் க்ரூப் டிஸ்க்ரிப்ஷனானது குழுவில் உள்ள அனைவருக்கும், குழுவில் இணைய அழைக்கப்படும் அனைவருக்குமே தெரியும்.

2. அட்மின் கன்டோர்ல்கள்:
வாட்ஸ் அப் குழுவின் அட்மினாக இருப்பவர்களுக்கு சில கூடுதல் கன்ட்ரோல் சலுகைகள் வழங்கப்படுகிறது. க்ரூப் செட்டிங்ஸில் இந்த சேவை இருக்கிறது. இதன் மூலம் குழுவில் இருப்பவர்களில் யாரெல்லான் க்ரூப் படம், டிஸ்க்ரிப்ஷன் ஆகியவற்றை மாற்றலாம் என்பதை அட்மின் நிர்ணயிக்க முடியும்.

3. க்ரூப் கேட்ச் அப் ஃபீச்சர்
க்ரூப் கேட்ச் அப் ஃபீச்சர் என்று ஒரு சேவை இருக்கிறது. இதன் மூலம் ஒரு க்ரூப்பில் உள்ள ஒருவர் சேட்களுக்கு இடையே தான் தவறவிட்ட மெசேஜ்களை படிக்க உதவும். இதற்காக சேட்டின் வலது மூலையில் @ சிம்பள் ஒன்று இருக்கும். அந்த @ குறியீட்டை கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்தோ அல்லது அவருக்கு பதில் அளிக்கும் வகையிலோ இடம்பெற்ற சேட்கள் அனைத்தையும் அவரால் படிக்க முடியும்.

4. பார்டிசிபன்ட் சேர்ச் ஃபீச்சர்
இப்படி ஒரு ஃபீச்சர் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் க்ரூப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட ஒரு நபரைத் தேடிப் பிடிக்கலாம். க்ரூப் இன்ஃபோ பேஜில் இருந்து க்ரூப்பில் இடம்பெற்றுள்ளவர்களைக் கண்டுபிடிக்க முடியும்.

இதுதவிர, க்ரூப்பை உருவாக்குபவர்களை அந்த க்ரூப்பில் இருந்து நீக்க முடியாத ஆப்ஷன், அதேபோல் ஒரு க்ரூப்பில் இருந்து விலகியவரை மீண்டும் மீண்டும் அதே க்ரூப்பில் இணைக்க முடியாதபடி பாதுகாப்பு அம்சம் ஆகியனவும் வாட்ஸ் அப்பின் புது அப்டேட்களாக உள்ளன

Saturday, May 12, 2018

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் கூடாது


பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து தொடர்புடைய தனியார் பள்ளிகள் விளம்பரங்களை வெளியிடக் கூடாது. இதுகுறித்து இயக்குநர் ரெ.இளங்கோவன் சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுத் துறை வெளியிடவுள்ளது.

உயர் நிலைக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையிலும், பெற்றோர், பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது அரசுக்கு கொண்டு வரப்பட்ட புகார்களின் அடிப்படையிலும் மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலும் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கடந்த ஆண்டு முதல் கைவிடப்பட்டது. இது அரசாணையாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள விவரங்களை அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரையாக வழங்கி அதைச் செயல்படுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் ஆரோக்கியமான போட்டிச் சூழலைத் தவிர்க்கும் வகையிலும் வெளியிடப்பட்ட அரசாணையின் நோக்கத்துக்கு மாறுபட்ட வகையில் ஒரு சில மாணவர்களின் பெயர், புகைப்படம் தாங்கிய விளம்பரப் பிரசுரங்களை வெளியிடுதல், பதாகைகள் அமைத்தல், நாளிதழ், ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

இதன்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

மே 16-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்


தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை (மே 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 9 லட்சம் மாணவர்கள்: தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இத்தேர்வை 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவியர், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7, 620 பேர் எழுதினர். பெற்றோர், மாணவர்களுக்கு... பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைப் போலவே மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப் படுத்தப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் முறை ஏன்? அரசுத் தேர்வுத் துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகளை முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு... தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை ஊடகவியலாளர்களுக்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை இந்தாண்டு முதல் தேர்வுத் துறை அறிமுகப்படுத்தவுள்ளது.

பள்ளி திறப்பு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்


https://drive.google.com/file/d/1LOF2GD62hO_FUvZuck61BnDATIiaDY0k/view?usp=drivesdk

Friday, May 11, 2018

பாலிடெக்னிக் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை: 14 முதல் விண்ணப்ப விநியோகம்


பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 14 -ஆம் தேதி முதல் ஜூன் 1 -ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 1 கடைசி நாளாகும். இதுகுறித்த அரசின் செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள 47 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டாண்டு ஐடிஐ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல், சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் பட்டயப்படிப்புக்கான முதலாம் ஆண்டு சேர்க்கை, தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓராண்டு ஒப்பனைக் கலை பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட உள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.150 ஆகும்.

DIET- Reduce students admission



Wednesday, May 09, 2018

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது


தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த கல்வி ஆண்டு 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெளிர் பச்சை சட்டை(அக்குவா கிரீன்), அடர் பச்சை கால் சட்டை (மெடோ கிரீன்) வழங்கப்பட உள்ளது.

6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் வெளிர் பிரவுன் சட்டையும், பழுப்பு சிவப்பு கால் சட்டையும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இந்த சீருடைகளுக்கான துணிகளை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை வழங்குகிறது.

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய சீருடைகளை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இன்ஜி., 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்க வாய்ப்பு


டிப்ளமா ,பி.எஸ்.சி., படித்தவர்கள், நேரடி இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்பில் சேரலாம். இதற்கு சேர, www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.இணையதளத்தில், மே, 18 முதல், ஜூன், 14 மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பின், அதை பிரதி எடுத்து, உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன், ஜூன், 14 மாலை, 5:00 மணிக்குள், காரைக்குடியில் உள்ள, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்


10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது. தமிழக அரசுத் தேர்வுத்துறை 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பிரிக்கப்பட்டு, அரசுத் தேர்வுகள் ஆணையரகம் என உருவாக்கப்பட்டது. 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான தேர்வினை நடத்தித் தேர்வு முடிவினை வெளியிட்டனர்.

அப்போது தேர்வு முடிவுகள் வெளியிடும் போது அதனை செய்தித்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண்களை பிரசுரம் செய்வர். தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவினை அறிவதற்காகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் தேர்வு முடிவினை அறியவும் ஆவலுடன் செய்தித்தாள்களை வாங்கித் தேர்வு பதிவு எண்களைப் பார்த்து அறிந்து கொள்வர். 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அதன்பின்னர் பியுசி படிப்பைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்.

இந்த முறை 1978-ம் ஆண்டில் மாற்றப்பட்டு, 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு எனப் பிரித்தனர். அது வரை 11 ம் வகுப்பு வரை நடைபெற்ற தேர்வானது, 10-ம் வகுப்பிற்கு(எஸ்.எஸ்.எல்.சி) ஒரு பொதுத் தேர்வும், 12 ம் வகுப்பிற்கு(பிளஸ்-2) ஒரு பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியான இரு தினங்களுக்குள் மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பதிவேடு அனுப்பப்பட்டன. மாணவர்கள் மதிப்பெண் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழில் மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலரும் கையெழுத்திட வேண்டும்.

இந்த முறையில் தொடர்ந்து 1998 ம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் 1999 ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது புதிய முறையாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் அன்றே மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலோ அல்லது பள்ளியிலோ தங்களின் பாடவாரியான மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடிந்தன.

அப்போதும் தொடர்ந்து தேர்வு முடிவுகள் செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிட அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் 2002-ம் ஆண்டு செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிடுவதற்கு சிடி அளிக்கப்பட்டு வந்த முறை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் தேர்வு முடிவுகளை வெளியிட விரும்பும் இணையதளத்தினை நடத்தும் நிறுவனங்கள் பணம் செலுத்தித் தேர்வு முடிவுகளைப் பெற்று வெளியிடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த முறையின் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையதளங்களின் மூலம் உடனடியாக அறிந்தனர். ஆனால் 2013-ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு வழங்கப்பட்டு வந்த சி.டி.கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10,12ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 90 நாட்கள் செல்லும் வகையில் அரசு அறிவித்தது. இதன் மூலம் 10,12-ம் வகுப்புத் தேர்வில் ஒரு சில பாடத்தில் தோல்வி அடைந்து, சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றது.

கடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக 10,12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம் வெளியிடப்பட்டன. மேலும் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர் விபரம், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம், பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம் தரவரிசை (ரேங்க்) அளிக்கும் முறை ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் இதில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, May 07, 2018

பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் பாடநூல் கழக தலைவர் தகவல்


பள்ளிக்கூட மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணி உள்ளிட்ட 9 வகையான பொருட்கள் அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி கூறினார்.

தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு வருகிற கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மற்ற வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. புதிய பாடத்திட்ட வகுப்புகளுக்கு பாடப்புத்தகம் அச்சிடும் பணி நடந்துவருகிறது. விரைவில் அச்சடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் நாளில் (ஜூன் மாதம் 1-ந் தேதி) மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

புத்தகப்பை, காலணிகள், கிரயாண், ஜியாமெண்டிரி பாக்ஸ், கலர் பென்சில் உள்பட 9 வகையான பொருட்கள் விலை இன்றி அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு கொடுப்பதற்காக உடனே டெண்டர் விடப்படுகிறது. எனவே 9 பொருட்களும் தாமதமின்றி அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

புதிய பாடத்திட்டத்தில் அச்சடிக்கப்படும் புத்தகங்களின் விலையில் மாற்றம் உள்ளது. அந்த மாற்றம் குறித்து அரசு அறிவிக்கும்.

இவ்வாறு பா.வளர்மதி கூறினார்.

ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் முதல்நிலை தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்கிறது. தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் ஹால் டிக்கெட் தபாலில் அனுப்பப்படாது என்று சிவில் சர்வீசஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை மத்திய அரசின் தேர்வாணையம்(யு.பி.எஸ்.இ.) வருடந்தோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற 3 வகையான தேர்வுகளை நடத்துகிறது.

அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி இந்தியா முழுவதும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது. இதற் கான ஹால் டிக்கெட் நேற்று இணையதளத்தில் ( www.upsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து யு.பி.எஸ்.இ. ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்படாது. ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு முன்பே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது. ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படம் சரியாக தெரியவில்லை என்றால் ஆதார் அட்டையோ, டிரைவிங் லைசென்சு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும், 2 புகைப்படத்தையும் கொண்டு வர வேண்டும்.

காலை தேர்வு 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் 10 நிமிடங்களுக்கு முன்பாக 9.20 மணிக்கு தேர்வு அறைக்கு மாணவர்கள் வரவேண்டும். இதே போல தேர்வு மதியமும் நடக்கிறது. மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மாணவர்கள் 2.20 மணிக்கு வரவேண்டும்.

மாணவர்கள் தேர்வுக்கான உரிய நேரத்தில் வரவேண்டும். இல்லையென்றால் தேர்வு மையத்திற்கு மாணவர்களை அனுமதிக்க முடியாது.

ஹால்டிக்கெட்டில் போடப்பட்டு இருக்கும் இடத்தில் தான் தேர்வை எழுதவேண்டும். வேறு எந்த இடத்திலும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது.

தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை கொண்டுவரவேண்டும். அதைக்கொண்டுதான் ஓ.எம்.ஆர். ஷீட்டை நிரப்பவேண்டும்.

தேர்வில் வினாக்கள் தொடர்பான கருத்துகளை ஜூன் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை http://upsc-o-n-l-i-ne.nic.in /mis-c-e-l-l-a-n-eous/QP-r-ep/ என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம்.

செல்போன்(சுவிட்ச் ஆப் செய்தாலும்), கேமரா, ஸ்மார்ட் கைக்கெடிகாரம், பேஜர், புளுடூத், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக்பொருட்களும் தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.

தேர்வு அறைக்கு பைகள் அனுமதி கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.