இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 18, 2018

அரசு கல்லூரியில் சேரணுமா? 25ம் தேதி முதல் விண்ணப்பம்


திருப்பூரில் உள்ள அரசு கலைக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், வரும், 25ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி மற்றும் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில், 18 இளங்கலை, எட்டு பட்ட மேற்படிப்பு பாடப் பிரிவுகள் உள்ளன; இரண்டு 'ஷிப்டு'களில், ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயில்கின்றனர்.நடப்பு கல்வியாண்டுக்கான, முதல் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும், 25ம் தேதி காலை, 10:00 மணி முதல் வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள், 50 ரூபாய் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ஜாதிச் சான்றிதழ் நகலை சமர்பித்து, இலவசமாக விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். மங்கலம் சாலை, குமரன் மகளிர் கல்லுாரியில், இளங்கலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது; மாணவியர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்! தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை, ஆண்டுதோறும் சரிந்து கொண்டே வருகிறது.

மாணவர் சேர்க்கை நடத்தாத பள்ளிகள், தற்காலிகமாக மூடப்படுகிறது. சேர்க்கை குறையும் பள்ளிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், செலவினங்கள் குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகள், இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழல் ஏற்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குறிப்பாக, 'ஜூரோ என்ரொல்மெண்ட்' எனப்படும் புதிய சேர்க்கையேஇல்லாத நிலையை,உருவாக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒன்றாம் வகுப்பில், 20 மாணவர்களாவது சேர்க்க வேண்டும். அரசின் திட்டங்கள், பாடத்திட்ட மாற்றம், கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை விளக்கி, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்களுடன் இணைந்து, அரசுப்பள்ளியை மக்களின்பள்ளியாக மாற்ற, ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,

'வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ்1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாறுகிறது. துவக்க வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாறுவதால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகமாகலாம். வரும்மே 2ம் தேதி முதல், சேர்க்கை பணிகள் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'புதிய சேர்க்கை இல்லாத பட்சத்தில், உரிய காரணம் விளக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, புதுமையான வழிமுறைகளில் பெற்றோரை அணுக திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


பொருளாதார அளவில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்க வெள்ளிக்கிழமை (ஏப்.20) முதல் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்தச் சட்டம் ஆகும். அதன்படி, தமிழகத்தில் 2013-2014-ம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2018-2019- ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்.20-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 41,000 இடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து www.dge.tn. gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும். எங்கு விண்ணப்பிக்கலாம்?: இணைய வசதி இல்லாதோர் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள இடங்களில் இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர் தேர்வு செய்யப்படுவர்.

அந்தந்த பள்ளிகளில் குறிப்பிட்ட நாள் அன்று நடத்திடும் குலுக்கல் நிகழ்வுகளை கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறை அதிகாரிகள் கண்காணிப்பர். கடந்த ஆண்டு எந்தந்த பள்ளியில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்களை http://tnmatricschools.com/rte/rtepdf.aspx# என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்


பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

இதனால், தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் பட்டம் செல்லாது என யுஜிசியால் அறிவிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. தொலைநிலை படிப்புகளைக் கட்டுப்படுத்தி வரும் யுஜிசி, உயர் கல்வித் தரத்தை மேம்படுத்தும்வகையில் அண்மையில் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ('நாக்') அங்கீகாரம் பெற்று குறைந்தபட்சம் 3.26 புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் எனத் தெரிவித்திருந்தது.

'நாக்' அங்கீகாரம்: 'நாக்' கவுன்சில் அதிகபட்சமாக 4 புள்ளிகளைக் கொண்ட அளவீடு மூலம் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பல்வேறு காரணிகளின் கீழ் ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும். இதில் 3.51 முதல் 4 புள்ளிகள் பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ (பிளஸ், பிளஸ்) கிரேடு, 3.26 முதல் 3.50 புள்ளிகள் பெறும் நிறுவனங்களுக்கு ஏ (பிளஸ்) கிரேடு, 3.01 முதல் 3.25 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ கிரேடு வழங்கும். மேலும் 2.76 முதல் 3 புள்ளிகள் வரை வாங்கும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ், பிளஸ்) கிரேடு, 2.51 முதல் 2.75 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ்) கிரேடு, 2.01 முதல் 2.50 புள்ளிகள் வரை பெறும் நிறுவனங்களுக்கு பி கிரேடும், 1.51 முதல் 2 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு சி கிரேடும் வழங்கும்.

இதில் 1.50 புள்ளிகளும் அதற்குக் கீழ் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. இந்த நிலையில், யுஜிசி-யின் புதிய வழிகாட்டுதலின் படி பார்க்கும்போது தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 3.26-க்கும் மேற்பட்ட நாக் புள்ளிகளைப் பெற்றுள்ளன. காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகம் 3.64 புள்ளிகளும், அண்ணா பல்கலைக்கழகம் 3.46 புள்ளிகளும், சென்னைப் பல்கலைக்கழகம் 3.32 புள்ளிகளும் பெற்றுள்ளன. மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 புள்ளிகளுக்குக் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன.

'நாக்' புள்ளிகள் காரணமாக...கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 3.11 'நாக்' புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3.09 புள்ளிகளையும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 3.15 புள்ளிகளையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 3.08 புள்ளிகளையும் பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளன.

இவற்றில் திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியவை மிகக் குறைவாக பி கிரேடு புள்ளிகளையே பெற்றுள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் கூறியது: யுஜிசி-யின் இந்தக் கட்டுப்பாடு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். யுஜிசி-யின் இந்த புதிய வழிகாட்டுதலால் இந்தியா முழுவதும் 40 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கோரிக்கை: எனவே, தொலைநிலைப் படிப்புகளை வழங்க இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 3.26 நாக் புள்ளிகள் என்பதை, 3 புள்ளிகளாகக் குறைக்க வேண்டும் என யுஜிசியிடம் தமிழக உயர் கல்வித் துறை சார்பிலும், பல்கலைக்கழகங்கள் சார்பிலும் தனித்தனியாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை யுஜிசி ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு மாணவர்கள் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்


பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: 1 முதல் 10ம் வகுப்பு வரையும், 1 முதல் பிளஸ் 2 வரையும் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் உள்ள பிரிவுகளில் 60 மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 61 முதல் 90 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 91 முதல் 120 மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

இதேபோல ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் 1 ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால் ஒரு பிரிவாக கணக்கிட்டு ஒரு ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்ய வேண்டும். 50 மாணவர்கள் இருந்தால் இரண்டு பிரிவாக கணக்கிட்டு கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும்.

9 மற்றும் 10ம் வகுப்புகளில் தலா 40 மாணவர்கள் இருந்தால் (1:40) ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும். 60க்கு அதிகமாக இருந்தால் கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும். ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேனிலை பிரிவுகளை பொறுத்தவரையில் பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும் மற்ற ஊரக பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 15 மாணவர்களும் இருக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி


பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதத்தை பராமரிப்பது குறித்து, அவரது உத்தரவு:ஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ் 1 வகுப்பில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற பள்ளிகளில், ஒரு பாடப்பிரிவில், குறைந்த பட்சம், 30 பேர்; கிராமப்புறங்களில், 15 பேர் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை விட, குறைவாக இருக்கும் பாடப்பிரிவுகளை நடத்த முடியாது.

குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கையை பராமரிக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக மாணவர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்கள், முயற்சி எடுக்க வேண்டும்.ஆக., 1 நிலவரப்படி, இந்த எண்ணிக்கை இல்லாவிட்டால், குறைந்த மாணவர்கள் உள்ள பாடப்பிரிவு கலைக்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆணை

https://drive.google.com/file/d/1a8RZa_mygpJ8s29g6-nZ7xtKFskQ_Rdz/view?usp=drivesdk

குழு

தமிழக அரசு ஊதிய முரண்பாடுகளை களைய, ஐஏஎஸ் அதிகாரி எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு - தமிழக அரசு

பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு







Tuesday, April 17, 2018

வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம்


வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. நிகழாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்படவுள்ள 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்குத் தேவையான நூல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர 2,3,4,5,7,8,10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல் விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

பணி விடுவிப்பு சான்று

https://drive.google.com/file/d/1z_8jZog735CGcIV0yZGokztD8PNU4SWS/view?usp=drivesdk

பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க இயக்குநர் செயல்முறைகள்-2018




2017-18 மாறுதல் பெற்றவர்கள் பணி மாறுதல் செய்ய செயல்முறைகள்

தந்தை தாய்விபத்தில் இறந்தால் உதவித்தொகை பெறும் விண்ணப்பம்

https://drive.google.com/file/d/1rov-w0IW8NRKhKPX-uQkellXCesM_G1f/view?usp=drivesdk

Monday, April 16, 2018

GPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பு

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன்பு ஓய்வு பெற்றோருக்கான நிலுவைத் தொகைகள்: 2 தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவு


7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு தவணைகளாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் அளிக்கப்படும். அதாவது, பணிக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள், பணிக் கொடைகள், விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளுதல் போன்றவை ஓய்வு பெற்ற உடனேயே வழங்கப்படும். இந் நிலையில், கடந்த 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்கள் இரண்டு தவணைகளாக அளிக்கப்படும்.

முதல் தவணையானது, 2017-18-ஆம் நிதியாண்டிலும், இரண்டாவது தவணைத் தொகையானது 2018-19-ஆம் நிதியாண்டிலும் அளிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை அளிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது தவணையை இந்த மாதத்தில் இருந்தே (ஏப்ரல்) ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதல் தவணையைப் பெறாத ஓய்வூதியதாரர்கள் இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழு: தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதற்கு முந்தைய தேதி வரையில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பணப் பயன்களை இரண்டு தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியப் பணப்பயன்களும், தொகையும் மிகையளவு மாறுபடும். எனவே, அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெறுவோருக்கு பணப் பயன்களை இரண்டு தவணைகளாக விரைந்து அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தரமான தரத்தில் வருவதால் புதிய பாடப்புத்தகம் விலை ஏறுகிறது


தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக பாட திட்டங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இந்நிலையில் நீட் உள்பட பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி டிசம்பரில் முடிந்தது. இந்த புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்களை வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு மட்டும் தயாரிக்கும் பணி நடக்கிறது. தரமான தாள், பக்கத்துக்கு பக்கம் வண்ணம் மற்றும் படங்களுடன் பாடங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தயாராகி வருகிறது.மேலும் புத்தக அட்டை விரைவில் கிழியாத வகையில் லேமினேஷன் செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டுகளில் உள்ள புத்தகங்களை அச்சிட்ட செலவை விட இந்த ஆண்டுக்கான புத்தகங்கள் அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால் விலையையும் அதிகரிக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.  ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் புதிய விலை ஏற்றத்தை தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1, 6, 9, 11 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் செட் விலை 350 முதல் 700 வரை கிடைக்கிறது. புதிய பாடப்புத்தகங்கள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விலை ஏற்றப்படுவதால் ₹850 முதல் ₹900 வரை விலை கொடுக்க வேண்டி வரும். இது தவிர மற்ற வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 2019-2020ம் கல்வி ஆண்டில் கிடைக்கும்.